என் மலர்
சினிமா

மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினிகாந்த்
ரஜினி மக்கள் மன்றத்தில் ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்களை ரஜினிகாந்த் நேற்று சந்தித்த நிலையில், வருகிற 13-ஆம் தேதி மாவட்ட இளைஞரணி செயலாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Rajinikanth
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்ததனர். அவர்களுடன் நேற்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் இதில் 32 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர்களை வருகிற 13-ஆம் தேதி சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடக்கும இந்த சந்திப்பில் தமிழக - புதுச்சேரி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram
Next Story






