search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தேசிய அணியில் இடம் பெறாமல் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்.. 15 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்
    X

    தேசிய அணியில் இடம் பெறாமல் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்.. 15 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்

    • பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார்.
    • இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்ததன் மூலமாக 15 ஆண்டுகால சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

    உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்து வளர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 18-வது வயதில் முதல் முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடினார். இதில், அவர் 3 போட்டிகளில் 40 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தனது 19-வது வயதில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் 249 ரன்கள் குவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி 258 ரன்கள் குவித்தார்.

    இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 124 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் மட்டும் அவர் 87 பவுண்டரி மற்றும் 26 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் 15 ஆண்டுகாலம் நீடித்த ஒரு சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

    இதன் மூலம் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்து, சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு ஷான் மார்ஷ் இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை 21 வயதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

    Next Story
    ×