search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    குறைந்த டெஸ்ட் போட்டி: பந்து வீச்சு, பேட்டிங்கில் புதிய சாதனை படைத்தார் அஸ்வின்
    X

    குறைந்த டெஸ்ட் போட்டி: பந்து வீச்சு, பேட்டிங்கில் புதிய சாதனை படைத்தார் அஸ்வின்

    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமினின் 34 ஆண்டு கால சாதனையை அஸ்வின் முறியடித்து உள்ளார்.
    • முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    மிர்பூர்:

    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த வெற்றிக்கு 8-வது விக்கெட் ஜோடியான ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் காரணமாக இருந்தனர். 145 ரன் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 74 ரன்னில் 7 விக்கெட்டை இழந்தது.

    இதனால் இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு சென்றது. இருவரும் சிறப்பாக ஆடி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றி வெற்றி பெற வைத்தனர்.

    இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் இன்னிங்சில் 12 ரன்னும், 2-வது இன்னிங்சில் 42 ரன்னும் எடுத்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றி னார்.

    2-வது இன்னிங்சில் அஸ்வின் எடுத்த 42 ரன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

    36 வயதான அஸ்வின் 88 டெஸ்டில் விளையாடி 3043 ரன்கள் எடுத்துள்ளார். 449 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்டில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுக்கு மேல் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை யை அவர் படைத்தார்.

    இதற்கு முன்பு கபில்தேவ் (இந்தியா), ஹேட்லி (நியூசிலாந்து) பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா), வார்னே (ஆஸ்திரேலியா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) ஆகியோர் இந்த சாதனையை படைத்து இருந்தனர். இந்த வரிசையில் 6-வது வீரராக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இணைந்து உள்ளார்.

    கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 5248 ரன் குவித்துள்ளார். 434 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரிச்சர்டு ஹேட்லி 86 டெஸ்டில் 3124 ரன்னும், 431 விக்கெட்டும், வார்னே 145 டெஸ்டில் 3154 ரன்னும், 708 விக்கெட்டும் எடுத்துள்ள னர்.

    பொல்லாக் 108 டெஸ்டில் 3781 ரன்னும், 421 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 159 டெஸ்டில் 3550 ரன்னும், 566 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

    சென்னையை சேர்ந்த அஸ்வின் 450 விக்கெட் கைப்பற்றி மேலும் ஒரு மைல்கல்லை தொட இன்னும் ஒரு விக்கெட்டே தேவை. கும்ப்ளே குறைந்த டெஸ்டில் 450 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து இருந்தார். 93-வது டெஸ்டில் அவர் இதை செய்து இருந்தார். அவரது சாதனையை முறியடித்து அதிவேகத்தில் 450 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற அஸ்வினுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    அஸ்வின் நேற்று மேலும் ஒரு சாதனை புரிந்தார். 9-வது வீரராக களம் இறங்கி அதிக ரன்களை எடுத்து சேசிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தார் என்ற சாதனையை படைத்தார்.

    இதற்கு முன்பு 1988-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமின் 9-வது வீரராக களம் இறங்கி 40 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்து இருந்தார். தற்போது அஸ்வின் 42 ரன் எடுத்து வெற்றி பெற வைத்துள்ளார். இதன் மூலம் 34 ஆண்டு கால சாதனையை அஸ்வின் முறியடித்து உள்ளார்.

    Next Story
    ×