search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்

    • அப்துல்லா ஷபீக் - இமாம் உல் ஹக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் லயன், ஸ்டார்க் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் சதத்தால் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசி அசத்தினார். அவர் டேவிட் வார்னர் 164 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஸ் 15 ரன்னிலும் அலெக்ஸ் கேரி 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் - இமாம் உல் ஹக் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்ட இந்த ஜோடி 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை லயன் பிரித்தார். அப்துல்லா ஷபீக் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த மசூத் - அப்துல்லா ஷபீக் ஜோடி நிதானமாக விளையாடி ரனகளை சேர்த்தனர். 2-ம் நாள் ஆட்டம் முடிவதற்கு சில ஓவர்கள் இருந்த நிலையில் மசூத் 30 ரன்களில் அவுட் ஆனார்.

    இதன் மூலம் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. இமாம் 38 ரன்களிலும் குர்ரம் ஷாஜாத் 7 ரன்களிலும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் லயன், ஸ்டார்க் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    Next Story
    ×