search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கம்மின்ஸ் - லயன் மிரட்டல் பந்து வீச்சு: 2-ம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்
    X

    கம்மின்ஸ் - லயன் மிரட்டல் பந்து வீச்சு: 2-ம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்

    • மசூத் மற்றும் சபீக் அரை சதம் விளாசினர்.
    • ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் நாதன் லயன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போரன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழைக்காரணமாக நேற்றைய ஆட்டத்தின் பெரும்பகுதி ஆட்டம் தடைபட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா 66 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 44 ரன்களுடனும், டிராவிட் ஹெட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்மிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா 318 ரனனில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆமிர் ஜமால் 3 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக்- இமாம் களமிறங்கினர். இந்த ஜோடி வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடினர். இதனால் லயனை பந்து வீச பேட் கம்மின்ஸ் அழைத்தார். அதற்கு பலன் கிடைக்கும் வகையில் இமாம் 10 ரன்களில் அவர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து சபீக்குடன் கேப்டன் மசூத் ஜோடி சேர்ந்து நேர்த்தியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபீக் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. சபீக் 62 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த பாபர் அசாம் 1 ரன்னில் அவுட் ஆக அரை சதம் விளாசிய கேப்டன் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சகீல் 9 ரன்னிலும் சல்மான் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    இதனால் பாகிஸ்தான் அணி 170 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ரிஸ்வான் மற்றும் ஜமால் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடினர்.

    இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது. ரிஸ்வான் 29 ரன்களிலும் ஜமால் 2 ரன்களில் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் நாதன் லயன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    Next Story
    ×