search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பரபரப்பான கட்டத்தில் ஹாமில்டன் டெஸ்ட்: வெற்றி பெறப்போவது நியூசிலாந்தா, தென் ஆப்பிரிக்காவா?
    X

    பரபரப்பான கட்டத்தில் ஹாமில்டன் டெஸ்ட்: வெற்றி பெறப்போவது நியூசிலாந்தா, தென் ஆப்பிரிக்காவா?

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்னும், 2வது இன்னிங்சில் 235 ரன்னும் எடுத்தது.
    • நியூசிலாந்து வெற்றி பெற 267 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹாமில்டன்:

    தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்கள் அடித்தது.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பிட் 5 விக்கெட்டும், டேன் பேட்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 31 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அந்த அணியின் பெடிங்காம் 110 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து, 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 21 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து வெற்றி பெற 227 ரன்கள் தேவைப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 9 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பதால் இப்போட்டி பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.

    Next Story
    ×