என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஸ்மிருதி மந்தனா 1 ரன்னில் அவுட்- இலங்கை அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்கு
    X

    ஸ்மிருதி மந்தனா

    ஸ்மிருதி மந்தனா 1 ரன்னில் அவுட்- இலங்கை அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்கு

    • 6 பந்துகளை சந்தித்த மந்தனா 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
    • இந்திய பெண்கள் அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 36 ரன்கள் எடுத்தார்.

    இந்திய பெண்கள் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் டி20 தொடரிலும் அடுத்ததாக ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய பெண்கள் அணி 3-வது ஓவரில் 17 ரன்னில் முதல் விக்கெட்டை பறிக்கொடுத்தது. 6 பந்துகளை சந்தித்த மந்தனா 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த மேகனா வந்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நெருக்கடியான நிலையில் சவாலி வர்மாவுடன் கேப்டன் கவூர் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 31 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த சவாலி வர்மா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலேயே கவூர் வெளியேறினார்.

    இதனால் இந்திய அணி 10.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பாக விளையாடி 36 ரன்களும், தீப்தி வர்மா 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 36 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் இனோகா ரணவீரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கும்.

    Next Story
    ×