search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    முன் அறிவிப்பு இல்லாமல் வங்கி கணக்கு முடக்கப்பட்டது - மகேஷ்பாபு குற்றச்சாட்டு
    X

    முன் அறிவிப்பு இல்லாமல் வங்கி கணக்கு முடக்கப்பட்டது - மகேஷ்பாபு குற்றச்சாட்டு

    சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகள் நேற்று முடக்கப்பட்ட நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போது முன் அறிவிப்பு இல்லாமல் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக மகேஷ்பாபு குற்றம்சாட்டியுள்ளார். #MaheshBabu
    ஐதராபாத்:

    தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனான விளங்குபவர் மகேஷ்பாபு. கடந்த 2007-08-ம் ஆண்டுகளில் பிராண்ட் அம்பாசிடராக இருந்து விளம்பரங்களில் தோன்றிய தற்கான சேவை வரி ரூ.18.5 லட்சம் செலுத்தவில்லை என்று ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி ஆணையகம் அவரின் வங்கிக் கணக்கு களை முடக்கியது.

    வட்டி, அபராதம் உள்ளிட்டவைகள் உட்பட அவர் ரூ.73.5 லட்சம் வரி பாக்கி வைத்துள்ள தாகவும் கூறப்பட்டது.

    இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் வரி பாக்கி எதுவும் வைக்கவில்லை என்று விளக்கம் கொடுத் தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ஜி.எஸ்.டி ஆணையகம் அறிக்கையின்படி கடந்த 2007-08-ம் ஆண்டில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கான வரியைக் கட்ட வில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.



    அப்போதைய கால கட்டத்தில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை. 2010-ம்ஆண்டில்தான் அந்த சேவைக்கு வரி விதிக்கப் பட்டது. வரி கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பான பல்வேறு விதிமுறைகள் வரி செலுத்துவோருக்கு ஆதரவாக இருக்கிறது.

    ஆனால் ஜி.எஸ்.டி ஆணையகம் எந்த முன் அறிவிப்பும் இன்றி எனது வங்கிக் கணக்கை முடக்கி இருக்கிறது’’ என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார். #MaheshBabu #GST #ServiceTax

    Next Story
    ×