search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இனவெறி சர்ச்சை- பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
    X

    இனவெறி சர்ச்சை- பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

    • முதலாவது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
    • அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது.

    கான்பெர்ரா:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் கான்பெர்ராவில் தொடங்கியது.

    இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் (201 ரன்) அடித்து களத்தில் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

    இதற்கிடையே, இந்த ஆட்டத்தின் போது இனவெறி சர்ச்சை வெடித்தது. மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்கோர் போர்டில் பாகிஸ்தானுக்கு பதிலாக பாகி (பி.ஏ.கே.ஐ.) என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தனர். 'பாகி' என்பது பாகிஸ்தான் அல்லது தெற்காசியாவில் பிறந்தவரை குறிப்பிடும் இழிசொல்லாக கருதப்படுகிறது.

    இது சமூக வலைதளத்தில் வைரலானதும் அந்த வார்த்தை திருத்திக் கொள்ளப்பட்டதுடன், தவறுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியது.

    Next Story
    ×