என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
டி20 உலகக் கோப்பை: பப்புவா நியூ கினியாவை 7 விக்கெட்களில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
- அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர்.
- பசல்ஹாக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 29-வது லீக் போட்டியில் பப்புவா நியூ கினியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா அணி துவக்கம் முதலே ரன் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் டோனி உரா, கேப்டன் அசாத் வாலா முறையே 11 மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லெகா சைகா மற்றும் சீஸ் பௌ ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இடையில் நிதானமாக ஆடிய கிப்லின் டோரிகா 27 ரன்களையும், அலெய் நௌ 13 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் 95 ரன்களை சேர்த்து ஆல் அவுட் ஆனது.
ஆப்கானிஸ்தான் சார்பில் பசல்ஹாக் 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர்.
96 எனும் எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் 11 ரன்களிலும், இப்ராகிம் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த குல்பதின் நயிப் 49 ரன்களை விளாசினார். இவருடன் ஆடிய ஓமர்சாய் மற்றும் முகமது நபி முறையே 13 மற்றும் 16 ரன்களை எடுத்தனர்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பப்புவா நியூ கினியா சார்பில் அலெய் நௌ, செமோ கெமியா மற்றும் நார்மன் வனுவா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.