என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    லைவ் அப்டேட்ஸ்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இந்தியா
    X

    லைவ் அப்டேட்ஸ்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இந்தியா

    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்கள் எடுத்தது.
    • 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 55 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    மும்பை:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவின் வான்கடே மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    Live Updates

    • 2 Nov 2023 3:33 PM IST

      விராட் கோலியை தொடர்ந்து கில்லும் அரை சதம் விளாசினார்.

    • 2 Nov 2023 3:28 PM IST

      இந்திய அணி 100 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி அரை சதம் விளாசினார்.

    • 2 Nov 2023 2:53 PM IST

      10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 60 ரன்கள் எடுத்துள்ளது.

    • 2 Nov 2023 2:47 PM IST

      8.1 ஓவரில் 50 ரன்களை கடந்து இந்திய அணி விளையாடி வருகிறது. கோலி 26 ரன்னிலும் கில் 15 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    • 2 Nov 2023 2:34 PM IST

      சுப்மன் கில் மற்றும் விராட் கோலிக்கு இலங்கை வீரர்கள் கேட்ச் மிஸ் செய்துள்ளனர்.



       


    • 2 Nov 2023 2:07 PM IST

      முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார் ரோகித் சர்மா. அடுத்த பந்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.



    • 2 Nov 2023 1:55 PM IST

      போட்டிக்கு முன்பு மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது விராட் கோலி, பும்ரா போல பந்து வீசி அவுட் கேட்டார். அதற்கு பும்ரா வைடு என அறிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    Next Story
    ×