என் மலர்tooltip icon

    கிசுகிசு

    நடிகைகள் சிலபேர் கார் ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறார்களாம். அது எதற்காக என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    மூன்றெழுத்து நடிகை சமீபத்தில் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது சில சமூக விரோதிகளால் மானபங்கபடுத்தப்பட்ட செய்தி சினிமா உலகில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது எனலாம். மூன்றெழுத்து நடிகை வெளியிட்ட இந்த அதிர்ச்சி தகவலையடுத்து, தொடர்ந்து பல நடிகைகளும் தங்களுக்கு அதுபோல் நடந்துள்ளதாக வெளியிட்டு வரும் செய்தி, மேலும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    இதனால், நடிகைகள் பலரும் படப்பிடிப்பு தளத்திலிருந்து அனுப்பப்படும் கார்களில் பயணிக்க ரொம்பவுமே தயக்கம் காட்டுகிறார்களாம். மேலும், தாங்களே கார்களை இயக்குவது என்று சில நடிகைகள் முடிவு செய்துள்ளார்களாம். நடிகைகள் அனைவரும் யாரை நம்புவது என்று முழி பிதுங்கி நிற்கிறார்களாம்.

    கார் ஓட்டத்தெரியாத நடிகைகள் தற்போது கார் ஓட்டுவதற்கு பயிற்சி எடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால், அங்கேயும் ஏதாவது நடந்துவிடுமா? என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறதாம். இதனால், ஒருசில நடிகைகள் தனக்கு நெருக்கமானவர்களை கார் ஓட்டுநர்களாக நியமித்துக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.
    தன்னுடைய குடும்பத்துக்காக பெரிய நடிகரின் படங்களில் நடிக்க ஒரு நடிகை மறுத்துள்ளார். அது யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    காட்டுக்கே ராஜாவான நடிகர், சில்லென்று காதலித்த நடிகையை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிகையை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிஷனோடுதான் திருமணம் செய்துகொண்டார். ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது மனைவியை மீண்டும் சினிமாவில் நடிக்க ஒப்புதல் வழங்கினார் காட்டு ராஜா நடிகர்.

    கணவரின் ஒப்புதலுடன் மீண்டும் சினிமாவுக்குள் பிரவேசம் செய்த நடிகைக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து வாய்ப்புகளும் அவருக்கு குவியத் தொடங்கியது. இந்நிலையில்தான், தளபதி நடிகரின் புதிய படத்தில் சில்லென்ற நடிகை நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி நடிகருடன் சேர்ந்து நடிப்பதில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தார் அந்த நடிகை.



    ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென நடிகை அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். காரணம் கேட்டபோது, அது, இது என்று சொல்லி மழுப்பினார். இந்நிலையில், நடிகை தற்போது அந்த படத்திலிருந்து விலகியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

    அதாவது, மறுபடியும் நடிகை சினிமாவில் நடிக்க நுழையும்போது, யாருடனும் ஜோடியாக டூயட் பாடுவதோ, ஒட்டி உரசி நடிப்பதோ கூடாது என்ற கண்டிஷனோடுதான் அவரது காதல் கணவர் நடிக்க ஒப்புதல் வழங்கினாராம். அதை ஒப்புக்கொண்டே நடிகையும் சினிமாவில் மறு பிரவேசம் செய்துள்ளாராம்.

    ஆனால், தளபதி நடிகரின் படத்தில் நடிகருடன் சேர்ந்து டூயட் பாடுவதுபோல் எல்லாம் காட்சிகள் இருப்பதால்தான் அப்படத்தில் நடிகை நடிக்க குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பவே அதிலிருந்து அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
    நடிகை ஒருவர் தனது கணவரை கழட்டிவிட்டு நண்பருடன் எல்லை மீறி நடந்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    பட்டதாரி நடிகை, இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். யார் கண் பட்டதோ, இந்த காதல் ஜோடியின் காதல் திருமணம் ஒரு வருடம் முடிவதற்குள்ளேயே கசந்து போனது. இந்நிலையில், இருவரும் தற்போது பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

    கணவருடனான பிரிவுக்கு பிறகு பட்டதாரி நடிகை தற்போது சுதந்திரமாக வலம் வருகிறாராம். எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால் வெளிநாடுகளுக்கு சென்று தனது நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறாராம். அப்படி ஒரு ஆண் நண்பருடன் இவர் எல்லை மீறி நடந்துகொண்டதுபோல் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த ஆண் நண்பரின் கன்னத்தில் நடிகை முத்தம் கொடுப்பதுபோன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சினிமாவில் நடிகர்களுடன் நெருங்கி நடிக்கும் நடிகைகளுக்கு இது பெரிய விஷயம் இல்லையென்றாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வாறு நடிகை எல்லை மீறி, எல்லோருக்கும் வெளிப்படையாக தெரியும்படி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
    முன்னணி நடிகைகளில் ஒருவர் தனது தோற்றத்தால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறாராம். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    இரண்டு உலகத்தில் வாழ்ந்து வந்த நடிகை ஆரம்பத்தில் இஞ்சி இடுப்பழகியாக வலம் வந்தார். ஆனால், ஒருகட்டத்தில் தன்னுடைய நடிப்பில் தன்னுடைய அர்ப்பணிப்பு அதிகமாக இருக்கவேண்டும் என்று நினைத்த நடிகை, அந்த படத்துக்காக தனது உடல் எடையை அதிகரித்தார். ஆனால், எந்த நேரத்தில் அவர் உடல் எடையை ஏற்றினாரோ, அதற்குபின் அவரால் அந்த உடல் எடையை குறைக்கவே முடியவில்லை.

    இவர் உடல் எடையை ஏற்றி நடித்த அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு கைகொடுக்கவில்லை. அப்போதைக்கு பெரிய பட்ஜெட்டுடன் உருவாகிவந்த பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் நடிகைக்கு அவசர அழைப்பு வந்ததால், தடபுடலாக தனது உடல் எடையை குறைக்கும் முடிவில் களமிறங்கினார்.

    அதன்பிறகு, அந்த பிரம்மாண்ட படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அந்த நடிகை ரொம்பவும் ஒல்லியாக முன்பு இருந்ததுபோல் காட்சியளித்தார். அதைப் பார்த்தது ரசிகர்கள் அனைவருக்கும் திருப்தியை கொடுத்தது. இந்நிலையில், அந்த நடிகை நடித்த படம் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

    இதில் அந்த நடிகையின் தோற்றம், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டருக்கு நேருக்கு மாறாக இருக்கிறதாம். உடல் எடையை கூட்டி ஆன்ட்டி நடிகை போல் தோற்றமளித்தவர், தற்போது இந்த படத்தில் ஆன்ட்டிக்கு அக்கா மாதிரியான தோற்றத்தில் இருக்கிறாராம். இவருடைய தோற்றத்தை பார்த்துதான் இந்த படத்தின் இயக்குனரே அவருக்கு சில காட்சிகள் வைத்தாராம்.

    இதனால், பிரம்மாண்ட படத்தின் போஸ்டரில் அந்த நடிகையின் புகைப்படத்தை கிராபிக்ஸ் முறையில் மாற்றியிருப்பார்களோ என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி, ஒவ்வொரு படத்துக்கும் தன்னுடைய தோற்றத்தால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வரும் நடிகை, எப்போது முற்றுப்புள்ளி வைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. 
    தன்னுடைய படத்துக்கு முன்கூட்டியே தலைப்பு வைக்கக்கூடாது என்று நடிகர் ஒருவர் முரண்டு பிடிக்கிறாராம். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    முன்பெல்லாம் ஒரு படத்துக்கு தலைப்பு தேர்வு செய்தபிறகுதான் அந்த படத்தின் படப்பிடிப்பையே தொடங்குவது என கோலிவுட்டில் ஒரு சம்பிரதாயமாக இருந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் தலைப்பு தேர்வு செய்யாமலேயே படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

    அப்படி தொடங்கும் படங்களின் தலைப்பாக அந்த நடிகருக்கு அது எத்தனையாவது படம் என்ற எண்ணிக்கையையும் அந்த நடிகரின் பெயரையும் இணைத்தே அழைத்து வருகிறார்கள். இதை தற்போது இரண்டு முக நடிகரும் பின்பற்ற முடிவு செய்திருக்கிறாராம்.

    பொதுமாக இரண்டு முக நடிகர் ஒப்பந்தமாகும் படங்கள் அனைத்துக்கும் முன்கூட்டியே தலைப்பு வைக்கப்பட்டு விடும். இதனால், அவருடைய படம் எந்த பரபரப்பும் இல்லாமல் உருவாகி, அது சத்தம் இல்லாமலேயே வெளிவந்து, நடிகரின் மார்க்கெட்டை பின்னு தள்ளி வருகிறதாம்.

    இதை கருத்தில் கொண்ட இரண்டு முக நடிகர், இனிமேல், முன்னணி நடிகர்களைப் போலவே தன்னுடைய படத்துக்கும் தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பை தொடங்கி, அவர்களைப் போலவே தன்னுடைய படத்துக்கும் என்னுடைய பெயரை வைத்து ரசிகர்கள் அழைக்கட்டும் என்று விருப்பப் படுகிறாராம். இதனால், தானும் சினிமாவில் இருப்பதாக ரசிகர்கள் மனதில் பதியும் என்றும், தன்னுடைய படத்துக்கும் புரோமாஷன் கிடைக்கும் என்றும் நடிகர் நினைக்கிறாராம். 
    துரையம்மா நடிகைக்கு பிரம்மாண்ட இயக்குனர் ஒருவர் கட்டளை விடுத்துள்ளாராம். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    உச்ச நடிகர் தற்போது நடித்து வரும் பிரம்மாண்ட படத்தில் துரையம்மா நடிகைதான் ஹீரோயின். இவர் சமீபத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்த்த அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். அந்த அமைப்பில் இருக்கும் நடிகர், நடிகைகளின் நடிக்கும் படங்களை தமிழகத்தில் ஓடவிட மாட்டோம் என்று ஒருசாரார் கூறிவருவது தற்போது படக்குழுவுக்கு மிகப்பெரிய பயத்தை கொடுத்துள்ளதாம்.

    இந்த விஷயம் பிரம்மாண்ட இயக்குனரின் காதுகளுக்கு செல்ல, துரையம்மா நடிகையை வரவழைத்து, படம் வெளியாகி, ஓடி முடிக்கிற வரைக்கும் அந்த அமைப்பில் இருந்து விலகி இருக்குமாறு கட்டளையிட்டுள்ளாராம். நடிகையும் வேறு வழியில்லாமல் தற்போது அந்த அமைப்பில் இருந்து விலகுவதற்கான வேலைகளில் களமிறங்கியுள்ளாராம்.
    ஆனந்தமான நடிகை ஒருவர் தனது உடல் எடையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    சினிமாவில் நடிக்க வரும்போது ரொம்பவும் ஒல்லியாக வரும் நடிகைகள், தொடர்ந்து வாய்ப்புகள் வரும்போது, தனது உடல் ஆரோக்கியத்திலும், உணவு கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்தாமல் கன்னா பின்னாவென்று தனது உடல் எடையை ஏற்றி விடுகின்றனர். உடல் எடை அதிகமான பிறகு, வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும்போதுதான் நடிகைகள் தங்கள் உடல் எடை மீது அக்கறை கொள்வார்கள்.

    இது இப்படியிருக்கையில், தற்போது ஒரு நடிகை ஒருவர் தனது உடல் எடையை கூட்ட முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, சுனாமியை மையமாக வைத்து வெளிவந்த மூன்றெழுத்து படத்தில் நடித்த ஆனந்தமான நடிகை தற்போது அவரது உடல் எடையை கூட்ட முயற்சித்து வருகிறாராம்.

    காரணம் கேட்டதற்கு, யாரோ சிலபேர் நடிகையிடன் கொழு கொழுவென்று இருந்தால்தான் சினிமாவில் வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள். இதை உண்மை என்று நம்பிய நடிகையும் தற்போது அதற்கான முயற்சியில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறாராம். நடிகையின் இந்த முயற்சி அவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 
    காதலித்து மணந்துகொண்ட நடிகையை பிரிவதற்கு பல காரணங்களை கூறிய இயக்குனர் ஒருவர் தற்போது புதிய காரணத்தை கூறியுள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    பட்டதாரி நடிகையும், சென்னை பட்டணத்து இயக்குனரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். யார் கண் பட்டதோ? இவர்கள் காதல் திருமணம் ஒரு வருடம் முடிவதற்குள்ளேயே முறிந்துபோனது. இந்த மண முறிவுக்கு நடிகை இயக்குனரின் பெற்றோரை மதிக்காமல் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதுதான் காரணம் என்று அப்போது கூறப்பட்டது.

    ஆனால், இவர்களின் பிரிவுக்கு தற்போது இயக்குனரே ஒரு காரணம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி பார்த்தால், இயக்குனர் தன்னுடைய பெற்றோர்களால்தான் என்னுடைய காதல் மனைவியை பிரிந்துவிட்டேன் என்று மனதார அழுது புலம்பியுள்ளாராம்.

    மேலும், தற்போது பெற்றோருடன் வசிக்காமல் அவர் தனிமையில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. இனிமேல் தன்னுடைய பெயருக்கு முன்னால் அப்பாவின் பெயரை இன்ஷியலாக போடமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில், நடிகையும் தனது காதல் கணவரை பிரிந்ததற்கு ரொம்பவும் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இவர்களின் தனிமை கூடிய விரைவில் இவர்களை சேர்த்துவிடும் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

    பிரபல நடிகை ஒருவர் தனது வருங்கால கணவருக்கு விலையுயர்ந்த பரிசு பொருள் ஒன்றை கொடுத்துள்ளாராம். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    சமத்தான நடிகையும் தெலுங்கில் முன்னணி நடிகரான ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவது ஊரறிந்த விஷயமே. இவர்கள் இருவருக்கும் விரைவில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்கவிருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் தங்களது படங்களில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது சந்திப்பு நடத்தி தங்களது காதலை இன்னும் பலப்படுத்தி வருகின்றார்களாம்.

    அப்படி நடைபெற்ற சமீபத்திய சந்திப்பு ரொம்பவும் பிரம்மாண்டமாய் அமைந்து போயிருக்கிறதாம். காரணம், தனது வருங்கால கணவருக்கு நடிகை 27 லட்ச ரூபாய் செலவில் விலையுயர்ந்த பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம். இதற்கான சாலை வரி மட்டும் ரூ.4.5 லட்சமாம். இவ்வளவு விலையில் தனது காதலி கொடுத்த பரிசை பார்த்து அந்த நடிகர் ரொம்பவும் வியந்து போனாராம்.

    தனக்கு இவ்வளவு விலையில் பரிசு கொடுத்த நடிகைக்கு, இதைவிட விலையுயர்ந்த பரிசு ஒன்றை கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம். ஆகையால், நடிகையை அசத்தும் அளவிலான பொருள் அதிக விலையில் இருக்கிறதா? என்று உலகம் முழுக்க தேடப் போகிறாராம். அவர் கொடுக்கப்போகும் பரிசு என்னவென்பதை அறிய திரையுலகமே ஆவலாக இருப்பதாக கூறப்படுகிறது. 
    பிரபல இசையமைப்பாளர் ஒருவர் ஆபாச வீடியோவில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளரின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்தாலும், அவரைச் சுற்றி அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆரம்பத்தில் உயரமான நடிகையுடன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தபடி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

    அதன்பிறகு, வம்பு நடிகருடன் சேர்ந்து ஆபாச பாடலுக்கு இசையமைத்து அதன்மூலம் பெண்களின் வசை வார்த்தைகளுக்கு ஆளானார். இப்போது, ஒரு பெண்ணுடன் அந்த இசையமைப்பாளர் படுக்கையறையில் உல்லாசமாக இருப்பதுபோன்ற வீடியோ ஒன்றை வெளியாகி அவருக்கு மேலும் தலைவலியை கொடுத்துள்ளது.

    இந்த இளம் இசையமைப்பாளர் தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தனது இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அங்குதான் இவர் இந்த படுக்கையறை கச்சேரியையும் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இவருடன் உல்லாசமாக இருக்கும் அந்த பெண் இவரது ரசிகை என்றும் கூறப்படுகிறது.

    இது ஒருபுறமிக்க, அந்த வீடியோவில் உள்ளது இசையமைப்பாளரே கிடையாது என்று ஒருபக்கம் செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது. இது வேண்டுமென்றே வேறு யாரோ கிளப்பிவிட்ட வீண் வதந்தி என்றும் ஒருசாரார் பேசுகின்றனர். 
    திருமணமான இயக்குனர் ஒருவருடன் நடிகை ஒருவர் நெருக்கமாக இருந்து வருகிறாராம். அந்த நடிகை யார்? அந்த இயக்குனர் யார் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற குளிர்பானத்தின் பெயரை தனது படத்தின் தலைப்பாக வைத்து எடுத்த இயக்குனரும், பெண் கடவுளின் பெயரை வைத்து அதே இயக்குனர் இயக்கிய படத்தில் நடித்த நடிகையும் கடந்த சில மாதங்களாகவே நெருக்கமான உறவில் இருந்து வருகிறார்களாம்.

    இருவரும் தற்போது பொது இடங்களில் ஒன்றாக சேர்ந்தே ஊர் சுற்றுகிறார்களாம். இயக்குனர் இதுவரை நல்ல படங்களாக கொடுத்திருப்பதால், தற்போது அந்த நடிகை ஒப்பந்தமாகும் படங்களுக்கெல்லாம் இயக்குனர்தான் கதை கேட்கிறாராம். இயக்குனர் கதை ஓகே சொன்னபிறகுதான் அந்த நடிகை அந்த கதையில் நடிக்க ஓகே சொல்கிறாராம்.

    சமீபத்தில்கூட ஒரு படத்தில் நடிக்க நடிகை ஒப்பந்தமாகி பிறகு சில காரணங்களை சொல்லிவிட்டு அந்த படத்தைவிட்டு வெளியே வந்துவிட்டாராம். இதற்கு தனது நெருங்கிய காதலரான இயக்குனர் அந்த படத்தில் நடிக்கவேண்டாம் என்று நடிகையிடம் சொன்னதே காரணம் என்றே சொல்லப்படுகிறது. 
    பிரபல நடிகை ஒருவரை குடிகாரி, குரங்கு என்று இயக்குனர் ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்பில் தான் இல்லை என்று மூணுஷா நடிகை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தாலும், அவருக்கு எதிர்ப்பு குறைந்தபாடில்லை. இதனால், டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகும் அளவுக்கு மூணுஷா நடிகை சென்றுவிட்டார் என்றால், எந்தளவுக்கு அவல் தொல்லைகளை சந்தித்திருப்பார் என்பதை நீங்கள்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

    இது இப்படியிருக்கையில், மூணுஷா நடிகைக்கு சினிமா உலகில் ஆதரவு இருந்து வருகிறது. ஆனால், ஒரேயொரு இயக்குனர் மட்டும் மூணுஷா நடிகையை ரொம்பவும் கண்டித்து பேசியுள்ளார். அவர் பிரகாஷமான நடிகரை வைத்து அடங்காத ஒரு படத்தை எடுத்து வருபவர். இவர், ஒருபடி மேலே போய் மூணுஷாவை குடிகாரி என்றும் குரங்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த செய்தி இன்னும் மூணுஷாவின் காதுகளுக்கு சென்றதாக தகவல் இல்லை. தற்போது மூணுஷா நடிகையின் டுவிட்டர் கணக்கு முடங்கியுள்ளதால் அவருக்கு தெரியாத சூழ்நிலை நிலவியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல் மூணுஷாவின் காதுகளுக்கு சென்றால் அவர் என்ன முடிவெடுப்பார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 
    ×