search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வெங்கடேஷ் அய்யர் அதிரடி சதம் - மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 185 ரன்கள் குவிப்பு
    X

    வெங்கடேஷ் அய்யர்

    வெங்கடேஷ் அய்யர் அதிரடி சதம் - மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 185 ரன்கள் குவிப்பு

    • இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    மும்பை:

    16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ், ஜெகதீசன் விளையாடினர். ஜெகதீசன் டக் அவுட்டானார். குர்பாஸ் 8 ரன்னில் வெளியேறினார். கேப்டன் நிதிஷ் ரானா 5 ரன்னிலும், ஷர்துல் தாக்குர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வெங்கடேஷ் அய்யர் ருத்ர தாண்டவமாடினார். மும்பை பந்துவீச்சை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். தனி ஆளாக நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். அவர் 51 பந்துகளில் 9 சிக்சர், 6 பவுனட்ரி உள்பட 104 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.

    மும்பை அணி சார்பில் ரித்திக் ஷோக்கீன் 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன், பியூஷ் சாவ்லா, மெரிடித், யான்சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×