என் மலர்
சினிமா

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படம்
உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருதுக்கான சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் இந்தியா சார்பில் அசாம் திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்' பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #VillageRockstars #Oscars91
உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில் 91-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் அசாமிய திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்' என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரீமா தாஸ் இயக்கிய இந்த திரைப்படம் ஏற்கனவே இந்த ஆண்டுக்கான தேசிய விருதினை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய குழு தேர்வு செய்யும் பட்டியலில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் தேசிய விருதை வென்ற டூலெட் படங்களும் இடம்பிடித்துள்ளன. இவை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறதா என்பது விரைவில் தெரிய வரும். #Oscars #Oscars91 #Oscars2019
Next Story






