search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியாவுக்கு எதிரான தொடர்: தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு- 2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
    X

    இந்தியாவுக்கு எதிரான தொடர்: தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு- 2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

    • டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
    • டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பவுமா செயல்படுவார்.

    கேப்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 10ந்தேதி டர்பனில் நடக்கிறது. இந்திய தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் காயத்துடன் ஆடிய கேப்டன் பவுமா, வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா ஆகியோருக்கு வெள்ளைநிற பந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெரால்டு கோட்ஜீ, மார்கோ யான்சென், இங்கிடி ஆகியோர் முதல் இரு 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராவதற்காக உள்ளூர் முதல்தர போட்டிகளில் ஆடுகிறார்கள். டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பவுமா செயல்படுவார்.


    தென்ஆப்பிரிக்க 20 ஓவர் போட்டி அணி:

    மார்க்ரம் (கேப்டன்), ஓட்னில் பார்ட்மேன், மேத்யூ பிரீட்ஸ்கே, பர்ஜர், கோட்ஜீ, டோனோவன் பெரீரா, ரீஜா ஹென்ரிக்ஸ், மார்கோ யான்சென், கிளாசென், கேஷவ் மகராஜ், டேவிட் மில்லர், இங்கிடி, பெலுக்வாயோ, ஷம்சி, ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ்.

    தென்ஆப்பிரிக்க ஒருநாள் போட்டி அணி:

    மார்க்ரம் (கேப்டன்), ஒட்டினல் பார்ட்மேன், பர்ஜர், டோனி டி ஜோர்ஸி, ரீஜா ஹென்ரிக்ஸ், கிளாசென், கேஷவ் மகராஜ், போங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், பெலுக்வாயோ, ஷம்சி, வான்டெர் டஸன், கைல் வெரைன், லிசாட் வில்லியம்ஸ்

    டெஸ்ட் அணி:

    பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், பர்ஜர், ஜெரால்டு கோட்ஜீ, டோனி டி ஜோர்ஸி, டீன் எல்கர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், மார்க்ரம், வியான் முல்டர், இங்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன்.

    Next Story
    ×