என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் 2024: பஞ்சாப்புக்கு எதிராக பெங்களூரு பந்து வீச்சு தேர்வு
- இன்று நடைபெறும் 6-லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது.
- பஞ்சாப் முதல் போட்டியில் டெல்லி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பெங்களுரு:
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6-லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் முதல் போட்டியில் டெல்லி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் சென்னையிடம் தோல்வியடைந்தது. இதனால் சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ய பெங்களூரு அணி ஆர்வமாக உள்ளது.
Next Story






