search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அரங்கை அதிரவைத்த கான்வே, ஷிவம் துபே... பெங்களூரு அணிக்கு எதிராக சி.எஸ்.கே. 226 ரன்கள் குவிப்பு

    • துவக்க வீரர் தேவன் கான்வே அதிரடியாக ஆடி 83 ரன்கள் குவித்தார்.
    • 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    பெங்களூரு:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    சென்னை அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் மற்றொரு துவக்க வீரர் தேவன் கான்வே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். விரைவில் அரை சதம் கடந்த அவர் 83 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். முன்னதாக ரகானே 37 ரன்களில் அவுட் ஆனார். இதேபோல் ஷிவம் துபே, தன் பங்கிற்கு பந்துகளை பவுண்டரி சிக்சர்களாக பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 52 ரன்கள் விளாசினார்.

    அம்பதி ராயுடு 14 ரன், ஜடேஜா 10 ரன், மொயீன் அலி 19 ரன் (அவுட் இல்லை) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் முகமது சிராஜ், வாய்னே பார்னெல், விஜயகுமார் வைஷாக், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×