என் மலர்
கிரிக்கெட் (Cricket)

படுகாயமடைந்த ரிஷப் பந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பாலிவுட் நடிகர்கள்

- அவரை ரசிகர்களாகச் சந்தித்தோம் என கபூர் கூறினார்.
- கபூருடன் வந்த கேர், கிரிக்கெட் வீரரை மிகவும் சிரிக்க வைத்ததாக கூறினார்.
படுகாயமடைந்த ரிஷப் பந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பாலிவுட் நடிகர்கள்டேராடூன்:
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் தனது சொகுசு கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்நிலையில் கார் விபத்தில் காயமடைந்து மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தை பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கேர் ஆகியோர் சந்தித்தனர்.
அவர் (பண்ட்) நலமாக இருக்கிறார். அவரை ரசிகர்களாகச் சந்தித்தோம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திகிறோம். அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்ப்போம் என்று மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் கபூர் கூறினார்.
கபூருடன் வந்த கேர், கிரிக்கெட் வீரரை மிகவும் சிரிக்க வைத்ததாக கூறினார்.
மேலும் அவர், மருத்துவமனையில் பந்த், அவருடைய அம்மா மற்றும் உறவினர்களை சந்தித்தோம். பண்ட் நலமாக இருக்கிறார். அவரை மிகவும் சிரிக்க வைத்தோம்," என்று கூறினார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.