search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து 2ம் இன்னிங்சில் போராட்டம்: ஆட்டநேர முடிவில் 202/3
    X

    டாம் லாதம்

    பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து 2ம் இன்னிங்சில் போராட்டம்: ஆட்டநேர முடிவில் 202/3

    • துவக்க வீரர்கள் தேவன் கான்வே 61 ரன்களும், டாம் லாதம் 83 ரன்களும் குவித்து நம்பிக்கை அளித்தனர்.
    • இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட நியூசிலாந்து 24 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    வெல்லிங்டன்:

    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 435 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நியூசிலாந்து அணி 42 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் 2ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேக் லீச் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடி வருகிறது. முதல் இன்னிங்சில் கோட்டைவிட்ட நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் தேவன் கான்வே 61 ரன்களும், டாம் லாதம் 83 ரன்களும் குவித்து நம்பிக்கை அளித்தனர். வில் யங் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கேன் வில்லியம்சன் 25 ரன்களும், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்களும் எடுத்திருந்த நிலையில், இன்றைய ஆட்டம் நிறைவு பெற்றது. அப்போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 24 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை 4வது நாள் ஆட்டம் நடக்கிறது. நியூசிலாந்து வீரர்கள் நின்று ஆடுவதைப் பொருத்து போட்டியின் முடிவு அமையும். எனவே, நாளை அதிகபட்ச ஸ்கோரை எட்டுவதற்கு நியூசிலாந்து வீரர்கள் முயற்சி செய்வார்கள்.

    Next Story
    ×