search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    21-வது கிராண்ட் சிலாம் பட்டம் நோக்கி ஜோகோவிச்
    X

    ஜோகோவிச்

    21-வது கிராண்ட் சிலாம் பட்டம் நோக்கி ஜோகோவிச்

    • நடால் 22 பட்டத்துடன் முதல் இடத்திலும், பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 பட்டத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
    • விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஒரே ஒரு முறைதான் ஜோகோவிச் தோற்றுள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதியில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பி யனுமான ஜோகோவிச் (செர்பியா) அரை இறுதியில் 9-வது வரிசையில் உள்ள கேமரூன் நோரியை (இங்கிலாந்து) எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 2-6, 6-3, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு 8-வது முறையாக முன்னேறினார். ஒட்டு மொத்தமாக கிராண்ட் சிலாம் போட்டியில் 32-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இதன் மூலம் அவர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) சாதனையை முறியடித்தார்.

    ஜோகோவிச் நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நிக் கார்கியோசை (ஆஸ்திரேலியா) எதிர் கொள்கிறார். அவரை வீழ்த்தி 21-வது கிராண்ட் சிலாம் பட்டம் வெல்லும் வேட்கையில் உள்ளார்.

    நடால் 22 பட்டத்துடன் முதல் இடத்திலும், பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 பட்டத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    நாளை வெற்றி பெற்றால் ஜோகோவிச் முன்னேறி பெடரரை பின்னுக்கு தள்ளி விடுவார்.

    ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஒரே ஒரு முறைதான் (2013) தோற்றுள்ளார்.

    Next Story
    ×