search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பையில் தோல்வி: பாபர் ஆசம்-ஷகின்ஷா அப்ரிடி மோதல்
    X

    ஆசிய கோப்பையில் தோல்வி: பாபர் ஆசம்-ஷகின்ஷா அப்ரிடி மோதல்

    • ஹாரிஸ் ரவூப், நசீம்ஷா ஆகியோரின் காயம் பாகிஸ்தான் அணிக்கு ஆசிய கோப்பையில் பின்னடைவை ஏற்படுத்தியது.
    • தோல்விக்கு பிறகு அணி வீரர்கள் மத்தியில் பேசிய பாபர் ஆசம் சீனியர் வீரர்களின் ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. இலங்கை 7-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெறும் வேட்கையில் உள்ளது.

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் வாய்ப்பை இழந்தது.

    ஹாரிஸ் ரவூப், நசீம்ஷா ஆகியோரின் காயம் பாகிஸ்தான் அணிக்கு ஆசிய கோப்பையில் பின்னடைவை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாகர் ஆசமும், வேகப்பந்து வீரர் ஷகின்ஷா அப்ரிடியும், வார்த்தைகளால் மோதிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தோல்விக்கு பிறகு அணி வீரர்கள் மத்தியில் பேசிய பாபர் ஆசம் சீனியர் வீரர்களின் ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்பினார். சூப்பர் ஸ்டார்களாக இருப்பதை நிறுத்துங்கள். உலக கோப்பையை நீங்கள் இழந்தால் யாரும் உங்களை சூப்பர் ஸ்டாராக கருதமாட்டார்கள் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது ஷகீன்ஷா அப்ரிடி குறுக்கிட்டு பொதுவாக பேச வேண்டாம். நன்றாக ஆடுபவர்களை விமர்சனம் செய்வது ஏன்? வீரர்களின் செயல் திறனை குறைந்தபட்சம் பாராட்ட வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த பாபர் ஆசம் யார் நன்றாக விளையாடினார்கள். யார் சரியாக ஆடவில்லை என்பது தெரியும் என்று தெரிவித்தார்.

    உலக கோப்பையில் தங்கள் செயல்திறனில் கவனம் செலுத்துமாறு வீரர்களிடம் அவர் அறிவுறுத்தினார். மேலும் தோல்விக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்ற பாபர் ஆசம் ஓட்டலுக்கு செல்லும் வழியில் யாருடனும் பேசவில்லை.

    முகமது ரிஸ்வான் உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓட்டலுக்கு செல்வதற்கு முன்பு பாபர் ஆசமை சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×