என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
X
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு
Byமாலை மலர்5 Nov 2022 9:34 AM GMT
- அசோக் சிகாமணியை எதிர்த்து போட்டியிட தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் பிரபு
- கிரிக்கெட் சங்க செயலாளராக பழனி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்
சென்னை:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ரூபா 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் தலைவர் பதவி தேர்வு செய்யப்படாமல் இருந்தது. துணைத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி இருந்து வந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தலைவர் பதவிக்கான போட்டியில் அசோக் சிகாமணி, பிரபு ஆகியோர் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரபு தனது மனுவை வாபஸ் பெற்று தேர்தலில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து அசோக் சிகாமணி போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வானார். இதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழனி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Next Story
×