என் மலர்
தரவரிசை
ராஜ் வர்மா, செரீனா, சிங்கம்புலி, பாண்டியராஜன் ஆகியோர் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘சாலையோரம்’. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
நாயகன் ராஜ் வர்மாவும், அவரது நண்பரான சிங்கம் புலியும் சாலை துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகின்றனர். அதேவேளையில், ஊனமுற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளை நடத்தி வரும் பாண்டியராஜன் அரவணைப்பில் வளர்ந்துவரும் நாயகி செரீனா, படிப்பை முடித்துவிட்டு ஏதாவது ஆராய்ச்சி செய்யலாம் என்ற யோசனையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஒருநாள் செரீனாவின் விலையுயர்ந்த மோதிரம் குப்பைத்தொட்டியில் விழ, அதை ராஜ்வர்மா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கிறார்கள். அதற்கு கைமாறாக நாயகி, நாயகனுடைய நண்பர்களுக்கு பணம் கொடுக்கிறாள். அதை வாங்கிக்கொள்ளும் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள், பின்னர் அந்த மோதிரத்தின் மதிப்பை அறிந்துகொண்டு அவளிடம் அதிகமாக பணம் எதிர்பார்க்கிறார்கள். இதன் காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி சந்திப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், நாயகி, குப்பையில் இருந்து டீசல் தயாரிக்கும் ஆராய்ச்சியில் களமிறங்குகிறாள். இதற்கு உறுதுணையாக நாயகனையும் கூடவே வைத்துக் கொள்கிறாள். தன்னுடன் நெருங்கி பழகும் நாயகி மீது நாயகனுக்கு காதல் ஏற்படுகிறது. அதை அவளிடம் சொல்லவும் முதலில் மறுக்கிறாள். பிறகு, ஒருகட்டத்தில் அவளும் நாயகன் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறாள்.
நாயகியின் ஆராய்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இந்த ஆராய்ச்சி பற்றி தெரிந்துகொண்ட பாண்டியராஜன், அதை வெளிநாட்டுக்கு விற்று பணமாக்க நினைக்குகிறார். இவரது சூழ்ச்சியால் நாயகி இவரிடம் சிக்கிக்கொள்கிறார்.
இறுதியில் பாண்டியராஜனிடம் இருந்து நாயகியை மீட்டாரா? இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே கிளைமாக்ஸ்.
நாயகன் ராஜ் வர்மா துப்புரவு பணியாளராக நடித்திருக்கிறார். பலர் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். அப்பாவி முகத்துடன் படம் முழுக்க வலம் வந்தாலும் இறுதிக் காட்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
நாயகி செரீனா சமூக அக்கறை கொண்ட ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மென்மையான வில்லத்தனத்தில் பாண்டியராஜன் மிரட்டியிருக்கிறார். படம் முழுக்க நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சிங்கம் புலி.
வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு விஷயங்களை மையப்படுத்தி திரைப்படங்கள் வந்துள்ள நிலையில், அதிலிருந்து சற்று மாறுபட்ட கோணத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குப்பை அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் மூர்த்தி கண்ணன். சிறிய பட்ஜெட்டில் நல்ல செய்தியை கொடுத்திருக்கிறார்.
சேதுராம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி ரசிக்கும் படியாக உள்ளது. தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சாலையோரம்’ பரவாயில்லை.

உதயநிதி-ஹன்சிகா-பிரகாஷ்ராஜ்-ராதாரவி நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் ‘மனிதன்’ படம் எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம்.
கோயம்புத்தூரில் வக்கீல் தொழில் செய்துவரும் உதயநிதி, ஏதாவது ஒரு வழக்கில் வெற்றிபெற்று, தனது மாமா மகளான ஹன்சிகாவை பெண் கேட்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்து வருகிறார். ஆனால், இவருடைய போதாத காலம் எந்த வழக்கிலும் இவரால் வெற்றி பெறமுடியவில்லை.
இதனால், இவரது சக நண்பர்கள் இவரை கேலி, கிண்டல் செய்து மனதளவில் அவரை காயப்படுத்துகிறார்கள். ஒருநாள் ஹன்சிகா மற்றும் அவரது அப்பா முன்பாகவே, உதயநிதியை அவரது நண்பர்கள் கேலி, கிண்டல் செய்ய ஹன்சிகா கோபத்தில் உதயநிதியை பலமாக திட்டிவிடுகிறார்.
இதனால் சோகத்தில் கோவையிலிருந்து சென்னைக்கு சென்று, அங்கு வக்கீலாக இருக்கும் இவரது உறவினரான விவேக்குடன் சேர்ந்து வழக்குகளை தேடி அலைகிறார். அங்கேயும் உதயநிதிக்கு எந்த கேஸும் கிடைப்பதில்லை. இந்நிலையில், மிகப்பெரிய செல்வந்தரின் மகன் ஒருவன் போதையில் காரை ஓட்டி, சாலை ஓரத்தில் உறங்கியவர்கள் மீது ஏற்றி 6 பேரை கொன்று விடுகிறார். இந்த வழக்கில் பிரபல வக்கீலான பிரகாஷ்ராஜ் வாதாடி செல்வந்தரின் மகனுக்கு விடுதலை வாங்கி தருகிறார்.
இதை அறியும் உதயநிதி, இந்த வழக்கை கையிலெடுத்தால் தான் பிரபலமாகிவிடலாம் எனவும், அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல விஷயம் செய்துகொடுத்ததுபோல் இருக்கும் என்று எண்ணி இந்த வழக்கை கையிலெடுக்கிறார். இதில், அவருக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இந்த பிரச்சினைகளையெல்லாம் அவர் எதிர்கொண்டு வழக்கில் வெற்றிபெற்றாரா? தனது மாமன் மகள் ஹன்சிகாவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
உதயநிதி முதல்பாதியில் அப்பாவி வக்கீலாக வந்தாலும், பிற்பாதியில் சாலையோரங்களில் தங்கி வாழும் குடும்பங்களின் துன்பங்களை உணர்ந்து போராடும் வக்கீலாக கைதட்டல் பெறுகிறார். இதுவரை இவர் நடித்த கதாபாத்திரத்திங்களில் இருந்து மாறுபட்ட படம். இரண்டு பெரிய நடிகர்களான ராதாரவி, பிரகாஷ்ராஜ் இவர்களின் நடிப்பிற்கு இடையே தன்னுடைய கதாபாத்திரத்தை திறமையாக செய்த இவருக்கு சபாஷ் போடலாம்.
டீச்சராக வரும் ஹன்சிகா மொத்வானி, உதயநிதியை வழிநடத்தி செல்லும் பொறுப்பான காதலியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகனுடன் டூயட் பாடுவது மட்டுமே என்றில்லாமல், இதில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட நடித்திருக்கிறார்.
வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ் கோர்ட்டில் வாதாடும் காட்சிகள், நாம் உண்மையான கோர்ட்டில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. வில்லத்தனமான கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் கச்சிதமாக இருப்பார் என்ற உணர்வை ஒவ்வொரு காட்சியிலும் ஏற்படுத்தியிருக்கிறார்.
இருக்கையில் அமர்ந்தபடியே தனது நடிப்பை தூக்கி நிறுத்தியிருக்கிறார் ராதாரவி. சிறுசிறு வசனங்களைக்கூட மிகவும் அழகாக பதிவு செய்து கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக, பிரகாஷ் ராஜை மிரட்டும் காட்சிகள் இவர் நடிப்பின் உச்சக்கட்டம். உதயநிதியின் உறவினராக வரும் விவேக், வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. காமெடிக்கு மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். டிவி ரிப்போர்ட்டராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மிக துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று அசால்ட்டாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
இயக்குனர் அஹமது, இந்தி படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ரசிக்கும்படியாக அழகாக எடுத்திருக்கிறார். கோர்ட்டு சம்பந்தப்பட்ட கதை என்பதால், கதைக்கு தேவையான அளவான கதாபாத்திரங்களை, அதேநேரத்தில் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக இயக்கியிருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், கோர்ட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்ததும் கதை விறுவிறுப்படைகிறது. குறிப்பாக, கோர்ட்டில் வாதாடும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் தனி முத்திரை பதித்திருக்கிறார். படத்திற்கு மற்றொரு பலம் வசனங்கள்தான். விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கோர்ட்டில் சாட்சி சொல்லும்போது, அவர் பேசும் வசனங்கள் மனதை உருக்கும்படியாக இருக்கும். அதை அழகாக காட்சிப்படுத்திய இயக்குனருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறார். மதியின் ஒளிப்பதிவு துல்லியமாக இருக்கிறது. கோர்ட்டு காட்சிகள் எல்லாம் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மனிதன்’ மாமனிதன்.

நாகர்ஜூனா, மஞ்சு விஷ்ணு, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘ரவுடி மாப்ளே’ படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மகனாக பிறக்கிறார் மஞ்சு விஷ்ணு. இவர் பிறந்ததும் அம்மா இறந்துவிடவே, பாட்டி மனோரமாவின் அரவணைப்பில் வளர்ந்து பெரியவனாகிறார். பெரிய தொழிலதிபரான நாசரின் வீட்டில் மனோரமாவும், மஞ்சு விஷ்ணுவும் எடுபிடி வேலைகள் செய்து வருகின்றனர். நாசர் தனது தங்கையான மம்தா மோகன்தாஸை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், மிகப்பெரிய தொழிலதிபரின் மகனுடன் மம்தா மோகன்தாஸுக்கு காதல் ஏற்படவே, இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்போது, மம்தா மோகன்தாஸ் ஜாதகத்தில் முதல் கணவன் இறந்துவிடுவான் என்று இருக்கவே, அதை பொருட்படுத்தாமல் கல்யாண ஏற்பாடுகளில் தீவிரமாகின்றனர்.
இந்நிலையில், நிச்சயதார்த்தத்தின்போது மாப்பிள்ளைக்கு எதிர்பாராதவிதமாக அடிபடவே, ஜாதகத்தில் கூறியது உண்மை என்று மாப்பிள்ளை வீட்டார் பயப்படுகின்றனர். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், தனது குடும்பத்திற்காக உயிரையும் கொடுக்க துணிந்த மஞ்சு விஷ்ணுவுக்கு முதல் திருமணம் செய்துகொடுத்துவிட்டு, பின்னர் அவன் இறந்தபிறகு தொழிலதிபரின் மகனுக்கு மம்தாவை திருமணம் செய்துகொடுக்கலாம் என முடிவெடுக்கின்றனர்.
அதன்படி, மஞ்சு விஷ்ணுவுக்கும், மம்தாவுக்கும் திருமணம் நடக்கிறது. மம்தா ஜாதகத்தில் இருக்கும் பிரச்சினை தெரியாமல் மஞ்சு விஷ்ணு திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாத மம்தா, மஞ்சு விஷ்ணுவை வெறுத்து ஒதுக்குகிறார். ஒருகட்டத்தில் ஜாதகத்தில் உள்ள குறைபாடுக்காகவே அவரை திருமணம் செய்துகொண்டதாக மஞ்சு விஷ்ணுவிடம் போட்டு உடைக்கிறார் நாசர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மஞ்சு விஷ்ணு தனது உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால், அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளையும் ஏதோ ஒரு சக்தி தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றுகிறது. அது என்ன சக்தி? இவருடைய உண்மையான அன்பை மம்தா புரிந்துகொண்டு விஷ்ணுவை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
மஞ்சு விஷ்ணு படம் முழுக்க அப்பாவி முகத்துடன் வலம் வந்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பிலும் மிளிர்கிறார். ஜாதகத்தில் உள்ள குறைபாட்டால்தான் நாசர் தனது தங்கையை திருமணம் செய்துகொடுத்தாக கூறியதும், இவரது முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது. மம்தா மோகன்தாஸ் கவர்ச்சியில் மிகவும் தாராளம் காட்டியிருக்கிறார். நடிப்பிலும் ஓகே ரகம்தான்.
பிற்பாதிக்கு பிறகு வரும் நாகர்ஜூனா, தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாசர், மனோரமா, பரமானந்தம் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தெலுங்கில் ‘கிருஷ்ணஅர்ஜூனா’ என்ற பெயரில் 2008ம் ஆண்டு வெளியான இப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ‘ரவுடி மாப்ளே’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லலாம். பி.வாசு இப்படத்தை இயக்கியிருக்கிறார். 8 வருடங்கள் கழித்து தமிழில் வெளியாவதால் படம் பார்ப்பவர்களுக்கு பழைய படம் பார்த்த உணர்வுதான் ஏற்படுகிறது.
கீரவாணி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘ரவுடி மாப்ளே’ சாது.

தி ஜங்கிள் புக் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
காட்டில் மோக்லி என்ற சிறுவன் ஓநாய் கூட்டத்தில் ஒருவனாக வளர்ந்து வருகிறான். அந்த ஓநாய் கூட்டத்தில் உள்ள ரக்ஷா, என்ற ஓநாய் மோக்லியை தனது மகனாக நினைத்து வளர்த்து வருகிறது. பகீரா என்ற கருஞ்சிறுத்தை மோக்லியின் நண்பன்.
இந்நிலையில், அந்த காட்டில் கடும் வறட்சி ஏற்படுகிறது. வறட்சிக் காலத்தில் இரையைவிட தண்ணீர்தான் முக்கியம். அதனால் யாரும் வேட்டையாடக்கூடாது என்ற சட்டம் அந்த காட்டில் இருக்கிறது. இதனால், தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி எல்லா மிருகங்களும் ஒன்றாக கூடி தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, அந்த காட்டில் இருக்கும் புலியும் அந்த இடத்தில் தண்ணீர் குடிக்க வருகிறது.
அப்போது, மோக்லியை அது பார்த்துவிடுகிறது. ஓநாய் கூட்டத்திடம் ‘அவன் இங்கிருந்தால் நமக்கெல்லாம் கெட்டது. எனவே, அவனை எனக்கு இரையாக்கி விடுங்கள்’ என்று வாக்குவாதம் செய்கிறது. ஆனால், ஓநாய் கூட்டமோ புலியின் பேச்சைக் கேட்க மறுக்கிறது. புலியும் காட்டில் இருக்கும் சட்டத்தால் அப்போதைக்கு எதுவும் செய்யாமல் விட்டுச் சென்றுவிடுகிறது.
சிலநாட்களில் காட்டில் கடும் மழை பெய்து காடு செழிப்பாக மாறுகிறது. காடு செழிப்பாக மாறியதால் காட்டில் போடப்பட்ட சட்டமும் தளர்ந்துவிடுகிறது. எனவே, எப்படியும் புலி, மோக்லியை வேட்டையாட இங்கு வரும் என பயப்படும் ஓநாய் கூட்டம் மோக்லியை மனிதர்கள் வாழும் பகுதிக்கு அனுப்ப திட்டமிடுகிறது. மனிதர்கள் வாழும் பகுதிக்கு மோக்லியை கருஞ்சிறுத்தை அழைத்துச் செல்கிறது.
போகும் வழியில் புலி இவர்களை வழிமறித்து மோக்லியை வேட்டையாட துடிக்கிறது. ஆனால், கருஞ்சிறுத்தை புலியிடம் சண்டைபோட்டு மோக்லியை தப்பி ஓட வைக்கிறது. தப்பி ஓடும் மோக்லி வேறு இடத்திற்கு வழிமாறி சென்றுவிடுகிறான். இரையை தப்பவிட்ட கோபத்தில் புலி, நேராக ஓநாய் கூட்டத்திடம் சென்று அவர்களை சிறைபிடிக்கிறது. மோக்லி எப்படியும் ஓநாய் கூட்டத்தை தேடி வருவான் என்று நினைத்துக்கொண்டு அந்த ஓநாய் கூட்டத்தை கொடுமைப்படுத்துகிறது.
இறுதியில், மோக்லி மனிதர்கள் வாழும் இடத்தை கண்டுபிடித்து அவர்களோடு சேர்ந்தானா? அல்லது ஓநாய் கூட்டத்தை காப்பாற்ற மீண்டும் காட்டுக்குள் திரும்பி வந்தானா? என்பதை மிகவும் சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.
மோக்லியாக வரும் சிறுவன் சிறப்பாக நடித்திருக்கிறான். இந்த வயதில் இந்தளவுக்கு சிறப்பாக நடிக்கமுடியுமா? என்று ஆச்சர்யப்பட வைக்கிறான். படத்தில் மற்றபடி கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் அசர வைக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எதார்த்தத்தையும் மிஞ்சும் அளவிற்கு கொடுத்து இருக்கிறார்கள். அதேபோல், படத்தில் இடம்பெறும் வசனங்கள் எல்லாம் நெஞ்சில் அழுத்தமாக பதியும் வண்ணம் இருக்கின்றன.
அழகான திரைக்கதையுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான் ஃபௌரீ. இசையமைப்பாள் ஜான் டெப்னிக்கும் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
மொத்தத்தில் ‘தி ஜங்கிள் புக்’ அனைவரும் ரசிக்க வேண்டிய படம்.

புதுமுகங்கள் அரவிந்த், சுஷ்மா மற்றும் நரேன், சிங்கம் புலி, சுப்பு பஞ்சு ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘குகன்’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
நாயகன் அரவிந்த்தின் அம்மா கும்பகோணத்தில் மிகப்பெரிய போலீஸ் அதிகாரி. அவருடைய அப்பா ஒரு ஓவியர். இவர்கள் இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக இருப்பதால், நாயகன் மீது சரியான பாசம் காட்ட முடியவில்லை. இதனால், நண்பர்களே கதியென்று கிடக்கும் நாயகனை ஒருமுறை நண்பர்களே அவனுடைய அம்மாவிடம் ஈவ் டீசிங் கேசில் மாட்டி விடுகின்றனர்.
இதனால், கோபமடைந்த நாயகனின் அம்மா நடுரோட்டில் வைத்து அவனை அடித்து அவமானப்படுத்துகிறார். அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறும் நாயகன், பக்கத்து ஊருக்கு சென்று அங்கு வசிக்கும் நரேனிடம் போய் வேலைக்கு சேர்கிறார். நரேனுடைய மகளான நாயகி சுஷ்மா மீது நாயகன் காதல் வயப்படுகிறார்.
இந்நிலையில், காணாமல் போன மகனைத் தேடி போலீஸ் அதிகாரியான நாயகனின் அம்மா, நரேனின் ஊருக்கு வந்து நாயகனை தன்னுடன் வருமாறு அழைக்கிறார். ஆனால், நாயகனோ தனது அம்மாவுடன் செல்ல மறுக்கிறார். இறுதியில் என்ன நடந்தது? நாயகனின் காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
நாயகன் அரவிந்த் படம் முழுக்க அப்பாவி முகத்துடன் வலம் வந்திருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடம் அதிகம் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், பாசத்துக்காக ஏங்கும் மகனாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
நாயகி பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழைய நடிகையை நினைவுபடுத்துகிறார். அதேபோல் துள்ளலான நடிப்பிலும் கவர்கிறார். அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்தும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். நரேன் நீதிபதியாகவும், விவசாயியாகவும் தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் பெறுகிறார். சிங்கம் புலி வரும் காட்சிகள் வழக்கம்போல் கலகலப்பு. பஞ்சு சுப்பு காட்டும் வில்லத்தனம் ஏற்கும்படியாக இல்லை.
இயக்குனர் அழகப்பன் இப்படத்தில் நரேன், சிங்கமுத்து, சுப்பு பஞ்சு என நல்ல நடிகர்களை வைத்துக்கொண்டு ஒரு அழகான படத்தை கொடுத்திருக்கலாம். ஆனால், இவர்களுக்குண்டான காட்சிகளையே ஒழுங்காக எடுக்காமல் இழுஇழுவென்று இழுத்திருப்பது படத்தை பார்க்கவிடாமல் செய்கிறது.
குரு கல்யாண் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையிலும் எந்தவித உணர்வும் இல்லை. அருள் ஒளிப்பதிவு ஓரளவுக்கு பரவாயில்லை.
மொத்தத்தில் ‘குகன்’ வெட்டி பந்தா.

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷின் மகன் மஹா, கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘என்னுள் ஆயிரம்’. முதல் படம் அவருக்கு எப்படி அமைந்திருக்கிறது என்பதை பார்ப்போம்...
காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வரும் நாயகன் மஹா, தன் தாய் இறந்ததும் வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னையில் யாரையும் தெரியாத இவர், ஒரு டிபன் கடையில் வேலை கேட்கிறார். டிபன் கடை வைத்திருப்பவரோ, மஹாவை நட்சத்திர ஓட்டலில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். அதன்படி நட்சத்திர ஓட்டல் நடத்தும் பாரில் வேலை பார்த்து வருகிறார் மஹா.
ஒருநாள் தன்னுடன் வேலை பார்ப்பவரின் திருமணத்திற்காக கேரளா செல்கிறார் மஹா. அங்கு நாயகி மெரீனா மைக்கேலை சந்திக்கிறார். ஏற்கனவே ஒருமுறை இவரை சந்தித்த மஹா, மீண்டும் சந்திப்பதால் அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி, இருவரும் காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில், மெரீனாவிற்கு தெரியாமல் அவரது வீட்டில் வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதனால் மஹாவும் மெரீனாவும் ஊரை வீட்டு ஓடிப்போக முடிவு செய்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யும் மஹா, பிரச்சினைகளில் சிக்க, போலீஸ் அவரை தேட ஆரம்பிக்கிறது.
இறுதியில் அந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு நாயகி மெரீனாவை மஹா கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் மஹாவிற்கு இது முதல் படம். வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியான மெரீனா மைக்கேல் காதல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி யுகலுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வின்சென்ட் அசோகன்.
மாறுபட்ட கோணத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ண குமார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது. நீண்ட காட்சிகள், லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். கோபி சுந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிசயராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘என்னுள் ஆயிரம்’ பளிச்சிடவில்லை.

சசிகுமார்-மியா ஜார்ஜ் நடிப்பில் இந்த வாரம் வெளிவந்துள்ள படம் ‘வெற்றிவேல்’. இப்படத்தை வசந்தமணி என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை, படம் எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம்...
ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார். இவர் சொந்தமாக பூச்சி மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் வேளாண் அதிகாரியாக பணியாற்றும் மியா ஜார்ஜை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒருகட்டத்தில் மியாவும் சசிகுமாரின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். ஒருநாள் தனது சொந்த ஊருக்கு செல்கிறார் மியா ஜார்ஜ். அவர் திரும்பி வருவதற்குள் சசிக்குமாரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.
வெளியூரில் படிப்பு முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வரும் சசிகுமாரின் தம்பி ஆனந்த் நாக், அந்த ஊர் தலைவரான பிரபுவின் மகளை காதலிக்கிறார். அவளும் இவரை காதலிக்கிறாள். இவர்களது காதல் சசிகுமாரின் வீட்டுக்கு தெரியவரவே, பிரபுவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறார் இளவரசு. ஆனால், சாதி, அந்தஸ்தை காரணம் காட்டி பிரபு இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இந்த விஷயம் சசிகுமாருக்கு தெரியவரவே, தம்பியின் காதலுக்கு உதவி செய்ய நினைக்கிறார். ஊர் திருவிழாவின் போது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கடத்துகிறார். ஆனால், கடைசியில் பார்க்கும்போது இவர்கள் பிரபுவின் மகளுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணான நிகிலாவை கடத்தி வந்துவிடுகின்றனர். அவள், பிரபுவின் தங்கையான விஜி சந்திரசேகரின் மகனுக்கு நிச்சயிக்கப்பட்டவர்.
தவறு நடந்துவிட்டதை நிகிலாவுக்கு விவரிக்கிறார் சசிகுமார். அவளும் அதை ஏற்றுக்கொண்டு ஊர்க்காரர்களுக்கு அதைச் சொல்லி புரிய வைப்பதாக அழைத்து செல்கிறார். ஆனால், நிகிலா யாரோ ஒருவனுடன் ஓடிவிட்டதாக கூறி, விஜி சந்திரசேகர் நிகிலாவின் அப்பாவை அவமானப்படுத்துகிறார். அவமானத்தால் அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.
இதனால் நிகிலாவின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது. போலீஸ் விசாரணையில் நிகிலா, சசிகுமாருடன் விருப்பத்தின் பேரிலேயே சென்றதாக கூறி அவரை மாட்டிவிடுகிறார். இதனால், என்னசெய்வதென்று முழிக்கும் சசிகுமாரிடமே, நிகிலாவை அனுப்பி வைக்கின்றனர் போலீசார்.
இறுதியில், சசிகுமார் நிகிலாவுக்கு வாழ்க்கை கொடுத்தாரா? மியா ஜார்ஜ் உடன் சேர்ந்தாரா? தம்பியின் காதலை சேர்த்து வைத்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சசிகுமார் ஒவ்வொரு படத்திற்கும் தன்னைத்தானே அழகாக மெருகேற்றிக் கொண்டே வருகிறார். கிராமத்து பாணியில் அமையும் படங்கள் என்றால் சசிகுமாருக்கு நடிப்பு சொல்லித்தர தேவையில்லை. அந்த வகையில் இந்த படத்திலும் தனது பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். ஆனால், குளோசப் காட்சிகளில் காட்டும்போது சரியான முகபாவனைகளை காட்ட ரொம்பவும் சிரமம் எடுத்துக் கொள்கிறார். அதேபோல், டான்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருவார்.
நாயகியான மியா ஜார்ஜ் பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கான காட்சிகள் குறைவுதான் என்றாலும், தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். புதுமுக நடிகைகளான நிகிலா, வர்ஷா ஆகியோரும் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிரபு தனது மகளுக்கு வேண்டியதை செய்துகொடுக்கும் பொறுப்புள்ள தந்தையாகவும், ஊரில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் முதல் ஆளாக தட்டிக்கேட்கும் தலைவராகவும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
தம்பி ராமையா வரும் காட்சிகள் வழக்கம்போல் கலகலப்பு. விஜி சந்திரசேகர் வில்லியாக அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். கிராமத்து பாணியில் ஒரு நல்ல குடும்பப் பாங்கான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தமணி. வழக்கமான சசிகுமார் படங்களிலிருந்து இப்படத்தை மிகவும் மாறுபட்டு எடுத்திருக்கிறார். அந்த படங்களின் தாக்கம் தன்னுடைய படத்தில் இருந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால், முதலில் படம் மெதுவாக நகர்ந்தாலும், 30 நிமிடங்களுக்கு பிறகு விறுவிறுப்படைகிறது. அழகான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
டி.இமான் இசையில் பாடல்கள் ஏனோ ரசிக்க தூண்டவில்லை. பின்னணி இசை ஓகே ரகம். எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு தஞ்சை அழகையும், வயல்வெளிகளின் பசுமையையும் அழகாக படமாக்கியிருக்கிறது.
மொத்தத்தில் ‘வெற்றிவேல்’ வீரவேல்.

புதுமுக நடிகர் அகில்குமார், மாளவிகா மேனன் நடித்து வெளிவந்துள்ள நிஜமா நிழலா படத்தின் கதை என்ன? படம் எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம்.
நாயகி மாளவிகா மேனன், தாய் மற்றும் தங்கையுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறாள். விளம்பர மாடலாக நடித்து வரும் இவருடைய வருமானத்தை எதிர்பார்த்துதான் அவரது குடும்பமே இருக்கிறது. இவருடைய காதலன் அகில் குமார். ஒருநாள் இரவில் பீச்சில் தனிமையில் அமர்ந்திருக்கும் மாளவிகா மேனன், தனது காதலனுக்கு போன் போட்டு அங்கு வரச்சொல்கிறார்.
அவர் கிளம்பி வரும் வேளையில் விபத்தில் சிக்குவதால் சரியான நேரத்தில் பீச்சுக்கு வரமுடியவில்லை. இதனால் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு கிளம்புகிறார் மாளவிகா. தனிமையில் செல்லும் அவரை ஆட்டோ டிரைவர் ஒரு ரவுடி கும்பலிடம் மாட்டிவிடுகிறான். அவர்கள் நாயகியிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார்கள்.
இதிலிருந்து தப்பித்து ஓடும் நாயகி ஒரு பெரிய செல்வந்தரிடம் அடைக்கலம் தேடி செல்கிறாள். அந்த செல்வந்தர் இவளை துரத்தி வந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றி, தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். வீட்டுக்கு சென்ற சில மணி நேரங்களிலேயே அந்த செல்வந்தர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நாயகி, அங்கிருந்து தப்பித்து ஓடுகிறாள்.
அப்போது, அந்த செல்வந்தரின் நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு வருகிறார். நண்பர் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், நாயகி ஓடுவதையும் கண்டு அவள்தான் இந்த கொலையை செய்திருப்பாள் என்று அவளை துரத்தி செல்கிறார். செல்லும் வழியில் நாயகன் வரவே, அவனுடன் பைக்கில் ஏறி இன்ஸ்பெக்டரின் பிடியில் இருந்து தப்பிக்கிறாள். நாயகன் அவளை நேராக தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.
நாயகனின் பைக் நம்பரை வைத்து மோப்பம் பிடித்து நாயகனுடைய வீட்டுக்கு வருகிறார் இன்ஸ்பெக்டர். அங்கு, நாயகன் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அங்கிருக்கும் நாயகியை பிடித்து அவளை விசாரணைக்கு அழைத்து செல்கிறார். போகும் வழியில் வழிப்பறி கும்பலை பிடிக்கப்போகும் இன்ஸ்பெக்டரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
இப்படி தொடர்ச்சியாக நாயகியை சுற்றியே கொலைகள் நடக்க காரணம் என்ன? இவர்களை கொலை செய்தது யார்? என்பதுபோன்ற மர்ம முடிச்சுகளுக்கு இறுதியில் விடை கொடுத்திருக்கிறார்கள்.
நாயகி மாளவிகா மேனன் பார்க்க அழகாக இருக்கிறார். காதல், வன்மம் ஆகிய காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். கதை முழுக்க இவரை சுற்றியே நடப்பதால், தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகனாக வரும் அகில் குமார், மாறுபட்ட கோணங்களில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் நடிப்பில் குறைவைக்கவில்லை.
இயக்குனர் ஸ்ரீனிவாசன் தலைப்பை கேள்விக்குறியாக வைத்துவிட்டு, அதை படமாக்கி நம்மையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறார். இது முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெரும்பாலான காட்சிகள் கதையோடு ஒட்டாத மாதிரியே உள்ளதால், நாயகியின் கதாபாத்திரத்தின் தன்மை வலுவிழந்து, படம் ரசிக்கும்படியாக இல்லை. இருப்பினும், இறுதியில் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
சுபுசிவாவின் இசையில் முதல் பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கிறது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ராஜசேகரனின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் நிஜமா நிழலா.. கேள்விக்குறிதான்.

புதுமுகங்கள் ரயான் ராஜ் , கல்பனா ஜெயம் நடிப்பில் பா.ராஜகணேசன் இயக்கியுள்ள படம் முதல் தகவல் அறிக்கை. இப்படம் எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம்..
நாயகன் ரயான் தஞ்சை பகுதியில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே கிராமத்தில் வசிக்கும் நாயகி கல்பனா ஜெயத்தை காதலித்து வருகிறார். இவர்களது காதல் கைகூடி கல்யாணம் வரை செல்லும் வேளையில் நாயகன் மீது கற்பழிப்பு கொலைப்பழி விழுந்து ஜெயிலுக்கு செல்ல நேரிடுகிறது.
இதேபோல், கற்பழிப்பு கொலை சுமத்தப்பட்ட மூன்று இளைஞர்களும் நாயகன் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயிலுக்கு வருகிறார்கள். ஜெயிலுக்குள் அவர்கள் மூன்று பேரும் நாயகனுக்கு நண்பர்களாகிறார்கள். சிறையிலிருந்து வெளியே வரும் நண்பர்கள் நாம் ஒன்றாக இருந்தால் பழைய நினைவுகள் வரும் என்று பிரிய முடிவு செய்கிறார்கள்.
இருந்தாலும், தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழிவாங்கும் உணர்வு வந்ததும் ஒன்று சேர்ந்து எதிரிகளை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இந்த திட்டத்தை எப்படி செய்து முடிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
நாயகன் ரயான் ராஜ் அடக்கமான அளவான நடிப்பில் கவர்கிறார். நாயகி கல்பனா ஜெயம் புதுமுகம் என்றாலும், நடிப்பில் அது தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். கடைசி காட்சியில் தனது கணவனை கொல்ல துடிக்கும் முன்னாள் காதலனிடம் உயிர்பிச்சை கேட்கும் காட்சிகள் எல்லாம் இவரது நடிப்புக்கு உதாரணம்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் முஜீப், விறுவிறு நடிப்பில் கவர்கிறார். வில்லத்தனத்தில் ஆக்ரோஷம் காட்டி மனதில் எளிதில் பதிகிறார். நண்பர்களாக வரும் இளைஞர்கள் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
போலீசால் தவறாக போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி சொல்லியிருக்கும் படம். வன்முறையான படம் என்றாலும், படத்தில் வன்முறை வேண்டாம் என்ற கருத்து சொன்ன வகையில் இயக்குனருக்கு பாராட்டு தெரிவிக்கலாம். புதுமுகங்களை வைத்து இவ்வளவு பலமான கதையை படமாக்க துணிந்த இவரை பாராட்டியே ஆகவேண்டும். காட்சிப்படுத்தலில் சில தவறுகளை சொல்லியிருந்தாலும், இவர் சொல்ல வந்த கருத்துக்காக படத்தை பார்க்கலாம்.
ராஜபார்த்திபனின் ஒளிப்பதிவில் பாடல்கள் காட்சிகள் அழகாக இருக்கிறது. அதேபோல் கோவில் திருவிழா காட்சிகள், வயல்வெளிகள் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்றன. ரவி ராகவ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ‘குள்ளச்சி கள்ளச்சி’ பாடல் மட்டும் மனதில் பதிகிறது. பின்னணி இசை வசனத்தை கேட்கவிடாமல் இடைஞ்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
மொத்தத்தில் ‘முதல் தகவல் அறிக்கை’ சமூக அக்கறை.

புதுமுகங்கள் விஜய் ஆர்.நாகராஜ், பிரியா மேனன் மற்றும் சிங்கம்புலி நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை’. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
வடக்கு பட்டி, தெற்கு பட்டி என இரண்டு கிராமங்கள். இதில் தெற்கு பட்டி கிராமத்தில் நாயகன் விஜய் ஆர்.நாகராஜும், வடக்கு பட்டி கிராமத்தில் நாயகி பிரியா மேனனும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இரண்டு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர்களுக்குள் பெரும் பகை இருந்து வருகிறது.
இந்நிலையில், விஜய்யும், பிரியாவும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலிக்கும் விஷயம் ஊர் முழுக்க தெரியவருகிறது. இதனால், இரண்டு ஊர் மக்களும் இவர்கள் காதலை பிரிக்க நினைக்கிறார்கள்.
இந்த இடைப்பட்ட கிராமத்தின் நடுவில் சிங்கம்புலியின் வீடு உள்ளது. இவருடைய வீடு, பாதி தெற்கு பட்டியை சார்ந்தும், பாதி வடக்கு பட்டியை சார்ந்தும் உள்ளது. இவர் எங்கு சென்றாலும் சொம்பை திருடுவது வழக்கமாக கொண்டு இருக்கிறார். விஜய், பிரியா காதல் விஷயத்தை அறிந்த சிங்கம்புலி, இவர்களை சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். மேலும் இவர்கள் காதல் மூலம் கிராமத்து பகையை போக்கவும் நினைக்கிறார்.
இறுதியில் சிங்கம்புலி, காதல் ஜோடியை சேர்த்து வைத்தாரா? ஊர் பகையை போக்கினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆர்.நாகராஜும், நாயகியாக நடித்திருக்கும் பிரியா மேனன் இருவரும் புதுமுகம் என்பதால் நடிக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார்கள். ஊர் பஞ்சாயத்து தலைவர்களாக நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிங்கம் புலியை டைட்டில் நாயகனாக வைத்து படமாக்கியிருக்கிறார்கள். சிங்கம்புலியும் தன்னால் முடிந்தளவிற்கு காமெடியாக படத்தை நகர்த்த முயற்சித்திருக்கிறார். ஆனால் இவருடைய காமெடி பெரியதாக எடுபடவில்லை. இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே சிறிதளவு சிரிக்க வைத்திருக்கிறார்.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுவாமி ராஜா. ஆனால், காமெடியை ரசிக்கதான் முடியவில்லை. முக்கியமான காட்சிகளை வெளியில் சொல்ல முடியாதளவிற்கு படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இந்த காட்சிகள் பார்ப்பதற்கு நெருடலாக இருக்கிறது. இதை தவிர்த்திருக்கலாம்.
ஆதிஷ் உத்ரியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கிச்சாஸ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை’ சுவாரஸ்யம் குறைவு.

விஜய்-சமந்தா-எமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தெறி’ படம் பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை எல்லாம் படம் பூர்த்தி செய்துள்ளதா? என்பதை பார்ப்போம்.
கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் எந்த சண்டை, சச்சரவுக்கும் போகாமல் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக மொட்டை ராஜேந்திரன். நைனிகா படிக்கும் பள்ளியில் டீச்சராக வரும் எமி ஜாக்சனுக்கு விஜய் மீது ஒருதலைக் காதல்.

ஒருநாள், எமி ஜாக்சனுக்கும் ரவுடி ஒருவனுக்கும் பிரச்சினை வருகிறது. ஒருமுறை நைனிகாவை எமி ஜாக்சன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது, அவள்மீது மோதி விபத்து ஏற்படுத்தி விடுகிறான் அந்த ரவுடி. இதில் இருவரும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்கள்.
இதனால், அந்த ரவுடி மீது எமி ஜாக்சன் போலீசில் புகார் கொடுக்கிறார். இதில் நைனிகாவின் பெயரையும் இழுத்துவிடவே, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்து போட விஜய் போக வேண்டியிருக்கிறது. ஆனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு வர விஜய் தயங்குகிறார். இதனால், ரவுடி மீதான புகாரையும் வாபஸ் பெற முடிவெடுக்கிறார்.

இருப்பினும் போலீஸ் அந்த ரவுடியை கைது செய்ய இவரை புகார் கொடுக்க சொல்லி வற்புறுத்துகிறது. அப்போது, அங்கு வரும் போலீஸ்காரர் ஒருவர் விஜய்யை எங்கேயோ பார்த்ததுபோல் சந்தேகப்படுகிறார். அப்போது விஜய்யை அவரது பழைய பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார். அப்போது விஜய் முகத்தில் ஏற்படும் உணர்வை பார்த்து எமி ஜாக்சன் அவர் மீது சந்தேகப்படுகிறார். அந்த போலீஸ்காரர் சொன்ன பெயரை வைத்து இணையதளத்தில் தேடும்போது விஜய் பற்றிய பழைய உண்மைகள் வெளியே வருகிறது.
இதன்பிறகு, இரண்டு வருடங்களுக்கு முன்பு என்று பிளாஸ்பேக் விரிகிறது. விஜய் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக நான் கடவுள் ராஜேந்திரன். அம்மா ராதிகா மீது பாசம் கொண்ட பையனாக இருக்கும் விஜய், அந்த ஊரில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் தட்டிக்கேட்கும் நேர்மையான அதிகாரியாக வலம் வருகிறார். இவருக்கும் டாக்டராக வரும் சமந்தாவுக்கும் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்க பின்னர், விஜய்யின் நேர்மையான குணம் தெரிந்ததும் அவர்மீது காதல் வயப்படுகிறார். பின்னர், விஜய்யும் அவரை காதலிக்க தொடங்குகிறார்.

இந்நிலையில், ஐடி கம்பெனியில் வேலை பார்த்த தன்னுடைய பெண் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டாள் என்று ஒரு பெரியவர் விஜய்யிடம் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கும்போது, அந்த பெண் யாரோ ஒருவனால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். உயிருக்குப் போராடிய நிலையில் அவளை கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார் விஜய். மரணம் நெருங்கும் தருவாயில் குற்றவாளி யார் என்பதை அந்த பெண் கடைசி வாக்குமூலமாக கொடுத்துவிட்டு இறந்துபோகிறாள்.
குற்றவாளி மிகப்பெரிய அரசியல்வாதியான மகேந்திரனின் மகன் என்பது தெரிந்ததும் அவனை கைது செய்ய நேரடியாக அவர் வீட்டுக்கு போகிறார். ஆனால், அவர்களோ தங்களுடைய மகன் இரண்டு நாட்களாக காணவில்லை என்று பதில் புகார் கொடுக்கிறார்கள். இதனால் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், மொட்டை ராஜேந்திரன் இதுவெல்லாம் பெரிய இடத்து பிரச்சினை, எப்படியும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காது என்று உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார். ஆனால், அந்த தருணத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு அதிர்ச்சி தரும்படியான ஒரு செயலை நிகழ்த்தி காட்டுகிறார் விஜய்.

அது என்ன? அந்த குற்றவாளி கிடைத்தானா? விஜய்-க்கு அடுத்து என்ன பிரச்சினைகள் ஏற்பட்டது? ஏன் கேரளாவில் அவர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்? விஜய்யுடன் இருக்கும் நைனிகா யார்? என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு இடைவேளைக்கு பிறகு தெறியுடன் விவரித்திருக்கிறார்கள்.
முதல்பாதி முழுவதும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தவே ஒவ்வொரு காட்சியையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அட்லி. விஜய் அறிமுகம் ஆகும் காட்சியில் தொடங்கி, அவர் ஒவ்வொரு காட்சியிலும் அவரது ஸ்டைலைப் பார்த்து தியேட்டரில் ரசிகர்கள் போடும் விசில் சத்தம் காதை பிளக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் லேசாக வளர்ந்த தாடி, பின்னால் ஜடை முடி என அவரது கெட்டப் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதன்பிறகு, போலீஸ் உடையில் வரும்போது அவரது கெட்டப் செம மாஸாக இருக்கிறது. போலீசுக்குண்டான கெத்து, ஸ்டைல் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

தன்னுடைய பங்குக்கு எந்தளவுக்கு இந்த படத்தில் ஸ்டைலாக நடிக்க முடியுமோ? அந்தளவுக்கு ஸ்டைலாக நடித்துக் கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, ‘ஜித்து ஜில்லாடி’ பாடலில் அவரது ஸ்டைலான நடனம் உண்மையிலேயே ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக இருக்கும். மேலும், விஜய், சுவிங்கத்தை கையில்வைத்து ஸ்டைலாக தட்டி வாயில் போடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு உண்மையான மாஸ் விருந்து. படத்திற்கு படம் இளமையாக காட்சிதரும் விஜய் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் இளமையாகவே தெரிகிறார்.
மேலும், இந்த படத்தில் குறிப்பிடும்படியான நபர் குழந்தை நைனிகா. அந்த குழந்தையிடம் இருந்து எந்தளவுக்கு நடிப்பை வாங்கமுடியுமோ? அதை அழகாக வாங்கியிருக்கிறார் இயக்குனர் அட்லி. விஜய்யோடு, நைனிகா சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. நைனிகாவுக்கும் விஜய்க்கும் உண்டான பாசத்தை இதில் அழகாகவே காட்டியிருக்கிறார்கள்.

எமி ஜாக்சன் வித்தியாசமான கெட்டப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒருசில காட்சிகள் வந்தாலும், பிற்பாதியில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நிறைவை கொடுத்திருக்கிறார் அட்லி. ராதிகா சரத்குமார் காமெடி அம்மாவாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். இன்னமும் குழந்தை மாதிரியான நடிப்பு இவரிடம் இருக்கிறது என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்.
மொட்டை ராஜேந்திரன் படம் முழுக்க விஜய் கூடவே வலம் வந்திருக்கிறார். விஜய்க்கு சமமாக இவருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார் அட்லி.

வில்லன் கதாபாத்திரத்தில் வரும் இயக்குனர் மகேந்திரன், மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இவர் ஒவ்வொரு முறையும் வசனங்கள் பேசும்போது கையை ஆட்டிக்கொண்டே பேசுவது ரசிக்க வைக்கிறது. சிம்பிளான வில்லனாக வந்தாலும் ஆழமாக மனதில் பதிகிறார். சமந்தா அழகு பதுமையாக காட்சி தருகிறார். இவருடைய சின்ன சின்ன முகபாவனைகள்கூட ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் அட்லி ஒரு விஜய் ரசிகர்போன்று இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார். இவர் விஜய்க்காக காத்திருந்து இந்த படத்தை இயக்கியது வீண் போகவில்லை. அதேபோல், அட்லிக்கே உண்டான ரொமான்ஸ், எமோஷன்ஸ் காட்சிகள் இந்த படத்திலும் கைகொடுத்திருக்கிறது. அதேபோல், ஆக்ஷன் காட்சிகளையும் விஜய்க்கே உரித்தான ஸ்டைலில் படமாக்கி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். உண்மை நிகழ்வுகளை தைரியமாக கையிலெடுத்து அதில் எந்த தவறும் நேர்ந்திடாதவாறு நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். அதேபோல், வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய 50-வது படத்தை சொல்லிக்கொள்ளும்படியாக அமைத்துக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், அதை படமாக்கிய விதத்தால் பாடல்களை மறுமுறை கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘தெறி’ எட்டுத்திக்கும் தெறிக்கும்

ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியான படம் ‘ஜித்தன்’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘ஜித்தன் 2’ம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
கொடைக்கானலில் தன்னுடைய அப்பாவுடன் வசித்து வந்த ரமேஷ், அப்பா இறந்த பிறகு தனி மரமாக இருந்து வருகிறார். இவரின் அப்பாவிற்கு சொந்தமாக வீடு வாங்குவது பெரிய கனவாக இருந்திருக்கிறது.
ஒரு ஹோட்டலில் வேலை செய்து வரும் ரமேஷ் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, புரோக்கர் மூலமாக 2 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை 50 லட்சம் ரூபாய்க்கு சொந்தமாக வாங்கி குடியேறுகிறார். அன்று இரவு அந்த வீட்டில் ஒரு ஆவி இருப்பது போல் ரமேஷ் உணர்கிறார். மேலும் அந்த ஆவி, ரமேஷை மிகவும் தொந்தரவு செய்கிறது.
இந்த ஆவியை சமாளிக்க பல முயற்சிகள் செய்கிறார். ரமேஷின் உதவிக்கு வந்த போலீஸ், நண்பர்கள், பூசாரி என அனைவரையும் விரட்டி அடிக்கிறது. ஒரு வழியாக அந்த வீட்டை விற்று விடலாம் என்ற முடிவு வருகிறார் ரமேஷ். ஆனால் அந்த ஆவி வீடு பார்க்க வருபவர்களையும் விரட்டுகிறது.
இறுதியில் ரமேஷ் அந்த வீட்டை விற்றாரா? அந்த ஆவி யார்? எதற்காக ரமேஷை அந்த ஆவி பாடாய் படுத்துகிறது என்பதே மீதிக்கதை.
பத்து வருடங்களுக்கு முன்பு ரமேஷ் நடிப்பில் ஜித்தன் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த வெற்றியின் காரணமாக ஜித்தன் 2ம் பாகம் வெளியாகியிருக்கிறது. முந்தைய பாகத்தை விட இந்த பாகத்தில் ஜித்தன் ரமேஷ் நன்றாகவே நடித்திருக்கிறார். இவரை சுற்றியே முழு படமும் நகர்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கேவிற்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை. பாதி நேரம் பேயாக வந்து மிரட்ட முயற்சித்திருக்கிறார். இவரை பேயாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
போலீசாக வரும் ரோபோ சங்கர், மனநல மருத்துவராக வரும் மயில்சாமி உள்ளிட்ட பலரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பேய்கள் என்பது பயமுறுத்துவது அல்ல, அதுவும் நல்ல ஆத்மா என்று சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ராகுல். ஜித்தன் முதல் பாகத்தில் கண்ணுக்கு தெரியாத ஒருவரை வைத்து படமாக்கியிருந்தார்கள். இதில் ஆவியை வைத்து பயமுறுத்த முயற்சித்திருக்கிறார்கள். ஜித்தன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுபோல் ஜித்தன் 2வும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரசிகர்களை கவரும் படியாக அமையாதது வருத்தமளிக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மிட்செல்லின் ஒளிப்பதிவு பெரியதாக எடுபடவில்லை.
மொத்தத்தில் ‘ஜித்தன் 2’ சுவாரஸ்யம் குறைவு.