என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது
- முகமது ஷமி 7 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்
- பும்ரா 6.5 ஓவரில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது.
Live Updates
- 29 Oct 2023 3:57 PM IST
உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். சச்சின் 44 இன்னிங்சில் 21 முறை கடந்துள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி தலா 12 முறை கடந்துள்ளார்.
ஷாகிப் அல் ஹசன், குமார் சங்கக்காரா ஆகியோரும் 12 முறை கடந்துள்ளனர்.
- 29 Oct 2023 3:40 PM IST
21 ஒவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ரோகித் சர்மா. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.






