search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கேரள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயராம் மறைவு
    X

    கேரள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயராம் மறைவு

    • பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • ஓய்வுக்கு பிறகு கேரள சீனியர் அணியின் தலைமை தேர்வாளராக பணியாற்றினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜெயராம். இவர் கேரள மாநில கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ரஞ்சி போட்டிகளில் செயல்பட்டுள்ளார். ஓய்வுக்கு பிறகு கொச்சியில் வசித்து வந்த இவர் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு (வயது 67).

    இவர் 1980-ம் ஆண்டு கேரளாவின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். ரஞ்சி டிராபியில் மொத்தம் 46 போட்டிகளில் விளையாடிய அவர் 5 சதம், 10 அரை சதம் உள்பட 2358 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 29.47 ஆகும். குறிப்பாக 1986-87 சீசன் ரஞ்சி டிராபியில் விளையாடிய 5 போட்டிகளில் 4 சதங்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓய்வுக்கு பிறகு கேரள சீனியர் அணியின் தலைமை தேர்வாளர், அகில இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் ஜூனியர் தேசிய தேர்வாளர், போட்டி நடுவர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

    ஜெயராமின் உடல் தகனம் நாளை (17-ந் தேதி) ரவிபுரம் மயானத்தில் நடக்கிறது. அவருக்கு ரமா என்ற மனைவியும், அபய் என்ற மகனும் உள்ளனர்.

    அவரது மறைவுக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×