என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா அணி- பதக்கத்தை உறுதி செய்தது
    X

    ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா அணி- பதக்கத்தை உறுதி செய்தது

    • பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா- வங்களாதேச அணிகள் மோதின.
    • முதலில் விளையாடிய வங்காளதேச அணி இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சால் 17.5 ஓவர்களில் 51 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    இப்போட்டியில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா- வங்களாதேச அணிகள் அரையிறுதியில் விளையாடி வருகின்றன. முதலில் விளையாடிய வங்காளதேச அணி இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சால் 17.5 ஓவர்களில் 51 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    பின்னர் 52 ரன்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 8.2 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்குள் நுழைந்து தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை இந்தியா அணி உறுதி செய்துள்ளது.

    Next Story
    ×