என் மலர்

  கிரிக்கெட்

  2-வது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
  X

  2-வது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • 5-வது விக்கெட்டுக்கு மலான் - மொய்ன் அலி ஜோடி 92 ரன்கள் சேர்த்தது.

  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

  அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 54 ரன்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து மலான் - மொய்ன் அலி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

  இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய மொய்ன் அலி 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கரண் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி ஓவர் வரை விளையாடிய மலான் 82 ரன்களில் அவுட் ஆனார்.

  இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

  Next Story
  ×