search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஷமியின் வேகத்தில் சரிந்த விக்கெட்... 130 ரன்னில் டெல்லி கேப்பிட்டல்சை கட்டுப்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ்

    • அமான் கான் 44 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் அடித்தார்.
    • குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44வது ஆட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் உள்ளூர் அணியான குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

    முகமது ஷமியின் வேகப்பந்தில் டெல்லி அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. துவக்க வீரர் பில் சால்ட், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து வார்னர் 2 ரன், ரிலி ரூசோ 8 ரன், மணீஷ் பாண்டே ஒரு ரன், பிரியம் கார்க் 10 ரன்னில் அவுட் ஆகினர். 23 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.

    நெருக்கடியான சூழ்நிலையில், அக்சர் பட்டேல் 27 ரன்களும், அதிரடியாக ஆடிய அமான் ஹக்கிம் கான் 51 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர்.

    கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிப்பல் பட்டேல் 23 ரன்கள் விளாசினார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது.

    குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். மோகித் சர்மா 2 விக்கெட், ரஷித் கான் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×