என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சுப்மன் கில் கேட்ட கேள்விக்கு ராகுல் டிராவிட்டின் நெகிழ்ச்சியான பதில்
    X

    சுப்மன் கில் கேட்ட கேள்விக்கு ராகுல் டிராவிட்டின் நெகிழ்ச்சியான பதில்

    • மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் தான் டிராவிட் பிறந்தார்.
    • தொடர் நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூரும் தொடர் நாயகனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டனர்.

    போட்டி முடிந்தவுடன் தொடர் நாயகன் விருது பெற்ற சுப்மன் கில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

    அதில் இந்தூர் ஸ்டேடியத்தில் உங்கள் பெயர் வைக்கப்பட்டுள்ள டிரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று ராகுல் டிராவிட்டிடம் கில் கேட்டார்.


    அதற்கு ராகுல் டிராவிட், "இதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதை நான் பெருமையாக கருதுகிறேன். சில நேரங்களில் சங்கடமாகவும் இருக்கும். நீண்ட ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட முடிந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

    மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் தான் டிராவிட் பிறந்தார். பின்னர், அவரது குடும்பத்தினர் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கிருந்துதான் கிரிக்கெட் பயணத்தை ராகுல் தொடங்கினார்.

    இந்தூரில் டிராவிட் பிறந்ததை கொண்டாடும் வகையில், அவரது பெயரை அங்குள்ள மைதானத்தின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×