search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சிட்னி டெஸ்டில் ஜமால் அபார பந்து வீச்சு: முதல் இன்னிங்சில் 299 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா
    X

    சிட்னி டெஸ்டில் ஜமால் அபார பந்து வீச்சு: முதல் இன்னிங்சில் 299 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா

    • லபுசேன், மிட்செல் மார்ஷ் அரைசதம் அடித்தனர்.
    • ஆமிர் ஜமால் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்றுமுன்தினம் (ஜனவரி 4-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்களும், ஆமிர் ஜமால் 82 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 47 ரன்னில் வெளியேறினார். ஆஸ்திரேலியா 47 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது லபுசேன் 23 ரன்னுடனும், ஸ்மித் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அத்துடன் 2-வது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய லபுசேன் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 38 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த மிட்டிசெல் மார்ஷ் அரைசதம் அடித்து 54 ரன்னில் வெளியேறினார். அலேக்ஸ் கேரி 38 ரன்னில் அவுட்டானர். இந்த ஜோடி ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலியா மளமளவென விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.

    பின்னர் கடைநிலை பேட்ஸ்மேன்களை ஆமிர் ஜமால் அடுத்தடுத்து வீழ்த்த ஆஸ்திரேலியாவால் ரன் சேர்க்க முடியாமல் 299 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜமால் கடைசி ஏழு பந்தில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் மொத்தம் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பாகிஸ்தான் தற்போது 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினால் இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    Next Story
    ×