search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை - இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
    X

    வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை - இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

    • முதலில் ஆடிய இந்திய அணி 211 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    கொழும்பு:

    வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் 2வது அரையிறுதியில் இந்தியா ஏ - வங்காளதேசம் ஏ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 49.1 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் யாஷ் துல் 66 ரன்னும், அபிஷேக் ஷர்மா 34 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் 51 ரன்கள், முகமது நயீ 38 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், வங்காளதேசம் ஏ அணி 34.2 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்தியா ஏ அணி சார்பில் நிஷாந்த் சந்து 5 விக்கெட், மானவ் சுதார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது யாஷ் துல்லுக்கு வழங்கப்பட்டது.

    Next Story
    ×