search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதலில் குடும்பம் தான்.. கிரிக்கெட்டர் என்ற வார்த்தையை நீக்கிய புவனேஸ்வர் குமார்
    X

    முதலில் குடும்பம் தான்.. கிரிக்கெட்டர் என்ற வார்த்தையை நீக்கிய புவனேஸ்வர் குமார்

    • புவனேஸ்வர்குமார் இன்ஸ்டாகிராம் பயோவில் புதிய மாற்றங்களை செய்துள்ளார்.
    • தனது இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதனை மாற்றியுள்ளார்.

    டெல்லி:

    இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். இவர் பந்தை 'ஸ்விங்' செய்வதில் வல்லவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தவர் புவனேஷ்வர் குமார். டி20 போட்டிகளில் விக்கெட் பெரிய அளவில் கைப்பற்றாவிட்டாலும் டாட் பந்துகளை அதிகம் வீசக்கூடியவர். இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். காயம் காரணமாக சில தொடர்களில் இடம்பெறவில்லை. காயம் சரியான பின்பும் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

    33 வயதான புவனேஷ்வர் குமார், கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடினார். இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இதில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

    இந்நிலையில் புவனேஸ்வர்குமார் இன்ஸ்டாகிராம் பயோவில் புதிய மாற்றங்களை செய்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதனை மாற்றி 'இந்தியன்' என மட்டுமே குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்கு கீழ் குடும்பம் தான் முதல் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மாற்றம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறாரா? என்ற அச்சத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×