search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பேட்டை வைத்து விளையாட சொன்னா - வைரலாகும் WI வீரர் வீடியோ
    X

    பேட்டை வைத்து விளையாட சொன்னா - வைரலாகும் WI வீரர் வீடியோ

    • வெஸ்ட் இண்டீஸ் வீரர் கவேம் ஹாட்ஜ் பேட்டிங் செய்த போது வித்தியாசமான முறையில் ஒரு ஷாட் விளையாடி இருக்கிறார்.
    • பேட்டை வைத்து விளையாட சொன்னா நீ எத வைச்சு விளையாடுற என்று நெட்டிசன்கள் கிண்டலான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலாவது நடந்து டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி 25-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.

    22 ரன்கள் முன்னிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. தற்போது வரை 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 123 ரன்களில் விளையாடி வருகிறது.

    இந்நிலையில் நாதன் லயன் பந்து வீச்சை சமாளிக்க வெஸ்ட் இண்டீஸ் வீரர் கவேம் ஹாட்ஜ் புதிய யுக்தியை பயன்படுத்தி உள்ளார். அதன்படி அவர் பேட்டிங் செய்த போது வித்தியாசமான முறையில் ஒரு ஷாட் விளையாடி இருக்கிறார். பேட்டை வைத்து விளையாடாமல் உடலை வைத்து விளையாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேட்டை வைத்து விளையாட சொன்னா நீ எத வைச்சு விளையாடுற என்று நெட்டிசன்கள் கிண்டலான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    ஏற்கனவே அதே அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் உற்சாகத்துடன் ஜிம்னாஸ்டிக் வீரர்களை போன்று டைவ் அடித்து சந்தோசத்தை வெளிப்படுத்திய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×