என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் கிரிக்கெட்: வங்காளதேசதுக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
- வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன், நஹிதா அக்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- காயத்தில் இருந்து மீண்டு வந்த கவூர் அரை சதம் விளாசி 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினர். தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில், இந்தியா- வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா- பிரியா களமிறங்கினர்.
பிரியா புனியா 7, யாஷிகா 15, மந்தனா 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கவுர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கவுர் 48 ரன்னில் காயம் காரணமாக வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரை சதம் விளாசி அசத்தினார்.
அவர் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்த கவூர் அரை சதம் விளாசி 52 ரன்னில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன், நஹிதா அக்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.






