என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
சிஎஸ்கே-வுக்கு எதிராக விளையாடிய அனைத்து குஜராத் வீரர்களுக்கும் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்
- சுப்மன் கில்லுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது போட்டிக்கான சம்பளம், இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. குஜராத் அணி இந்த சீசனில் இரண்டாவது முறையாக இதுபோன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.
இதனால் கேப்டனான சுப்மன் கில்லுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக என்பதால் சுப்மான் கில்லை தவிர்த்து அணியில் விளையாடி இம்பேக்ட் பிளேயர் உள்பட 11 வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2-வது முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால், கேப்டனை தவிர்த்து மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது இந்த போட்டிக்கான சம்பளத்தில் 24 சதவீதம், இதில் எது குறைவானதோ அது அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்பின் முதலில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் சதத்தால் 231 ரன்கள் குவித்தது.
பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே அணியால் 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டேரில் மிட்செல் 63 ரன்களும், மொயீன் அலி 56 ரன்களும் அடித்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 12 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
இந்த போட்டியின் தொடக்கத்தில் சுப்மன் கில் பீல்டிங் செய்தார். அதன்பின் போட்டி முடியும் வரை டெவாட்டியா பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.