என் மலர்
தரவரிசை
நாயகன் பியோன் ஜெமினியும், நாயகி கல்யாணி நாயர் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள 'புதுசா நான் பொறந்தேன்' படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
கொடைக்கானலில் நாயகன் பியோன் ஜெமினியும், நாயகி கல்யாணி நாயரும் அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள். நாயகனுக்கு நாயகியை பின்தொடர்வதே வேலை. அவளோ இவனை கண்டுகொள்வதே கிடையாது. நாயகன் அவளை பார்ப்பதற்காகவே அடிக்கடி அவள் வீட்டுக்கு சென்று அவளது அப்பாவிடம் பேச்சு கொடுத்து வருகிறான்.
இதற்கிடையே அதேஊரில் வீடு புகுந்து கொலை செய்து கொள்ளையடிக்கும் கராத்தே ராஜாவை போலீஸ் அதிகாரியான கலாபவன் மணி பிடித்து சிறையில் அடைக்கிறார். ஒருநாள் சிறையிலிருந்து கராத்தே ராஜா தப்பிக்கிறார். இதை அறிந்ததும் அந்த ஊரே பயந்து நடுங்குகிறது. அவரைப் பிடிக்க போலீஸ் வலைவீசி தேடுகிறது.
இந்நிலையில், கல்யாணியை வீட்டில் விட்டு அவரது அப்பா வெளியூர் செல்ல நேரிடுகிறது. அப்போது, அவளுக்கு துணையாக நாயகன் பியோன் ஜெமினியை தனது வீட்டில் வந்து தங்குமாறு சொல்லிவிட்டு செல்கிறார்.
பியோன் ஜெமினிக்கு நாயகி பூ, பொட்டு எதுவும் வைக்காமல் ஆடம்பரம் இல்லாமல் இருப்பது ஏதோ உறுத்தலாக இருக்கிறது. வீட்டில் அவள் தனிமையில் இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவள் குடிக்கும் குளிர்பானத்தில் மயக்க மாத்திரையை போட்டு அவளை மயக்கமடைய வைக்கிறான். மயக்கத்திலேயே அவளுக்கு பட்டுப்புடவை உடுத்தி, பொட்டு, பூ வைத்து அழகு பார்க்க நினைக்கிறார். படுக்கையில் அவளை கிடத்திவிட்டு, பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்கிறான்.
திரும்பி வந்து பார்க்கையில், அந்த வீடு முழுவதும் அலங்கோலமாக கிடக்கிறது. படுக்கையில் கிடந்த நாயகியும் அலங்கோலமாக, அழுகை முகத்துடன் இருக்கிறாள். அவளது கட்டிலுக்கடியில் ஒரு ஆண் மயக்கமடைந்த நிலையில் கிடக்கிறான். அவன் யார்? அவனுக்கு என்ன நேர்ந்தது? அந்த வீட்டிற்குள் அவன் எதற்காக நுழைந்தான்? நாயகி எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்பதை சொல்வதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் பியோன் ஜெமினி கதாநாயகனுக்குண்டான தோற்றத்துடன் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். நாயகி கல்யாணி நாயர் படம் முழுக்க சோகம் வழிந்த முகத்துடனே வலம் வந்திருக்கிறார். தோற்றத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இருப்பினும் ரொமான்ஸ் காட்சிகளிலெல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் கலாபவன் மணி சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியின் அப்பாவாக நடித்திருப்பவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், படத்தின் பிற்பாதியில் இவரது கதாபாத்திரத்தின் தன்மை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
வித்தியாசமான ஒரு திரில்லர் கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மஜித் அபு. ஆனால், அப்பா-மகளுக்கிடையே உள்ள உறவை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியிருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் திரில்லராக எடுக்கப்பட்ட காட்சிகள் திரில்லிங்கை கொடுக்கவில்லை.
கணேஷ் ராஜாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஷக்கிர் ஜான் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘புதுசா நான் பொறந்தேன்’ புதுமையில் தெளிவு இல்லை.

விக்ரம்-நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்துள்ள ‘இருமுகன்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
உளவுத்துறை அதிகாரிகளான விக்ரமும், நயன்தாராவும் சேர்ந்து லவ் என்ற மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனை கொல்வதற்காக பெரிய திட்டம் தீட்டுகிறார்கள். லவ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, மாறுவேடத்தில் அங்கு சென்று குண்டு வைத்து அவனைக் கொல்கின்றனர்.
இதன்பின்னர் காதலர்களாக இருந்த விக்ரமும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் முடிந்த பின் மலைப்பகுதியில் இருவரும் நின்று கொண்டிருக்கும்போது, யாரே ஒருவர் நயன்தாராவை சுட்டு வீழ்த்துகிறார். குண்டடிபட்ட நயன்தாரா மலையில் இருந்து கீழே விழுகிறார்.
அதன்பின் விக்ரம் உளவுத்துறையில் இருந்து ஓய்வு பெற்று 4 வருடங்கள் கழிந்த நிலையில், மலேசியாவில் இந்திய தூதரகம் மர்ம நபர்களால் தாக்கப்படுகிறது. அந்த தாக்குலை நடத்தியது லவ் என்பது இந்திய உளவு அமைப்புக்கு தெரிய வருகிறது. லவ்வை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது. நயன்தாராவும், விக்ரமும் மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். எனவே, லவ்வை பிடிக்க மறுபடியும் உளவுத்துறைக்கு அழைக்கப்படுகிறார் விக்ரம். முதலில் இதற்கு மறுக்கும் விக்ரம் பிறகு சில நிபந்தனைகளுடன் அந்த பொறுப்பை ஏற்கிறார்.
உளவுத்துறை அதிகாரியான நித்யாமேனனுக்கு உதவியாளராக செல்லும் விக்ரம் லவ்வை கண்டுபிடித்து எப்படி வீழ்த்தினார்? விக்ரமின் முதல் தாக்குதலில் லவ் உயிர்தப்பியது எப்படி? அவன் எதற்காக இந்திய தூதரகத்தை தாக்கினான்? என்பதே மீதிக்கதை.
அகிலன், லவ் என இருவேறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். அகிலன் கதாபாத்திரத்தில் முகம் முழுக்க தாடியுடன் வந்தாலும் பார்க்க அழகாக இருக்கிறார். உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தனது உடலை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார்.
அதேபோல், லவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம், பெண்மை கலந்த ஆண் கதாபாத்திரத்தில் நளினமான அங்க அசைவுகளுடன் நடித்து அசத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக பேசும் ஸ்டைலை வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது சிறப்பு. நயன்தாரா முந்தைய படங்களைவிட இந்த படத்தில் மேலும் மெருகேறியிருக்கிறார். பாடல் காட்சிகளில் இவரது உடைகள் பளிச்சிடுகின்றன. அதேபோல், படத்தில் நிறைய இடங்களில் கிளாமர் உடையில் வந்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டியிருக்கிறார்.
படத்தில் முக்கால் வாசி காட்சிகளில் நித்யா மேனன் வருகிறார். இருப்பினும், அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழகாக செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. மலேசியா போலீசாக வரும் தம்பிராமையா வருகிற காட்சிகளெல்லாம் காமெடியாக இருக்கிறது. சிறிய காட்சியில் வரும் கருணாகரன் தனது கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். நாசர் வழக்கம் போல் தனக்குக் கிடைத்த சிறிய பாத்திரத்தில் நிறைவாக நடித்துவிட்டுச் செல்கிறார்
இயக்குனர் ஆனந்த் சங்கர் தனது முந்தைய படமான ‘அரிமா நம்பி’ மாதிரியே இப்படத்தையும் ரொம்பவும் திரில்லராக கொண்டு சென்றிருக்கிறார். முதல் பாதியில் உள்ள விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைந்திருக்கிறது. லவ் பயன்படுத்தும் ‘ஸ்பீட்’ என்னும் ஊக்க மருந்தின் பின்னணியும் அதன் செயல்பாடுகளும் விளக்கப்படும் காட்சி சூப்பர்.
படத்திற்கு பெரிய பலமே ஹாரிஸ் ஜெயராஜின் இசைதான். பின்னணி இசையும், பாடல்களும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. குறிப்பாக ‘ஹெலனா’ பாடல் கேட்க இனிமையாக இருப்பதோடு, அதை அழகாக காட்சிப்படுத்தி இன்னும் கூடுதல் அழகு சேர்த்திருக்கிறார்கள். மற்ற பாடல்களும் பரவாயில்லை.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மலேசியாவின் அழகு, காஷ்மீரின் அழகு எல்லாவற்றையும் இவரது கேமரா கண்கள் நமக்கு விருந்து படைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அன்பறிவு-ரவிவர்மா கூட்டணியில் அமைந்த சண்டைக் காட்சிகள் எல்லாம் அருமையாக உள்ளன. அதேபோல், சுரேஷ் செல்வராஜின் அரங்குகளும் படத்திற்கு பிரம்மாண்டம் கூட்டியிருக்கின்றன. குறிப்பாக, லவ்வின் ஆய்வுக்கூடம் மிரள வைக்கிறது. இதுதவிர கதாபாத்திரங்களின் ஆடையலங்காரமும் அருமையாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘இருமுகன்’ அதிரடிமுகன்.

சாந்தனு பாக்யராஜ், ராம்கி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘வாய்மை’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
இளம் வயதிலேயே கணவனை இழந்த பூர்ணிமா பாக்யராஜ், கஷ்டப்பட்டு தனது மகன் பிரித்வியை வளர்த்து வருகிறார். வளர்ந்து பெரியவனாகும் பிரித்வி, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கார்பெண்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரித்வி வேலை செய்யும் கட்டிடத்திற்கு எதிரே சமூக சேவகர் ஒருவர் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த உண்ணாவிரதம் நாடெங்கிலும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் சமூக சேவகர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரை எங்கிருந்து சுட்டனர் என்பதை ஆராயும் போலீசார், பிரித்வி வேலை செய்யும் கட்டிடத்தில் இருந்துதான் அவரை சுட்டுள்ளனர் என்பது அறிந்து அங்கு சென்று சோதனை செய்கின்றனர். அப்போது, அந்த கட்டிடத்தில் பிரித்வி மட்டுமே இருக்கிறார். அங்கிருந்து துப்பாக்கியையும் கைப்பற்றும் போலீசார், பிரித்விதான் கொலை செய்தது என்று அவனை பிடித்து ஜெயிலில் அடைக்கின்றனர். அவர்தான் குற்றவாளி என்று கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி, அதை நிறைவேற்றியும் விடுகின்றனர்.
மகன் இறந்த சோகத்தில் இருக்கும் பூர்ணிமாவையும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்கின்றனர். அப்போது, நீதிபதி, வக்கீல்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாகவே இருக்கிறார். இவருக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கூறி பல்வேறு தரப்பிலிருந்து கூறி வந்தாலும், ஒரு சிலர் இவருக்கு தூக்குத் தண்டனை அளிக்கக்கூடாது என்று கூறி வருகின்றனர்.
சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இந்தியாவில் ஒரு பெண்ணை தூக்கில் போட்டது கிடையாது. இதனால் குழப்பமடைந்த நீதிபதி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமித்து, அவர்களிடம் 2 மணி நேரம் சட்டத்தை ஒப்படைத்து பூர்ணிமாவுக்கு தூக்குத்தண்டனை வழங்கலாமா? வேண்டாமா? என்று தீர்ப்பு வழங்க முடிவு செய்கிறார். அதன்படி, சாந்தனு பாக்யராஜ், தியாகராஜன், கவுண்டமணி, ராம்கி, முக்தா பானு, ஊர்வசி, மனோஜ் கே.பாரதி, பிரசாத், நமோ நாராயணா, வெங்கட், ரோஸ், அங்கிதா உள்ளிட்டோர் பூர்ணிமாவை விசாரணை செய்ய நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் விசாரித்து பூர்ணிமாவை குற்றவாளி என்று நிரூபித்தார்களா? உண்மையான குற்றவாளி யார் என்பதை அறிந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தூக்குத்தண்டனை அவசியமா? என்ற கேள்வியோடு வெளிவந்திருக்கும் மற்றொரு படம்தான் வாய்மை. ஆரம்பத்தில் படம் காட்சியாக விரிந்தாலும், ஒருகட்டத்தில் விசாரணை என்ற பெயரில் கதைக்களம் ஒரே அறைக்குள் வந்து அமைகிறது. அதன்பிறகு, படத்தின் முக்கால் வாசி காட்சிகள் அனைத்தும் அந்த ஒரே அறைக்குள் முடிந்துவிடுகிறது. இருப்பினும், விசாரணை காட்சிகள் மற்றும் தூக்குத்தண்டனை குறித்து ஒவ்வொருவரின் மாற்றுக் கருத்தும் படத்தை சலிப்பு தட்டாமல் கொண்டு செல்கிறது.
சட்டத்தின் பிடியில் சிக்கி சில அப்பாவிகள் தூக்குத் தண்டனைக்கு ஆளாகி இறக்க நேரிடுகிறது. ஒருகட்டத்தில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது தெரியவந்தபோதும் பறித்த உயிரை திரும்ப கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
எனவே, தூக்குத் தண்டனை தேவையில்லை என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் வரவேற்கக்கூடியதாக இருக்கிறது.
படத்தின் மொத்த நீளமே ஒன்றரை மணி நேரம்தான். இந்த கதைக்கு இந்த நேரம் போதுமானது என்பதை புரிந்து படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் செந்தில்குமார். அவருக்கு பாராட்டுக்கள்.
படத்தின் நாயகனான சாந்தனு பாக்யராஜுக்கு இப்படம் கண்டிப்பாக திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஒவ்வொருவரின் கேள்விகளும் பதில் சொல்லும் தோரணையில் வித்தியாசமான முகபாவனைகளை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
கவுண்டமணியின் கவுண்டர் வசனங்கள் பெரிதாக இல்லாவிட்டாலும், இவரின் அறிமுகமே படத்தில் ரசிகர்களிடம் பெரிய கைதட்டலை பெற்றுவிடுகிறது. தியாகராஜன் உண்மை கிடையாதா? நீதி கிடையாதா? என உரக்கப் பேசும் வசனங்கள் செயற்கையாக தெரிகிறது. மற்றபடி, ராம்கி, முக்தா பானு, மனோஜ் கே.பாரதி, பிரசாத், நமோ நாராயணா, வெங்கட், ரோஸ், அங்கிதா உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக நடித்து படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.
ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இப்படத்தின் பின்னணி இசைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ராசாமதியின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்புக்கு துணை நின்றிருக்கிறது.
மொத்தத்தில் ‘வாய்மை’ வெல்லும்.

சரித்திர கால பின்னணியில் உருவாகி, வெளிவந்திருக்கும் ‘தகடு’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
மன்னராட்சி காலத்தில் வறட்சியின் காரணமாக பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு நாட்டின் அரசரின் கையில் ஒரு தகடு இருக்கிறது. அந்த தகட்டில் பொன், வைடூரியங்கள் நிறைந்த ஒரு புதையல் இருக்கும் இடத்திற்கான வழி இருக்கிறது. அந்த புதையலை தேடிக் கண்டுபிடித்து நாட்டில் நிலவும் பஞ்சத்தை போக்க நினைக்கிறார். அப்போது, நயவஞ்சகனான மந்திரி ராஜ்கபூர், அந்த தகட்டை கைப்பற்ற நினைக்கிறார்.
இதற்காக நாட்டின் மன்னன், இளவரசி ஆகியோரை கொல்லும் மந்திரி, அந்த தகட்டை தேடும்போது அது தளபதியின் கையில் கிடைக்கிறது. அவரிடம் சண்டையிட்டு தகட்டை கைப்பற்ற முயற்சிக்கும்போது, தளபதியும், மந்திரியும் இறந்து போகிறார்கள். இதனால், தகடு யார் கைக்கும் கிடைக்காமல் அங்கேயே புதைந்து போகிறது.
பல நூற்றாண்டுகள் கழித்து இந்த கதை அப்படியே கல்லூரியில் பாடமாக சொல்லப்படுகிறது. இதை அறியும் நாயகன் அஜய், நாயகி ஹசிகா தத் மற்றும் அவரது நண்பர்கள் நாலு பேர் சேர்ந்து, தகடு தொலைந்ததாக கூறப்படும் காட்டுப்பகுதிக்கு சென்று அந்த தகட்டை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகின்றனர். அங்கு போனபிறகு இவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்படுகிறது.
அந்த பிரச்சினையை சமாளித்து அந்த தகட்டை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் அஜய், நாயகி ஹசிகா தத் என படத்தில் முக்கால் வாசி நடிகர்கள் புதுமுகம் என்பதால் படத்தில் உள்ளவர்களிடம் பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், தங்களது திறமைக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மன்னராட்சி காலத்தில் நடக்கும் கதையில் மட்டுமே அனுபவம் வாய்ந்த நடிகரான ராஜ்கபூர், பல படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி ஆகியோர் தெரிந்த முகங்கள். ராஜ்கபூர் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். சனம் ஷெட்டியும் தனது பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மன்னர் காலத்து சம்பவத்தை நவீன காலத்தோடு இணைத்து படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் தங்கதுரை. ஒரு மணி நேரத்திற்குள் சொல்லிவிடக்கூடிய கதையை, நீளத்திற்காக தேவையில்லாத காட்சிகளை அமைத்திருப்பது படத்திற்கு தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது.
சார்லஸ் மெல்வினின் பின்னணி இசை பரவாயில்லை. மன்னராட்சி காலத்திற்கும், நவீன காலத்திற்கும் மாற்று ஒளியமைப்பு வைத்து தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திகேயன்.
மொத்தத்தில் ‘தகடு’ பழசு.

ஜாக்கிசான் நடிப்பில் சீனாவில் ஸ்கிப் டிரேஸ் என்ற பெயரில் வெளிவந்த படம் தமிழில் இரு கில்லாடிகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
போலீஸ் அதிகாரிகளான ஜாக்கிசானும், எரிக்கும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து மிகப்பெரிய மனிதன் போர்வையில் நிறைய அக்கிரமங்களை செய்துவரும் சௌவின் குற்றங்களை நிரூபித்து அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க நினைக்கின்றனர். ஆனால், இதில் துரதிருஷ்டவசமாக எரிக் இறந்து போகிறார். எரிக் இறப்பதற்கு முன் அவரது மகளான பிங்பிங் பேனை பார்த்துக் கொள்ளும்படி ஜாக்கியிடம் சொல்லிவிட்டு இறக்கிறார். அதன்படி, ஜாக்கியும் பிங்பிங்கை தன்கூடவே வைத்து பார்த்துக் கொள்கிறார்.
9 வருடங்கள் கழிந்த நிலையில், சௌவின் குற்றங்களை ஜாக்கியால் நிரூபிக்க முடியாமலேயே போகிறது. அவரது உயரதிகாரியிடம் சௌ ஒரு குற்றவாளி என பலமுறை எடுத்துச்சொல்லும் ஜாக்கியின் பேச்சை அவர்கள் கேட்பதே இல்லை. இந்நிலையில், சௌ குற்றவாளி என்பதை நிரூபிக்க நினைக்கும் ஜாக்கிக்கு உதவி செய்வதற்காக சௌ நடத்தி வரும் கேசினோ கிளப்பில் வேலைக்கு சேருகிறாள் பிங்பிங்.
அங்கு கேசினோ விளையாட வரும் ஜானியை பார்க்கும் பிங்பிங், அவன் அந்த விளையாட்டில் அதிகம் வெற்றி பெறுவதை கண்டு வியக்கிறாள். அவனுடன் நெருங்கி பழகுகிறாள். அப்போது ஜானியை தேடி ரஷ்யாவில் இருந்து வரும் ஒரு கும்பல், அவன் இருக்கும் கேசினோவுக்குள் புகுந்துவிடுகிறது. அப்போது அங்கிருந்து தப்பிக்க நினைக்கும் ஜானி, தவறுதலாக சௌ இருக்கும் அறைக்குள் சென்றுவிடுகிறான். அப்போது, அங்கு ஒரு பெண் சௌவால் சுடப்பட்டு இறக்கிறாள். இதைப் பார்த்ததும் அங்கிருந்து வெளியேறும் ஜானியை, ரஷ்ய கும்பல் பிடித்து ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்கிறது.
இந்நிலையில், ஜானி, சௌடமிருந்து விலையுயர்ந்த பொருளை திருடிவிட்டதாக அவனிடம் நெருங்கி பழகிய பிங்பிங்கை மிரட்டி, அவனை அழைத்து வரச் சொல்கிறான். பிங்பிங் இதற்கு ஜாக்கிசானின் உதவியை நாடுகிறாள். ஜாக்கிசான் ஜானியை தேடி ரஷ்யாவுக்கு செல்கிறார்.
அங்கு சென்று அவனைத் தேடிக் கண்டுபிடித்து சௌவிடம் ஒப்படைத்து பிங்பிங்கை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
ஜாக்கிசானுக்கு வயதாகிவிட்டதே தவிர, அவரது திறமைக்கும், சுறுசுறுப்புக்கும் இன்னும் வயது ஆகவில்லை. அந்த அளவுக்கு மனிதர் படம் முழுக்க ரொம்பவும் சுறுசுறுப்பாக வருகிறார். இந்த வயதிலும் இந்தளவுக்கு ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கமுடியுமா என்று வியக்க வைத்திருக்கிறார்.
ஜானி நாக்ஸ்வெல்லி படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார். பிங்பிங்கிற்கு அதிகமான காட்சிகள் இல்லாவிட்டாலும் அவரது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் வின்ஸ்டன் சௌ நம்ம ஊர் ‘கபாலி’ படத்தில் வில்லனாக நடித்தவர். கபாலி படத்தில் வலம்வந்த அமைதியான வில்லனைப்போல் இந்த படத்திலும் அமைதியான வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார்.
முதல் 20 நிமிடங்கள் படம் நகர்வதே தெரியாமல் விறுவிறுப்பாக செல்கிறது. படத்தின் முடிவு என்னவென்று கணித்துவிடும்படி இருப்பதால், அதை நோக்கி நகரும் காட்சிகள் நீண்டுகொண்டே இருப்பது படத்திற்கு கொஞ்சம் தொய்வை கொடுத்திருக்கிறது. இருப்பினும், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி ரென்னி ஹார்லின் காட்சிகளை அமைந்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் ‘இரண்டு கில்லாடிகள்’ கில்லாடிகள்தான்.

விதார்த் நடிப்பில் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் படைப்பில் வெளியாகியிருக்கும் திரில் கலந்த கிரைம் படமான ‘குற்றமே தண்டனை’ எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காமல் போனாலும் மனசாட்சிப்படி தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்திருக்கும் படம் குற்றமே தண்டனை.
வங்கிக் கடன்களை வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தில் நாயகன் விதார்த், நாயகி பூஜா தேவாரியா இருவரும் வேலை பார்க்கிறார்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விதார்த், எதிர்வீட்டில் குடியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டைக் கடந்து செல்லும்போதெல்லாம் உன்னிப்பாக கவனித்தபடி செல்கிறார்.
இந்நிலையில், பார்வைக் கோளாறால் அவதிப்படும் விதார்த், இதற்காக ஒரு டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்கிறார். அவர், கண் மாற்று ஆபரேசன் செய்ய வேண்டும் என்றும் இதற்கு 3 லட்சத்து 20 ஆயிரம் செலவாகும் என்றும் கூறுகிறார். பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கையில், எதிர்வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா கொலை செய்யப்படுகிறார்.
ஏற்கனவே அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ரகுமான் வீட்டில் இருக்கிறார். விதார்த் சென்று கதவைத் தட்டி விசாரித்தபோது ஐஸ்வர்யா இறந்தது தெரியவருகிறது. விதார்த்தைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ரகுமான், தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும்படி கூறுகிறார். விதார்த்தும் உதவி செய்வதாக கூறிவிட்டு செல்கிறார்.
போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், ரகுமானை தனியாக சந்தித்த விதார்த், தன்னுடைய கண் ஆபரேசனுக்கு பணம் கேட்கிறார். அவரும் கேட்ட பணத்தை கொடுக்கிறார். இதுதான் சமயம் என்று மருத்துவமனை நிர்வாகம் மேலும் பணம் கேட்கிறது. அதன்பின்னர் ரகுமான் மற்றும் ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்துபோகும் மற்றொரு வாலிபர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக பணம் வாங்குகிறார்.
இப்படி லட்சக்கணக்கில் பணத்தை கறந்த விதார்த்துக்கு கண்பார்வை கிடைத்ததா? ஐஸ்வர்யா ராஜேஷ் கொலையில் விதார்த் மூக்கை நுழைக்க என்ன காரணம்? கொலையாளி யார்? என்பதே மீதிக் கதை.
நாயகன் விதார்த்திற்கு யதார்த்தமான கதாபாத்திரம். பார்வைக் கோளாறை சரிசெய்வதற்காக எடுக்கும் முயற்சி, சுயநலத்திற்காக மனசாட்சியை மீறி இரண்டு பேரை பலிகடாவாக்கி அடுத்தடுத்து செய்யும் குற்றங்கள் என அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். படம் முழுக்க அவரது கேரக்டர் பேசுகிறது.
நடுத்தர குடும்பத்து பெண்ணாக வரும் நாயகி பூஜாவுக்கு ஆடம்பரம் இல்லாத கதாபாத்திரம், சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு அழுத்தமான கதாபாத்திரம் ஐஸ்வரியா ராஜேஷ். இடைவேளைக்குப் பிறகே அவருக்கு டயலாக் வருகிறது. மாறுபட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்.
பிரச்சனையில் சிக்கி வெளியே வருவதற்காக பணத்தை தண்ணியாக செலவு செய்யும் தொழிலதிபராக வரும் ரகுமான், விதார்த்துக்கு பக்கபலமான கேரக்டரில் வரும் நாசர், குரு சோமசுந்தரம் ஆகியோரின் நடிப்பும் கதையை தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது.
‘காக்கா முட்டை’ படத்தில் இருந்து சற்று மாறுபட்டு, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் திரில் கலந்த கிரைம் படத்தை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் மணிகண்டன். ஒளிப்பதிவிலும் அவரது கைவண்ணம் பளிச்சிடுகிறது. பாடல்கள் இல்லாவிட்டாலும் இளையராஜாவின் பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘குற்றமே தண்டனை’ மனசாட்சி!

சசிகுமார்-நிகிலா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘கிடாரி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
சாத்தூரில் ஆட்டுத் தொட்டி நடத்தி வரும் வேலராமமூர்த்தி, அந்த ஊரிலேயே பெரிய செல்வாக்குடன் திகழ்கிறார். ஆனால், ஊரை சுற்றிலும் பகை. அதனால், அவருக்கு பாதுகாப்பாக எப்பவும் கூடவே இருக்கிறார் சசிகுமார்.
அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மச்சானான ஓஏகே சுந்தர் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இதை அறியும் சசிகுமார், ஓ.ஏ.கே.சுந்தரின் தொழிலுக்குள் மூக்கை நுழைக்கிறார். இதனால், ஓஏகே சுந்தருக்கும், சசிகுமாருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. சசிகுமாரை தீர்த்துக்கட்ட ஓ.ஏ.கே.சுந்தர் முடிவெடுக்கிறார்.
இதற்கிடையில், வேலராமமூர்த்தியை மர்ம நபர்கள் யாரோ கத்தியால் குத்திவிடுகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரை யார் குத்தினார்கள் என்பதை கண்டுபிடிக்க சசிகுமார் களமிறங்குகிறார். இறுதியில், சசிகுமார் தனது முயற்சியில் வென்றாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
கிடாரி கதாபாத்திரத்திற்கு சசிகுமார் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கிராமத்து கதைகளில் நடிக்க சசிகுமாருக்கு சொல்லித்தர தேவையில்லை. அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருப்பது சிறப்பு. காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும்.
நிகிலா விமல் பார்க்க அழகாக இருக்கிறார். ஏற்கெனவே, ‘வெற்றிவேல்’ படத்தில் கிராமத்து தேவதையாக வலம்வந்தவர், இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாக இருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டுமே வந்து போவதால் இவருக்கு படத்தில் அதிகம் வேலை இல்லை.
கொம்பையா பாண்டியனாக வரும் வேலராமமூர்த்தி படத்தின் கதையை தாங்கி நிற்கிறார். தனக்கே உரித்தான நடிப்பில் அசத்தியிருக்கிறார். சட்டையை கழட்டி போட்டுவிட்டு வீரத்துடன் நடந்து வரும் காட்சிகளில் பிரம்மிக்க வைக்கிறார். இவருடைய வசனங்கள் தென்மாவட்ட மண்வாசனையை கொடுத்திருக்கிறது.
ஓ.ஏ.கே.சுந்தரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கிளியாக நடித்திருப்பவர் பேசும் வசனங்கள் நகைச்சுவையாக ரசிக்க வைக்கிறது. சுஜா வருணிக்கு இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரம். தனது கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.
மற்றபடி, அனைத்து கதாபாத்திரங்களையும் கதைக்கு ஏற்றாற்போல் தேர்வு செய்து சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் முருகேசன். படம் முழுக்க வன்முறை இருந்தாலும் ஆங்காங்கே காதல் காட்சிகளையும், காமெடிகளையும் வைத்து அனைத்து தரப்பினரையும் ரசிக்கும்படி செய்திருக்கிறார். காதல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம். முதல் பாதியில் கதை எதைநோக்கி பயணிக்கிறது என்று கணிக்க முடியவில்லை. இருப்பினும், இரண்டாம் பாதி படத்தை காப்பாற்றியிருக்கிறது.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை பளிச்சிட்டு காட்டியிருக்கிறது. தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘கிடாரி’ கட்டுக்கடங்காதவன்.

ஒருவீட்டுக்குள் திருட செல்லும் மூன்று பேர் அங்கு எந்தமாதிரியான பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து திரில்லிங்காக வெளிவந்துள்ள ‘மிரட்டும் இருட்டு’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
திருடுவதையே தொழிலாக கொண்ட டேனியல், டைலன், ஜானே லெவி மூன்று பேரும் ஒருநாள் ஆள் நடமாட்டமில்லாத ஒரு ஏரியாவில் தங்கியிருக்கும் கண் தெரியாதவரின் வீட்டில் திருடச் செல்கிறார்கள். அந்த வீட்டுக்குள் நுழையும் அவர்கள் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு அந்த வீட்டுக்குள் என்ன நடந்தது? அவர்களை மிரட்டும் சக்தி எது? அவர்கள் திட்டமிட்டபடி கொள்ளையடித்து திரும்பினார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
கண் தெரியாதவராக நடித்திருக்கும் ஸ்டீபன் லாங் தான் இப்படத்தின் மிகப்பெரிய பலமே. அவருடைய முரட்டுத்தனமான உடம்பு, மிரட்டும் கண் என பார்ப்பவர்களை ரொம்பவுமே பயமுறுத்துகிறார். கண் தெரியாதவராக இருந்தாலும், அந்த வீட்டுக்குள் ஒவ்வொரு இடத்தையும் அவ்வளவு வேகத்தில் கடக்கும்போது நம்மையே வியக்க வைக்கிறார். கடைசி காட்சிகளில் அவரது நியாயமான கோரிக்கை நம்மையும் கண்கலங்க வைக்கிறது.
படத்தில் இவர் ஒருபக்கம் மிரட்டியிருக்கும் பட்சத்தில், மறுபக்கம் இவர் வளர்க்கும் முரட்டுத்தனமான நாயும் நம்மையும் மிரட்டுகிறது. நண்பர்களாக வரும் டேனியல், டைலன், ஜானே லெவி மூன்றுபேரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தின் கதை முழுக்க ஒரே வீட்டுக்குள் நடந்தாலும், காட்சிக்கு காட்சி திகில் வைத்து பார்ப்பவர்களை மிரள வைத்திருக்கிறார் இயக்குனர் பீடே ஆல்வரிஷ். கண் தெரியாத ஒருவரின் நடவடிக்கைகளை இவ்வளவு அழகாகவும், மிரட்டும் விதமாக செய்திருப்பது சிறப்பு. அந்த வீட்டுக்குள் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அழகாக யோசனை செய்து அற்புதமாக படமாக்கியிருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கும், அடுத்தது என்ன நடக்கும் என்பதுபோன்ற திகில் காட்சிகளே படத்தில் அதிகம். திரில்லரை எதிர்பார்த்து செல்கிறவர்களுக்கு இப்படம் கண்டிப்பாக புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது மட்டும் உறுதி. படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ரோக் பனோசின் பின்னணி இசை. காட்சியின் தேவைக்கேற்றபடி பின்னணி இசையை கொடுத்து, அசத்தலான திரில்லிங்கை கொடுத்திருக்கிறார்.
பெட்ரோ லூக்கின் ஒளிப்பதிவில் வீட்டுக்குள் வேகமாக நகரும் காட்சிகள் எல்லாம் கதையோட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மிரட்டும் இருட்டு’ மிரட்டல்.

பொன்னு பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஸ்டான்லி ஜோஸ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘அந்த குயில் நீதானா’. சாகர், கீர்த்தி கிருஷ்ணா நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
குற்றாலத்தில் டூரிஸ்ட் கைடாக வேலை பார்த்து வருகிறார் நாயகன் சாகர். இவருடைய மாமன் மகளான நாயகி கீர்த்தி கிருஷ்ணா இவர் மீது உயிராக இருக்கிறாள். திருமணம் செய்தால் இவரைத்தான் திருமணம் செய்வேன் என்ற உறுதியுடன் இருக்கிறாள். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து ஆராய்ச்சி செய்ய வருபவரின் மனைவி, நாயகன் மீது ஆசை கொள்கிறாள்.
நாயகனும் அவளிடம் மயங்கி, அவளே கதியென்று கிடக்கிறான். மறுமுனையில், நாயகனை நினைத்து உருகிப் போய் கிடக்கிறாள் நாயகி கீர்த்தி, ஒருகட்டத்தில் ஆராய்ச்சியாளரின் மனைவி நாயகனிடம் வெறுப்புடன் நடந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.
இதன்பிறகு, நாயகன் நிலைப்பாடு என்ன? மாமன் மகளோடு சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் சாகர் டூரிஸ்ட் கைடாக இருப்பதால் இவருடைய உடை ரொம்பவும் ஆடம்பரமாக இருக்கிறது. புதுமுகம் என்பதால் இவருடைய நடிப்பில் பெரிதாக எதிர்பார்க்க முடியவில்லை. அதேபோல், நாயகி கீர்த்தி கிருஷ்ணா பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கிறார். பாவடை தாவணியில் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார் என்றாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் தேற வேண்டும்.
ஆராய்ச்சியாளர் என்றாலே பிரெஞ்சு தாடி, கோட் சூட் என வழக்கமான பாணியையே இந்த படத்திலும் கடைப்பிடித்திருப்பது சினிமாத்தனத்தை காட்டுகிறது. ஆராய்ச்சியாளரின் மனைவியாக வரும் ஸ்ரேயா ஜோஸ் மாடர்ன் உடையில் கலக்கியிருக்கிறார். நடிப்பில் பெரிதாக ஒன்றும் இல்லை.
மற்றபடி, படத்தில் எந்தவொரு கதாபாத்திரங்களும் சொல்லும்படியாக எதுவும் செய்யவில்லை என்பதுதான் படத்தின் பெரிய குறை. இயக்குனர் ஸ்டான்லி ஜோஷ் கிராமத்து பின்னணியில் ஒரு மாறுபட்ட காதல் கதையை சொல்ல வந்திருக்கிறார். ஆனால், எந்தவொரு காட்சியையும் ரசிக்கும்படியாக எடுக்காதது படத்திற்கு பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. அதேபோல், கதாபாத்திரங்கள் தேர்வும் சரியில்லை.
ரஞ்சித் ரவியின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு வலு சேர்க்கவில்லை. சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தெளிவான காட்சியமைப்புகள் இருந்திருந்தால் ரசித்திருக்கலாம். கிருஷ்ண பிரசாத் துவாரகா இசையில் பாடல்கள் எதுவும் ரசிக்கும் வகையில் இல்லை. பின்னணி இசையும் எடுபடவில்லை.
மொத்தத்தில் ‘அந்த குயில் நீதானா’ குரல் ஒலிக்கவில்லை.

ராம்கோபால்வர்மா இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்த ‘ஐஸ்கிரீம்’ படம் தமிழில் ‘சாக்கோபார்’ என்ற பெயரில் வந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
கல்லூரி மாணவியான தேஜஸ்வினியின் பெற்றோர் ஒரு கல்யாணத்திற்காக வெளியூர் செல்கிறார்கள். மிகப்பெரிய வீட்டில் தேஜஸ்வினி தனியாக இருப்பதை அறிந்த அவளுடைய காதலன் நவ்தீப், அவளைப் பார்க்க அந்த வீட்டிற்கு வருகிறான். அங்கு இருக்கும் தவளை மாதிரியான ஒரு பொம்மையை பார்க்கும் நவ்தீப், அது என்னவென்று தேஜஸ்வினியிடம் கேட்கிறான்.
அதற்கு அவள், அந்த வீட்டை கட்டியவர்கள் செண்டிமென்டுக்காக அதை வைத்திருப்பதாக கூறுகிறாள். இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் நவ்தீப், அந்த பொம்மையை தனது காலால் எட்டி உதைக்கிறான். இதன்பின்னர், அங்கு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வெளியே கிளம்புகிறான். பின்னர், அந்த வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது.
பியானா வாசிக்கும் சத்தம், 10 நிமிடத்திற்கு ஒருமுறை வீட்டு கதவை தட்டும் சத்தம், பாத்ரூமில் பேய்களின் அலறல், குழாயில் தண்ணீர் விடாமல் சொட்டுவது என தொடர்ந்து நடப்பது ஹீரோயினை ரொம்பவும் பயமுறுத்துகிறது. இதனால், துணைக்கு தனது காதலன் நவ்தீப்பை வரவழைக்கிறாள்.
அவன் வந்ததும் நாயகி சொல்வது எதையும் நம்பவில்லை. இருந்தாலும், முதலில் தண்ணீர் சொட்டும் குழாயை சரிசெய்ய பிளம்பரை வரவழைக்கிறான். பிளம்பர் ஒரு மந்திரவாதியைப் போல இருக்கவே, தேஜஸ்வினி மேலும் பயப்படுகிறாள். மேலும், அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியும், அவளது தம்பியும் சேர்ந்துகொண்டு காட்சிக்கு காட்சி இவர்களை பயமுறுத்துகிறார்கள்.
உண்மையில் அந்த வீட்டில் என்ன நடக்கிறது? பயமுறுத்துபவர்கள் யார்? அந்த தவளை பொம்மைக்கும், அமானுஷ்ய விஷயங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகன் நவ்தீப், நாயகி தேஜஸ்வினி உள்ளிட்ட மொத்த 6 பேர் தான் மொத்த கதாபாத்திரங்கள். இதில் நவ்தீப் சிறப்பாக நடித்திருக்கிறார். தேஜஸ்வினி படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். படம் முழுக்க கவர்ச்சி ஆடையிலேயே வலம்வந்து ரசிகர்களை சுண்டியிழுத்திருக்கிறார். அவருடைய பயம் நம்மையும் சேர்த்து பயமுறுத்துகிறது.
வேலைக்காரியாக வருபவரின் பார்வையே மிரட்டலாக இருக்கிறது. பேய் கிழவியின் மேக்கப்பும் அபாரமாக இருக்கிறது. பிளம்பரமாக வருபவரின் ஆக்ஷன் காட்சிகளும் மிரட்டியிருக்கிறது.
ஐதராபாத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கதையாக வைத்து உருவாகியிருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. காட்சிக்கு காட்சி மிரட்டலாக இருக்கிறது. பிளோ கேம் என்னும் புதுவிதமான கேமரா மூலம் மொத்த படத்தையும் பதிவாக்கியிருக்கிறார். அதேபோல், மிகக்குறைந்த பட்ஜெட்டிலும் தரமான படத்தை கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்திருக்கிறார்.
பிரத்யோதனின் இசையும், பிரதாப் குமார் சங்காவின் படத்தொகுப்பும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மிரட்டல் காட்சிகளில் வரும் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ஆஞ்சியின் ஒளிப்பதிவு படத்திற்கு முதுகெலும்பாய் இருக்கிறது.
மொத்தத்தில் ‘சாக்கோபார்’ மிரட்டலான ருசி.

ஜேசன் ஸ்டாதம், ஜெசிகா ஆல்பா நடிப்பில் வெளிவந்துள்ள ‘மெக்கானிக்-2’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
மெக்கானிக் முதல்பாதியில் ஜேசன் பணத்துக்காக கொலைகள் செய்வதை தொழிலாக செய்து வருகிறார். அதையே, இந்த பாகத்திலும் தொடர்கிறார். இந்த பாகத்தில் வில்லனான சாம் மூலமாக ஜேசனுக்கு மூன்று பேரை கொல்ல வேண்டும் என்று ஒரு வேலை வருகிறது. ஆனால், ஜேசனோ இந்த கொலைகளை செய்ய மறுக்கிறார். அவன் அந்த கொலையை செய்யாவிட்டால், ஜேசனை கொன்றுவிடுவதாக சாமின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்.
இதனால், ஜேசன் அவர்களை அடித்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து, தீவில் தஞ்சம் புகுகிறார். அந்த தீவில் ஜெசிகா ஆல்பாவை சந்திக்கும் ஜேசன், அவள் சாம் மூலமாக தன்னை நோட்டமிட வந்தவள் என்பதை தெரிந்து கொள்கிறார். அவளிடம் சென்று விசாரிக்கையில் அவளும் அதை ஒத்துக் கொள்கிறார்.
இருப்பினும், இருவரும் காதல்வயப்பட்டு, நெருக்கமாகிறார்கள். இந்நிலையில், சாம், ஜெசிகா ஆல்பாவை தனது ஆட்களை வைத்து கடத்தி விடுகிறார். தான் சொன்ன மூன்று கொலைகளை ஜேசன் செய்தால் அவளை விட்டுவிடுவதாக கூறுகிறார்.
இறுதியில், ஜேசன், சாம் சொன்ன அந்த மூன்று கொலைகளையும் செய்து தனது காதலியை மீட்டாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
மெக்கானிக் படங்களில் ஒரு கொலையை எப்படி திட்டமிட்டு செய்கிறார்கள் என்பதில்தான் சுவாரஸ்யமே. அந்த சுவாரஸ்யத்தை இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார்கள். ஜேசன் கொலைகளை செய்ய திட்டம் போடும் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. அதேபோல், வித்தியாசமான ஆயுதங்களை அவர் பயன்படுத்தும் முறைகள் எல்லாம் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. இவருடைய நடிப்பில் எதுவும் குறை சொல்ல முடியாது என்பதுபோல் இருக்கிறது.
ஜெசிகா ஆல்பா பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக இருக்கிறார். இவருக்கும் ஜேசனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இல்லை. என்னதான் கதை சிம்பிளாக இருந்தாலும், ஜேசனின் ஆக்ஷன் காட்சிகள் படத்தை ரொம்பவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறது. இறுதியில் டாமி லீ ஜோன்ஸ் வரும் காட்சிகளும் சிறப்பாக இருக்கின்றன.
மொத்தத்தில் ‘மெக்கானிக் 2’ அதிரடி.

கவுண்டமணி, சவுந்தர்ராஜா, ரித்விகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
சென்னையில் நடிகர், நடிகைகளுக்கு கேரவன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார் கவுண்டமணி. கூடவே, பிரச்சினையென்று வரும் காதல் ஜோடிகளுக்கு ரிஸ்க் எடுத்து திருமணமும் செய்து வைக்கிறார். இந்நிலையில், கவுண்டமணி மற்றும் அவரிடம் வேலை பார்க்கும் வேல்முருகன் உள்ளிட்டோர் சேர்ந்து கேரவனில் ஜாலியாக ஒரு டூர் செல்கிறார்கள்.
அதேநேரத்தில், மதுரையில் சமூக சேவகராக இருக்கும் சவுந்தர்ராஜா, அதே ஊரில் உள்ள அரசியல்வாதியின் மகளான ரித்விகாவை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே காதல் ஜோடிகள் மதுரையில் இருந்து கிளம்பி சென்னைக்கு வருகிறார்கள். அங்கு நண்பர் மூலமாக இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசியல்வாதி தனது மகளை மீட்பதற்காக, ரவுடிகளை நியமிக்கிறார்கள். ரித்விகா சென்னையில் இருப்பதை அறிந்து அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் காதல் ஜோடிகளை பார்க்கும் ரவுடி கும்பல் அவர்களை துரத்துகிறது. இந்த நேரத்தில் கவுண்டமணியின் கண்ணில் சவுந்தர்ராஜா-ரித்விகா ஜோடி படவே, அவர்களை ரவுடி கும்பலிடம் இருந்து காப்பாற்றி, அவர்களது காதலை சேர்த்துவைப்பதாக கூறி தனது கேரவனில் மதுரைக்கு அழைத்து செல்கிறார்.
மதுரைக்கு சென்ற அவர் சவுந்தர்ராஜா-ரித்விகா ஜோடியை சேர்ந்து வைத்தாரா? அல்லது அரசியல்வாதியின் பகைக்கு ஆளானாரா? என்பதே மீதிக்கதை.
கவுண்டமணி தனது கவுண்டர் வசனங்களால் படம் முழுக்க அனைவரையும் கலாய்த்திருக்கிறார். ‘விஷால் நடிக்கும் படமா, பின்னி மில்லுக்கு கேரவனை அனுப்பு’, ‘கவுதம் மேனன் இயக்கும் படமாக ஈசிஆர் ரோட்டில் உள்ள காபி ஷாப்புக்கு அனுப்பு’ என்று தமிழ் சினிமாவில் உள்ள விஷங்களை மட்டுமில்லாது, அரசியலில் உள்ள கேலிக்கூத்துக்களையும், மக்களின் மூட நம்பிக்கைகளையும் தனது பாணியில் கிண்டலடித்து படம் முழுக்க சிரிக்க வைத்திருக்கிறார். ரஜினிக்கு வயதானாலும் அவரோட ஸ்டைல் இன்னமும் எப்படி மாறவில்லையோ, அதேமாதிரி, கவுண்டமணிக்கு வயதானலும், இவரோட கவுண்டர் வசனங்களுக்கு இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது என்பதை இப்படத்தில் மறுபடியும் நிரூபித்திருக்கிறார்.
இதுவரையிலான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த சவுந்தர்ராஜன், இப்படத்தில் சமூக சேவகராக வருகிறார். காதல் காட்சிகளிலும், சென்டிமெண்ட் காட்சிகளிலும் இன்னும் கொஞ்சம் நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கோபப்படும் காட்சிகளில் இவருடைய நடிப்பு சூப்பர்.
கவுண்டமணியின் மனைவியாக வரும் சனா, கணவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து நடுங்கும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார். ரித்விகா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அரசியல்வாதியாக வரும் ரமேஷ், அவரின் அன்பு தம்பியாக வரும் வளவன், கவுண்டமணியிடம் வேலை பார்க்கும் பாடகர் வேல்முருகன் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தில் எந்தவொரு லாஜிக் விஷயங்களையும் பார்க்காமல் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என்று எண்ணி படத்தை எடுத்திருக்கிறார் கணபதி பாலமுருகன். கவுண்டமணி வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பை கொடுத்திருக்கிறது. இருந்தாலும், இடைவிடாமல், தொடர்ந்து அவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் சில இடத்தில் சலிப்பைத்தான் கொடுக்கிறது. சவுந்தர்ராஜா-ரித்விகா காதல் காட்சிகளும் படத்திற்கு தொய்வை கொடுத்திருக்கின்றன.
அதேபோல், கண்ணனின் ஒளிப்பதிவும், அருணகிரியின் இசையும் படத்திற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
மொத்தத்தில் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ ஒருமுறை பார்க்கலாம்.