என் மலர்tooltip icon

    OTT

    இந்த வார ஓடிடி ரிலீஸ்
    X

    இந்த வார ஓடிடி ரிலீஸ்

    • திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன.
    • சிபிராஜ் நடிப்பில் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது டென் ஹவர்ஸ் திரைப்படம்.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. பல திரைப்படங்களுக்கு திரையரங்கிள் கிடைக்காத வெற்றி ஓடிடி தளத்தில் வெளியான பிறகு கிடைகிறது. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    நேசிப்பாயா

    மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியானது நேசிப்பாயா திரைப்படம், இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்க அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்தார். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டார். இத்திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி லயன்ஸ்கேட் ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    மரணமாஸ்

    பசில் ஜோசப் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது மலையாள திரைப்படமான மரணமாஸ். அராத்தாக இருக்கும் கதாநாயகன் பசில் ஒரு தொடர்கொலை சந்தேக குற்றவாளியாக இருக்கிறார். இவர் ஒரு நாள் பேருந்தில் ஏறி செல்லும்போது அங்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.இப்படம் வரும் மே 15 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    அமெரிக்கன் மேன் ஹண்ட்: ஒசாமா பின் லேடன்

    மோர் லவ்ஷி மற்றும் டேனியல் சிவன்ஸ் மூன்று பாக ஆவண தொடராக உருவாக்கியுள்ளனர். ஒசாமா பின் லேடனை அமெரிக்க அரசு எப்படி பிடித்தது என்பதை கூறும் ஆவண தொடராக உருவாகியுள்ளது. இத்தொடர் வரும் மே 14 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


    வருணன்

    கேப்ரியல்லா, துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தண்ணீர் கேன் சப்ளை செய்யும் இரண்டு கூட்டத்திற்கு நடுவே நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைக்களமாகும். இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'அஸ்திரம்'

    கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள படம் 'அஸ்திரம்'. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். இதில் நீரா மற்றும் வெண்பா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது.

    டென் ஹவர்ஸ்

    சிபிராஜ் நடிப்பில் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது டென் ஹவர்ஸ் திரைப்படம். இப்படத்தில் காவல் அதிகாரியாக சிபிராஜ் நடித்து இருந்தார். இத்திரைப்படம் ஓர் இரவில் நடக்கும் கதைக்களத்துடன் அமைந்து இருக்கும். டென் ஹவர்ஸ் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.

    'ஒடேலா 2'

    அசோக் தேஜா தான் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான படம் 'ஒடேலா 2'. இதில் ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் நாம் இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி'

    நிதின், பரத் இயக்கத்தில் வெளியான படம் 'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி'. இதில் ரதீப் மச்சிராஜு, தீபிகா பில்லி, வெண்ணெலா கிஷோர் மற்றும் சத்யா ஆகியோர் நடித்து உள்ளனர். கிராமத்து காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஈ.டி.வி வின் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

    'ஜாக்'

    தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் வைஷ்ணவி சைதன்யா நடித்துள்ள படம் 'ஜாக்'. பொம்மரில்லு பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியானது.

    'ல்தகா சைஆ'

    சதா நடார் இயக்கத்தில் வெளியான படம் 'ல்தகா சைஆ'. இதில் மோனிகா சலினா கதாநாயகியாக நடித்துள்ளார். கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடப்பதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலை மையமாக கொண்ட சஸ்பென்ஸ் திரில்லரில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'ராபின்ஹுட்'

    ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'. நிதின் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கினார். இதில் ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×