என் மலர்
சினிமா

சூர்யா
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு- தமிழக அரசுக்கு சூர்யா நன்றி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கு சூர்யா நன்றி தெரிவித்து உள்ளார்.
நீட் தேர்வை க்ளியர் செய்யும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதில் 7.5 சதவீத “கிடைமட்ட இடஒதுக்கீடு” வழங்கும் மசோதாவை, தமிழக சட்டமன்றம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது.

இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறார். அவரது பதிவில்,

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்... இவ்வாறு அவர் பதிவு செய்து இருக்கிறார்.
Next Story






