என் மலர்
தரவரிசை
அஸ்வின்குமார்-மனிஷா ஜித் நடிப்பில் 100 சதவீத வாக்குப்பதிவை மையப்படுத்தி இளந்திருமாறன் இயக்கியுள்ள ‘இணைய தலைமுறை’ படம் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம்...
நாயகன் அஸ்வின் குமார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். நாயகி மனிஷா ஜித் அந்த கல்லூரியில் முதலாமாண்டு சேர்கிறார். நாயகியை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் அஸ்வின் குமார். அதேவேளையில், அதே கல்லூரியில் படிக்கும் சஞ்சய்யும் நாயகி மீது ஆசை கொள்கிறார்.
தேர்தலில் அனைவரும் நேரில் சென்று வாக்களிக்க விரும்பாததுதான் 100 சதவீத வாக்குப்பதிவு என்பது சாத்தியமாகவில்லை என்று நினைக்கும் நாயகன், இணையதளம் மூலமாகவே வாக்களித்தால், 100 சதவீதம் வாக்குப்பதிவை சாத்தியமாக்கலாம் என்ற முயற்சியில் ஒரு புதிய புராஜெக்ட் செய்கிறார். அதில் வெற்றியும் அடைகிறார்.
தனது புராஜெக்டை கல்லூரி முதல்வரிடம் காட்டி அதை நிறைவேற்றுமாறு முறையிடுகிறார். ஆனால், அவரோ இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்நிலையில், கல்லூரிக்கு தேர்தல் வருகிறது. அரசியல்வாதியின் மகனான சஞ்சய், அரசியலில் முக்கிய புள்ளியாக நினைக்கிறார். ஆனால், அவர் கல்லூரி தேர்தலில் ஜெயித்தால் அவருக்கு அரசியலில் முக்கிய இடம் கொடுக்க சஞ்சய் அப்பா இருக்கும் கட்சி கூறுகிறது.
மறுமுனையில், நாயகனின் புராஜெக்டை நிராகரித்த கல்லூரி நிர்வாகம், அதே புராஜெக்டை கல்லூரியில் நடக்கும் தேர்தலுக்கு பயன்படுத்த நினைக்கிறது. நாயகனையும் சஞ்சய்க்கு எதிராக அந்த தேர்தலில் களமிறங்க வைக்கிறது. இந்த கல்லூரி தேர்தலில் நாயகனின் புராஜெக்ட் கதாநாயகனாக விளங்கியதா? கல்லூரி தேர்தலை மையப்படுத்தி அரசியலில் பெரிய புள்ளியாக நினைக்கும் சஞ்சய் திட்டம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.
நாயகன் அஸ்வின் குமார் கல்லூரி மாணவனாக அழுத்தமாக மனதில் பதிகிறார். நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகிக்கு படத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
அரசியல்வாதியின் பையனாக வரும் சஞ்சய்யும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றபடி, படத்தில் பெரிய கதாபாத்திரங்கள் இல்லாவிட்டாலும், அவரவர் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
100 சதவீத வாக்குப்பதிவை மையப்படுத்தி வாக்குப்பதிவு நடக்கும் சமயத்தில் வெளிவந்த படம் கண்டிப்பாக தேர்தலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்பலாம். படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசித்திருக்கலாம். இணையதளம் வாயிலாக இளைய தலைமுறையில் 100 சதவீத வாக்குப்பதிவை எப்படி சாத்தியமாக்கலாம் என்பதை இப்படம் மூலமாக சொல்ல வந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
கோபிநாத் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ஆரோவின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘இணைய தலைமுறை’ வளரும்.

ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘பென்சில்’. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
டி.பி.கஜேந்திரன் நடத்தும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். படிப்பில் சிறந்து விளங்கும் இவர், தன்னுடன் படிக்கும் ஸ்ரீதிவ்யாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், ஸ்ரீதிவ்யாவோ ஜி.வி.பிரகாஷை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
இவர்களுடன் ஷாரிக் ஹசன் என்னும் மாணவன் படித்து வருகிறார். இவர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சினிமா நட்சத்திரத்தின் மகன். ஒரு மாணவன் பள்ளியில் என்ன செய்ய கூடாதோ, அதையெல்லாம் ஷாரிக் செய்து வருகிறார். மேலும் ஆசிரியர், ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரிடம் பிரச்சனையும் செய்கிறார். ஷாரிக் இந்த பள்ளியில் படிப்பது பெருமை என்பதால் நிர்வாகம், இவர் செய்யும் தவறுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறது.
இந்த நிலையில், பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்குவதற்காக ஊர்வசி வருகிறார். அப்போது பள்ளியை சோதனை செய்யும் போது, மர்மமான முறையில் ஷாரிக் இறந்து கிடக்கிறார். இதனால் பள்ளியில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ், ஷாரிக்கை கொலை செய்திருக்கலாம் என்று பள்ளி நிர்வாகம் சந்தேகப்படுகிறது. இறுதியில் ஷாரிக்கை கொலை செய்தது யார்? ஜி.வி.பிரகாஷ் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு இது முதல் படம். ஆனால் தற்போது தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. மாணவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா மாணவி உடையில் அழகாக இருக்கிறார். நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலாக நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஷாரிக் ஹசன், பார்ப்பவர்கள் கோபம் அடையும் அளவிற்கு வலுவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய வில்லத்தனம் ரசிக்க வைத்திருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களான டி.பி.கஜேந்திரன், வி டிவி கணேஷ், அபிஷேக் உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பள்ளியில் நடக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் மணி நாகராஜ். எது எல்லாம் படத்தில் நடக்கக் கூடாதோ அதையெல்லாம் காண்பித்து பார்ப்பவர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறார். குறிப்பாக, ஆசிரியர்களின் ஆபாச வீடியோ, சிறுமியை நீச்சல் குளத்தில் தள்ளிக் கொலை செய்வது உள்ளிட்ட காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். இறுதிக் காட்சியில் தனியார் பள்ளிகள் கல்வியை விற்பது தவறு என்றும், தங்களுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பது தவறு என்றும் அப்பட்டமாக சொல்லியிருப்பது சிறப்பு.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியும் ரசிக்க முடிகிறது. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பென்சில்’ ஆபத்தான கூர்மை.

பாபி சிம்ஹா-நிக்கி கல்ராணி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த ‘கோ-2’ படம் எப்படியிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள கீழே படியுங்கள்...
படத்தின் ஆரம்பத்திலேயே உள்துறை மந்திரியான இளவரசுவுக்கு முதல்வர் பிரகாஷ் ராஜை யாரோ கடத்திவிட்டார்கள் என்று போன் வருகிறது. உடனே, பரபரப்பாகும் அவர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து முதல்வரை மீட்க உத்தரவிடுகிறார். ஜான் விஜய் தலைமையில் முதல்வரை மீட்க போலீஸ் குழு புறப்படுகிறது.
முதல்வரை கடத்திய சம்பவம் மீடியா மூலமாக பொதுமக்களுக்கு தெரிய வந்ததும், நகரத்தில் பெரும் கலவரம் வெடிக்கிறது. பத்திரிகையாளரான பாபி சிம்ஹாதான் பிரகாஷ் ராஜை துப்பாக்கி முனையில் கடத்தி வைத்திருக்கிறார். ஆனால், அவர்தான் கடத்தி வைத்திருக்கிறார் என்பது போலீசாருக்கு தெரியவில்லை. அவர் எதற்காக பிரகாஷ் ராஜை கடத்தி வைத்திருக்கிறார்? பாபி சிம்ஹாவின் பின்புலம் என்பதே ‘கோ2’ படத்தின் மீதிக்கதை.
பாபி சிம்ஹா தனது வழக்கமான படங்களைப் போலவே இந்த படத்திலும் நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜூடன் இவர் பேசும் வசனங்களை உச்சரிக்கும் விதத்தில் கவர்கிறார். நாயகியுடன் டூயட் பாடும் காட்சிகளில் எல்லாம் பெரிதாக இவருக்கு ரொமான்ஸ் வரவில்லை.
நாயகி நிக்கி கல்ராணிக்கு படத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாவிட்டாலும், கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். சமூக சேவகராக வரும் நாசர் ஒரே காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவராக வரும் கருணாகரனின் நடிப்பு பிரமாதம். முதல்வராக வரும் பிரகாஷ் ராஜ் படம் முழுக்க வருகிறார். தனது அனுபவ நடிப்பால் ரசிகர்களை எளிதாக கவர்கிறார். இளவரசுக்கு இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்து ரசிக்க வைக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து கைதட்டல் பெறுகிறார். பாலசரவணனுக்கும் இப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம். இதுவரையிலான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர், இப்படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாகவும் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
இயக்குனர் சரத் பழிவாங்கும் கதையை வித்தியாசமான கோணத்தில் படமாக்க நினைத்திருக்கிறார். அதற்காக அவர் இயக்கிய விதமும் வித்தியாசமாகவே இருக்கிறது. இப்படத்தின் முதல் பாகமான ‘கோ’ படத்தை மனதில் வைத்து பார்க்க வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சம்.
பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் பேசும் வசனங்கள் எல்லாம் இன்றைய அரசியல் நிலவரங்களை அப்பட்டமாக தோலுரித்து காட்டியிருக்கிறது. இந்த காட்சி படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும். இருந்தாலும், இரண்டாம் பாதியில் உள்ள விறுவிறுப்பு முதல் பாதியில் இல்லை என்பது வருத்தம்தான். கிளைமாக்ஸ் காட்சியை திருப்திகரமாக அமைத்தது படத்திற்கு முழு நிறைவை தருகிறது.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிலிம் ஆர் சுந்தரின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கோ-2’ கோட்டையை பிடிக்கும்.

ஆரி - டாக்டர் மாயா நடிப்பில் குடும்ப சித்திரமாக வெளிவந்துள்ள ‘உன்னோடு கா’ படம் எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமா? கீழே படியுங்கள்...
பிரபுவும் தென்னவனும் சிவலிங்க கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம்தான் ஊரிலேயே பெரிய குடும்பம். 5 தலைமுறைகளாக இவர்கள் குடுபத்திற்குள் பகை இருந்து வருகிறது. ஆனால், பிரபுவும் தென்னவனும் ஊருக்குள் பகையாளிகளாக இருந்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள்.
இந்த கிராமத்தில் இருந்தால் நட்பாக பழக முடியாது என்ற காரணத்தால் பிரபுவும் தென்னவனும் சண்டை போடுவது போல் நடித்து சென்னை வந்து செட்டிலாகிறார்கள். சென்னையில் எதிரெதிர் வீட்டிலேயே குடியிருக்கும் இவர்கள் நல்ல நட்பாக பழகி வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபு-ஊர்வசியின் மகனான ஆரியும், தென்னவன் - ஸ்ரீரஞ்சனியின் மகளான மாயாவும் போட்டா போட்டிக் கொண்டு வளர்கிறார்கள். வளர்ந்து பெரியவர்களான இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் குடும்ப பகையை தீர்த்து விடலாம் என்று பிரபுவும் தென்னவனும் நினைக்கிறார்கள். ஆனால், ஆரியும் மாயாவும் எலியும் பூனையுமாக சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதே சமயம், ஊரில் பிரபுவின் உறவினர்களும், தென்னவனின் உறவினர்களும் சண்டை போட்டு கொள்கிறார்கள். மேலும் தென்னவனை சந்திக்க அவரது உறவினர்கள் சென்னைக்கு வருகிறார்கள். பிரபுவும் தென்னவனும் உறவினர்கள் வந்தால், சென்னையில் நாம் நட்பாக பழகி வருவது தெரிந்து விடும் என்ற பயத்தில் இருக்கிறார்கள். பிரபுவின் உறவினர்கள் தென்னவனை கடத்திக் கொண்டு ஊருக்கு சென்று விடுகிறார்கள். மேலும் பிரபுவுக்கு தகவலை சொல்லி ஊருக்கும் அழைக்கிறார்கள்.
இரண்டு தரப்பு உறவினர்களும், குடும்ப பகை காரணமாக பிரபுவையும் தென்னவனையும் நேருக்கு நேர் மோத சொல்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் இவர்களில் யார் வென்றது? எப்படி இந்த பிரச்சனையை சமாளித்தார்கள்? ஆரி, மாயாவுக்கு திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆரி, தான் நடித்த முந்தைய படங்களில் இருந்து இதில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மாயா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆரிக்கும், மாயாவுக்கும் இடையே காதல் காட்சிகள் இல்லாமல் மோதல் காட்சிகளை வைத்தே படமாக்கியிருக்கிறார்கள். இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
பிரபு- ஊர்வசி, தென்னவன் - ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்ந்திருக்கிறது. மன்சூர் அலிகான், மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த பல நடிகர்கள் நடித்திருக்கிறார். அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
பல நட்சத்திரங்களை வைத்து குடும்ப பொழுதுபோக்கு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.கே. நகைச்சுவையை மையமாக வைத்தே படம் நகர்கிறது. ஆனால், சிரிப்பதற்கு வாய்ப்பு குறைந்தளவே அமைந்திருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள் படத்தில் இல்லாதது வருத்தம்.
சத்யா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியும் சிறப்பாக செய்திருக்கிறார். சக்தி சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘உன்னோடு கா’ உற்சாகம்.

கோகுல் நாத், அஞ்சனா கிர்த்தி நடிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ஜம்புலிங்கம் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்...
ஜப்பானில் வசித்து வரும் சுகன்யாவின் மகளை பணத்திற்காக ஒரு கும்பல் கடத்தி சென்றுவிடுகிறது. பணம் கேட்டு மிரட்டும் அந்த கும்பலிடம் பணத்தை கொடுத்து எப்படியாவது மீட்க சுகன்யா முயற்சி செய்து வருகிறார்.
இதேவேளையில், தனது ஊருக்கு மேஜிக் செய்ய வரும் யோக் ஜேப்பியின் மேஜிக்கில் மயங்கி, அவரிடம் உதவியாளராக சேர்கிறார் நாயகன் கோகுல்நாத். இந்நிலையில், யோக் ஜேப்பி, ஜப்பானில் நடைபெறும் மேஜிக் நிகழ்ச்சிக்காக தனது குழுவில் உள்ள அஞ்சனா கீர்த்தி, கும்கி அஸ்வின், லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ் ஆகியோருடன் ஜப்பானுக்கு பயணமாகிறார். போன இடத்தில் யோக் ஜேப்பிக்கு மாரடைப்பு ஏற்படவே, வேறு வழியின்றி கோகுல்நாத் அந்த மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார்.
கோகுலின் மேஜிக் நிகழ்ச்சி அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிடித்துப் போய்விடுகிறது. குறிப்பாக, ஜப்பானில் மிகப்பெரிய தாதாவான ஒக்கிடாவுக்கு பிடித்துப்போகவே, கோகுலை வேறொரு மேஜிக் நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்கிறார். இதனால், கோகுல் மற்றும் அவரது குழுவில் உள்ள அனைவரும் ஜப்பானில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இந்நிலையில், கோகுல்நாத்தின் குழுவை சேர்ந்த அனைவரும் ஜப்பானை சுற்றிப்பார்க்க செல்கிறார்கள். அப்போது, கோகுல்நாத்தும், அஞ்சனா கீர்த்தி தங்களது குழுவை தவறவிடுகிறார்கள். இருவரும் தங்களது குழுவை தேடிச் செல்லும்போது இருவரும் நெருங்கி பழகி காதலர்களாகிறார்கள்.
அதேநேரத்தில், மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சுகன்யாவின் மகளை அந்த கும்பலிடமிருந்து மீட்கிறார் கோகுல். பின்னர், அந்த குழந்தையை சுகன்யாவிடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறார். ஆனால், இவர் செய்யும் எல்லா முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது.
இறுதியில், அந்த குழந்தையை கோகுல் சுகன்யாவிடம் ஒப்படைத்தாரா? தனது குழுவை தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகனான கோகுல்நாத் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும்படியான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். படத்தில் இவர் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான காட்சிகள் நிறைய இருக்கிறது. அதை மிகவும் நன்றாகவே செய்திருக்கிறார்.
நாயகி அஞ்சனா கீர்த்தி, படம் முழுக்க நாயகனுடனே வலம்வந்தாலும், இவருடைய கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பு இல்லை. சுகன்யாவுக்கு தனது மகளை பிரிந்து வாடும் கதாபாத்திரம். ஆனால், அதற்குண்டான எந்த உணர்ச்சியும் இவர் வெளிப்படுத்துவதற்கான காட்சிகளை இயக்குனர் ஏன் வைக்காமல் போனார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
‘கும்கி’ அஸ்வின், ஈரோடு மகேஷ், ‘லொள்ளு சபா’ ஜீவா என நகைச்சுவைக்கு நிறைய பேர் இருந்தாலும், படத்தில் நகைச்சுவை மிகவும் குறைவே. குறிப்பாக, மகேஷ் ஜப்பான் தாதாவிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் காட்சிகளை நகைச்சுவையாக எடுத்திருந்தாலும், திரையில் பார்க்கும்போது பெரிதாக எடுபடவில்லை.
இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட படம். மேஜிக் காட்சிகள், ஜப்பானின் அழகு எல்லாவற்றையும் 3 டியில் பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது. குறிப்பாக, யோக் ஜேப்பி செய்யும் மாயாஜால வித்தையில், சிங்கம் நடந்து வருகிற மாதிரி காட்சியை 3டியில் பார்க்கும்போது வியப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.
சதீஷ் ஒளிப்பதிவு ஜப்பானை அழகாக படம்பிடித்திருக்கிறது. ஸ்ரீவித்யா கலையின் பின்னிண இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘ஜம்புலிங்கம்’ ஜாலி லிங்கம்.

கேப்டன் அமெரிக்கா பட வரிசையில் மூன்றாம் பாகமாக வெளிவந்த உள்நாட்டு யுத்தம் படம் எப்படியிருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்...
உலகத்தை அழிக்க நினைக்கும் தீவிரவாதக் கும்பல் இந்தமுறை நைஜிரியாவில் உள்ள லாகோஸ் என்ற நகரில் பெரிய தாக்குதல் நடத்த முடிவெடுக்கின்றனர். அதை தடுக்க வழக்கம்போல் அவெஞ்சர்ஸ் அணி அவர்களை எதிர்க்க கிளம்புகிறது. தீவிரவாத கும்பலுடனான சண்டையில் வக்காண்டா நாட்டை சேர்ந்த சமூக நலத் தொண்டாற்றும் பலர் பலியாகவே, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகின்றன.
அதாவது, இனிமேல் அவெஞ்சர்ஸ் குழு தனித்து இயங்காமல், அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர். அவெஞ்சர்ஸ் குழுவில் இருக்கும் அயர்ன் மேன், தன்னால் ஏற்பட்ட பாதிப்புகளையெல்லாம் எண்ணி இதற்கு ஒப்புக் கொள்கிறார். ஆனால், எந்தவித தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கையில் கேப்டன் அமெரிக்கா இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
உலக நாட்டின் முக்கிய தலைவர்கள் கூடியிருக்கும் இந்த சந்திப்பு நடக்கும் இடத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடக்கிறது. இதில் வக்காண்டா நாட்டின் மன்னர் இறந்து போகிறார். இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் கேப்டன் அமெரிக்காவின் நண்பன் விண்டர் சோல்ஜர்தான் காரணம் என்று கூறுகின்றனர்.
இதற்கிடையில், இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான விண்டர் சோல்ஜரை பிடித்துக் கொடுக்க அயர்மேனுக்கு அரசாங்கம் ஆணையிடுகிறது. அதேநேரத்தில், விண்டர் சோல்ஜரை எப்படியாவது தேடிப்பிடித்து பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறார் வக்காண்டா நாட்டு மன்னரின் மகனாக பிளாக் பேந்தர்.
ஆனால், கேப்டன் அமெரிக்காவுக்கு தனது நண்பன் இந்த தவறை செய்திருக்க மாட்டான் என்று எண்ணி, நண்பனை இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்ற அயர்மேனுக்கு எதிராக செயல்படுகிறார். இதனால், அயர்மேனுக்கும் கேப்டன் அமெரிக்காவுக்கும் இடையே பிரச்சினை வருகிறது.
இதன்பிறகு அயர்மேனும், கேப்டன் அமெரிக்காவும் தனித்தனி குழுக்களாக பிரிந்து அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இறுதியில், இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் மூளையாக செயல்பட்டது யார் என்பதை இவர்கள் கண்டுபிடித்தார்களா? இரண்டு குழுக்களுக்கும் உள்ள பிரச்சினை முடிவுக்கு வந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
கேப்டன் அமெரிக்கா என்று படத்திற்கு தலைப்பு வைத்திருந்தாலும், இந்த படத்தில் அயர்மேன் உள்ளிட்ட அவெஞ்சர்ஸ் குழுவில் உள்ள அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். முன்னாள் வந்த அவெஞ்சர்ஸ் படங்களைப்போலவே, இதிலும் ஆக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு குறைவில்லை. எப்போதும் எதிரிகளை எதிர்த்து போராடும் அவெஞ்சர்ஸ், இதில் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொள்வது பார்ப்பவர்களுக்கு புதிதாகவும், அந்த கதாபாத்திரங்கள் உணர்வுப்பூர்வமாக நடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதை இயக்குனர் நன்றாகவே வேலை வாங்கி இயக்கியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த அவெஞ்சர்ஸ் குழுவில் தற்போது ஸ்பைடர்மேன், பிளாக் பேந்தர் ஆகிய இரண்டு பேரையும் புதிதாக சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் இந்த குழுவில் எப்படி இணைகிறார்கள் என்பதற்கு கூறும் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. மார்வல் படங்களுக்கே உண்டான ஒற்றை வரியில் பேசும் காமெடி வசனங்கள் எல்லாம் இந்த படத்திலும் இருக்கிறது. அவை எல்லாமே ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கிறது. குறிப்பாக, ஸ்பைடர்மேன் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு.
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஒளிப்பதிவு. சண்டைக்காட்சிகளில் ஒளிப்பதிவின் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. அதேபோல், சேசிங் காட்சிகளிலும் ஒளிப்பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. இறுதிக்காட்சி அடுத்து வரும் மார்வல் படங்களுக்கு நல்ல அஸ்திவாரத்தை போட்டுக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம். வழக்கமாக அரைத்த மாவையே இந்த படத்திலும் அரைத்திருந்தாலும், மக்களுக்கு பிடித்த மாதிரி படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘உள்நாட்டு யுத்தம்’ பிரம்மாண்ட யுத்தம்.

நாயகன் ரவிந்திரன் மற்றும் நாயகி திவ்யா நாகேஷ் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘எண்ணம் புது வண்ணம். இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
கிராமத்தில் வசித்து வரும் நாயகி திவ்யா நாகேஷ், அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். அந்த தொழிற்சாலை உரிமையாளரின் மகனான நாயகன் ரவீந்திரன் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு அந்த கிராமத்துக்கு வருகிறார். தொழிற்சாலையில் பணிபுரிந்துவரும் நாயகியை முதல்முறை பார்த்ததுமே இவருக்கு பிடித்து போய்விடுகிறது.
இந்நிலையில், ஒருநாள் திவ்யா தனது குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும்போது, பஸ் இல்லாத காரணத்தால், அவர்களது குடும்பதை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று உதவி செய்கிறார் ரவீந்திரன். இதனால், திவ்யாவுக்கு ரவீந்திரன் மீது நல்ல எண்ணம் உருவாகிறது. அது நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வருகிறார்கள்.
அதேநேரத்தில், அந்த கிராமத்தில் தவறான முறையில் நடந்துகொள்ளும் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில், ரவீந்திரன், திவ்யாவின் காதல் விஷயம் ரவீந்திரனின் அப்பாவுக்கு தெரிய வருகிறது. முதலில் ரவீந்திரனை கண்டிக்கும் அவர், ஒருகட்டத்தில் தன்னுடைய பேச்சை கேட்காத ரவீந்திரனை திவ்யாவிடமிருந்து பிரிக்க, மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்.
இந்நிலையில், கிராமத்தில் நாயகி திவ்யா மர்மமான முறையில் காணாமல் போகிறார். அவரது அப்பாவான நிழல்கள் ரவி தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கிறார். போலீசும் திவ்யாவை தேடும் பணியில் தீவிரமாகிறது. இதற்கிடையில், மும்பையில் இருந்து கிராமத்துக்கு வரும் ரவீந்திரன், திவ்யா காணாமல் போன செய்தியை கேள்விப்பட்டதும், தனது அப்பாதான் இதற்கு காரணமாக இருக்கும் என்று அவர்மீது போலீசில் புகார் கொடுக்கிறார்.
இறுதியில் காணாமல் போன திவ்யாவிற்கு என்ன ஆனது? ரவீந்திரன் திவ்யாவை கண்டுபிடித்து காதலில் ஒன்று சேர்ந்தாரா? மர்மான முறையில் பெண்களை கொலை செய்தது யார்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரவீந்திரன், வசதியான பையனாக காதலிக்கும் இளைஞனாகவும், காதலுக்காக தந்தையை எதிர்க்கும் மகனாகவும் நடித்திருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை ஓரளவிற்கு சரியாக செய்திருக்கிறார்.
நாயகியான திவ்யா, காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பொறுப்பான தந்தையாக மனதில் பதிகிறார் நிழல்கள் ரவி.
சிறுவயதில் இருந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன், வளர்ந்த பிறகு படும் கஷ்டங்களை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராகவன். இதில் காதல், சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறார். காட்சிகள் ஒவ்வொன்றும் தொடர்பு இல்லாமல் இருப்பது படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. காமெடி காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை.
சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். சங்கர்-கணேஷின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘எண்ணம் புது வண்ணம்’ பளிச்சிடவில்லை.

ஜெய் ஆகாஷ், சோனியா ஷர்மா நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘நான் யார்?’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஜெய் ஆகாஷ், தனக்கு தமிழ் தெரியாமல் இருந்தாலும், ஒரு தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். பின்னர் லண்டனில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து, காதல் மனைவியுடன் அங்கு சென்று செட்டிலாகிறார்.
இவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஒரு நாள் சாலையில் ஜெய் ஆகாஷுக்கு விபத்து ஏற்படுகிறது. காரை ஓட்டி வந்தவர் ஒரு டாக்டர் என்பதால், அவரே ஜெய் ஆகாஷுக்கு சிகிச்சை அளிக்கிறார். அப்போது ஒரு சிறிய ஆபரேஷனுக்கு பிறகு ஜெய் ஆகாஷுக்கு நினைவு திரும்புகிறது.
அதன் பிறகு ஜெய் ஆகாஷுக்குள் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஸ்பிலிட் பெர்சனாலிட்டியால் பாதிக்கப்படுகிறார். அதாவது உடல் ஜெய் ஆகாஷாகவும், உள்ளம் வேறொருவர் மாதிரியாகவும் நடந்து கொள்கிறார். இதனால் இவருக்கு பல பிரச்சனைகள் எற்படுகிறது. மேலும் காதல் மனைவியுடனும் பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் ஜெய் ஆகாஷ் இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்தாரா? ஸ்பிலிட் பெர்சனாலிட்டியாக வருபவர் யார்? இதற்கெல்லாம் காரணம் யார்? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெய் ஆகாஷ், சினிமா துறையில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவோடு முழுமூச்சாக நடித்து வருகிறார். ஆனால் எந்த படமும் இவருக்கு கை கொடுக்க வில்லை. இப்படமாவது இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது. இவரது நடிப்பு, நடனம், சண்டை என ரசிக்கும்படி இருந்தாலும் ஏதோ ஒன்று ஜெய் ஆகாஷுக்கு பலவீனமாக அமைந்து விடுகிறது.
இந்த படத்திற்கு கதையும், திரைக்கதையும் ஜெய் ஆகாஷே எழுதியிருக்கிறார். கதையிலும், திரைக்கதையிலும் தெளிவு இல்லை. பல காட்சிகளை பார்க்கும்போது மற்ற படங்களின் காட்சிகளை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தன்னால் முடிந்த வரை சிறப்பாக இயக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராதா.
நாயகியாக நடித்திருக்கும் சோனியா ஷர்மாவுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
யு.கே.முரளி இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். தேவா ராஜ் ஒளிப்பதிவும், சாம்ராட் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் சேர்க்கவில்லை.
மொத்தத்தில் ‘நான் யார்?’ கேள்விக்குறி தான்.

புதுமுகங்கள் ராகுல் மற்றும் ஐஸ்வரியா நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘அதரவெப்போம்’. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நாயகன் ராகுல், தீவிர விஜய் ரசிகர். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுவதையே விட்டுவிட்டு விஜய் படம் பார்க்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர். இதனால், இவரது வீட்டில் அனைவரும் இவரை திட்டி தீர்க்கின்றனர்.
இருப்பினும், வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை போட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வருகிறார். சென்னையில் இயக்குனர் பாக்யராஜை சந்தித்து வாய்ப்பு கேட்கிறார். ராகுலின் கதை சொல்லும்விதம் பாக்யராஜுக்கு பிடித்துவிடவே, அவருக்கு தெரிந்த உதவி இயக்குனருடன் இவரை சேர்த்துவிடுகிறார்.
ஆனால், அந்த உதவி இயக்குனர் ராகுலிடம் தவறாக நடக்க முயற்சிக்க அங்கிருந்து வெளியேறுகிறார் ராகுல். பின்னர் தனது தோழியின் சிபாரிசின் பேரில் மற்றொரு இயக்குனருடன் இணை இயக்குனராக பணியில் சேர்கிறார். அங்கும் இவருக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இப்படி இவர் இயக்குனராக ஆவதில் தொடர்ந்து சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த சிக்கல்களை எல்லாம் சமாளித்து அவர் இயக்குனராகி வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ராகுல் இளம் கதாநாயகனாக துடிப்பு மிக்கவராக வலம் வருகிறார். பாடல் காட்சிகளில் நன்றாக நடனம் ஆடியிருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடம் பெரிதளவில் எதிர்பார்க்க முடியவில்லை. அதேபோல், நாயகி ஐஸ்வரியாவுக்கு படத்தில் பெரிதான கதாபாத்திரம் இல்லை. இருந்தாலும், தனக்கு எது வருமோ? அதை சரியாக செய்திருக்கிறார்.
படத்தில் போஸ் வெங்கட், பட்டிமன்றம் ராஜா, இயக்குனர் பாக்யராஜ் என மிகப்பெரிய கதாபாத்திரங்கள் இருந்தும், கதையை ரசிப்பதற்குண்டான சுவாரஸ்யம் ஒரு காட்சியில்கூட இல்லை. இயக்குனர் ஜான் விக்னா, ஒரு இளைஞனின் இயக்குனராகும் கனவு, அதில் அவனுக்கு ஏற்படும் இன்னல்களையும், இறுதியில் அந்த இளைஞன் கையாளும் யுக்திகளையும் பொறுப்புணர்வுடன் படமாக்க நினைத்திருக்கிறார். ஆனால், படம் எந்தவித விறுவிறுப்பும் இல்லாமல் நகர்வது சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல், படத்தின் கணேஷின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக காட்டவில்லை. நெக்சிடோ இசையில் விஜய் பற்றிய பாடல் மட்டும் ரசிக்க தோன்றுகிறது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான்.
மொத்தத்தில் ‘அதரவெப்போம்’ அதரவில்லை.

புதுமுகங்கள் வெங்கட் மற்றும் சாந்தி நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘எடால்’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்து ஆசிரியரின் மகன் நாயகன் வெங்கட். கல்லூரிப் படிப்பை முடிக்காமல் பல அரியர்ஸ் வைத்துள்ள இவர் நண்பர்களுடன் சுற்றி வருகிறார். நாயகி சாந்தியின் தந்தை அதே ஊரில் பெரிய தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதிலிருந்து வெளிவரும் கழிவுகளால் கிராமம் பாதிக்கப்படுகிறது. கிராமத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருக்கும் நாயகனின் தந்தை இதனை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார். இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது.
இந்நிலையில், வெங்கட் படித்த அதே கல்லூரியில் நாயகி சாந்தி முதலாமாண்டு சேருகிறார். இவரை பார்த்தவுடன் வெங்கட் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் சாந்தியிடம் தன்னுடைய காதலை சொல்லி அவரும் விரும்புவதாகக் கூற, இருவரும் காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதலுக்கு வெங்கட்டின் தந்தை பச்சை கொடி காட்டுகிறார். ஆனால், சாந்தியின் தந்தையோ வெங்கட்டை மிரட்டுகிறார்.
மேலும் வெங்கட்டிடம் ‘உன் கண் முன்னே அவளை வேறொருவனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன்’ என்று சவால் விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் வெங்கட், ‘வேறு யாராவது சாந்தியை திருமணம் செய்தால் அவன் கையை வெட்டுவேன்’ என்று எதிர் சவால் விடுகிறார்.
இந்த சவாலில் வென்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள். தங்களால் முடிந்த வரை நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் வெங்கட் கதாபாத்திரத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சாந்தி, காதலுக்காக அப்பாவையே ஏமாற்றும் கதாபாத்திரத்தை ஏற்று யதார்த்தமாக செய்திருக்கிறார்.
வெங்கட்டுக்கு அப்பாவாக நடித்திருப்பவர் பொறுப்பான ஆசிரியராகவும் சமூக ஆர்வலராகவும் மனதில் பதிகிறார். சாந்திக்கு அப்பாவாக நடித்திருப்பவர் காமெடி கலந்த வில்லத்தனத்தில் ரசிகர்களை கவர்கிறார்.
சிறிய பட்ஜெட்டில் நல்ல நட்பு, காதல் என ரசிகர்கள் விரும்பும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர்.
ஜோ மற்றும் ஸ்மித் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். திருநாவுக்கரசின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘எடால்’ கலகலப்பு.

சூர்யா, நித்யாமேனன், சமந்தா ஆகியோர் நடிப்பில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘24’ படம், ரசிர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? என்று பார்ப்போம்.
மேகமலை என்ற மலைக்கிராமத்தில் சூர்யா தனது மனைவி நித்யா மேனன் மற்றும் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். விஞ்ஞானியான இவர் தனது ஆராய்ச்சியின் மூலம் காலத்தை மாற்றியமைக்கும் கைக்கடிகாரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார். இவரது அண்ணனான ஆத்ரேயா என்ற மற்றொரு சூர்யா, இந்த கடிகாரத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று துடிக்கிறார்.
இதில், நித்யாமேனனையும், விஞ்ஞானி சூர்யாவையும் கொன்றுவிட்டு, கடிகாரத்தை கைப்பற்ற பார்க்கிறார். இதில், நித்யாமேனன் பலியாகவே, விஞ்ஞானி சூர்யா தனது கைக்குழந்தையுடன் கடிகாரத்தையும் ஒரு பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டு, தப்பிக்கிறார். வழியில் பார்க்கும் சரண்யாவிடம் இரண்டையும் ஒப்படைத்துவிட்டு, இவர் மட்டும் செல்லும்போது, ஆத்ரேயா விஞ்ஞானியை சுட்டு கொன்றுவிடுகிறான்.

இறுதியில், ஆத்ரேயா கையில் அந்த கைக்கடிகாரமும், குழந்தையும் கிடைக்காமல் போகிறது. கைக்கடிகாரம் அடங்கிய பெட்டியின் சாவி மட்டும் இவன் கையில் மாட்டுகிறது. பின்னர், 26 ஆண்டுகள் கழித்து கதை நகர்கிறது. விஞ்ஞானி சூர்யாவின் கைக்குழந்தையான மணி என்ற சூர்யா, இளைஞனாக சென்னையில் சொந்தமாக கடிகாரக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ‘24’ என்ற லோகோவுடன் இருக்கும் கைக்கடிகாரம் அடங்கிய பெட்டியின் சாவி கிடைக்காததால் அது பற்றிய மகத்துவம் தெரியாத சாதாரண ஒரு பொருளாகவே பார்த்து வருகிறார் சூர்யா.
மறுமுனையில், 26 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கிய ஆத்ரேயா, கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். அந்த 26 ஆண்டுகளும் அவரது கையில் அந்த கைக்கடிகார பெட்டியின் சாவி இருக்கிறது. ஒருகட்டத்தில், அந்த சாவி இவரது கையில் இருந்து கீழே விழுந்து, மணி சூர்யாவின் கைக்கு கிடைக்கிறது. அந்த சாவியில் இருக்கும் 24 என்ற நம்பரும், பெட்டியில் இருக்கும் 24 நம்பரும் ஒன்றாக இருப்பதை உணர்ந்த சூர்யா, அந்த பெட்டியை இந்த சாவியை கொண்டு திறக்கிறார். அப்போதுதான், சூர்யாவுக்கு அந்த கடிகாரத்தை பற்றிய மகத்துவம் தெரிய வருகிறது.

அந்த கடிகாரத்தை வைத்து தனது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார் சூர்யா. இந்த கடிகாரத்தை வைத்தே சமந்தாவையும் காதல் வசப்பட வைக்கிறார். இந்நிலையில், கோமாவில் இருந்து திரும்பிய ஆத்ரேயா, தன் நிலையை பார்த்து மிகவும் கோபமும் எரிச்சலும் அடைகிறார். தனது தம்பி கண்டுபிடித்த கடிகாரம் மூலமாகத்தான் தனது நிலையை சரிசெய்ய முடியும் என்று எண்ணி, அந்த கடிகாரத்தை தேட ஆரம்பிக்கிறார்.
இறுதியில், அந்த கடிகாரத்தை கண்டுபிடித்து, தனது நிலையை மாற்றிக்கொண்டாரா? இல்லையா? என்பதே சயின்ஸ் பிக்சன் கலந்த திரில்லராக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் குமார்.

சூர்யா, விஞ்ஞானி, வில்லன், இளமை என மூன்று தோற்றங்களுக்கும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதிலும், வில்லன் தோற்றத்தில் இவர் காட்டும் முகபாவனைகள் மிரள வைக்கிறது. கோமா நிலையில் இருந்து திரும்பிய பிறகு அவரது கோரமான முகத்துடன் இவர் பேசும் வசனங்கள் எல்லாம் ரசிகர்களை கவர்கிறது. விஞ்ஞானி தோற்றத்தில் வரும் சூர்யா மிகவும் அப்பாவியான தோற்றத்துடன் ரசிக்க வைக்கிறார். இளைஞனாக வரும் சூர்யா, ரொமான்ஸ், காமெடி கலாட்டா என ஜாலியாக வருகிறார். மூன்று தோற்றங்களுக்கும் தன்னை வேறுபடுத்தி காட்ட சூர்யா மிகவும் சிரமப்பட்டிருப்பது இதில் நன்றாகவே தெரிகிறது.
நித்யாமேனன், ஒரு சில காட்சிகளே வந்தாலும், தனது அழகால் ரசிகர்களை கட்டிப்போடுகிறார். நடிப்பிலும் ரசிகர்கள் மனதில் அழகாக பதிந்திருக்கிறார். சமந்தா வரும் காட்சிகள் எல்லாம் ரொமான்ஸ், காமெடி என களைகட்டுகிறது. ஒருசில காட்சிகளில் மிகவும் வெகுளியாக நடித்து ரசிக்க வைக்கிறார். இளமை சூர்யாவின் நண்பராக வரும் சத்யன் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் பாசமுள்ள அம்மாவாக மனதில் பதிகிறார்,

இயக்குனர் விக்ரம் குமார் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் மிகவும் தெளிவாக எடுத்திருக்கிறார். எந்தவொரு காட்சியிலும் சினிமாத்தனம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ரொம்பவும் கவனம் செலுத்தியிருக்கிறார். இவருடைய திரைக்கதையை பாராட்டியே ஆகவேண்டும். கைக்கடிகாரத்தை வைத்து காலத்திற்கு முன்னோக்கியும், பின்னோக்கியும் செல்லும் காட்சிகளை தெளிவாகவும், ரசிகர்களுக்கு புரியும்படியும் எடுத்திருப்பது சிறப்பு.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ‘காலம் என் காதலியோ’ என்ற பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. திருவின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. காட்சிகளும், கதாபாத்திரங்களும் இவரது கேமராவில் அழகாகவும், தெளிவாகவும் படமாகியிருக்கிறது. அதேபோல், கடிகாரம் மாறும் காட்சிகள், மழை பாதியிலேயே நிற்கும் காட்சிகள் என கிராபிக்ஸ் காட்சிகளும் மிகவும் பிரம்மாண்டமாய் இருக்கிறது.
மொத்தத்தில் ‘24’ காலத்தை வெல்லும்.

அம்ஜத் கான், லட்சுமி பிரியா, ஸ்ரீனிவாசன், பூஜா, நாசர், மதுசூதனன் ஆகியோர் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘களம்’. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
பாழடைந்த வீடுகளை சதி திட்டம் செய்து சொத்துக்களை அபகரித்து வருகிறார் மதுசூதனன். இவருடைய மகன் அம்ஜத், மதுசூதனின் எதிர்ப்பை மீறி தான் காதலித்து வந்த லட்சுமி பிரியாவை திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்காவிற்கு சென்று விடுகிறார்.
அம்ஜத், லட்சுமி பிரியாவின் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், சென்னைக்கு வருகிறார்கள். இவர்கள் தங்குவதற்கு, ஜமீன்தாருக்கு சொந்தமான அரண்மனை பங்களா ஒன்றை அபகரித்து, புதுப்பித்து கொடுக்கிறார் மதுசூதனன்.
அந்த வீட்டில் தங்கும் லட்சுமி பிரியாவை ஏதோ ஒன்று பயமுறுத்துகிறது. இதனால் பயந்து போன அம்ஜத் மற்றும் லட்சுமி பிரியா இருவரும் ஓவியர் பூஜா மூலம் இந்த வீட்டில் பேய் இருப்பதை அறிந்துக் கொள்கிறார்கள். பூஜா உதவியால் ஸ்ரீனிவாசன் என்னும் மந்திரவாதி பேய் ஓட்ட வருகிறார். இந்த வீட்டை சுற்றி பார்த்த ஸ்ரீனிவாசனுக்கு கடிதம் ஒன்று கிடைக்கிறது. இதில் இந்த வீட்டில் தங்குபவர்கள் இறந்துவிடுவார்கள் என்று எழுதியிருக்கிறது.
இதற்கிடையில், வேலைக்காரி கனி இறந்து போகிறார். மேலும் வீட்டில் பேயைப் பார்த்து பயந்து போன மதுசூதனன் மாடியில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
இந்நிலையில், ராஜவம்சத்தை பின்னணியில் கொண்டு தற்போது ஏழையாக இருக்கும் ஒருவனுக்கு இந்த பங்களாவை பரிசாகக் கொடுத்துவிட்டால் பேய் உங்களை விட்டு விலகி விடும் ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.
இதைகேட்ட அம்ஜத் ராஜவம்சத்தை கொண்ட வாரிசை கண்டுபிடித்து, அந்த பங்களாவை எழுதி கொடுத்தாரா? அந்த பங்களாவில் இருக்கும் பேய் யார்? எதற்காக அம்ஜத் குடும்பத்தை பயமுறுத்துகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் அம்ஜத், லட்சுமி பிரியா ஆகியோர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மதுசூதனன் வழக்கமான வில்லனாகவே வந்திருக்கிறார். ஓவியர் பூஜா, பேயை விரட்ட வரும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நாசருக்கு படத்தில் பெரியதாக வாய்ப்பில்லை.
வழக்கமான பேய் படத்தை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராபர்ட் எஸ்.ராஜ். கதாபாத்திரங்களை வைத்து திறமையாக வேலை வாங்க தெரிந்த இவருக்கு திரைக்கதையை சரியாக கையாள தெரியவில்லை. நீண்ட காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இறுதியில் வரும் திருப்பம் மட்டும் பெரிய ஆறுதல். வழக்கமான பேய் படங்கள் போலவே இப்படமும் அமைந்திருக்கிறது.
முகேஷ் ஒளிப்பதிவை ஓரளவே ரசிக்க முடிகிறது. பிரகாஷ் நிக்கியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘களம்’ பழையது.