என் மலர்
தரவரிசை
ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கிசான், சோணு சுட் நடிப்பில் வெளியாகியுள்ள `குங்பூ யோகா' படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
சீனாவில் மிகப்பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் ஜாக்கிசான். இந்திய ராஜவம்சத்தை சேர்ந்த திஷா பதானி இவரை நேரில் சந்திக்கிறார். அப்போது, 1000 வருடங்களுக்கு முன் சீனா-இந்தியா உறவு நல்லமுறையில் இருந்தபோது, இந்தியாவில் இருந்து மரகதத்தால் செய்யப்பட்ட சாவி ஒன்றை சீனாவுக்கு கொண்டு வரும்போது, எல்லையில் பனிமலை சரிவில் சிக்கி, அந்த மரகத சாவி தொலைந்து விட்டதாகவும், அதை கண்டுபிடித்து தரும்படியும் கோருகிறார்.
ஜாக்கிசானும், தன்னுடைய உதவியாளர்களை அழைத்துக் கொண்டு பனிமலையில் காணாமல்போனதாக கூறப்படும் மரகதச் சாவியை தேடி புறப்படுகிறார். அதேநேரத்தில், இந்தியாவில் மற்றொரு ராஜ வம்சத்தை சேர்ந்த சோனு சூட், இவர்கள் மரகத சாவியை தேடி செல்வதை அறிந்து, அதை அடைவதற்காக தன்னுடைய ஆட்களை அனுப்பி அவர்களை வேவு பார்க்க வைக்கிறார். ஒருகட்டத்தில், அந்த மரகத சாவியை தேடிக்கண்டுபிடிக்கும் ஜாக்கிசான் மற்றும் அவரது உதவியாளர்களை சோனு சூட்டின் ஆட்கள் அடித்துப்போட்டுவிட்டு அந்த சாவியை அடைய பார்க்கிறார்கள்.
ஆனால், அதற்குள் ஜாக்கிசானின் உதவியாளர்களில் ஒருவன் அந்த மரகத சாவியை எடுத்துக் கொண்டு துபாய்க்கு சென்றுவிடுகிறான். அங்கு சென்று அந்த சாவியை அவன் ஏலம் விட பார்க்கிறான். இதை அறிந்த ஜாக்கிசானும், திஷா பாண்டேவும் துபாய்க்கு சென்று அந்த சாவியை ஏலம் எடுக்க நினைக்கிறார்கள். அதேநேரத்தில் சோனு சூட்டும் அந்த ஏலத்தில் கலந்துகொள்கிறார்.
அப்போது, சோனு சூட்டை விட அதிக விலை கொடுத்து ஜாக்கிசான் அந்த சாவியை ஏலத்தில் எடுத்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த சோனுசூட், மீண்டும் அந்த சாவியை அவர்களிடமிருந்து அபகரிக்க முயற்சிக்கிறார். அப்போது நடக்கும் சண்டையில், அந்த சாவி திஷா பதானி கைவசம் செல்ல, அதை அவள் எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துவிடுகிறாள்.
இதையடுத்து, திஷா பதானியை தேடி ஜாக்கிசானும், சோனு சூட்டும் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்தியாவுக்கு வந்து திஷா பதானியை சந்திக்கும் ஜாக்கிசானிடம், அந்த சாவி, ஒரு கோவிலில் இருக்கும் புதையல் அறைக்குண்டான சாவி என்பதை கூறுகிறாள். அந்த புதையலை வைத்து தான் நல்லது செய்ய நினைப்பதாகவும் கூறும் திஷாபதானிக்கு ஜாக்கிசான் உதவ நினைக்கும் நேரத்தில், சோனு சூட், ஜாக்கிசானின் உதவியாளர்களை கடத்தி வைத்துக் கொண்டு அந்த புதையலை கண்டுபிடித்து தருமாறு கேட்கிறார்.
இறுதியில், அந்த புதையலை கண்டுபிடித்தார்களா? அந்த புதையல் யார் கைவசம் சென்றது? என்பதே மீதிக்கதை.
ஜாக்கிசான் நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஒரு காமெடி கலந்து ஆக்ஷன் படத்தில் நடித்து நம்மை எல்லோரையும் சிரிக்க வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் சிறுவர்கள் கவரும்படி அமைந்திருப்பது சிறப்பு. தனக்கு மட்டுமில்லாமல், பிற நடிகர்களுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதை பாராட்டியே ஆகவேண்டும்.
குறிப்பாக, காருக்குள் சிங்கத்துடன் பயணிக்கும்போது, பயந்துகொண்டே இவர் செய்யும் முகபாவனைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. அதேபோல், பனிக் குகைக்குள் இவர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. அதேபோல், சண்டைக் காட்சியிலும் ஒரு நகைச்சுவை இருக்கும்படி தனது வழக்கமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியிருக்கிறார். அதேபோல், இந்தியர்களுடன் சேர்ந்து இவர் ஆடும் காட்சிகளில் அவர்களுக்கு இணையாக நடனமாடி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.
தோனி படத்தின் மூலம் பிரபலமான திஷா பதானி, இந்த படத்தில் ஒரு ஹாலிவுட் ஹீரோயின் அளவுக்கு தனது உடல்வாகை வைத்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் சண்டைக் காட்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு தங்கையாக வரும் அனேகன் பட நாயகி அமைரா தஸ்தூரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
வில்லனாக வரும் சோனு சூட்டுக்கு, மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தக்கூடிய வலுவான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். டான்ஸ், ஆக்ஷன் என எல்லாவற்றையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
இயக்குனர் ஸ்டான்லி டாங் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஜாக்கிசான் ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்றவாறு கதையை நகர்த்தி, அதில் ஆக்ஷன், நகைச்சுவை என கலந்து எந்த இடத்திலும் போரடிக்காதவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
கதைப்படி இப்படம் சீனா, இந்தியா, துபாய் என பயணமாகி இறுதியில் இந்தியாவில் வந்தே முடிகிறது. இந்திய கலைகளை இந்த படத்தில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஹாலிவுட் படம் என்ற வரைமுறைகளை தாண்டி இப்படம் இந்திய ரசிகர்களையும் கவரும் படி எடுத்திருப்பது மிகவும் சிறப்பு.
நாதன் வாங் இசையில் படத்தில் ஒரேயொரு பாடல்தான். இசைக்கு மொழி கிடையாது என்பதற்கு இந்த பாடலே சாட்சி. அந்தளவுக்கு ஹாலிவுட் இசைக்கலைஞராக இருந்தாலும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு அந்த பாடலை கொடுத்து, அதை காட்சியப்படுத்திய விதத்திலும் ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறார். பின்னணி இசையிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
விங் ஹாங் வோங் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது. இவரது கேமரா படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் கலர் புல்லாக காட்டியிருக்கிறது. சண்டைக் காட்சிகளில் இவரது கேமராக்களின் கோணம் ரசிகர்களை வியப்படைய வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘குங்பூ யோகா’ ஆரோக்கியம்.

ஆண்டர்சன் இயக்கத்தில் ஹாலிவுட் பிரபலம் மிலா ஜோவோவிச் நடிப்பில் வெளியான ரெசிடென்ட் ஈவில் - பைனல் சேப்டர் படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
ரக்கூன் சிட்டியில் அமைந்திருக்கும் அம்பெர்லா கார்ப்பரேஷனின் நிறுவனரான விஞ்ஞானி மார்கஸ் கண்டுபிடித்த ‘டி-வைரஸால்’ பாதிக்கப்பட்ட பலர் மிருக மனிதர்களாக சுற்றித் திரியும் நேரத்தில், இந்த வைரஸால் அதிக பலம் கொண்ட ஆலிஷ், அந்த மிருக மனிதர்களையெல்லாம் கொன்று அழிக்கிறாள். இந்த கதைக்கருவுடன், ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான புதுப்புது ஆக்சன் காட்சியமைப்புடன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ரெசிடெண்ட் ஈவில் படங்கள். அந்த வரிசையில் தற்போது வெளியாகியிருக்கிறது ரெசிடென்ட் ஈவில் - பைனல் சேப்டர்.
ரக்கூன் சிட்டியில் உள்ள அம்பெர்லா கார்ப்பரேஷனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரெட் குயின் என்ற சூப்பர் கம்யூட்டர் இதுவரையில் ஆலிஷ்-க்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில், இந்த பாகத்தில் அந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஆலிஷ்-க்கு ஆதரவாக திரும்புகிறது.
இந்நிலையில், அம்பெர்லா கார்ப்பரேஷன் வழியாக காற்று மூலமாக பரவக்கூடிய ஆன்ட்டி வைரஸ் ஒன்று பரவி, மிருக மனிதர்களும், சாதாரண மக்களும் இறக்கப்போவதாக சூப்பர் கம்ப்யூட்டர் ஆலிஷை எச்சரிக்கிறது. அந்த ஆன்ட்டி வைரஸ் 48 மணி நேரத்திற்குள் பரவக்கூடிய அபாயம் இருப்பதால், அம்பெர்லா கார்ப்பரேஷனை நோக்கி ஆலிஷ் பயணப்படுகிறாள். அப்போது, அவளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.
அதையெல்லாம் மீறி அம்பெர்லா கார்ப்பரேஷனை ஆலிஷ் அடைந்து, ஆன்ட்டி வைரஸ் பரவாமல் தடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஆலிஷாக வரும் மிலா ஜோவோவிச்சை சுற்றியே கதை முழுவதும் நகர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவருடைய சண்டைக் காட்சிகள் பெரிய வரவேற்பை பெறும், அதேபோல் இந்த பாகத்திலும் இவருடைய சண்டைக் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாகவும், அனைவரும் ரசிக்கும்படியாகவும் அமைந்திருக்கிறது. மிலா ஜோவோவிச் படத்தின் முழு பலத்தையும் தனது தோளில் சுமந்து அதற்கு வலு சேர்த்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
பேய் படங்களில் ஒரு பில்லியன் டாலர் வசூலை திரட்டிய முதல் படவரிசைக்கான பெருமை இந்த ரெசிடெண்ட் ஈவில் படங்களுக்கு உண்டு. அந்த வரிசையில் கடைசியாக வெளிவந்த இந்த படத்தில் கதை பெரிதளவில் இல்லாவிட்டாலும், இந்த படங்களுக்கே உண்டான தனித்துவமான ரசிகர்களால், அந்த படங்கள் எல்லாம் பெரிய வெற்றி பெற்று, வசூலை வாரிக்குவித்தன.
அதேபோல், இந்த பாகத்திலும் பெரிய கதையம்சம் என்று இல்லாமல், வழக்கம்போல், எல்லா பாகங்களைப்போலவே ஹீரோயின் மிருக மனிதர்களை கொல்வது, எதிரிகளை அழிக்க செல்லும் வழியில் ஏற்படும் பிரச்சினைகள், இறுதியில் எதிரிகளை அழித்து, அடுத்த பாகத்திற்கு வழிகொடுப்பது போலவே முடிவடைந்திருக்கிறது.
நூல் அளவுதான் கதை என்றாலும், இந்த படத்தின் முந்தைய பாகங்களைப்போலவே ஆக்ஷன் காட்சிகள், புதுப்புது வடிவிலும், உருவத்திலும் வரும். மிருக மனிதர்கள், விறுவிறுப்பான காட்சியமைப்புகள், ரொம்பவும் ஷார்ப்பான எடிட்டிங் என படத்தில் ரசிக்கும்படியான அம்சங்களும் உண்டு. இதை இயக்குனர் பால் ஆண்டர்சன் அழகாக கையாண்டிருக்கிறார்.
இந்த படங்களை விரும்பும் ரசிகர்களின் மனநிலையை புரிந்து, அவர்களுக்கேற்றார்போல் படமாக்கியிருக்கிறார் ஆண்டர்சன். 2 நாட்களில் நடக்கும் கதையென்பதால், இந்த கதைக்குள் நிறைய புதுமையான காட்சிகளை புகுத்தமுடியாமல் போனது வருத்தமே. அதேபோல், கிளைமாக்ஸ் காட்சியையும் ரொம்பவும் சாதாரணமாக முடித்திருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் ரெசிடெண்ட் ஈவில்-பைனல் சேப்டர் ‘மரணயுத்தம்’

ஜெயம் ரவி - அரவிந்த்சாமி - ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘போகன்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜெயம் ரவி அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில், ராஜ பரம்பரையில் இருந்து வந்த வாரிசான அரவிந்த்சாமி, வாழும் வரை ஜாலியாகவும், ஆடம்பரமாகவும் வாழவேண்டும் என்ற குறிக்கோளோடு சொர்க்கலோக வாழ்க்கை வாழ்கிறார்.
இந்நிலையில், ஒருநாள் அரவிந்த்சாமி ஒரு நகைக்கடையின் முன் தனது காரை நிறுத்துகிறார். காரில் இருந்தபடியே நகைக்கடையின் உள்ளே இருக்கும் பையனை உற்றுப் பார்க்கிறார். அப்போது, அந்த பையன் நகைக்கடைக்குள் இருந்து பணத்தை கொண்டு வந்து இவரது காரில் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு, உடனே மயங்கி விழுகிறான்.
இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமண தேதி நெருங்கும் சமயத்தில், வழக்கம்போல், அரவிந்த்சாமி தனது காரை நரேன் வேலை பார்க்கும் வங்கியின் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவரை பார்க்கிறார். அப்போது, நரேன் வங்கி பணத்தை எடுத்துக் கொண்டுவந்து அரவிந்த் சாமியின் காரில் வைத்துவிட்டு மயங்கிப் போகிறார்.
ஆஸ்பத்திரியில் கண்விழித்துப் பார்க்கும்போது வங்கியில் இருந்த பணம் கொள்ளை போனதாக அறிந்து அதிர்ச்சியடைகிறார் நரேன். வங்கிப் பணம் கொள்ளை தொடர்பாக நரேனை போலீஸ் கைது செய்கிறது. இதையடுத்து, ஜெயம் ரவியை திருமணம் செய்ய ஹன்சிகா வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை பகைத்துக்கொண்டு ஜெயம் ரவியின் வீட்டுக்கே வருகிறார் ஹன்சிகா.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது அப்பா நிரபராதி என்பதை நிரூபிக்க ஜெயம் ரவி களத்தில் இறங்குகிறார். அதன்படி, இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அரவிந்த்சாமியை கண்டுபிடித்து விசாரிக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அரவிந்த் சாமி கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி, ஜெயம் ரவியின் உடம்பில் புகுந்து கொள்கிறார்.
அப்போதிலிருந்து, அரவிந்த் சாமி ஜெயம் ரவியாகவும், ஜெயம் ரவி, அரவிந்த் சாமியாகவும் மாறிவிடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயம் ரவி உருவத்தில் இருக்கும் அரவிந்த்சாமி ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். அரவிந்த் சாமியின் குணாதிசயத்துடன் திரியும் ஜெயம் ரவியின் உடல், அதன்பிறகு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது. இதையெல்லாம், ஜெயம் ரவியின் குணாதிசயத்துடன் ஜெயிலுக்குள் இருக்கும் அரவிந்த்சாமி எப்படி முறியடித்தார்? என்பதே மீதிக்கதை.
ஜெயம் ரவிக்கு இந்த படத்தில் இரண்டு மாறுபட்ட நடிப்பினை வெளிப்படுத்தக்கூடிய அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் இவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் தனக்கு ஏற்ற தீனி கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், தனது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ரொமான்ஸ் காட்சிகளிலும் வழக்கம்போல் தனது அழகான நடிப்பால் கவர்கிறார்.
அரவிந்த்சாமி இன்னொரு ஹீரோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் இவர் அறிமுகம் ஆகும் காட்சியையே வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், அழகிகளுடன் ஆடி, பாடும் காட்சிகளில் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். படத்தில் இவருடைய கதாபாத்திரமும் வலுவானதுதான். அதை புரிந்துகொண்டு தனக்குண்டான ஒவ்வொரு காட்சியிலும் தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஹன்சிகா வழக்கம்போல கதாநாயகியாக இல்லாமல், இப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தின் இறுதியில், கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்துள்ள காட்சி அனைவரையும் கவரும். நாசர், ஆடுகளம் நரேன், விடிவி கணேஷ், வருண், நாகேந்திர பிரசாத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் மற்றவர்களின் உடம்பிற்குள் சென்று வருவதுபோன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தங்கள் கதாபாத்திரம் மட்டுமில்லாது, அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் போலவும் நடித்தே ஆகவேண்டும். அதை, அனைவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் லட்சுமண் ஏற்கெனவே ரோமியோ ஜுலியட் என்ற ஹிட் படத்தை கொடுத்தவர். இந்த முறை ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 80-களுக்கு பிறகு இப்படியொரு படம் வெளிவந்திருக்கிறது. இரண்டாம் படத்திலேயே அகலக்கால் வைத்து விஷப் பரீட்சையில் இறங்கியிருக்கிறார். அது அவருக்கு கைகொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
இரு கதாபாத்திரங்களின் தன்மையை ஒரு நடிகரால் கொண்டு வருவது மாதிரியான கதையை உருவாக்கி, அதற்கேற்றவாறு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். மேலும், விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி படத்திற்கு முழு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில்தான் நடுவில் கொஞ்சம் படம் டல்லடிக்கிறது. இருப்பினும், இறுதியில் அனைவருக்கும் திருப்தி கொடுக்கும்படி முடித்திருப்பது சிறப்பு. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்ற அறிவிப்போடு முடித்திருப்பது ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கிய இமான், இப்படத்தில் கொஞ்சம் ஏமாற்றியிருக்கிறார். படத்தில் பாடல்கள் பெரிதளவில் ரசிக்க முடியாவிட்டாலும், பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்தின் வேகத்திற்கு இவரது பின்னணி இசையும் உதவியிருக்கிறது எனலாம். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா கண்கள் புகுந்து விளையாடியிருக்கிறது.
மொத்தத்தில் ‘போகன்’ வித்தைக்காரன்.

மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய் - ப்ரணிதா இணைந்து நடித்துள்ள `எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தின் விமர்சனத்தை கீழே படிப்போம்.
சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் ஜெய், அதே கம்பெனியில் கூடவே பணிபுரியும் பிரணிதா மீது காதல் கொள்கிறார். அவளிடம் தனது காதலை சொல்வதற்கு முன்பே இரண்டு பேரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் கசமுசாவும் நடந்துவிடுகிறது. அதன்பின்னர், தனது காதலை அவளிடம் சொல்லி, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இந்நிலையில், ஒருநாள் பார்ட்டியில் வேறொருவருடன் பிரணிதா நெருக்கமாக இருப்பதை பார்க்கும் ஜெய், மனமுடைந்து அவளை பிரிந்து செல்கிறார். மிகவும் மன உளைச்சலில் இருக்கும் ஜெய், இதற்காக மனோதத்துவ நிபுணரான தம்பி ராமையாவிடம் செல்கிறார். ஆனால், தம்பி ராமையாவின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஜெய், ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார்.
தன்னுடைய தற்கொலை முடிவை நண்பர்களான காளி வெங்கட், கருணாகரன், நவீன் ஆகியோர்களிடம் சொல்கிறார் ஜெய். ஆனால், அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் ஜெய் தற்கொலை செய்துகொள்ளப்போவது உண்மைதான் என்பதை அறிந்து அவரை காப்பாற்ற மூவரும் புறப்படுகிறார்கள். அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
தற்கொலை முடிவுக்கு போன ஜெய், டிவியில் சந்தானத்தின் பேச்சை கேட்டு மனம் திருந்தி தற்கொலை முடிவை கைவிடுகிறார். அதன்பின்னர், தன்னை காப்பாற்ற புறப்பட்ட நண்பர்கள் பிரச்சினையில் மாட்டிக் கொண்டதை அறிந்து கொள்கிறார். அவர்களை ஜெய் எப்படி மீட்டார்? ப்ரணிதாவுடன் மீண்டும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
ஜெய் வழக்கம்போல் தனது அலட்டல் இல்லாத நடிப்பில் ரசிக்க வைக்கிறார். தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு வரும் இவர், அதை செய்யாமல் சினிமா பாடல்களை கேட்டு அலப்பறை பண்ணும் இடங்களில் எல்லாம் கிளாப்ஸ் வாங்குகிறார். அதேபோல், தனக்கு உதவி செய்ய முன்வந்த தம்பிராமையாவை நடுஇரவில் இவர் செய்யும் டார்ச்சர்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன.
நாயகி ப்ரணிதாவுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. இருப்பினும், ஓரளவுக்கு கிளாமரில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். நண்பர்களாக வரும் காளி வெங்கட், கருணாகரன், நவீன் ஆகியோர் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார்கள். இருப்பினும், ஆங்காங்கே சில தொய்வுகள் இருக்கிறது.
மனோதத்துவ நிபுணராக வரும் தம்பி ராமையா தன் பங்குக்கு காமெடியில் கலக்கியிருக்கிறார். கருப்பு ராக்காக வரும் மொட்டை ராஜேந்திரன், டிவி தொகுப்பாளராக வரும் படவா கோபி ஆகியோரும் படத்தின் காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். சந்தானம் ஒரேயொரு காட்சியில் வந்தாலும், படத்தில் காதலர்களுக்கு நல்ல கருத்தை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், ஓவர் காமெடி படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் செய்துவிட்டது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர், அதை எல்லை மீறாமல் கொடுத்திருந்தால் படத்தை கண்டிப்பாக ரசித்திருக்கலாம்.
சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்பதற்கு அழகாக இருக்கிறது. அதை படமாக்கியவிதமும் அருமை. ‘கண்ணாடி பூவுக்கு வண்ணமில்லை’ என்ற பாடலை படமாக்கிய விதம், அந்த பாடலை வெகுவாக ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷ் முத்துச்சுவாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா தனித்துவம் காண்பித்திருக்கிறது.
மொத்தத்தில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ காமெடி கலாட்டா.
மகேஷ் பாபு - ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் வெளியான இவண் ஒரு துணிச்சல்காரன் படத்தின் விமர்சனத்தை கீழே படிக்கலாம்.
மும்பையில் கல்லூரி மாணவனாக வருகிறார் மகேஷ்பாபு. நடிப்பில் ஆர்வம் இருக்கும் மகேஷ்பாபு கல்லூரி விடுமுறை நாட்களில் சின்ன சின்ன விளம்பரங்களில் மாடலாகவும் நடித்து வருகிறார். மும்பையின் பிரதான பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மகேஷ் பாபு சிறு வயதிலிருந்தே தனது மாமாவான பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வருகிறார்.
பிரகாஷ்ராஜ் மும்பை புறநகரில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். பிரகாஷ்ராஜ் மீது மிகுந்த அன்பாகவும், பாசமாகவும் இருக்கும் மகேஷ்பாபு கல்லூரி விடுமுறை நாட்களில் தனது வீட்டிற்கு சென்று வருகிறார்.
சுற்றிலும் மலைகளுடன் கூடிய சுற்றுலாப் பகுதியில் இருக்கும் அந்த ஊருக்கு ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து சுற்றுலா வரும் ப்ரீத்தி ஜிந்தா மீது முதல் சந்திப்பிலேயே காதல் கொள்கிறார் மகேஷ்பாபு.
ஆனால் ப்ரீத்தி ஜிந்தாவோ கண்டுகொள்ளாமல் இருக்கிறார். எனினும் ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பின்னர் இருவருக்கும் இடையேயான காதல் பிரகாஷ் ராஜுக்கு தெரிய வருகிறது. இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் பிரகாஷ்ராஜின் பேச்சை கேட்டு ப்ரீத்தி ஜிந்தாவுடனான காதலை முறித்துக் கொள்கிறார் மகேஷ்பாபு.
அதனைத்தொடர்ந்து அதற்கான காரணத்தை ப்ளாஸ்பேக்காக கூறுகிறார். விவசாயிகளை கொடுமைப்படுத்தும் வில்லனாக வரும் ஜெயப்பிரகாஷிடம் இருந்து விவசாயிகளையும், அவர்களது நிலங்களையும் மீட்கும் போராட்டத்தில் மகேஷ்பாபுவின் தந்தையான கிருஷ்ணமூர்த்தியையும், தாயையும் ஜெயப்பிரகாஷின் ஆட்கள் கொலை செய்கின்றனர். தாய், தந்தையை இழந்துதவிக்கும் மகேஷ்பாபுவை ஜெயப்பரகாஷின் தங்கையின் கணவனான பிரகாஷ் ராஜ் அழைத்துக் கொண்டு மும்பை செல்கிறார்.
அப்போது பிரகாஷ்ராஜுடன் வர மறுக்கும் அவரது மனைவியிடம், தனது மகளை மகேஷ் பாபுவையே திருமணம் செய்ய வைப்பதாக சபதம் செய்ததாகவும் கூறிய பின் மகேஷ் பாபுவுடன் ஐதராபாத் செல்லும் பிரகாஷ்ராஜுக்கு ப்ரீத்தி ஜிந்தாதான் தனது மகள் என்று தெரிய வருகிறது. பின்னர் மகேஷ்பாபு-ப்ரீத்தி ஜிந்தா இருவருக்கும் இடையேயான காதல் மீண்டும் மலர்கிறது.
இந்நிலையில், பிரகாஷ்ராஜின் சபதத்தை நிறைவேற்றி ப்ரீத்தி ஜிந்தாவை மகேஷ்பாபு மணக்கிறாரா, விவசாயிகளை மகேஷ்பாபு காப்பாற்றுகிறாரா என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதி கதை.
தனது முதல் படத்திலேயே மகேஷ்பாபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாணவனாக நடிப்பது முதல் காதல், சண்டை காட்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் ப்ரீத்தி ஜிந்தா சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளில் அவரது நடிப்பு அனைவரையும் ஈர்க்கிறது.
படத்தில் சிலகாட்சிகளில் வந்தாலும் பிரமானந்தம் மற்றும் எம்.எஸ்.நாராயணாவின் நகைச்சுவைகள் சிரிக்கும்படி உள்ளது.
படத்தின் இயக்குநர் கோவாலமுடி ராகவேந்திர ராவ் சிறப்பாக திரைக்கதையை அமைத்துள்ளார். காதல், சண்டை, காமெடி என அனைத்து காட்சிகளையும் ரசிக்கும் படி அமைத்துள்ளது சிறப்பு.
மணி சர்மாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் அஜயன் வின்சண்ட் படத்தை சிறப்பாக காட்சிபடுத்தியுள்ளார்.
மொத்தத்தில் துணிச்சல்காரன் வென்றான்.

ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி ஐயர், ஷிவதா ஐயர் நடித்துள்ள `அதே கண்கள்' படத்தின் விமர்சனத்தை காணலாம்.
நாயகன் கலையரசன் கண்பார்வையற்றவர். 15 வயது இருக்கும் போது ஏற்படும் காய்ச்சலில் பார்வை இழக்கிறார். கண்பார்வையற்ற கலையரசன் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். கலையின் தோழியாக வரும் ஜனனி ஐயர் ஒருகட்டத்தில் கலை மீது காதல் கொள்கிறார். எனினும் தனது காதலை கலையிடம் வெளிப்படுத்தாமல் தனுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, கலைக்கு ஷிவதா நாயரின் நட்பு கிடைக்கிறது. பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் தனக்கு உள்ள கடன் பிரச்சனை குறித்து கலையிடம் தெரிவிக்கிறார் ஷிவதா.
அப்போது, ஷிவதாவின் கடனை அடைப்பதாக கூறும் கலை தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். அதன்பிறகு, விபத்தில் சிக்கும் கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். 3 வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் கலைக்கு கண்பார்வையும் கிடைக்கிறது.
பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் கலை ஷிவதாவை தேடுகிறார். ஷிவதா குறித்த தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், ஜனனி ஐயருடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்தநேரத்தில் கலையை பார்க்க வரும் ஷிவதாவின் தந்தை அவளை கடன் கொடுத்தவர்கள் கடத்தி வைத்திருப்பதாக கூறுகிறார்.
பின்னர் ஷிவதாவை காப்பாற்ற செல்லும் இடத்தில் ஷிவதாவின் தந்தை கொலை செய்யப்பட்டு, கொலைப்பழி சுமத்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் கலை வீட்டிலேயே தஞ்சமடைகிறார். அப்போது ஒருநாள் டிவியில் ஷிவதாவின் தந்தை விபத்தில் இறந்ததாக வரும் செய்தியை பார்க்கும் கலை, இந்த சம்பவம் குறித்த அறிந்துகொள்வதற்கு களத்தில் இறங்குகிறார். அவருக்கு துணைாக போலீஸ் அதிகாரியாக பாலசரவணன் வருகிறார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பர்களை கண்டுபிடித்து கலை ஷிவதாவை காப்பாற்றுகிறாரா, ஜனனி ஐயருடன் திருமணம் செய்கிறாரா என்பது படத்தின் சுவாரஸ்யமான த்ரில் கதை.
கலையரசன் தனக்குரிய கதாபாத்திரத்தில் தேவைக்கேற்ப துல்லியமாக நடித்துள்ளார். குறிப்பாக கண்பார்வையற்றவராக குறைவான நேரங்களே வந்தாலும், அந்த காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டப்படும்படி உள்ளது.
ஜனனி ஐயர் தனக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்க்கிறது.
தனித்துவமான படங்களை தேர்தெடுத்து நடிக்கும் ஷிவதா நாயர் இப்படத்திலும் தனக்குரிய கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளார். முதல் பாதியில் காதல் காட்சிகளில் புன்சிரிப்புடன் வரும் ஷிவதா, இரண்டாவது பாதியில் மிரட்டியுள்ளார். அழகான சொர்ணாக்காவாக அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
கதைக்கு தேவையான இடத்தில் வரும் பாலசரவணன் அவரது நடிப்பிலும், காமெடியிலும் எப்போதும் போல கலக்கியிருக்கிறார்.
இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் தேவையில்லாத காட்சிகளை திணிக்காமல் கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே படமாக்கியிருப்பது சிறப்பு. குறிப்பாக ஷிவதாவின் கதாபாத்திரத்திரத்தை மிரட்டலாக கொடுத்திருப்பது மிகச்சிறப்பு.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் காதிற்கு இனிமையான உள்ளது. படத்தின் பின்னணி இசை, குறிப்பாக ஷிவதா வரும் காட்சிகளில் பாடலோடு வரும் பின்னணி இசை அனைவரையும் கவரும்படி இருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவளர் ரவிவர்மன் நீலமேகம் காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், அதே கண்கள் ரசிக்க வைக்கிறது.

ஹிருத்திக் ரோஷன் - யாமி கவுதம் நடிப்பில் இந்தியில் வெளிவந்த ‘காபில்’ என்ற படம் ‘பலம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. இந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
நாயகன் ஹிருத்திக் ரோஷன் பார்வையற்றவர். இருந்தும், இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். காதால் கேட்டு, அந்த கதாபாத்திரத்து ஏற்ப டப்பிங் கொடுக்கும் திறமை பெற்றவர். இவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடைபெறும்போது, கண் தெரியாத யாமி கவுதமின் அறிமுகம் கிடைக்கிறது. தனக்கு கண் தெரியாத சூழலில் கண் தெரியாத ஒருவரை எப்படி திருமணம் செய்துகொள்வது என்று யாமி கவுதம் யோசிக்கிறார்.
ஆனால், ஹிருத்திக் ரோஷன் அவளிடம் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவருடைய திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அரசியல் பிரமுகர் ஒருவரின் தம்பியால் இவர்கள் குடும்பத்துக்குள் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
அந்த அரசியல் பிரமுகரின் தம்பி இவர்கள் இருவருக்கும் கண் தெரியாது என்பதை அறிந்துகொண்டு, ஒருநாள் ஹிருத்திக் ரோஷன் வீட்டில் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து யாமி கவுதமை பலாத்காரம் செய்துவிடுகிறார். இதுகுறித்து அறிந்த ஹிருத்திக் ரோஷன் போலீஸ் நிலையத்தை நாடுகிறார். போலீசோ அரசியல் புள்ளியின் தம்பி இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளாமல், அதற்குண்டான ஆதாரங்களையெல்லாம் அழித்துவிடுகிறார்கள்.
இதனால், மனமுடைந்த ஹிருத்திக் ரோஷன் வீட்டில் ரொம்பவும் மவுனமாகவே இருக்கிறார். தன்னை இரண்டு பேர் கற்பழித்துவிட்டார்கள் என்பதால்தான் ஹிருத்திக் ரோஷன் அதுபோல் இருப்பதாக நினைக்கும் யாமி கவுதம், அவனிடமிருந்து பிரிந்து செல்வதாக கூறுகிறாள். அதற்கும் ஹிருத்திக் ரோஷன் அமைதியாகவே இருக்கிறார்.
மறுநாள், ஹிருத்திக் ரோஷன் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது யாமி கவுதம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துகிடக்கிறாள். அவள் ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்று யோசிக்கும் ஹிருத்திக் ரோஷனுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் தகவல்கள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இறுதியில், அவள் எதற்காக தற்கொலை செய்துகொண்டாள்? தனது மனைவியை பலாத்காரம் செய்தவர்களை ஹிருத்திக் ரோஷன் கண் தெரியாத சூழ்நிலையில் எப்படி பழிவாங்கினார்? என்பதே மீதிக்கதை.
ஹிருத்திக் ரோஷன்தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. அவருடைய சினிமா பயணத்தில் இந்த படத்தில்தான் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. படத்தின் ஆரம்பத்தில் ஹிருத்திக் பயங்கரமான டான்ஸ் ஒன்றை ஆடியிருப்பார். கண் தெரியாத ஒருவரால் கவனம் சிதறாமல் சிறப்பாக ஆடமுடியும் என்பதை இந்த பாடலில் ஆடி நிரூபித்திருப்பார் ஹிருத்திக். அந்த பாடலில் இவருடைய ஆட்டத்தை பார்க்கும்போது நமக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்தமுறை ஹிருத்திக் ரோஷனுக்கு ஹிட் படம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தோடு இந்த படம் வெளிவந்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு இருப்பதால், ரசிகர்கள் தனது ஹீரோவை மாஸாக பார்க்கத்தான் எண்ணுவார்கள். ஆனால், ஹிருத்திக் அதையெல்லாம் உடைத்தெறிந்து எந்தவித அலட்டலும் இல்லாமல், ஒரு எதார்த்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது துணிச்சலான காரியம்தான். அவருடைய துணிச்சல் கண்டிப்பாக கைகொடுத்திருக்கிறது எனலாம்.
யாமி கவுதம் கண் தெரியாதவராக வந்தாலும் பார்க்க அழகாகவே இருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஹிருத்திக்-யாமி கவுதம் இருவருக்குமுண்டான காதல் காட்சிகளும் அழகாக இருக்கிறது. மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் சஞ்சய் குப்தா, ஹிருத்திக் ரோஷனுடன் முதன்முதலாக கைகோர்த்திருக்கிறார். இந்திய சினிமாவுக்கு அதரபழசான பழிவாங்கும் கதை என்றாலும், அதை எப்படி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார் என்பது பெரிய ஆவலாக இருந்தது. அந்த ஆவலை பூர்த்தி செய்திருக்கிறார். சஞ்சய் குப்தா, கொரியன் படங்களை தழுவியே பெரும்பாலான படங்களை எடுத்திருக்கிறார். அதேபோல் இந்த படத்தையும் ரொம்பவும் திரில்லிங்காகவே கொண்டு போயிருக்கிறார். பழிவாங்கும் கதைகளுக்கு உண்டான வழக்கமான காட்சியமைப்புகளே இருப்பதால், தொடர்ந்து ரசிக்கமுடியவில்லை. முதல் பாதி ரொம்பவும் மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதி கொஞ்சம் விறுவிறுப்படைகிறது.
ராஜேஷ் ரோஷன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பழைய கிளாசிக் பாடல்களை ரீமேக் செய்திருப்பது பெரிதாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளும் நம்பும்படியாக இல்லை. சுதீப் சாட்டர்ஜியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘பலம்’ நிறைவு.

2012-ஆம் ஆண்டு தெலுங்கில் ‘6’ என்ற பெயரில் ஜெகபதி பாபு நடித்து வெளிவந்த படமே தற்போது ‘சூரக்கோட்டை மர்மம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் 12 மணி நேரம்தான் ஒருநாள் கணக்கு. அவர்கள் காலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தால் மாலை 6 மணிக்குள் அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிடவேண்டும். அப்படி யாராவது 6 மணிக்கு மேல் வெளியே சுற்றித் திரிந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள்.
இப்படியான மர்மங்கள் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்தான் நாயகன் ஜெகபதி பாபு. இவர் ஐ.ஏ.எஸ். படிப்பு முடித்துவிட்டு அந்த ஊருக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நினைக்கிறார். ஆனால், இவர் படித்து முடித்தவுடன் எதிர்பாராதவிதமாக இறந்துபோகிறார்.
நிறைவேறாத ஆசைகளுடன் இவர் இறந்துபோன பிறகுதான் அந்த ஊரில் மாலை 6 மணிக்கு மேல் இறக்கின்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கிறது. இதனால் கிராம மக்களின் சந்தேகம் இவர்கூடவே வலம் வரும் நாயகி காயத்ரி ஐயர் மேல் விழுகிறது. உண்மையில், இந்த சம்பவங்களுக்கெல்லாம் யார் காரணம்? ஜெகபதிபாபு உண்மையில் இறந்துவிட்டாரா? என்பதை பிற்பாதியில் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் நாயகன் ஜெகபதி பாபுதான் படத்தில் இவரது முகத்தை வெறும் 15 நிமிடங்கள்தான் பார்க்க முடிகிறது. மற்றபடி, இவரது முகத்தை பார்க்கமுடியவில்லை. அதனால், இவரை நம்பி போனவர்களுக்கு படத்தில் மிகப்பெரிய ஏமாற்றம்தான். நாயகி காயத்ரி ஐயர் படத்தின் முக்கால் பாகம் நிறைந்திருக்கிறார். கதைப்படி இவர் கிராமத்து பெண். ஆனால், படம் முழுக்க கிளாமர் உடையிலேயே இயக்குனர் வலம்வர வைத்திருப்பது ஏனோ தெரியவில்லை.
வில்லனாக வரும் பள்ளிரெட்டி புருதிராஜ் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் பலவீனமானவர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருப்பவர்கள் யாரும் மனதில் நிற்கவில்லை. ரொம்பவும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் லிங்காத். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இந்த படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா? என்றால் சந்தேகமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கிறது.
ரவி வர்மாவின் இசையிலும் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. லேகா ரத்னகுமாரின் பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். பிரபா கரணின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘சூரக்கோட்டை மர்மம்’ புரியவில்லை.

இயக்குநர் யுரேகா- சாண்ட்ரா எமி இணைந்து நடித்துள்ள சிவப்பு எனக்கு பிடிக்கும் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்க்கலாம்.
சென்னையில் எழுத்தாளராக வரும் யுரேகா புத்தகம் ஒன்றை எழுத முடிவு செய்கிறார். சிவப்பு விளக்கு பகுதியை மையமாகக் கொண்ட ஒரு புத்தகத்தை எழுத நினைக்கும் யுரோகா அதற்காக விலைமாது ஒருவரை நேர்க்காணல் செய்ய விரும்புகிறார்.
இதற்காக சிகப்பு விளக்கு பகுதிக்கு செல்லும் யுரேகா, அங்கு வாழும் பெண்ணாண சாண்ட்ராவிடம், அவரது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை கேட்கிறார். குறிப்பாக சிவப்பு விளக்கு பகுதியில் சாண்ட்ரா சந்தித்த வித்தியாசமான மற்றும் மாறுபட்ட மனிதர்கள் பற்றியும் அவர்களால் சாண்ட்ரா அனுபவித்த கஷ்டங்கள் குறித்தும் கேட்கிறார்.
இதில் தனது வாழ்க்கையில், மறக்க முடியாததாக 5 மனிதர்கள் பற்றி சாண்ட்ரா விவரிக்கிறார். ஒரு இளைஞர், டாக்டர், சாமியார், திருநங்கை, தீவிரவாதி உள்ளிட்ட 5 பேரால் தான் அனுபவித்த கொடுமைகளை விவரிக்கும் சாண்ட்ரா, காவல் அதிகாரியின் மாமூல் தொல்லை குறித்தும் கவலை தெரிவிக்கிறார்.
சென்னையில் தினமும் பல்வேறு வகையான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக பாலியல் தொல்லை, கள்ளத்தொடர்பு,
விபசாரம், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளே அதிகளவில் பதியப்படுகிறது. இதற்கு தீர்வு காண சென்னையில் சிகப்பு விளக்கு பகுதியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் யுரேகா, அவ்வாறு சிகப்பு விளக்கு பகுதியை உருவாக்குவதன் மூலம் குற்றங்கள் குறையும் என்றும் நம்புகிறார்.
இந்தியாவில் மும்பை உட்பட ஒரு சில மாநிலங்களில் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ளன. அதேபோல் சென்னையில் சிவப்பு விளக்கு பகுதியை அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் யுரோகா.
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள், பெரியவர்கள் என பலர் கல்வி, வேலைவாய்ப்புக்காக சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் உணர்ச்சி மிகுதியால் செய்யும் தொல்லையால், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க சிவப்பு விளக்கு பகுதியை சென்னையில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யும் யுரோகா, இதன்மூலம் ரவுடி, தொழிலதிபர்கள் மூலம் தொல்லைக்குள்ளாகும் விலைமாதுக்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் நம்புவது சிறப்பு.
படத்தில் யுரேகா, சாண்ட்ரா எமியை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அனைவரும் அவர்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். தணிக்கைக்குழுவில் ஏ சான்றிதழ் பெற்றாலும்,இப்படம் காமம், கவர்ச்சி, பாலியல் உள்ளிட்ட காட்சிகளின்றி அமைந்துள்ளது.
எழுத்தாளராக நடித்துள்ள யுரேகா அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார். எழுத்தாளருக்கு தேவையான கேள்விகளுடனும், கிண்டலுடனும் படத்தில் வலம் வருகிறார்.
அதே போல் சிவப்பு விளக்கு பகுதியில் வரும் பெண்ணாக நடித்துள்ள சாண்ட்ராவும் படம் முழுவதும் கவர்ச்சி, காமம் இன்றி திரையில்
வலம்வருகிறார்.
மேலும், படம் முழுவதும் கவர்ச்சி, காமம், பாலியல் போன்ற காட்சிகள் இல்லாமல் சிறப்பான திரைக்கதையை அமைத்திருப்பது யுரேகாவின் நேர்த்தியான இயக்கத்தை காட்டுகிறது. பாலியல் சம்பந்தமான எந்தவித காட்சிகளின்றியும் யுரேகா படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் சிவப்பு எனக்கு பிடிக்கும் சிவப்பு பகுதி வேண்டி சிவப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட புதுமையான கதை.

பார்த்திபன்-சாந்தனு-பார்வதி நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
சென்னையில் டிராவல்ஸ் கம்பெனியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் பார்த்திபன். இவருக்கு ஒருநாள் வெளிநாட்டில் இருந்து வரும் சாந்தனுவின் அறிமுகம் கிடைக்கிறது. சாந்தனுவை பற்றி நன்கு தெரிந்திருக்கும் பார்த்திபன், அவரை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பங்களாவில் தங்க வைக்கிறார். சாந்தனுவும் பார்த்திபனின் பேச்சில் மயங்கி, அவர் சொல்லும் இடத்திலேயே தங்க முடிவு செய்கிறார்.
அந்த பங்களாவில் பணிபுரியும் பார்வதி நாயரை பார்த்தவுடனே சாந்தனுவுக்குள் ஒருவித ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவளும் சாந்தனுவிடம் நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள். ஒருகட்டத்தில் பார்த்திபனின் மனைவிதான் பார்வதி நாயர் என்பது சாந்தனுவுக்கு தெரிய வருகிறது.
பார்த்திபனின் வயதுக்கும், பார்வதி நாயரின் வயதுக்கும் ஒத்துப்போகாத நிலையில், இந்த திருமணம் எப்படி நடந்தது? என்று சாந்தனு கேட்கையில், அதற்கு பார்த்திபன், தான் சிறுவயதிலிருந்தே பார்வதி நாயரை தூக்கி வளர்த்ததாகவும், அவளுக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோன நிலையில், வேறு வழியின்றி சிறுவயதிலிருந்து தனக்கு ஆதரவளித்த பார்வதி நாயருடைய அம்மாவுக்கு நன்றிகடன் செலுத்தும்வகையில் அவளை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு நடந்த ஒரு விபத்தில் தனக்கு காலில் அடிபட்டதையும், இதையடுத்து, தாம்பத்ய ரீதியாக தனது மனைவியை திருப்திபடுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட வேதனையையும் சொல்லி முடிக்கிறார்.
இதையெல்லாம் பொறுமையாக கேட்ட சாந்தனு, அவர் மீது இரக்கப்படுவதா? அல்லது வேதனைப்படுவதா? என்ற நிலைமையில் இருக்கிறார்.
இந்நிலையில், அடிக்கடி பார்வதி நாயருக்கு வலிப்பு வருவதும், அதற்காக அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதையும் சாந்தனு அறிகிறார். ஒருமுறை வலிப்பு வரும்போது அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார், சாந்தனு. அந்த நேரத்தில் சாந்தனுவிடம், மருத்துவர் அவள் தாம்பத்யத்தில் முழு திருப்தி கிடைக்காததால்தான் வலிப்பு வருவதாக கூறுகிறார்.
இதையெல்லாம் கேட்ட சாந்தனு இதற்கு என்ன முடிவெடுத்தார்? சாந்தனுவை பார்த்திபன் தன்னுடனே தங்க வைக்க காரணம் என்ன? என்பதற்கெல்லாம் பிற்பாதியில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
பார்த்திபன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். வெறுமனே நடிக்கவேண்டும் என்பதைவிட இப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பார்த்திபனின் வழக்கமான நக்கல், நையாண்டி வசனங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைக்கிறது.
இப்படத்தின் நாயகன் சாந்தனு என்பதைவிட, அவரைவிட அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி பார்வதி நாயர். கடைசிவரை இவருடைய கதாபாத்திரம் மர்மமாகவே செல்வது சிறப்பு. அவருடைய தோற்றத்தை விட, நடிப்பு பிரமாதமாக இருக்கிறது.
சாந்தனு, இப்படத்தில் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். நடனத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வந்துபோனாலும் சிம்ரன் ரசிக்க வைத்திருக்கிறார். தம்பிராமையாவின் காமெடி வழக்கம்போல்தான் என்றாலும், ஒருசில இடங்களில் அதிகமான முகபாவனைகளை கொடுத்து ரசிக்க விடாமல் செய்துவிடுகிறார்.
இந்தப் படம் முற்றிலும் புதுமையமான கதைக்களம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு, வேறு கோணத்தில் யோசித்து எடுக்கப்பட்ட கதையென்று சொல்லிவிட முடியும்.
ஏனென்றால், இந்தப் படத்தில் கதையைவிட, வசனங்கள், திரைக்கதை, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தன்மை என அனைத்தும் அருமையாக அமைந்துள்ளது. அவ்வப்போது கொஞ்சம் கிளாமரான காட்சிகளும் வந்துபோகிறது. குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு எதையும் அளவுக்கு மீறி கொண்டு செல்லாமல் அழகாக சொல்லியிருக்கிறார், பார்த்திபன்.
கதாபாத்திரங்களின் போக்கு வேறுவிதமாக இருந்தாலும், அது சரியென்று சொல்லும்படி முடிவை வைத்திருந்தாலும், குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாத ஒரு படத்தை பார்த்திபன் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
சத்யாவின் இசையமைப்பில் பாடல்கள் சுமார் ரகம்தான். ‘டமுக்காட்டலாம் டமுக்காட்டலாம்’ பாடல் கேட்பதற்கு மட்டும் குதூகலம் கொடுத்திருக்கிறது. அதை தனது நடனத்தினால் மேலும் மெருகேற்றியிருக்கிறார் சாந்தனு. அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ முழுமையடைந்து விட்டது.

ஹாலிவுட்டில் XXX பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவந்துள்ள ‘தி ரிட்டன் ஆப் ஸேண்டர் கேஜ்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
வானில் இருந்து செயற்கைகோள் ஒன்று எரிந்து பூமியில் விழுகிறது. இந்த செயற்கைகோள் எப்படி கீழே விழுந்தது என்பது குறித்த ஆய்வில் முக்கியமான தலைவர்கள் எல்லாம் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ஒரு கருவி மூலமாக அந்த செயற்கைகோள் செயலிழக்கச் செய்யப்பட்டு பூமியில் வீழ்த்தப்பட்டதாக தெரிய வருகிறது.
எரிந்து பூமியில் விழுந்த செயற்கைக்கோளுடன் இருந்த அந்த கருவியை வைத்து, அந்த கருவியை யார் செய்திருப்பார்கள்? யார் இந்த நாச வேலையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று உயர்மட்ட விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்தநேரத்தில், இவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அந்த கருவியை திருடி சென்றுவிடுகிறார்.
இந்நிலையில், அந்த கருவியை கண்டுபிடிப்பதற்காக வின் டீசல் தலைமையில் XXX குழுவை களமிறக்க அமெரிக்கா ராணுவம் முடிவு செய்கிறது. XXX குழுவில் இருந்து விலகி இருக்கும் வின் டீசல், நாட்டின் பாதுகாப்பு குறித்த பிரச்சினைக்காக இந்த குழுவில் இணைகிறார். வின் டீசலுடன் மேலும் 3 பேர் XXX குழுவில் இணைகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சக்திகள் உண்டு.
இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து கருவியை திருடிச் சென்றவர்களை தேடி புறப்படுகின்றனர். கருவியை திருடியவர்கள் ஒரு தீவில் இருப்பதை அறிந்து அங்குபோய் சேருகிறார்கள். அங்கு சென்றபிறகுதான் ஏற்கெனவே, XXX குழுவில் இருந்தவர்களான டோனி ஜா, தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர்தான் இந்த கருவியை திருடியதாக தெரிகிறது. அவர்கள் எதற்காக இந்த கருவியை திருடினார்கள்? அவர்கள்தான் செயற்கைகோளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார்களா? அல்லது வேறு யாருக்கும் இதற்கு தொடர்பு இருந்ததா? என்பதே கண்டுபிடித்து, அதை அழிப்பதே மீதிக்கதை.
XXX படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான காட்சிகளும் நினைவுக்கு வரும். அதேபோல், இந்த படத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. XXX படவரிசையில் முதல் பாகத்தில் நடித்தபிறகு, தற்போது மூன்றாம் பாகத்தில் நடித்திருக்கிறார் வின் டீசல். இரண்டாம் பாகத்தில் இவர் இல்லையென்ற குறையை மூன்றாம் பாகத்தில் அவர் பூர்த்தி செய்திருக்கிறார். அவருடைய உடல் வாகு, அதற்கேற்ற ஆக்ஷன் காட்சிகளெல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
தீபிகா படுகோனேவுக்கு ஹாலிவுட்டுக்கு புதிது என்றாலும், ஆக்ஷன் காட்சிகளெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஹாலிவுட் நடிகைகளுக்கு போட்டி போடும் அளவுக்கு இவரது ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. இந்திய நடிகர், நடிகைகளுக்கு ஹாலிவுட்டில் இடம் கிடைத்தாலும், அவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படுவது கிடையாது. ஆனால், இந்த படத்தில் தீபிகா படுகோனேவுக்கு முதல் படமாக இருந்தாலும் நல்லதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவர்ச்சியிலும் ரொம்பவுமே தாராளம் காட்டியிருக்கிறார்.
முதல் இரண்டு பாகத்திலும் வந்த சாமுவேல் எல்.ஜாக்சன் இந்த பாகத்திலும் வந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். டோனி ஜா, டோனி யென் ஆகியோரும் சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது ஆக்ரோஷ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
படத்தின் கதை சாதாரணமாக இருந்தாலும், காட்சியமைப்புகளில் விறுவிறுப்பு, ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதால் படம் பார்க்கிறவர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாமல் செல்கிறது. அதை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் கருஷோ. குறிப்பாக, எதிரியிடம் பேசிக் கொண்டிருக்கும் வின் டீசல், தனது விரலை உயர்த்தி ஒன்று இரண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவரது விரல்களுக்கு இடையில் குண்டு பாய்ந்து எதிரி வீழ்வது எல்லாம் ரசிகர்களை ஒருநொடியில் அதிர்ச்சியாக்கியிருக்கிறது.
படத்தில் நிறைய காட்சிகள் நிஜவாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தாலும், அதை பார்க்கும்போது நமக்கே வியக்க வைக்கும் வண்ணம் தத்ரூபமாக காட்சிப்படுத்தியருப்பது சிறப்பு.
மொத்தத்தில் 'XXX தி ரிட்டன் ஆப் ஸேண்டர் கேஜ்' ஆக்ஷன் பிரியர்களுக்கு சரியான விருந்து.

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள ‘பச்சைக்கிளி பரிமளா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
நாயகன் தாமோதரன் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில், மாடர்ன் பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொண்டு, அவளுடன் உல்லாசமாக குடும்பம் நடத்தி வருகிறார் நாயகன். இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையிலேயே, நாயகனின் மனைவிக்கு இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இவரை விட்டு ஓடிவிடுகிறாள்.
மனைவி தன்னை பிரிந்த சோகத்தில் குடியே கதியென்று கிடக்கிறார் நாயகன். அப்போதுதான் விபச்சார தொழில் செய்யும் நாயகி சக்தி ஸ்ரீயின் அறிமுகம் நாயகனுக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே, கணவனை பிரிந்து வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் விழுந்த சக்திஸ்ரீக்கு, தாமோதரனின் வலி புரியவே, அவரை அரவணைத்து ஆதரவு கொடுக்கிறாள்.
சக்தி ஸ்ரீயின் அரவணைப்பும், ஆதரவும் தாமோதரனுக்கு நிம்மதியை கொடுக்கவே, குடிப்பழக்கத்தில் இருந்து விலகுகிறார். இதேவேளையில், நாயகனின் நண்பரும் மாடர்ன் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார். ஆனால், அவருக்கோ கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
தனக்கு மாடர்ன் பெண் கிடைக்காத விரக்தியில், தனக்கு மனைவியாக வந்த கிராமத்து பெண்ணை மாடர்ன் பெண்ணாக மாற்ற முயற்சிக்கிறார் நாயகனின் நண்பர். அந்த முயற்சி அவருக்கு எந்தவிதமான வலிகளை கொடுத்தது. தாமோதரன்-சக்திஸ்ரீயின் உறவு எந்த நிலைமைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் நாயகன், நாயகி முதற்கொண்டு அனைவரும் புதுமுகங்கள் என்பதால் யாரிடமும் அவ்வளவாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. அவரவர் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாடர்ன் பெண்ணை நம்பி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என்ற சமூக அக்கறையோடு இந்த படத்தை எடுத்திருக்கிறார். நாகரீக வாழ்க்கைக்கும், புதுவிதமான வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு செல்லும் இளைஞர்களின் வலியை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். ஆனால், அதை சரியான காட்சியமைப்பு இல்லாமல் படமாக்கியிருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. சிறு பட்ஜெட் படமென்பதால் நடிகர், நடிகைகள் தேர்விலும் அதிகம் கவனம் செலுத்த தவறியிருக்கிறார்.
குபேரன் இசையில் பாடல்களை ரசிக்க முடியவில்லை. பின்னணி இசையும் இரைச்சல்தான். கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் குளுமை சேர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘பச்சைக்கிளி பரிமளா’ பறக்கவில்லை.