என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்

டோனி போன்ற வீரர் நூற்றாண்டுக்கு ஒரு முறைதான் கிடைப்பார்கள்- சுனில் கவாஸ்கர்

- டோனி இன்னும் சில காலம் விளையாட வேண்டும் என சுனில் கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- இது டோனியின் கடைசி சீசனாக இருக்க கூடாது என நான் ஆசைப்படுகிறேன்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளுக்கும் ஒன்று முதல் இரு போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இதுவரை எந்த அணியும் உறுதி செய்யவில்லை. இதனால் ஒவ்வொரு போட்டி மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
எந்த சீசனில் நடக்காத வகையில் இந்த சீசனின் சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. சென்னை அணி வெளிமாநில மைதானங்களில் விளையாடினால் சென்னை அணியின் ரசிகர்கள் மைதானங்கள் முழுக்க சூழ்ந்தனர். அதுமட்டுமல்லாமல் எதிரணி ரசிகர்களும் டோனியை பார்க்கப்பதற்காகவே மைதானங்களுக்கு வந்தனர்.
இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் சென்னை அணி கேகேஆர் அணியிடம் தோல்வியடைந்தது. சென்னையில் கடைசி லீக் போட்டி என்பதால் டோனியும், சென்னை அணி வீரர்களும் மைதானம் முழுக்க வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது திடீரென வந்த சுனில் கவாஸ்கர், டோனியுடம் தனது சட்டையில் ஆட்டோகிராஃப் போடுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து டோனியும் அவரது சட்டையில் ஆட்டோகிராஃப் போட, இருவரும் கட்டபிடித்து அன்பை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில்:-
எம்எஸ் டோனியை போன்ற வீரர்கள் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தான் வருவார்கள். அதனால்தான் அவர் தொடர்ந்து விளையாடுவதை பார்க்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். இது டோனியின் கடைசி சீசனாக இருக்க கூடாது என நான் ஆசைப்படுகிறேன். அவர் இன்னும் சில காலம் விளையாட வேண்டும்.
என அவர் கூறினார்.
வாழ்நாளில் எத்தனையோ சாதனைகள், எத்தனை வீரர்களை பார்த்துள்ள சுனில் கவாஸ்கர், டோனியை புகழ்ந்து ஆட்டோகிராஃப் பெற்றுள்ள சம்பவம் ஐபிஎல் தொடரின் மிகமுக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
