என் மலர்
தரவரிசை
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மேற்கு முகப்பேர் கனகதுர்கா’ என்ற பெயரில் பக்தி படம் வெளிவந்துள்ளது. அந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
மேற்கு முகப்பேரில் அமைந்துள்ள கனதுர்கா அம்மன் கோவிலின் பூசாரியாக இருந்து வருகிறார் டெல்லி கணேஷ். இவருடைய மகள் நாயகி திவ்யா நாகேஷ். டெல்லி கணேஷ் தனது தங்கையின் மகனான நாயகன் சரவணனுக்கு, திவ்யா நாகேஷை திருமணம் செய்துகொடுப்பதாக சிறு வயதிலிருந்தே முடிவு செய்து வைத்திருக்கிறார்.
திருமண வயதை நெருங்கியதும், இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அப்போது சரவணனின் ஜாதகத்தை பார்க்கிறார்கள். அதில், சரவணனுக்கு ஜாதகத்தில் பெரிய கண்டம் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால், டெல்லிகணேஷின் தங்கை திவ்யா நாகேஷுக்கு தனது மகனை திருமணம் செய்துகொடுக்க தயங்குகிறார்.
ஆனால், இதில் உடன்பாடு இல்லாத டெல்லிகணேஷ் கனகதுர்கா கோவிலில் இருக்கும் சாமியாரிடம் சென்று கேட்கிறார். அவரோ, இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்றும், திருமணத்திற்கு பிறகு ஒன்று சேராமல் விரதம் இருந்து ஒரு பூஜை செய்யவேண்டும் என்றும் அதன்பிறகு, சரவணனுக்கு ஏற்பட்ட கண்டம் தீர்ந்துவிடும் என்றும் கூறுகிறார். இதனால், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இதற்கிடையில், கனகதுர்கா கோவிலில் சிறுவயதிலிருந்தே சேவை செய்துவரும் மற்றொரு நாயகியான ஜான்விகாவுக்கு டெல்லிகணேஷ் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறுகிறது. ஜான்விகாவை திருமணம் செய்தவருக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அவரை ஒருதலையாக காதலித்தவள் விபத்தில் அடிபட்டு இறக்க, ஆவியாக வந்து இவர்களுடைய வாழ்க்கையில் இடைஞ்சல் கொடுக்கிறாள். அதிலிருந்து விடுபட இவர்களும் கனகதுர்காவை வேண்டுகிறார்கள்.
இந்த மாதிரி இரண்டு ஜோடிகளும் ஒவ்வொரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ள, இதிலிருந்து இவர்களை கனகதுர்கா எப்படி காப்பாற்றினாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் சரவணன், திவ்யா நாகேஷ், ஜான்விகா மற்றும் அவரை திருமணம் செய்துகொள்பவர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக திவ்யா நாகேஷும், ஜான்விகாவும் கனகதுர்காவிடம் மனமுறுகி வேண்டும் காட்சிகள் எல்லாம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடிய டெல்லி கணேஷ், பூசாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவரது நடிப்பும் பலே சொல்ல வைக்கிறது.
டி.பி.கஜேந்திரன் சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் மிளிர்கிறார். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் அழகாக இருக்கிறது. இதுவரை யாரும் சொல்லாத கனகதுர்காவின் மகிமையை இப்படத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சந்திர கண்ணையன். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பக்தி படம் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறது. படத்தில் ஆங்காங்கே பக்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்தாலும், பெரும்பாலும், காதல் மற்றும் கணவன்-மனைவிக்குள் இருக்கும் உறவுகளையே இயக்குனர் மையப்படுத்தி எடுத்திருக்கிறார்.
இருப்பினும், நீண்ட இடைவெளிக்கு எந்தவொரு காட்சியிலும் ஆபாசம் இல்லாத ஒரு படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு இப்படியொரு படம் பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இருந்தாலும் இயக்குனரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.
தேவனேசன் சொக்கலிங்கம் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி கதைக்கு ஏற்றார்போல் அமைந்திருப்பது சிறப்பு. உதயசங்கரின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘மேற்கு முகப்பேர் கனகதுர்கா’ பக்தி மணம்.

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு ‘எம்.எஸ்.தோனி’ என்ற பெயரில் படமாக வெளிவந்திருக்கிறது. அந்த படம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் புகழை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர் கேப்டன் எம்.எஸ்.தோனி. அவருடைய தலைமையில் இந்திய அணி பல்வேறு சர்வதேச கோப்பைகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. அப்படிப்பட்ட தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படமே ‘எம்.எஸ்.தோனி’.
இப்படத்தில் தோனி எங்கு பிறந்தார்? எப்படி வளர்ந்தார்? எப்படி கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்? என்பது முதல் தொடங்கி, அவர் இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்ததோடு படம் முடிகிறது. படத்தில் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. தோனியின் வாழ்க்கை வரலாறு பெரும்பாலோனருக்கு தெரிந்த விஷயம்தான். என்றாலும், இந்த படத்தில் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அழகாக படமாக்கி அவரைப் பற்றி தெரிந்தவர்கள்கூட ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கியிருக்கிறார்.
படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புட் பாராட்டப்பட வேண்டியவர். இவர் செய்கிற ஒவ்வொரு செய்கையும் தோனியை ஒத்துப்போவது ஆச்சர்யமளிக்கிறது. குறிப்பாக கிரிக்கெட்டில் தோனியின் ஸ்பெஷல் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட், அவருடைய நடை என அச்சு அசலாக செய்து அசத்தியிருக்கிறார். இதற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை.
இவர் படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட தோனியாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது இவருடைய நடிப்பு. அதேபோல், செண்டிமென்ட் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கண்கலங்க வைத்திருக்கிறார். விளையாட்டு தொடர்பான காட்சிகளில், தோனி விளையாடும் அசல் காட்சிகளில் அவருடைய முகத்தில் கதாநாயகன் ராஜ்புத் முகத்தை ஒட்டி மார்பிங் செய்திருப்பது சிறப்பு. கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அந்த காட்சிகள் அமைந்துள்ளன.
படத்தின் நீளம் 3 மணி நேரத்துக்கும் மேலாக இருந்தாலும், படம் போரடிக்காதவாறு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. படத்தில் எந்தவொரு காட்சியையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இயக்குனரின் கைவண்ணம் கச்சிதமாக அமைந்திருக்கிறது. இதுதவிர தோனியின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக இருக்கும் தோனியால் இப்படியும் காதல் செய்யமுடியுமா? என்று ஆச்சர்யப்பட வைக்கிறது அந்த காதல் காட்சிகள்.
மேலும், படத்தில் தோனியின் அக்காவாக பூமிகா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு திரையில் அவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரம். தனக்குரிய கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். தோனியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுபம் கெர்ரும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அமல் மாலிக்கின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. இந்தியில் இருந்து தமிழுக்கு வரும் பாடல்கள் அவ்வளவாக ரசிக்கும்படி இருக்காது. ஆனால், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருப்பது சிறப்பு. சஞ்சய் சௌத்ரியின் பின்னணி இசையும் பெரிதாக பேசும்படி இருக்கிறது. சந்தோஷ் துண்டியாயில் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் ‘எம்.எஸ்.தோனி’ சதம் அடிப்பார்.

ரிச்சர்ட், நந்தா, இளவரசு ஆகியோர் நடிப்பில் கிரைம் ஸ்டோரியாக வெளிவந்துள்ள ‘கள்ளாட்டம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
ரிச்சர்டும், சரிகாவும் கணவன்-மனைவி. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இவர்களுக்கு ஒரு அழகாக பெண் குழந்தை இருக்கிறது. ஒருநாள் ரிச்சர்டு தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது, வேகமாக பைக் ஓட்டிவந்த இருவர் அந்த குழந்தை மீது மோதிவிட்டு தப்பிச் செல்கின்றனர். ரத்த வெள்ளத்தில் சரியும் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார் ரிச்சர்டு.
அவளது தலையில் அடிபட்டிருப்பதால் உடனடியாக சர்ஜரி செய்யவேண்டும் என்றும், அதற்கு ரூ.20 லட்சம் செலவாகும் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர். குழந்தையின் ஆபரேஷனுக்கு தனது வீட்டு பத்திரம், மனைவியின் நகை அனைத்தையும் சேட்டு கடையில் விற்று பணத்துக்கு ஏற்பாடு செய்கிறார் ரிச்சர்டு. ஆனால், சேட்டோ ரிச்சர்டிடம் பணத்தை கொடுப்பதுபோல் கொடுத்து பின்னாலேயே ஆள் அனுப்பி அந்த பணத்தை களவாடுகிறார்.
இதனால் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்கிறார் ரிச்சர்டு. போலீஸ் அதிகாரியான நந்தாவும், அவருடன் பணிபுரியும் இளவரசுவும் களவு போன பணத்தை எப்படி மீட்பது என்று திட்டம் போடுகிறார்கள். அதேவேளையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், ரிச்சர்டால் பணத்தை தயார் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கொள்ளையடித்ததில் யார், யாருக்கு சம்பந்தம் என்று தோண்டி துருவி விசாரித்து வரும் நந்தாவும் குழந்தையின் ஆபரேஷனுக்கு வேண்டிய பணத்தை தயார் செய்ய முடிவு செய்கிறார்.
ஆபரேஷன் நாள் நெருங்கும் சமயத்தில் நந்தா லஞ்சம் வாங்கியதாக அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இறுதியில், அந்த குழந்தையின் ஆபரேஷனுக்கு வேண்டிய பணம் தயார் ஆனதா? சிறையில் இருந்து நந்தா வெளிவந்தாரா? குழந்தையின் உயிருடன் கள்ளாட்டம் ஆடிய அந்த நபர் யார்? என்பதே மீதிக்கதை.
நந்தா ஏற்கெனவே போலீஸ் அதிகாரியாக நடித்து வெளிவந்த ‘வேலூர் மாவட்டம்’ சரிவர ஓடவில்லை. எனினும், தைரியமாக இந்த படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரிக்குண்டான விறுவிறுப்பு இவரிடம் இல்லாதது பெரிய ஏமாற்றம். படம் முழுக்க ஏதையோ பறிகொடுத்தவர் போலவே வருகிறார். விசாரணை செய்யும் காட்சிகளில்கூட முகபானையில் மாற்றமோ வேகமோ இல்லை.
ரிச்சர்டு நடுத்தர வர்க்க குடும்பஸ்தனாக மனதில் பதிகிறார். குழந்தைக்கு என்னவாகிவிடுமோ என்று பதட்டத்துடன் அலையும் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். அவருடைய மனைவியாக வரும் சரிகாவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே இளவரசுவின் எதார்த்தமான நடிப்புதான். நேர்மையான போலீஸ் அதிகாரியாக நந்தாவுடனேயே வலம்வரும் இவர் பேசும் எதார்த்த வசனங்களால் அந்த கதாபாத்திரத்தை நாம் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.
வில்லனாக வரும் ஏழுமலையும் தனது எதார்த்தமான நடிப்பை பதிவு செய்கிறார். டாக்டராக வரும் குமார் நடராஜன் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவருடைய பொறுமையான நடிப்பு, அவரை டாக்டராக மதிக்க தோன்றுகிறது.
தமிழ் சினிமாவுக்கு அதர பழசான ஒரு கதையையே படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ். கொள்ளை சம்பவம், அதைச்சுற்றி நடக்கும் ஒரு விசாரணை என தமிழ் சினிமாவில் பார்த்து சலித்துப்போன கதைதான். இருப்பினும், ஏதாவது புதுமையாக சொல்ல வந்திருக்கிறார் என்று நினைத்தால் அதுவும் இல்லை. படத்தில் உள்ள நடிகர், நடிகைகளிடம் இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு கிரைம் கதையில் விறுவிறுப்பு இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு.
உமரின் இசையில் பாடல்கள் சூப்பர். ‘ரா ரா ரண்டி’ பாடல் குத்தாட்டம் போடவைக்கிறது. விளையாடு விளையாடு பாடல் அழகான மெலோடியாக மனதில் பதிந்திருக்கிறது. விறுவிறுப்புக்காக பின்னணி இசையில் அதிரடி காட்டியிருக்கிறார். ஆனால், காட்சிகள் அதற்கேற்ப விரியாததால் பெரிதாக எடுபடவில்லை. ரமேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று பலம் கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘கள்ளாட்டம்’ தள்ளாட்டம்.

ரெயில் பயணிக்கும் பயணிகளை தாக்கும் ஓநாய் மனிதர்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும் மனிதர்களை சந்திக்கும் திகில் அனுபவங்களோடு வெளிவந்திருக்கும் ‘ஹவுல்’ படம் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்போம்...
நாயகன் எட் ஸ்பெல்லீர்ஸ் மெட்ரோ ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் அவர் பணியில் இருந்த ரெயில் வனப்பகுதியில் செல்லும்போது, ஒரு மான் ரெயிலில் அடிபட்டு இறக்கிறது. இதனால், ரெயில் நடுக்காட்டில் நிறுத்தப்படுகிறது. என்ஜினுக்குள் மாட்டிக் கொண்ட மானை வெளியே எடுப்பதற்காக டிரைவர் கீழே இறங்குகிறார்.
அப்போது மனித உருவில் ஓநாய் போன்ற ஒரு உருவம் அவரை தாக்கி கொன்று தின்றுவிடுகிறது. ஆனால், இது ரெயில் பயணிகள் யாருக்கும் தெரிவதில்லை. அவர் காணாமல் போய்விட்டதாக அனைவரும் எண்ணுகின்றனர். இந்நிலையில், டிக்கெட் பரிசோதகரான நாயகனிடம் பயணிகள் அனைவரும் தங்களை வெளியே செல்ல அனுமதிக்குமாறு முறையிட, அவரோ அதற்கு மறுக்கிறார்.
இந்நிலையில், அந்த மனித உருவில் இருக்கும் மிருகங்கள் அந்த ரெயிலை தாக்கி உள்ளே உள்ள அனைவரையும் கொன்று தின்ன முயற்சிக்கின்றன. அந்த மிருகங்களிடம் இருந்து பயணிகள் தப்பினார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இப்படத்தின் முக்கால் வாசி கதை ரெயிலிலேயே பயணமாகிறது. ஆரம்பத்தில் காதல், ரொமான்ஸ், பயணிகளின் உரையாடல் என கதை மெதுவாக நகர்கிறது. பிறகு, அந்த மனித உருவில் இருக்கும் ஓநாய்களின் அட்டகாசம் தொடங்கியதும் ரெயிலைப் போல கதையும் வேகமாக பயணிக்கிறது.
ஓநாய்களின் அட்டகாசம் தொடங்கியதும் அடுத்தடுத்து நகரும் ஒவ்வொரு காட்சிகளும் நமக்கு பயத்தையும் திகிலையும் ஏற்படுத்துகின்றன. அதேபோல், அந்த ஓநாய்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும் ஒவ்வொருவரின் பரிதவிப்பும் நம்முடன் ஒட்டிக் கொள்கின்றன. படம் முழுக்க இருட்டிலேயே நகர்வதால், படத்தில் உள்ள கதாபாத்திரங்களை தெளிவாக காணமுடியவில்லை.
பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக இருந்திருக்கிறது. படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஓநாய்களை எதிர்த்து போராடுவது, அவைகளிடம் மாட்டிவிடுவேமா என்று பதைபதைத்துக் கொண்டு இருப்பது என அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘ஹவுல்’ திகில் அனுபவம்.

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒறுத்தல்' படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
நாயகன் செந்தில் ஜெகதீசன் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது அம்மாவுக்கு தனது மகன் சொந்த வீடு கட்டி, திருமணம் செய்துவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்துபோகிறார். தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் நாயகன், முதலில் சொந்த வீடு கட்டுகிறார். பின்னர், தனது நண்பன் மூலமாக அறிமுகமாகும் நாயகி காயத்ரி ஐயரை திருமணம் செய்து கொள்கிறார்.
இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறக்கிறது. இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த ஏரியா எம்.எல்.ஏ.வின் மகனுக்கும், நாயகிக்கும் ஒரு சிறிய பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் எம்.எல்.ஏ. மகனின் தாய் மாமன் தலையிட அவரையும் அவமானப்படுத்துகிறாள் நாயகி. இதனால், கோபமடைந்த இருவரும் அவளை தீர்த்துக்கட்ட நினைக்கிறார்கள்.
அதன்படி, நாயகன் இல்லாத சமயம் பார்த்து நாயகியையும், அவளது குழந்தையையும் கொலை செய்துவிடுகிறார்கள். பின்னர், தங்களது அரசியல் பின்புலத்தை வைத்து நாயகன்தான் அந்த கொலையை செய்தார் சட்டரீதியாக நிரூபித்து அவரை ஜெயிலுக்குள் தள்ளுகிறார்கள்.
இந்நிலையில், நிரபாரதியான நாயகன் ஜெயிலுக்குள் இருந்து வெளிவந்து தன்னுடைய குடும்பத்தை சீரழித்தவர்களை பழிவாங்குவதே மீதிக்கதை.
நாயகன் செந்தில் ஜெகதீசன் புதுமுகம் என்றாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் எதிரிகளை பழிவாங்கும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி காயத்ரி ஐயருக்கு பொறுப்பான கதாபாத்திரம். எம்.எல்.ஏ. மகனிடம் எதிர் வாக்குவாதம் செய்யும் காட்சிகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றபடி, படத்தில் நடித்திருப்பவர்கள் முக்கால் வாசி புதுமுகங்கள் என்பதால், அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ, அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவருடைய நடிப்பு அபாரம்.
இயக்குனர் கிருஷ்ணதாசன் ஒரு திரில்லங்கான கதையை உருவாக்கி இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு அதரபழசான பழிவாங்கும் கதைதான் என்றாலும், பழிவாங்கும் காட்சிகள் எல்லாம் புதுமையாக இருப்பது படத்திற்கு சிறப்பு. திரில்லங்கான காட்சிகள் எல்லாம் கண்டிப்பாக திரில்லரை கொடுக்கிறது. ஆனால், சிறப்பான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாதது படத்திற்கு பெரிய தொய்வை கொடுத்திருக்கிறது.
சதா சுதர்சனத்தின் இசை இரைச்சலாக இருக்கிறது. திரைக்கதையின் விறுவிறுப்புக்கு இவரது இசை தடை போடுகிறது. அசிஷ் தவார் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘ஒறுத்தல்’ ஒருமுறை பார்க்கலாம்.

விஜய் சேதுபதி-ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஆண்டவன் கட்டளை’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
குடும்ப கஷ்டம் காரணமாக விஜய் சேதுபதி லண்டனுக்கு வேலை தேடிச் செல்ல முடிவெடுக்கிறார். இவருடன் நண்பர் யோகி பாபுவும் லண்டனுக்கு செல்ல முடிவு செய்ய, இருவரும் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் இருவரும் ஏஜென்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் இருந்தால் விசா எளிதில் கிடைக்கும் என்று ஏஜென்ட் கூறுவதை கேட்டு, இருவரும் தங்களது பாஸ்போர்ட்டில் மனைவி இருப்பதாக கூறி ஒரு பொய்யான பெயரை போடுகிறார்கள்.
விஜய் சேதுபதி தனது பாஸ்போர்ட்டில் தனது மனைவி பெயரை கார்மேகக் குழலி என்று குறிப்பிடுகிறார். விசா இண்டர்வியூவில் யோகி பாபுவுக்கு மட்டும் விசா கிடைக்கிறது. விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் விஜய் சேதுபதி, நாசர் வைத்திருக்கும் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்.
இந்நிலையில், நாசர் லண்டனில் நாடகம் நடத்த விஜய் சேதுபதி உள்ளிட்ட தனது கலைஞர்களை அழைத்துக் கொண்டு போக முடிவு எடுக்க, அப்போது, அனைவரிடமும் பாஸ்போர்ட்டை தயார் செய்யும்படி கூறுகிறார். அந்த நாடக கம்பெனியில் வேலை செய்யும் பூஜா தேவாரியா, விஜய் சேதுபதியின் பாஸ்போர்ட்டை பார்த்து, அதில் குறிப்பிட்டிருக்கும் அவரது மனைவியை பற்றி கேட்கிறார்.
அப்போது விஜய் சேதுபதி, தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், விசா எளிதில் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏஜென்ட் மூலமாக பொய்யான ஒரு தகவலை பாஸ்போர்ட்டில் பதிவு செய்திருப்பதாக கூறுகிறார். இது பெரிய பிரச்சினையாகிவிடும் என்று விஜய் சேதுபதியை எச்சரிக்கும் பூஜா தேவாரியா, அந்த பெயரை எப்படியாவது நீக்கிவிடு என்று விஜய் சேதுபதியிடம் கூறுகிறார்.
விஜய் சேதுபதியும் அந்த பெயரை எப்படி நீக்குவது என்று வக்கீலிடம் சென்று ஆலோசனை கேட்கிறார். வக்கீல் அந்த பெயருடைய பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, அவளை விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க வைத்து, விவகாரத்து வாங்கிவிட்டால் பாஸ்போர்ட்டில் இருந்து பெயரை நீக்கிவிடலாம் என்று ஆலோசனை கேட்கிறார்.
இதனால், கார்மேகக் குழலி என்ற பெயர் இருக்கக்கூடிய பெண்ணை தேடி அலைகிறார். அப்போது, டிவியில் ரிப்போர்ட்டராக வேலை செய்யும் ரித்திகா சிங்கின் பெயர் கார்மேக குழலி என்பதை அறிந்து, அவரை விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க வைக்க போராடுகிறார்கள்.
இறுதியில் ரித்திகா சிங், விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க சம்மதித்தாரா? விஜய் சேதுபதி தனது குடும்ப கஷ்டத்தை தீர்க்க லண்டன் போனாரா? என்பதே மீதிக்கதை.
சமூகத்தில் நடக்கும் அவலங்களை இப்படத்தில் சுட்டிக்காட்டி எதார்த்த இயக்குனர் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் மணிகண்டன். பாஸ்போர்ட்டில் எத்தனை முறைகேடுகள் நடக்கிறது. எதிலும் தவறான வழியை தேர்ந்தெடுத்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இப்படத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதேபோல், சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பது எத்தனை கஷ்டம் என்பதையும் அழகாக காட்டியுள்ளார். அதேநேரத்தில் விவாகரத்து பற்றி இன்றைய சூழலில் வாழும் தம்பதிகளுக்கு அறிவுரை கூறிய விதமும் அருமை.
விஜய் சேதுபதி ஒரு இடத்திலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, வாய் பேச முடியாதவராக இவர் நடிக்கும்போது திரையரங்கமே உற்சாகமடைகிறது. எந்த கதாபாத்திரத்தையும் அசால்ட்டாக செய்து முடிக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் செம்மையாக செய்திருக்கிறார்.
‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங்கும், விஜய் சேதுபதிக்கு போட்டி போடும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரிப்போர்ட்டராக வரும் அவரது தோற்றம், ஒவ்வொரு காட்சிக்கும் அவரது முகபாவனை என ரசிக்க வைக்கிறார். விஜய் சேதுபதியின் நண்பராக வரும் யோகி பாபு வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக நகர்கிறது. விசா கிடைத்தவுடன் விஜய் சேதுபதியை இவர் நக்கல் செய்யும் காட்சிகள் எல்லாம் சிரிப்புக்கு கியாரண்டி.
கே-யின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. பின்னணி இசையில் தனது முழு பலத்தையும் போட்டு உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகவும், தெளிவாகவும் காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ சமூக அக்கறையுள்ள படம்.

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘தொடரி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரெயில் கேண்டீனில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு மேக்கப் போடும் கீர்த்தி சுரேசும் அதே ரெயிலில் வருகிறார். கீர்த்தி சுரேஷை பார்த்தவுடனே அவள் அழகில் மயங்கிவிடுகிறார் தனுஷ். பாட்டு பாடுவதில் ஆர்வம் உள்ளவரான கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர்களைத் தெரியும் என்று பொய் சொல்லி தன்னுடைய காதல் வலையில் சிக்க வைக்கிறார்.
இந்நிலையில், அதே ரெயிலில் பயணம் செய்யும் மந்திரி ராதாரவியின் பாதுகாப்புக்கு வரும் கருப்பு பூனைப்படையை சேர்ந்த ஹரிஷ் உத்தமனுக்கும், தனுஷுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் தனுஷின் காதலியான கீர்த்தி சுரேஷை கொன்றுவிடுவதாக ஹரிஷ் உத்தமன் மிரட்ட, பயந்துபோய் கீர்த்தி சுரேஷ் ரெயில் என்ஜின் அறையில் பதுங்கிக் கொள்கிறார்.
தனுஷையும் ஒரு அறையில் போட்டு பூட்ட, அங்கிருந்து தனுஷ் தப்பித்து கீர்த்தி சுரேஷை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். இந்நிலையில், ரெயில் என்ஜின் டிரைவர் திடீரென இறந்துபோக, ரெயில் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக செல்கிறது. ரெயிலை தீவிரவாதிகள் கடத்திவிட்டதாக மீடியாவில் பரபரப்பு செய்திகள் போய்க்கொண்டிருக்க, தனுஷோ தனது காதலியை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். ரெயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ரெயிலை நிறுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்குகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரெயிலை அதிகாரிகள் நிறுத்தினார்களா? தனுஷ் தனது காதலியை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
கேண்டீன் ஊழியராக தனுஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படம் முழுக்க ரெயிலுக்குள்ளேயே நடப்பதால் இவரது நடிப்புக்கு ஏற்ற தீனி இந்த படத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படம் முழுக்க ஒரே உடையணிந்து வந்தாலும், காட்சிக்கு காட்சி தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாக இருக்கிறார். படத்தில் முதல்பாதி முழுக்க தனுஷுடன் டூயட் பாடுவது, ரொமான்ஸ் பண்ணுவது என வரும் இவர், இடைவேளைக்கு பிறகு ரெயில் என்ஜினில் இவரது கதாபாத்திரத்தை பூட்டி வைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு, அவர் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை.
பிரபு சாலமன் படங்களில் எப்போதும் தம்பிராமையாவின் காமெடிக்கு தனி மவுசு இருக்கும். ஆனால், இந்த படத்தில் தம்பி ராமையாவின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. காமெடிக்கு கூடவே கருணாகரன், தர்புகா சிவா, கும்கி அஸ்வின் என ஒரு கூட்டணி இருந்தாலும் காமெடி ரசிக்கும்படி இல்லை. மந்திரியாக வரும் ராதாரவி, தனது எதார்த்தமான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். கருப்பு பூனை படைவீரராக வரும் ஹரிஷ் உத்தமன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வில்லன் என்றால் ரசிகர்கள் வெறுக்கும்படியாக இருக்கவேண்டும். அவ்வாறே இருக்கிறார் ஹரிஷ் உத்தமன்.
மற்றபடி, ரெயில்வே போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமன், கட்டுப்பாட்டு அதிகாரிகளாக வரும் சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ், என்ஜின் டிரைவராக வரும் ஆர்.வி.உதயகுமார், டிக்கெட் பரிசோதகராக வரும் இமான் அண்ணாச்சி, டிவியில் பேசும் படவா கோபி, ஞானசம்பந்தம், பட்டிமன்றம் ராஜா ஆகியோர் சிறு சிறு கதாபாத்திரங்களாக வந்தாலும் தங்களது நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் பிரபு சாலமன், பயணத்தை மையமாக வைத்து தனது வழக்கமான பாணியில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு படத்தை முழுக்க ரெயிலில் எடுக்கமுடியுமா? என்பதற்கு சவால் விடும்படியாக இவரது படைப்பு உள்ளது. படத்தின் இடைவேளைக்கு சற்று முன்னர்தான் கதையே ஆரம்பிக்கிறது. ஆகையால், படத்தின் முதல் பாதி காமெடி, காதல் என இழுஇழுவென கதையை இழுத்திருக்கிறார். இடைவேளைக்கு பிறகு ரெயிலைப்போன்று கதையும் வேகமெடுக்கிறது. முதல்பாதியை குறைத்திருந்தால் படம் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கும்.
அதேபோல், பிரபு சாலமன் படங்களில் இயற்கை காட்சிகள் எல்லாம் அழகாக இருக்கும். அதேபோல் இந்த படத்திலும் இயற்கை காட்சிகளை வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா அழகாக படம் பிடித்திருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் வேகம் கூட்டியிருக்கலாம். படத்தில் ‘போன உசுரு வந்துடுச்சே’ பாடல் ரசிக்கும்படி இருந்தாலும், அதன் பின்னணியை காட்சிப்படுத்திய விதம் ரசிக்க விடாமல் செய்துவிட்டது.
மொத்தத்தில் ‘தொடரி’ வேகமில்லா பயணம்.

இரட்டைத் தலை சுறாவிடம் நடுக்கடலில் மாட்டிக்கொள்பவர்களின் மரணப் போராட்டத்தைச் சொல்லும் படமாக வெளிவந்துள்ள ‘அபாய கடல்’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
கல்லூரி பேராசிரியர்களான சார்லி ஓ கார்னலும், கார்மென் எலெக்ட்ராவும் தங்களது மாணவர்களை அழைத்துக் கொண்டு ஒரு தீவுக்கு ஜாலியாக டூர் செல்கிறார்கள். நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது, இவர்கள் பயணித்த கப்பல் திடீரென்று பழுதாகி விடுகிறது. அப்போது அதை சரிசெய்ய முயல்கிறார்கள். அவர்களால் அது முடிவதில்லை. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று நினைக்கையில், இவர்களால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், தூரத்தில் ஒரு தீவைப் பார்க்கும் இவர்கள், அங்கிருந்து ஏதாவது உதவி கிடைக்காதா? என்ற எண்ணத்தில் ஒரு சில மாணவர்கள் மட்டும் கடலில் குதித்து அந்த தீவை அடைகிறார்கள். அந்த தீவில் யாருமில்லாததால், அங்கு பழுதாகி கிடக்கும் சிறிய படகை சரிசெய்து, அதை எடுத்துக் கொண்டு இவர்கள் வந்த கப்பலை நோக்கி பயணிக்கிறார்கள்.
அப்போது கடலுக்குள் இருந்து இரண்டு தலை கொண்ட சுறா ஒன்று அந்த மாணவர்கள் பயணித்த சிறிய படகை தாக்கி, மாணவர்களை கடித்து கொன்றுவிடுகிறது. இதனால், பயந்துபோன மற்றவர்கள், அந்த சுறாவிடமிருந்து தப்பிக்கும் வழியை யோசிக்கிறார்கள். ஒருகட்டத்தில் அந்த சுறா, சத்தத்தை வைத்துதான் தாக்குதல் நடத்துகிறது என்பதை புரிந்துகொண்டு, அந்த சுறாவை திசை திருப்பி, தாங்கள் வந்த கப்பலை சரிசெய்து தப்பிக்க போராடுகிறார்கள்.
சுறாவின் பிடியில் இருந்து அவர்கள் அனைவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
ஆழ்கடலுக்குள் சுறாவிடம் மாட்டித் தப்பிக்கும் கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வெளிவந்துவிட்டது. இந்த படத்தை வித்தியாசப்படுத்தி காட்டவேண்டும் என்பதற்காக இரட்டை தலையுடன் சுறா இருப்பதுபோன்று கதையை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் வரும் சுறா பொம்மையை போல் இருப்பது தெரிகிறது. அதற்காக படக்குழுவினர் பெரிதாக இதற்கு மெனக்கெடவில்லை என்று தோன்றுகிறது.
படத்தில் பெரும்பாலான காட்சிகளில் சுறாவின் மேற்புற செதில் மட்டுமே தெரிகிறது. மற்ற இடங்களில் சுறாவின் வாய் மட்டுமே தெரிகிறது. இரட்டை தலையுடன் சுறாவை முழுமையாக பார்க்கவே முடியவில்லை. படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. எப்போது சுறா தாக்கும் என்ற அச்சம் இருந்தாலும், சுறா வந்து தாக்கும் இடங்களில் நமக்கு பயமே இல்லை.
படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஹாலிவுட்டிலேயே மிகவும் குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்திருப்பதால் அதற்கேற்றார்போல்தான் படமும் இருக்கிறது.
மொத்தத்தில் ‘அபாய கடல்’ அச்சமில்லை.

கரண் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்துள்ள உச்சத்துல சிவா படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
நாயகன் கரண் ஒரு டாக்சி டிரைவர். ஒருநாள் இரவு இவர் சவாரியை இறக்கிவிட்டு காரில் சென்று கொண்டிருக்கும் நிலையில், நாயகி நேகா ரத்னாகரன் மணக்கோலத்தில் ஒருவருடன் நடுரோட்டில் ஓடி வந்துகொண்டிருக்கிறாள். அவர்களை ஒரு ரவுடி கும்பல் துரத்தி வருகிறது. அப்போது, நேகாவுடன் வந்தவரை அந்த ரவுடி கும்பல் சுட்டு வீழ்த்துகிறது. அத்தோடு, ரவுடி கும்பல் வந்த காரும் விபத்துக்குள்ளாகி, அதில் உள்ள அனைவரும் இறக்கிறார்கள்.
அப்போது அந்த வழியில் வந்த கரண், இதையெல்லாம் பார்த்து அவளை தனது காரில் ஏற்றி அழைத்து செல்கிறார். அப்போது கரணிடம், நாயகி நேகா அப்பாவின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால், ரவுடிகளை வைத்து தன்னை கொலை செய்ய அவரது அப்பா முயற்சி செய்கிறார் என்று கூறுகிறாள்.
இதனால், அவளை காப்பாற்றுவதற்காக அவளை தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு சுற்றி வருகிறார். குண்டு பாய்ந்து இறந்துபோன நேகாவின் காதல் கணவரும், அவனை சுட்டுக் கொன்ற ரவுடி கும்பலும் ஒரே இடத்தில் இறந்து கிடப்பதை பார்க்கும் போலீசார் இதற்கெல்லாம் யார் காரணம்? என்பதை அறிய தீவிர விசாரணையில் இறங்குகிறார்கள்.
அவளை காரில் வைத்து சுற்றி வரும்போதே அவள்மீது காதல் கொள்கிறார் நாயகன் கரண். இந்நிலையில், இவர்கள் பயணிக்கும் காரில் நேகாவின் திருமணத்துக்கு உறுதுணையாக இருந்த அவளது அண்ணனும் ஏறிக் கொள்கிறார். இதையறிந்த, நரேன் மற்றும் அவரது கூட்டாளிகள் இவர்களுடைய காரை துரத்துகிறார்கள். அப்போது, நேகாவின் அண்ணன் மட்டும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட நினைக்கிறார். அவனை துரத்தும் ரவுடி கும்பல் அவனை சுட்டு வீழ்த்துகிறது.
இதையெல்லாம் பார்த்து இவர்களிடமிருந்து நாயகியை காப்பாற்ற போலீசாரிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் சொல்ல முடிவெடுக்கிறார். ஆனால், நாயகியோ இதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். இறுதியில், நரேன் மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து நாயகியை கரண் எப்படி காப்பாற்றினார்? போலீசிடம் செல்ல ஏன் நாயகி தயங்குகிறாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கரண் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரும் படம் என்பதால், இப்படம் கரணுக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது. அதை உணர்ந்து இந்த படத்தில் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கரண். படத்தில் பார்க்கும்போது இன்னும் கொஞ்சம் இளமையாகவே தெரிகிறார்.
நாயகி நேகா ரத்னாகரனை சுற்றித்தான் கதையே நகர்கிறது. சென்டிமென்ட் காட்சிகள், உருக்கமான காட்சிகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக நரேன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். கோவை சரளாவின் குரல் மட்டுமே படத்தில் ஒலிக்கிறது. இருப்பினும், குரலிலேயே அவரது முத்திரையை தனியாக பதித்து விடுகிறார்.
மற்றபடி, படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் காமெடி என்ற பெயரில் கடுப்பைத்தான் வரவழைத்திருக்கின்றன. ஒருநாள் இரவிலேயே நடக்கும் கதையை விறுவிறுப்பாக சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர் ஜேப்பி. ஆனால், விறுவிறுப்பான திரைக்கதை இல்லாதது பெரிய குறை. கார் சேசிங், ரவுடி கும்பலிடம் இருந்து தப்பிப்பது இந்த மாதிரியான காட்சிகள் வைத்தாலே விறுவிறுப்பாகிவிடும் என்று தப்பு கணக்கு போட்டிருக்கிறார்.
வித்யாசாகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது. ஹார்முக் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலமாக இருந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘உச்சத்துல சிவா’ உச்சம் தொடவில்லை.

திரிஷா நடிப்பில் பேய் படமாக வெளிவந்துள்ள நாயகி படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
நந்திவரம் கிராமத்தில் பேய் இருப்பதாக அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாம் வீட்டை காலி செய்துவிட்டு வெளியூர் போய்விடுகிறார்கள். இதனால், நந்திவரம் கிராமமே வெறிச்சோடி போய் கிடக்கிறது. அந்த கிராமத்திற்கு செல்லும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதால் அரசாங்கமே, தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவித்து அந்த கிராமத்திற்குள் யாரையும் செல்லவிடுவதில்லை.
இந்த சூழ்நிலையில், சென்னையில் குறும்படம் எடுக்கும் சத்யம் ராஜேஷ், அப்பாவி பெண்களை காதல் வலைக்குள் சிக்க வைத்து அவர்களை அடைய துடிக்கும் மனப்பான்மையுடன் இருந்து வருகிறார். அதன்படி, அப்பாவி பெண்ணான சுஷ்மாராஜை காதலிப்பதுபோல் நடித்து அவளை அடைய துடிக்கிறார். அவரை ஜெயப்பிரகாஷ் ரகசியமாக நோட்டமிட்டு வருகிறார்.
ஒருநாள் சுஷ்மாவை தனது நண்பருடைய தனி பங்களாவுக்கு அழைத்து செல்கிறார் ராஜேஷ். அப்போது அந்த பங்களாவுக்கு செல்ல ஜெயப்பிரகாஷிடம் வழி கேட்கிறார். அவரோ, நந்திவரம் பங்களாவுக்கு அவர்களுக்கு வழி சொல்லி அனுப்பி விடுகிறார். இவர்களும் எதுவும் தெரியாமல் நந்திவரத்தில் இருக்கும் அரண்மனைக்கு செல்கிறார்கள்.
அங்கு திரிஷா உருவில் ஒரு அமானுஷ்ய சக்தி இவர்களை பயமுறுத்துகிறது. ராஜேஷின் செல்போன் எங்கெல்லாம் திரும்புகிறதோ, அப்போது அந்த செல்போனில் திரிஷாவின் உருவம் வருகிறது. இதனால் மிகுந்த பயத்தில் இருக்கிறார் ராஜேஷ். ஒருகட்டத்தில் சுஷ்மாவுக்கும் அந்த வீட்டில் திரிஷாவின் ஆவி இருப்பது தெரிய வருகிறது.
இதற்கிடையில், அந்த அரண்மனைக்குள் ராஜேஷ், சுஷ்மாவை அழைத்துவந்த விஷயம் தெரிந்த சென்ட்ராயன் அந்த அரண்மனைக்குள் நுழைகிறான். அவனையும், ராஜேஷையும் திரிஷாவின் ஆவி சுஷ்மாவின் உடம்புக்குள் புகுந்து துவம்சம் செய்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பது புரியாமல் தவிக்கும் அவர்களால் அந்த அரண்மனையை விட்டு வெளியேறவும் முடியவில்லை.
திரிஷாவின் ஆவி இவர்களை பயமுறுத்த காரணம் என்ன? திரிஷா எப்படி ஆவியாக மாறினார்? ஜெயப்பிரகாஷுக்கும், திரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே மீதிக்கதை.
நாயகி திரிஷா இப்படத்தில் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற கனவில் மிதக்கும் பெண்ணாக வருகிறார். எப்போதும் தன்னை கதாநாயகியாக காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக விதவிதமான ஆடையலங்காரம், விதவிதமாக முடியலங்காரம் என ரசிக்க வைக்கிறார். ஒருகட்டத்தில் ஆவியாக மாறி ஆக்ரோஷம் காட்டும் விதத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கணேஷ் வெங்கட்ராமன் இப்படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். பார்க்கவும் மிக அழகாக இருக்கிறார். ஜெயப்பிரகாஷ், மகளின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் பொறுப்பான அப்பாவாக நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் இவர் படத்தில் ஆவியாக இருக்கிறாரா? உயிரோடு இருக்கிறாரா? என்ற குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்தாலேயே இவருடைய கதாபாத்திரம் வலுவில்லாமல் போய்விட்டது.
சத்யம் ராஜேஷ் பெண்களை வசியம் செய்யக்கூடிய அளவுக்கு முகம் இல்லாவிட்டாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு என்ன செய்யவேண்டுமோ? அதை செய்துவிட்டு போயிருக்கிறார். சென்ட்ராயன் செய்யும் காமெடிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இல்லாதது பெரிய ஏமாற்றம். சுஷ்மா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தற்போது தமிழ் சினிமாவில் பேய் சீசன் நன்றாக போய்க் கொண்டிருப்பதால் திரிஷாவை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கோவி. ஆனால், படத்தில் நிறைய காட்சிகள் யாரையும் பயமுறுத்தவில்லை என்பதுதான் படத்திற்கு பெரிய பின்னடைவு.
தன்னை ஏமாற்றிய கணேஷ் வெங்கட்ராமை பழிவாங்க ஆக்ரோஷமாக திரிஷா ஆடும் காட்சிகள் எல்லாம் காமெடியாக போய்விட்டது. ஜெயப்பிரகாஷின் கதாபாத்திரத்தை தெளிவாக சொல்ல மறந்தது என நிறைய காட்சிகள் படத்திற்கு மைனஸ்.
ஜெகதீஷின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. நிறைய காட்சிகள் இருட்டிலேயே நடந்தாலும், அழகாக ஒளியமைப்பில் கதாபாத்திரங்களை துல்லியமாக காட்டியிருக்கிறார். ரகு குஞ்சேவின் இசையில் பாடல்கள் பெரியதாக எடுபடவில்லை. சாய் கார்த்திக்கின் பின்னணி இசையும் திகில் படத்திற்குண்டான அளவுக்கு இல்லை என்பதுதான் வருத்தம்.
மொத்தத்தில் ‘நாயகி’க்கு அழகில்லை.

புதுமுகங்கள் நடிப்பில் திரில் படமாக வெளிவந்திக்கும் சதுரம் 2 எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
தொழிலில் நேர்மையாக இருக்கும் டாக்டர் தன்னுடைய குடும்பத்திற்கு துரோகம் செய்கிறார். அவரும், பணத்துக்காக பெரிய கோடீஸ்வரர்களின் அந்தரங்க வாழ்க்கையை படம்பிடித்துக் கொடுக்கும் போட்டோ கிராபர் ஒருவரும் சதுரமான அறையில் ஒரு காலில் சங்கிலியுடன் எதிரெதிர் மூலையில் கட்டப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் இருவருடைய பேண்ட் பாக்கெட்டிலும் அவர்கள் பெயர் போடப்பட்ட ஆடியோ கேசட் ஒன்று உள்ளது. அதில் இருவருக்கும் ஒரு தகவல் இருக்கிறது. அவர்கள் அங்கிருந்து தப்பிப்பதற்கு அந்த அறைக்குள்ளேயே அவர்களுக்கு சில அடையாள குறிப்புகள் இருக்கிறது. மேலும், அவர்களுக்கு மாலை 6 மணி வரை காலஅவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவார்கள் என்று தகவல் இருக்கிறது.
இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? அவர்கள் இரண்டு பேருக்கும் உள்ள தொடர்பு என்ன? எதற்காக இவர்கள் அங்கே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்களை யார் அடைத்து வைத்துள்ளார்? என்பதே மீதிக்கதை.
ஆங்கிலத்தில் வெளிவந்த ‘Saw’ என்ற படத்தை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளார் சுமந்த் ராதாகிருஷ்ணன். அந்த படத்தில் வித்தியாசமாக கொலை செய்யும் காட்சிகளை கொடூரமாக காட்டியிருப்பார்கள். ஆனால், இதில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அளவான, ரொம்பவும் கொடூரமான காட்சிகள் இல்லாமல் திரில்லராக கொடுத்திருப்பது சிறப்பு.
படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஒரு பூட்டிய அறைக்குள்ளேயே நடக்கிறது. மற்ற சில காட்சிகள் அங்கும் இங்குமாக விரிகிறது. ஆரம்பத்தில் அமைதியான கணவராக வரும் பிரகதீஷ் கௌசிக், கடைசியில் கொடூரமானவராக மாறும் விதம் அருமை. சங்கிலியில் பிணைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், யோக் ஜேப்பி, ரியாஸ் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நாம் இறந்துவிடுவோமோ என்ற பயத்தினால் இவர்கள் நடுங்கும் காட்சி நம்மையும் நடுங்க வைக்கிறது.
சனம் ஷெட்டி ஒரு சில காட்சிகளே வந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். யோக் ஜேப்பியின் மனைவியாக நடித்திருப்பவருக்கு நிறைய காட்சிகள் அழுது வடிகிற மாதிரியான காட்சிகள்தான். அதற்கு ஏற்ப இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சுஜா வருணி நிறைமாத கர்ப்பிணியாக வருகிறார். அவரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவும், எதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக திரில்லர் காட்சிகள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கடைசியில், யோக் ஜேப்பி தனது காலை வெட்டிக் கொள்ளும் காட்சியில்கூட பெரிய அளவில் பயம் இல்லாமல் போனது படத்திற்கு மிகப்பெரிய தொய்வுதான்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் ஒரேயொரு பாடல்தான். படத்தின் டைட்டில் கார்டு போடும்போது வரும் பாடல் ரசிக்க வைக்கிறது. அதற்கேற்றாற்போல் அதில் கார்ட்டூன்களாக காட்சிகள் விரிவதும் அருமை. சதீஷின் ஒளிப்பதிவும் பாராட்டும்படியாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘சதுரம் 2’ மிரட்டல்.

பிரபு ரணவீரன் - ஸ்ரவியா நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘பகிரி’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்..
நாயகன் பிரபு ரணவீரனின் அப்பா தன்னுடைய மகன் தன்னைப்போலவே தனது மகனும் விவசாயத்தில் ஈடுபடவேண்டும் என்ற ஆசையில் அவனை விவசாய படிப்பு படிக்க வைக்கிறார். ஆனால், அரசாங்க வேலையில் சேர விருப்பப்படும் பிரபுவோ, தனது அப்பாவின் ஆசைக்காக விவசாய படிப்பை படித்து முடிக்கிறான். படித்து முடித்தபின், அரசாங்க வேலை தேடி அலைகிறான்.
அவனுக்கு நாஸ்மாக் எனப்படும் அரசாங்கம் நடத்தும் மதுபானக்கடையில் வேலைக்கு சேர்வதற்காக முயற்சிக்கிறான். அந்த வேலையில் சேர்வதற்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சமாக கேட்கிறார்கள். தன்னுடைய அப்பாவிடம் சென்று நிலத்தை விற்று தன்னை வேலையில் சேர்த்துவிடுமாறு கோரிக்கை வைக்கிறார். இவரது கோரிக்கையை அவரது அப்பா ஏற்க மறுக்கிறார். இதையடுத்து, எப்படியாவது ரூ.5 லட்சத்தை சம்பாதித்து அந்த வேலையில் சேர முடிவெடுக்கிறார்.
இந்நிலையில், ஒரு மதுபானக்கடையில் தற்காலிகமாக பணியில் சேர்கிறார். அங்கிருந்து சம்பாதித்து எப்படியாவது அந்த வேலையை நிரந்தரமாக்கிக் கொள்ளவேண்டும் என்று முயற்சி செய்கிறார். இந்நிலையில், ஒருநாள் நாயகி ஸ்ரவியாவை பார்க்கும் நாயகன் அவள் மீது காதல் கொள்கிறார். ரொம்பவும் அடாவடித்தனமான அவளது செயல்பாடுகள் எல்லாம் நாயகனுக்கு பிடித்துப் போகிறது. ஒருகட்டத்தில் தனது காதலை அவளிடம் சொல்லும்போது முதலில் ஏற்க மறுக்கும் அவள், பின்னர் காதலை ஏற்றுக்கொள்கிறாள். அத்துடன், காதலனின் லட்சியத்தை நிறைவேற்ற அவனுக்கு உதவி செய்யவும் நினைக்கிறாள்.
இதற்கிடையில், அந்த ஊர் எம்.எல்.ஏ.வான ரவிமரியாவுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. நாயகியின் வீட்டில் உள்ளவர்கள் நாயகனுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக அவளுக்காக வாங்கி வைத்திருந்த நகைகளை விற்று, நாஸ்மாக்கில் பணியில் சேர வைக்கிறார்கள்.
இதையறிந்த ரவிமரியா பிரச்சினை செய்யவேண்டும் என்பதற்காக அவன் வேலைக்கு சேர்ந்த முதல்நாளே அங்கு மதுபானக் கடை இருக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தி அந்த கடையை மூட வைக்கிறார். இதனால், நொந்துபோன நாயகன், வேறு இடத்தில் மதுபானக்கடையை திறக்கிறான். அங்கும் ரவிமரியாவால் பிரச்சினை ஏற்படுகிறது.
இறுதியில், ரவிமரியாவின் பிரச்சினையை சமாளித்து நாயகன் தனது லட்சியத்தில் வென்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
பிரபு ரணவீரன் அறிமுக நாயகன் என்றாலும், அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடும் காட்சிகளிலும், காதலி ஸ்ரவ்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலும், அப்பா, அம்மா, தங்கையுடன் சென்டிமெண்ட் காட்சிகளிலும் குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்ரவ்யா, குறும்புக்கார அதேநேரத்தில் அடாவடி பெண்ணாக கவர்கிறார். அரசியல்வாதியாக வரும் ரவிமரியா வரும் காட்சிகள் எல்லாம் படம் கலகலப்பாக செல்கிறது. ஸ்ரவ்யாவின் குடிகார தந்தையாக வரும் ஏ.வெங்கடேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். விவசாயத்தின் மேன்மையை வலியுறுத்தும் வகையில் நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணிக்கு சூப்பர் சல்யூட்.
விவசாயம் செய்வதன் அவசியத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இசக்கி கார்வண்ணன். அதேபோல், மதுவிலக்கு, அதனை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளின் நிலைப்பாடுகளை மறைமுகமாக நக்கல், நையாண்டி, விமர்சனம் செய்து படமாக்கியது ரசிக்கும்படியாக இருக்கிறது. இருப்பினும், காட்சிகளை கோர்வையாக கொண்டு செல்லமுடியாமல் இயக்குனர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.
மற்றபடி, மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய வசனங்கள், நக்கல், நையாண்டி கலந்த காட்சி அமைப்புகளுடன் படம் நகர்வதால் படம் போரடிக்காமல் செல்கிறது. வீரக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அருணகிரியின் இசை படத்திற்கு பெரிதாக எடுபடவில்லை. இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘பகிரி’ எகிறும்.