என் மலர்
தரவரிசை
நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் அம்மா கணக்கு. இப்படத்தில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்போம்...
சைதாப்பேட்டையில் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வரும் அமலாபாலுக்கு 10-வது படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். தனது மகளை வயிற்றில் சுமக்கும்போதே தனது கணவனை இழந்துவிடுகிறார் அமலாபால். அப்பா இல்லாத மகளை மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வரும் அமலாபால், டாக்டரான ரேவதியின் வீட்டில் வேலை செய்து வருகிறார்.
அங்கு வேலை முடிந்ததும் மாலை நேரத்தில் மாவுக் கடையிலும், மீன் கடையிலும் வேலை செய்து சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில், பத்தாவது படிக்கும் தனது மகளுக்கு கணக்கு பாடம் சரியாக வராது என்பதால் அவளை அவளுக்கு டியூசனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார் அமலாபால்.
ஆனால், மகளோ தனது அம்மா வீட்டு வேலை செய்வதால் தானும் வீட்டு வேலைக்கு செல்லவேண்டியதுதான் இருக்கும் என்று நினைத்து படிப்பில் அக்கறை செலுத்தாமலும், எந்தவித கனவு இல்லாமலும் இருந்து வருகிறாள். இதனால் தனது மகளின் எதிர்காலத்தை எண்ணி பயப்படும் அமலாபால், அவள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக எடுக்கும் துணிச்சலான முயற்சிதான் ‘அம்மா கணக்கு’.
அமலாபால் திருமணத்திற்கு பிறகு ஹீரோயின் என்ற அந்தஸ்தை உடைத்து ஒரு 10-வது படிக்கும் மகளின் தாயாக துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். மிகவும் பொறுப்பான கதாபாத்திரம் இவருடையது. ஆனால், திரையில் காணும்போது அந்த கதாபாத்திரத்தின் மேல் ஒரு அனுதாபமோ ஈர்ப்போ ஏற்படாதது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, இவர் பேசும் லோக்கல் சென்னை பாஷை முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாபாலின் மகளாக வரும் சிறுமிக்கு முதல் படம் என்றாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து எதார்த்தம் கலந்த சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாள். தலைமையாசிரியராக வரும் சமுத்திரகனி, 2020-க்கு பிறகு உலகில் அதிநவீனமாக தயாரித்து வெளியிட்ட ரோபோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். இம்மாதிரியான ஆசிரியர் ஒருவரை எங்கோ பார்த்துதான் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இருந்தாலும், நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட இவரது கதாபாத்திரத்தை ஏற்கும்படியாக இல்லை.
டாக்டராக வரும் ரேவதி நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் வந்தாலும், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். பள்ளியில் சக மாணவர்களாக வரும் சிறுவர்கள் அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
இந்தியில் வெற்றிபெற்ற ‘நில் பட்டே சன்னாட்டா’ படத்தின் ரீமேக்தான் ‘அம்மா கணக்கு’. இந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரியே தமிழிலும் இயக்கியிருக்கிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் பெற்றோர்கள் முனைப்புடன் செயல்பட்டால் தங்களுடைய குழந்தையை எந்த உயர்ந்த நிலைக்கும் அழைத்து செல்ல முடியும் என்பதை இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கும் இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். அதை, தமிழில் காட்சிப்படுத்தும்போது ரசிகர்களை முழுமையாக கவரும்படியாக செய்யாமல் தவறவிட்டிருப்பது வருத்தமே.
இளையராஜாவின் இசை கதையை நகர்த்தி செல்வதற்கு உதவியிருக்கிறது.
மொத்தத்தில் ‘அம்மா கணக்கு’ திருப்தியில்லை.

விஷ்ணுப்ரியன், சானியதாரா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘அங்காளி பங்காளி’. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
நாயகன் விஷ்ணுப்ரியன் ஒரு கார் ஷோரூமில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் பெரிய வீடு கட்டி, குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற லட்சியத்துடன் வேலை பார்த்து வருகிறார். இதனால் கஷ்டப்பட்டு உழைக்கும் விஷ்ணுவுக்கு அந்த ஷோரூமிலேயே மிகப்பெரிய பொறுப்பும் கிடைக்கிறது.
கூடவே, தனது லட்சியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து வருகிறார். இவரும், ஆசிரியையான நாயகி சானியதாராவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொள்கிறார்கள்.
விஷ்ணுவின் வளர்ச்சி பிடிக்காத அந்த ஷோரூமிலேயே சூப்பர்வைசராக பணியாற்றுபவர் இவரை பழிவாங்க துடிக்கிறார். ஒருகட்டத்தில் விஷ்ணுவால் சூப்பர்வைசரின் வேலையும் பறிபோகிறது. இதனால் சூப்பர்வைசரின் திருமணம் நின்றுபோகிறது. இதனால், கோபமடைந்த அவர் விஷ்ணுவின் சந்தோஷத்தை எப்படியாவது கெடுக்க நினைக்கிறார்.
இறுதியில், சூப்பர்வைசரின் சதியில் விஷ்ணு சிக்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
விஷ்ணுப்ரியன் சேல்ஸ்மேன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளாட்டும், எதிரிகளுடன் சண்டை போடும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு குத்துப்பாட்டுக்கு அசத்தலான நடனம் ஆடி ரசிக்க வைத்திருக்கிறார்.
சானியதாரா பார்க்க அழகாக இருக்கிறார். அளவான கவர்ச்சியுடன், பொறுப்பான குடும்ப பெண் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகன் நண்பனாக சூரி வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பை கொடுத்திருக்கிறது. டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் பாலமுருகன் குடும்பத்தோடு ரசிக்கும்படியான ஒரு கதையை கொடுத்திருக்கிறார். ஆனால், படத்தை நீட்டிப்பதற்காக ஒவ்வொரு காட்சிகளின் நீளத்தையும் அதிகரித்திருப்பது சலிப்பை தருகிறது. ரொமான்ஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள் எல்லாம் சிறப்பாய் தந்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். அதேபோல் பின்னணி இசையிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.
மொத்தத்தில் ‘அங்காளி பங்காளி’ பாசம் குறைவு.

ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
சென்னை ராயபுரத்தில் பெரிய தாதாவாக இருப்பவருக்கு நைனா என்று பெயர். அப்படி நைனாவாக ஏரியாவை கலக்கும் சரவணன் தனக்கு வயதாகி விட்டதால், தன்னுடைய மகளான ஆனந்தியை திருமணம் செய்பவரை அடுத்த நைனாவாக்க நினைக்கிறார். இதற்காக அடுத்த நைனா யார் என்ற தேடுதல் நடக்கிறது.
இதற்காக வீரமானவர்களை தேர்வு செய்யும் நிலையில், மிகவும் கோழையான பயந்த சுபாவம் கொண்ட ஜி.வி.பிரகாஷை பெரிய ரவுடி என்று நினைத்து திருமணம் செய்து வைக்கிறார் சரவணன். இறுதியில் ஜி.வி.பிரகாஷ் மிகவும் கோழையானவர் என்று சரவணனுக்கு தெரியவந்ததா? ஜி.வி.பிரகாஷ் நைனாவாக எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், தன்னுடைய வழக்கமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். முன்பை விட நடனம், காமெடி என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியான ஆனந்திக்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தில் பல கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கருணாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோர் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறார்கள். கருணாஸ் பாகுபலி பாணியில் காளகேய மொழி பேசுவது, அதுபோல், யோகிபாபு விஜய், அஜித், தனுஷ் அகியோரின் வசனங்களை பேசுவது என ரசிகர்களை போரடிக்க விடாமல் செய்திருக்கிறார்கள்.
இராயபுரத்தில் தாதாவாக இருப்பவர்களை பற்றி ஒரு காமெடியான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன். ஆனால், படத்தில் ஒரு சில இடங்களில் காமெடி பெரிதாக எடுபடவில்லை. காமெடி படம் என்பதற்காக எந்த விதமான லாஜிக்கும் இல்லாமல் படம் எடுத்திருக்கிறார். ஏதோ படத்தில் ஒன்று குறைவது போல் தோன்றுகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியையும் நன்றாகவே கொடுத்திருக்கிறார். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ சுமாரா இருக்கு.

சுந்தர்.சி.- பூனம் பஜ்வா நடிப்பில் காமெடி படமாக வெளிவந்திருக்கும் ‘முத்தின கத்திரிக்கா’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? என்பதை பார்ப்போம்...
பரம்பரை பரம்பரையாக அரசியலில் ஜொலிக்கவேண்டும் என்று நினைத்து வாழ்ந்து வருகிறது சுந்தர்.சியின் குடும்பம். ஆனால், அவருடைய தாத்தாவாலும், அப்பாவாலும் அரசியலில் ஜொலிக்க முடிவதில்லை. இதனால், சுந்தர்.சியின் அம்மா, அவருக்கு அரசியல்வாடையே தெரியாதவாறு வளர்த்து வருகிறார்.
வளர்ந்து பெரியவனாகி, கல்லூரி படிப்பையெல்லாம் முடித்துவிட்டு வெளியே வரும் சுந்தர்.சி. ஒருநாள் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்து தெருவில் நடந்துசெல்லும் போது அவருக்கு போலீஸ் முதற்கொண்டு அனைவரும் கொடுக்கும் மரியாதையை கண்டு அரசியலில் களமிறங்க முடிவு செய்கிறார்.
அதன்படி, ஒரு கட்சியில் இணைந்து அந்த ஏரியாவில் தன்னையும் அரசியல்வாதி போல் காட்டிக் கொள்கிறார். இவருடைய கட்சிக்கு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் விடிவி கணேஷும், சிங்கம்புலியும். இவர்கள் இரண்டுபேரும் அண்ணன் தம்பிகள் என்றாலும் இருவரும் எதிரெதிர் கட்சிகளில் இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் ஊருக்கு நல்லது செய்து விளம்பரமாக்கி கொள்ள நினைப்பதை, சுந்தர்.சி நடுவே புகுந்து, தனக்கு விளம்பரமாக்கிக் கொள்கிறார். இதனால், எலியும் பூனையுமாக இருக்கும் அண்ணன், தம்பிகள், சுந்தர்.சியை எதிர்ப்பதில் மட்டும் ஒன்று சேர்ந்து செயல்படுகிறார்கள்.
இந்நிலையில், 40 வயதை கடந்தும் திருமணமாகாமல் இருக்கும் சுந்தர்.சி., ஒருநாள் வழியில் நாயகி பூனம் பஜ்வாவை பார்த்ததும் காதல்வயப்படுகிறார். பின்னர், அவரை பெண் கேட்டு அவளது வீட்டுக்கும் செல்கிறார். பூனம் பஜ்வாவின் அப்பா ரவிமரியா, சுந்தர்.சி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். தன்னுடன் படித்தவனே தன்னுடைய பெண்ணை பெண் கேட்டு வந்திருக்கிறானே என்று ஆத்திரப்படும் ரவிமரியா, அரசியலில் ஒரு பெரிய புள்ளியாக வந்தால், தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக கூறி சுந்தர்.சியை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
அந்த வேளையில், தேர்தல் நெருங்குகிறது. அதில் சுந்தர்.சி தனது கட்சி தலைமையிடம் கேட்டு ஒரு பதவிக்கு போட்டியிடுகிறார். இறுதியில், வி.டி.வி.கணேஷ், சிங்கம்புலி இருவரின் எதிர்ப்பையும் மீறி, சுந்தர்.சி., தேர்தலில் வெற்றிபெற்று பூனம் பஜ்வாவை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
சுந்தர்.சி. தனது வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்றமாதிரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். சுந்தர்.சியுடனே வலம் வரும் சதீஷ், சுந்தர்.சியின் வயதை வைத்து செய்யும் காமெடிகளை பெருந்தன்மையுடன் ஏற்று நடித்ததற்கு அவருக்கு பாராட்டுக்கள். வெள்ளை வேஷ்டி, சட்டையில் அரசியல்வாதி தோரணைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காமெடி படம் இயக்கும் இயக்குனருக்கு காமெடி வேடத்தில் நடிப்பதை சொல்லித்தர தேவையில்லை. அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
சதீஷ், நெற்றி நிறைய பட்டை விபூதியுடன் பார்க்கும்போதே சிரிக்க வைக்கிறார். இவர் அவ்வப்போது அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள் காமெடிக்கு உத்தரவாதம். லண்டனில் இருந்து வந்த பையனாக வரும் வைபவ் ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். எதிரிகளாக வரும் விடிவி கணேஷ், சிங்கம் புலி இருவரும் வில்லத்தனம் கலந்த காமெடியில் கலகலக்க வைத்திருக்கிறார்கள்.
பூனம் பஜ்வா கொழுக் மொழுக்கென்று பார்க்க அழகாக இருக்கிறார். படம் முழுக்க சேலையில் வந்தாலும், அதிலும் சிறிது கவர்ச்சி காட்டி ரசிகர்களை வளைத்து போடுகிறார். யோகிபாபு வரும் காட்சிகள் எல்லாமே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. பூனம் பஜ்வாவின் அம்மாவாக வரும் கிரண் ஒருசில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் ஓகே சொல்ல வைக்கிறார். ரவிமரியாவும் தனது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.
அறிமுக இயக்குனர் வெங்கட்ராகவன் தன்னுடைய முதல் படத்திலேயே காமெடி என்ற பலமான அஸ்திரத்தை கையாண்டிருக்கிறார். அதை சரியாக பயன்படுத்தியதால் ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பு கொடுப்பார்கள் என நம்பலாம். மலையாளத்தில் வெளிவந்த ‘வெள்ளிமூங்கா’ படத்தின் ரீமேக் என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார். காமெடி படம் என்று எண்ணி செல்பவர்களுக்கு இப்படம் கண்டிப்பான ஒரு நல்ல விருந்தாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. ஆனால், இதுபோல் முதல் படம் எடுக்கும் இயக்குனர்கள், பிறர் மனம் நோகும்படியான காட்சிகளை வைக்காமல் தவிர்க்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் என்றாலும் பின்னணி இசையை கதைக்கேற்றவாறு அளவாக கொடுத்திருக்கிறார். பானு முருகன் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாகவும், அழகாகவும், கலர்புல்லாகவும் காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘முத்தின கத்திரிக்கா’ நகைச்சுவை விருந்து.

புதுமுகம் செளரா சையத் மற்றும் இயக்குனர் ராமநாதன் ஆகிய 2 பேர் நடிப்பில் மட்டும் ‘வித்தையடி நானுனக்கு’ என்ற படம் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
முன்னாள் நாயகியின் மகள் செளரா சையத். தன்னைப்போல மகளும் நடிகையாக வேண்டும் என்ற எண்ணத்தில் சௌரா சையத்தை நடிக்க வைக்கிறார். காட்டுப் பகுதியில் நடக்கும் முதல் நாள் படப்பிடிப்பில் அவருக்கு நடிப்பே வரவில்லை என்று சொல்லவும் கோபத்தில் காரில் ஏறி கிளம்புகிறார்.
செல்லும் வழியில் கார் ரிப்பேர் ஆகிறது. அந்த வழியே வரும் இயக்குனர் ராமநாதன், செளரா சையத்துக்கு தன் காரில் லிப்ட் கொடுத்து கார் ரெடியான உடனே நீ கெளம்பலாம் என்று கூறி தனது காட்டுப் பங்களாவுக்கு அழைத்து செல்கிறார்.
பங்களாவிற்கு சென்றவுடன் ராமநாதனுடன் நட்பாக பழகுகிறார் சௌரா. அப்போது தனது அம்மாவை சினிமாவில் அறிமுகம் செய்தது ராமநாதன்தான் என்றும் தன் அம்மாவை அவர் ஒருதலையாக காதலித்தார் என்பதும் சௌராவிற்கு தெரியவருகிறது. ஆனால் மறுநாள் காலை முதல் ராமநாதன் வேறு மாதிரி நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார். சௌராவை பிரம்பால் அடிக்கும் அளவுக்கு ஒரு சைக்கோ போல மாறிப் போகிறார்.
இவரிடம் இருந்து தப்பிக்க, அந்த பங்களாவை விட்டே போக நினைக்கிறார். ஆனால் கைவிலங்கு பூட்டி அவரை சிறை வைத்துவிடுகிறார் ராமநாதன்.
இறுதியில் ராமநாதனிடம் இருந்து சௌரா தப்பித்தாரா? ராமநாதன் இவ்வாறு நடந்துக் கொள்ள என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் செளரா சையத்துக்கு இது முதல் படம். ஆனால், முதல் படம் என்று தெரியாத அளவிற்கு காட்சிக்கு காட்சி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பதட்டம் இல்லாமல் நடித்திருப்பது சிறப்பு. தமிழ் சினிமாவுக்கு நல்வரவு என்றே சொல்லலாம்.
இந்த படத்தை இயக்கிய ராமநாதன் அவரே இதில் நடிக்கவும் செய்திருக்கிறார். சைக்கோ தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவர் ஏன் சௌராவை அப்படி டார்ச்சர் செய்கிறார் என்பதற்கு விடை தெரியும்போது சபாஷ் போட வைக்கிறது.
ஒரு வீடு, இரண்டு கதாபாத்திரங்களை வைத்து ஒட்டுமொத்த படத்தையும் முடித்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் போரடித்தாலும், படம் திரில்லருக்கு மாறியபின் என்னதான் நடக்குது பார்க்கலாம் என்று சீட்டில் உட்கார வைக்கிறது. இயக்குனரின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால், கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். அதிக வசனங்கள் ஆங்கிலத்தில் இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
விவேக் நாராயண் இசையும், ராஜேஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். ஒரு சில இடங்களில் வசனங்களே கேட்க முடியாதபடி அதிக சத்தத்தில் பின்னணி இசையை ஓடவிட்டதை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘வித்தையடி நானுனக்கு’ புதிய முயற்சி.

ஆங்கிலத்தில் ‘வார் கிராப்ட்’ என்ற பெயரில் வெளிவந்து தமிழில் ‘சக்ர வியுகம்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்....
மனிதர்களை கொன்று தன்னுடைய சக்தியை பெருக்கிக் கொள்ளும் வேற்று கிரக அரசனான குல்டன், தன் பெரும் படையோடு பூமிக்குள் நுழைகிறான். தனது மக்களை பாதுகாக்க அரசன் லேன் வ்ரின், தனது அதீத சக்தி கொண்ட பாதுகாவலர்களோடு மேடிவ், கட்கர் மற்றும் தன் படையோடு தீய சக்திகளை எதிர்க்க புறப்படுகிறான்.
தீய சக்திகளின் இனத்தில் இருந்து சிறை பிடிக்கப்பட்ட கரோனாவும் இவர்களோடு இணைந்து போருக்கு புறப்படுகிறாள். இறுதியில், இந்த போரில் யார் வென்றார்கள்? தீய சக்திகளிடமிருந்து மனித இனம் காப்பாற்றப்பட்டதா? என்பதை சொல்லும் படமே ‘சக்ரவியுகம்’.
‘வார் கிராப்ட்’ என்று ஹாலிவுட்டில் வெளிவந்த படம் தமிழில் ‘சக்ர வியுகம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. தீய சக்திகளிடமிருந்து மக்களை காப்பாற்ற போராடும் மனிதர்களின் கதைதான் இது. ஹாலிவுட்டுக்கு அதர பழசான கதைதான் என்றாலும், கதை களத்தையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்த விதத்தில் படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இப்படம் ‘வேர்ல்டு ஆப் வார் கிராப்ட்’ என்ற வீடியோ கேமை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்களும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பிரம்மாண்ட ஓநாய்கள், ராட்சத கழுகு, கொடூர பற்களை கொண்ட அரக்கர்கள் என படத்தில் பிரம்மாண்டத்திற்கும் குறைவில்லை. இயக்குனர் டங்கன் ஜோன்ஸ் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு எடுத்து மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். சைமன் டக்கனின் ஒளிப்பதிவும், ரமின் ஜாவடியின் இசையும் படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சக்ர வியுகம்’ வெற்றி களம்.

உண்மை சம்பவங்களை பின்னணியாக வைத்து வெளிவந்த ‘தி கான்ஜுரிங்’ படத்தின் இரண்டாவது பாகமாக வெளிவந்துள்ள ‘தி கான்ஜுரிங் 2’ படம் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்போம்...
எட் வாரன், லோரைன் வாரன் தம்பதியருக்கு ஆவிகள் இருப்பதை உணரக்கூடிய சக்தி இருக்கும். அதனால் சர்ச் நிர்வாகம் இவர்களை அமானுஷ்ய சக்திகளால் பாதிப்புக்குள்ளாகும் வீடுகளுக்கு அனுப்பி, அங்கு இவர்கள் தங்கி, அங்கே இருக்கும் தீய ஆவிகளை விரட்டியடிக்கும் பணியை ஒப்படைக்கும். அப்படி இவர்கள் ஏகப்பட்ட வழக்குகளை சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்த ஒரு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உண்மை கதையைத்தான் ‘தி கான்ஜுரிங்’ முதல் பாகமாக கொடுத்திருத்திருந்தார் ஜேம்ஸ் வான்.
அந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள ‘தி கான்ஜுரிங்-2’ படமும் லண்டனில் ஒரு குடும்பம் சந்தித்த அமானுஷ்ய சக்தியின் பாதிப்புகளை எடுத்துக் காட்டியுள்ளது. பெக்கி ஹாட்ஸன் கணவனை பிரிந்து லண்டணில் தனது 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பெக்கி ஹாட்ஸன் குழந்தைகளில் ஒரு குழந்தையின் உடலில் வயதான ஆவி ஒன்று புகுந்து விடுகிறது. இதையடுத்து அந்த வீட்டில் அமானுஷ்ய சப்தங்களும், வீட்டிலுள்ள பொருட்களும் சேதமாகின்றன.
இதனால் பயந்துபோன பெக்கி ஹாட்ஸன் தனது குழந்தைகளுடன் பக்கத்து வீட்டில் பாதுகாப்புக்கு தஞ்சம் புகுகிறார்கள். இதையடுத்து பெக்கி ஹாட்ஸன், பேய்களை விரட்டியடிக்கும் எட் வாரன், லோரைன் வாரன் ஆகியோரின் உதவியை நாடுகிறார் பேய்கள் விரட்டுவதை கைவிட நினைக்கும் இந்த தம்பதியர், பெக்கி ஹாட்ஸனின் உதவியை மறுக்க முடியாமல் அவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள்.
இதன்பிறகு அந்த வீட்டிற்கு வரும் எட் வாரன், லோரைன் வாரன் ஆகியோர் அந்த வீட்டில் எந்த அமானுஷ்ய சக்தியும் இல்லை. அந்த வீட்டில் உள்ள சின்ன குழந்தை விளையாட்டுக்காக இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செய்கிறது என்று நினைத்து அங்கிருந்து புறப்படுகிறார்கள். உண்மையில், அந்த குழந்தை விளையாட்டுக்காக அமானுஷ்ய சக்தி போன்று நாடகம் ஆடியதா? அல்லது உண்மையிலேயே ஒரு ஆவி அந்த வீட்டில் இருந்ததா? என்பதை திகிலுடன் சொல்லும் படமே ‘தி கான்ஜுயரிங் 2’.
வழக்கமான திகில் படங்களில் இருந்து ‘தி கான்ஜுரிங்’ படம் தனித்து நிற்பதற்கு காரணம், உண்மை சம்பவங்களை பின்னணியாக வைத்து, அதை ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக கொடுப்பதுதான். முந்தைய பாகத்தை எந்தளவுக்கு திகிலாக கொடுத்தாரோ, அதே அளவுக்கு ரொம்பவும் திகிலாக இரண்டாம் பாகத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வான்.
கொடூரமான எந்த கொலைகளும் இல்லாமல் ஒரு பேய் படத்தால் ரசிகர்களை திகிலடைய செய்ய முடியும் என்பதற்கு இப்படம் ஒரு சான்று. வெறும் பயமுறுத்தலோடு நின்றுவிடாமல், வாரன் தம்பதிகளிடையே இருக்கும் காதல், பெக்கி ஹாட்ஸன் குடும்பத்தினரின் பாசம் என குடும்பங்களை கவரும் வகையிலும் படமாக்கியிருப்பது சிறப்பு.
ஜேம்ஸ் வானின் காட்சிக்கு அழகான ஒளிப்பதிவு செய்திருக்கிறார் டான் பர்கெஸ். அவருக்கு பக்கதுணையாக ஜோசப் பிஷாராவின் இசையமைப்பும் சேர்ந்து படத்திற்கு இரு தூண்களாய் நின்று படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. முதல் பாகத்தை போலவே, இந்த பாகத்திலும் வாரென் தம்பதியாக வரும் பாட்ரிக் வில்சனும், வேரா பர்மிகாவும் அசத்தியிருக்கிறார்கள். அதேபோல் குழந்தை நட்சத்திரம் ஜேனட் ஹாட்ஸனாக நடித்திருக்கும் மெடிஸன் வுல்பும் யதார்த்தமாக நடித்துள்ளார்.
மொத்தத்தில் ‘தி கான்ஜுரிங் 2’ - பேய் பட விரும்பிகளுக்கு விருந்து.

நிதின் சத்யா, ரக்ஷா ராஜ், சிங்கம் புலி, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, மனோபாலா என ஒரு நகைச்சுவை பட்டாளமே இணைந்திருக்கும் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
சென்னையில் இமான் அண்ணாச்சி நடத்தி வரும் மேன்சனில், பொம்மைகள் விற்கும் நாயகன் நிதின் சத்யா, சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்யும் யோகி பாபு, சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் வாடகைக்கு வசித்து வருகிறார்கள்.
நிதின் சத்யாவும் இவர் கடைக்கு எதிரே உள்ள கடையில் வேலை பார்க்கும் ரக்ஷா ராஜுவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள். ரக்ஷா ராஜுவிற்கு ஐந்து அண்ணன்மார்கள். அவர்கள் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என இருந்து வருகின்றனர். இவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு ஜெயித்தால் தான் நிதின் சத்யாவை திருமணம் செய்துகொள்வதாக ரக்ஷா கூறி வருகிறாள்.
இது ஒருபுறமிக்க, இமான் அண்ணாச்சியின் மேன்சனில் தங்கியிருக்கும் நாயகன் உள்பட அனைவரும் அவருக்கு வாடகை தராமல் ஏமாற்றி வருகிறார்கள். இதனால் மேன்சனில் இருப்பவர்களை காலி செய்துவிட்டு, அதை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வருகிறார் இமான் அண்ணாச்சி. இதையறிந்த, மேன்சனில் உள்ளவர்கள் அனைவரும் வாடகை கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லி, இமான் அண்ணாச்சியின் முடிவை கைவிட வைக்கிறார்கள்.
இருப்பினும், மேன்சன் வாடகையை வசூலிக்க மயில்சாமியை நியமிக்கிறார் இமான் அண்ணாச்சி. மயில்சாமியை கைக்குள் போட்டுக் கொள்வதற்காக நிதின் சத்யா, சிங்கம் புலி, யோகி பாபு மூன்று பேரும் சேர்ந்து அந்த மேன்சனை சுத்தம் செய்ய வரும் ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். அந்த பெண்ணோ மயில்சாமி குடிக்காமல் இருந்தால் அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு ஊருக்கு சென்றுவிடுகிறாள்.
இதற்கிடையில், மயில்சாமியை மேன்சனில் இருப்பவர்கள் அனைவரும் குடிக்க வைத்துவிடுகிறார்கள். போதையில் மயில்சாமி மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போகிறார். இறந்த மயில்சாமி ஆவியாக மாறி நிதின் சத்யா விற்கும் பொம்மைகளுக்குள் புகுந்து, தன்னை குடிக்க வைத்து இறப்பதற்கு காரணமான மேன்சனில் இருப்பவர்கள் அனைவரையும் பயமுறுத்துகிறார்.
இறுதியில் மயில்சாமியின் ஆவியின் பிடியில் இருந்து மேன்சனில் இருப்பவர்கள் தப்பித்தார்களா? நிதின் சத்யா, ரக்ஷாவின் ஐந்து அண்ணன்களை அடித்து திருமணம் செய்து கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நிதின் சத்யா நடித்திருக்கிறார். இவர் நாயகனாக நடித்திருந்தாலும், சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி, யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலருக்கு அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரக்ஷா ராஜ் பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கான வாய்ப்பு குறைவு என்றாலும், நடிப்பில் நிறைவை கொடுத்திருக்கிறார்.
நகைச்சுவை மையமாக வைத்தே படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் குணசேகரன். பல நகைச்சுவை நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும், படத்தில் காமெடி பெரியதாக எடுபடவில்லை. குழந்தைகளை மட்டுமே கவரும் அளவிற்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது. காமெடி காட்சிகளை திறமையாக அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகள், பொம்மைகளுக்குள் பேய் இருப்பது போன்ற காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
சுகுமார் இசையில் கானா பாலா பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. மரண கானா விஜியின் பாடலும் சிறப்பாக உள்ளது. பின்னணியை இன்னும் சிறப்பாக கொடுத்திருக்கலாம். சுரேஷின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ தாங்கமுடியல.

அட்டக்கத்தி தினேஷ், நிவேதா பெத்துராஜ், மியா ஜார்ஜ், பால சரவணன் ஆகியோர் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் ‘ஒருநாள் கூத்து’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வரும் தினேஷும், அதே கம்பெனியில் கூடவே பணிபுரிந்துவரும் நிவேதா பெத்துராஜுவும் காதலித்து வருகிறார். நிவேதா பெத்துராஜ் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். தினேஷோ நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.
வாழ்க்கையில் செட்டிலான பிறகுதான் கல்யாணம் என்ற முடிவில் இருக்கிறார் தினேஷ். ஆனால், நிவேதாவோ தனது பெற்றோரிடம் தினேஷை அறிமுகப்படுத்தி, விரைவில் கல்யாணம் பண்ணிக்கொள்ள முடிவெடுக்கிறார். ஆனால், தினேஷோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்துகொள்ள, நிவேதாவுக்கும் தினேஷுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு பிரிந்துபோகிறார்கள்.
இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம், தனியார் எப்.எம்.மில் ஆர்.ஜே.வாக பணிபுரியும் ரித்விகாவுக்கு அவரது அண்ணன் கருணாகரன் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். நீண்டநாட்களாக மாப்பிள்ளை கிடைக்காமல் கடைசியில் ஒரு மாப்பிள்ளையை பார்த்து அவருக்கு நிச்சயமும் செய்துவிடுகின்றார். நிச்சயதார்த்தத்துக்கு பிறகு மாப்பிள்ளைக்கு ரித்விகாவை பிடிக்காமல் போய்விடுகிறது. இருப்பினும், மாப்பிள்ளையை சமதானம் செய்யும் முயற்சியில் கருணாகரன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இன்னொரு பக்கம், ஆசிரியரின் மகளான மியா ஜார்ஜுக்கு அவளது அப்பா பெரிய இடத்தில் தனது பெண்ணை திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு வருகிற வரன்களை எல்லாம் தட்டிக் கழித்து வருகிறார். இந்நிலையில், ஒரு பெரிய பணக்காரரின் சம்பந்தம் கிடைக்கிறது. மாப்பிள்ளை வீட்டார் மியா ஜார்ஜின் குடும்பம் தங்களது குடும்பத்தின் தகுதிக்கு குறைவானது என்று கூறி இந்த சம்பந்தத்தை தட்டி கழிக்கின்றனர். ஆனால், மாப்பிள்ளைக்கு மியா ஜார்ஜை பிடித்துப்போக, தனது பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, மியா ஜார்ஜை கைபிடிக்க முடிவெடுக்கிறார்.
இப்படியாக மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெறும் வெவ்வேறு சம்பவங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது. அப்போது அங்கு என்னென்ன திருப்பங்கள் ஏற்படுகிறது என்பதை சொல்லும் படமே ‘ஒருநாள் கூத்து’.
தினேஷ் இந்த படத்தில் ரொம்பவும் எதார்த்தமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அது அவருக்கு பெரியதாக எடுபடவில்லை. படம் முழுக்க சோகம் வழிந்த முகத்துடனேயே வலம் வந்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் தினேஷ் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிவேதா பெத்துராஜ் அறிமுகமாகும் முதல் படம் என்றாலும் தினேஷை வலிய வலிய காதலிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார்.
ஆர்.ஜே.வாக வரும் ரித்திகாவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். நீண்ட இடைவெளிக்குபிறகு இப்படத்தில் இவருக்கு நல்லதொரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். இந்த மாதிரியான கதாபாத்திரத்தை எடுத்து செய்ததற்கு பாராட்ட வேண்டிய விஷயம். ரமேஷ் திலக்குக்கும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
மியா ஜார்ஜ் படத்தில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார். இவருக்கான வசனங்கள் குறைவுதான் என்றாலும், தனது முகபாவனையிலேயே அனைவரையும் அசத்தி இருக்கிறார். தினேஷின் நண்பராக வரும் பாலசரவணன் வரும் காட்சிகள் கலகலப்புக்கு குறைவில்லாமல் கொண்டு சென்றிருக்கிறது. கருணாகரன், சார்லி ஆகியோரும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கல்யாணம் என்பது ஒருநாள் கூத்து. அதற்காக எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை இந்த படத்தின் மூலம் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் சொல்லியிருக்கிறார். படத்தின் மூன்று வெவ்வெறு கதைகள் இருப்பதால் படத்தின் ஆரம்பம் கொஞ்சம் நீளமாக செல்வது போரடிக்கிறது. இருந்தாலும், கிளைமாக்ஸ் காட்சியை சுவாரஸ்யமாக முடித்திருப்பது சிறப்பு.
ஐஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும் ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை தேவைக்கேற்ப இருக்கிறது. கோகுல் பினாயின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிரோட்டமாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘ஒருநாள் கூத்து’ ஒருமுறை பார்க்கலாம்.

புது முகங்கள் நடிப்பில் ‘கள்ளத்தோணி’ என்ற பெயரில் புதியபடம் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்...
மலையூர் கிராமத்தில் ஒரு கும்பல் பதுக்கி வைத்திருந்த பணத்தை ராமு மற்றும் எடின் அலெக்சாண்டர் நண்பர்கள் குழுக்கள் அதை அபகரித்து செல்கின்றனர். அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு திருடிய பணத்தை ஒருவர் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் நண்பர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.
இந்த சண்டை இவர்களுக்குள் வெட்டு குத்து அளவிற்கு போகிறது. இறுதியில் ஏமாந்த பணத்தை மீட்டார்களா? நண்பர்களுக்குள் நடக்கும் சண்டை முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதுமுகம். அதனால், அவர்களிடம் சிறந்த நடிப்பை எதிர்பார்க்க முடியாது என்றாலும், ஓரளவு நடிப்பை கூட பார்க்க முடியவில்லை. நடிகர்களின் நடிப்பு மிகவும் செயற்கை தனமாக இருக்கிறது. ராமு மற்றும் எடின் அலெக்சாண்டர் மற்றும் நடிகையாக நடித்திருக்கும் தீபிகா ஆகியோர் ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.
உண்மை கதையை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் சதாம் உசேன். ஆனால் கதை, தொடர்ச்சி இல்லாமல் நகர்கிறது. திரைக்கதையில் தெளிவு இல்லை. படத்தை பார்க்கும் போது குறும்படத்தை பார்ப்பது போல் தோன்றுகிறது. வன்முறை காட்சிகள், அடிதடி காட்சிகளை தேவை இல்லாமல் புகுத்தி இருக்கிறார். முதல் பாதி திரைக்கதை குழப்பத்துடன் செல்கிறது. சண்டை காட்சிகளை பார்க்கும் போது காமெடிதான் வருகிறது. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கலாம். வன்முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் அதிகளவில் படத்தை ரசிக்க முடியவில்லை.
தினேஷின் ஒளிப்பதிவில் பகல் நேரமும் இருட்டாக தெரிகிறது. ஒளிப்பதிவில் தெளிவில்லாமல் இருக்கிறது. தேவாவின் இசை பெரியதாக எடுபடவில்லை.
மொத்தத்தில் ‘கள்ளத்தோணி’ சுவாரஸ்யம் இல்லை.

கடந்த வருடம் மெகா ஷார்க் வெர்சஸ் கொலசஸ் என்ற பெயரில் வெளியான ஆங்கில படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சுறாவை தாக்கும் எந்திரனாக வெளியாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்...
பிரேசில் நாட்டில் ரியோ நகரின் அருகே உள்ள கடல் பகுதியில் சுறா ஒன்று கப்பல்களை அழித்து வருகிறது. இலியானா டாக்லஸ் என்னும் ஆராய்ச்சியாளர் இந்த வகை சுறாக்கள் ஏற்கனவே அழிக்கப்பட்ட நிலையில், எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்கிறார். ஆனால், கடற்படை தளபதியோ அந்த சுறாவை அழிக்க ஒரு குழுவை ஏற்பாடு செய்கிறார்.
மறுபக்கம் உக்ரைன் நாட்டில் ரஷியர்களால் அமெரிக்காவை அழிக்க உருவாக்கப்பட்ட எந்திர மனிதன், ஒரு கடத்தல் கும்பல் மூலம் எதிர்பாராத விதமாக இயக்கப்படுகிறான். உடனே அந்த எந்திர மனிதன் அமெரிக்காவை அழிக்க புறப்படுகிறான்.
சுறாவையும் எந்திரனையும் அழிக்க ராணுவம் தீவிர முயற்சி மேற்கொள்கிறது. சுறாவும் எந்திரனும் ஒரு கட்டத்தில் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த சண்டையின் முடிவு என்ன? சுறாவையும் எந்திரனையும் ராணுவம் அழித்ததா? என்பதே மீதிக்கதை.
சுறாக்களை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த வகையில் இப்படத்தை எந்திர மனிதனுடன் சேர்த்து உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த வருடம் மெகா ஷார்க் வெர்சஸ் கொலசஸ் என்ற பெயரில் வெளியான ஆங்கில படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சுறாவை தாக்கும் எந்திரனாக வெளியாகியிருக்கிறது.
இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமாண்டமாக பேசும் அளவிற்கு எடுபடவில்லை. சிறிய பட்ஜெட்டில் உருவான ஹாலிவுட் படமாக இருக்கிறது. ஏற்கனவே சுறாவை வைத்து பல பாகங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த படங்களை காட்டிலும் இப்படத்தை ஓரளவே ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘சுறாவை தாக்கும் எந்திரன்’ தாக்கம் குறைவு.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘இறைவி’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
காலம் காலமாக சிற்பத் தொழில் செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். பாபி சிம்ஹா கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் ஒரு படத்தை இயக்கி விட்டு, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தயாரிப்பாளர் படத்தை வெளியிடாமல் இருக்கிறார்.
இதனால் விரக்தியில் எப்போதும் மது குடித்துக் கொண்டே இருக்கிறார். அவரை நினைத்து அவரது மனைவியான கமாலினி முகர்ஜி மிகவும் வருந்துகிறார். எனவே, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிட இவர்கள் குடும்பம் முயற்சி செய்து வருகிறது.
மறுபக்கம் இவர்கள் குடும்பத்துடன் வளர்ந்த விஜய் சேதுபதி, கணவனை இழந்த பூஜா மீது காதல் வயப்படுகிறார். ஆனால் பூஜாவோ, விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதனால் விஜய் சேதுபதி அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்கிறார். அஞ்சலியுடன் நெருக்கமாக வாழ்ந்தாலும் பூஜாவின் நினைவாகவே இருக்கிறார்.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் விஜய் சேதுபதி நுழைந்து தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறார். அதேசமயம், அஞ்சலிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் கணவன் அருகில் இல்லாத குறை அஞ்சலியை வாட்டுகிறது.
இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவின் போக்கில் மாற்றம் ஏற்படாததால் அவரது மனைவி கமாலினி முகர்ஜி, அவரை விவாகரத்து செய்ய நினைக்கிறார்.
இதுபோன்ற இறுக்கமான சூழ்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் குடும்பத்தில் ஏற்படும் அதிரடி திருப்பங்களே படத்தின் மீதிக்கதை.
எஸ்.ஜே.சூர்யா தனது வழக்கமான நடிப்பு இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடிக்கு அடிமையாக கதாபாத்திரத்தை ஏற்றிருந்தாலும், இறுதிக் காட்சியில் கண்களை குளமாக்குகிறார்.
தாடி, கண்ணாடியுடன் முதிர்ச்சியான தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கே உரிய பாணியில் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் தான் செய்த தவறை நினைத்தும் மனைவியை நினைத்தும் வருந்தும் காட்சியில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாபி சிம்ஹா வில்லத்தனம் கலந்த கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார்.
மேக்கப் இல்லாமல் ஒரு ஏழ்மையான குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் அஞ்சலி. தன் கணவரை நினைத்து வருந்தும் காட்சியில் கமாலினி முகர்ஜி ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார். மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலுடன் நடித்திருக்கிறார் பூஜா திவாரியா. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களான ராதாரவி, வடிவுகரசி, கருணாகரன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
குடும்பத்தைப் பற்றி சிந்திக்காத ஆண்களால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் நீளத்தை குறைத்து சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை அதிகம் பேசப்படுமளவிற்கு கொடுத்திருக்கிறார். சிவக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். குறிப்பாக மழை காட்சிகளை சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘இறைவி’ சமூக அக்கறை.