search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக் கோப்பை போட்டி: வெறும் 90 ரன்களில் சுருண்டது நெதர்லாந்து- ஆஸ்திரேலியா அபார வெற்றி
    X

    உலகக் கோப்பை போட்டி: வெறும் 90 ரன்களில் சுருண்டது நெதர்லாந்து- ஆஸ்திரேலியா அபார வெற்றி

    • ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது.
    • 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் 24-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ச் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களை குவித்தார்.

    அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 68 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய லபுஷேன் 47 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்துள்ளது.

    நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக் நான்கு விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆர்யன் டட் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.

    இதில், விளையாடிய பெரும்பாலான வீரர்கள் ஒற்றை இலக்கில் ரன்கள் எடுத்து அவுட்டாகினர். அர்யன் தட் 7 ரன்கள், அக்கர்மென் 4 ரன்கள், வேன் பீக் மற்றும் வேன் மீக்கரன் தலா 10 ரன்கள், விக்ரம்ஜித் சிங் 4 ரன்கள், வேன் டெர் மார்வே 5 ரன்கள், பாஸ் டி லீட் 10 ரன்களும் எடுத்து மொத்தமாக 100 ரன்கள் கூட தாண்ட முடியாமல் திணறினர்.

    இந்நிலையில், நெதர்லாந்து அணி 21 ஓவரின் 90 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

    இதன் மூலம், ஆஸ்திரேலியா அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

    Next Story
    ×