search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    எஸ்.ஏ. டி20  தொடர் - சாம்பியன் பட்டம் வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
    X

    சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்

    எஸ்.ஏ. டி20 தொடர் - சாம்பியன் பட்டம் வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்

    • எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
    • இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஜோகனஸ்பெர்க்:

    எஸ்.ஏ டி20 கிரிக்கெட் லீக் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்தார்.

    சன்ரைசர்ஸ் அணி சார்பில் ரோலோப் வான் டெர் மெர்வே 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 136 ரன்கள் இலக்குடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி களமிறங்கியது.

    அந்த அணி 16.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஆடம் ரோசிங்டன் 57 ரன் எடுத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது ரோலோப் வான் டெர் மெர்வேக்கும், தொடர் நாயகன் விருது மார்கிராமுக்கும் அளிக்கப்பட்டது.

    Next Story
    ×