என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த இங்கிலாந்து - 3 ரன்னில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது
- முதலில் ஆடிய இங்கிலாந்து 99 ரன்னில் ஆல் அவுட்டானது.
- தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 96 ரன்னில் சுருண்டது.
போப்செப்ஸ்ட்ரூம்:
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 99 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 25 ரன்னும், கேப்டன் கிரேஸ் 20 ரன்னும், ஜோசி குரோவ்ஸ் 15 ரன்னும், செரேன் ஸ்மேல் 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
அதன்பின் ஆடிய ஆஸ்திரேலியா அணி 18.4 ஓவரில் 96 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஹன்னா பாகேர் 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகியாக ஜொலித்தார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.