என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்? வெளியான தகவல்
- பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸ்-ன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது.
- அவரை தொடர்ந்து நீட்டிக்க வாய்ப்பில்லை.
ஐபிஎல் 2025 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு அணியும் நிறைய வீரர்களை கழற்றிவிட்டுள்ளனர். கேப்டன்கள் கூட சில அணிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளரை கூட சில அணிகள் மாற்ற செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸ்-ன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. அவரை தொடர்ந்து நீட்டிக்க வாய்ப்பில்லை. அதனால் பஞ்சாப் அணி இந்திய முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரில் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக பஞ்சாப் அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதில் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் பஞ்சாப் அணிக்காக விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.