என் மலர்tooltip icon

    கிசுகிசு

    இளம் இயக்குனர் ஒருவர் கேட்ட சம்பளத்தால் தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் அதிர்ந்து போயுள்ளது. அது குறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    தளபதி நடிகரை வைத்து தெறிக்கவிட்ட இயக்குனர் தனது அடுத்த படத்தையும் தளபதி நடிகரை வைத்து இயக்கவுள்ளது அனைவருக்கும் தெரிந்ததுதான். முந்தைய படத்தை ஹிட் படமாக கொடுத்துவிட்டதால் இந்த படத்திற்கு தனது சம்பளத்தை முந்தைய படத்தைவிட உயர்த்தி கேட்க இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். அதன்படி, தயாரிப்பு நிறுவனத்திடம் தனது சம்பளத்தை ரூ.15 கோடி வரை தரவேண்டும் என்று கேட்டாராம்.

    அதோடு அவர் விட்டபாடில்லை. தனது படத்தின் உரிமையை மற்ற மொழிகளுக்கு கொடுத்தால், அதற்கு வாங்கப்படும் தொகையில் பாதியை தனக்கு தருமாறும் கேட்டுள்ளாராம். மூன்றாவது படத்திலேயே இவ்வளவு அடாவடியாக சம்பளம் பேசும் இயக்குனர் மீது அந்த தயாரிப்பு நிறுவனம் மிகவும் கோபத்தில் உள்ளதாம்.

    இருப்பினும், தளபதி நடிகருக்காக இயக்குனர் சொன்னதையெல்லாம் காதுகொடுத்து கேட்டபடி இருக்கிறதாம். இதை தளபதி நடிகர் வசமும் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறதாம். அதன்பிறகு, தளபதி நடிகர் எடுக்கிற முடிவுதான் இப்படத்தின் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 
    நயன நடிகையின் முன்னால் காதலரால் தற்போதைய காதலர் மிகவும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    நயன நடிகையும், சிவமான இயக்குனரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்தான். இருவரும் ஒன்றாக வெளியே வருவது, விழாக்களில் கைகோர்த்து கலந்துகொள்வது என இவர்களது உறவை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், நயன நடிகை தனது முன்னாள் காதலரான நடன கலைஞரை சமீபத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து தனியாக சந்தித்து பேசியுள்ளாராம். இந்த விஷயம் தற்போதைய காதலரான சிவமான இயக்குனருக்கு தெரிய வந்ததும் நயன நடிகையுடன் கோபித்துக் கொண்டாராம்.

    எனினும், நடிகையோ தனது காதலரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இதோடு மட்டுமில்லாமல், நடன இயக்குனரோடு, நயன நடிகை திருமண கோலத்தில் இருப்பதுபோன்ற புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருவதால் இதுவும் சிவமான இயக்குனரை கடுப்பேற்றியுள்ளதாம். இதனால், நடிகை என்னசெய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாராம். 
    உதயமான நடிகர் ஒருவர் ஆக்ஷன் படத்துக்காக புது முயற்சியை கையாளவிருக்கிறாராம். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    உதயமான நடிகர் சினிமாவுக்கு வந்த புதிதில் நிறைய காமெடி படங்களில்தான் நடித்தார். அந்த படங்களில் அவரது நடிப்பும், பாடி லாங்குவேஜும் ஒத்து வந்ததால் ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொண்டனர். ஆனால், தொடர்ந்து ஒரே மாதிரி நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்று எண்ணி நடிகர், புதுவிதமாக கெத்தாக ஆக்ஷனில் களமிறங்கினார்.

    ஆனால், நடிகருக்கு ஆக்ஷன் ஒத்துவராததால் ரசிகர்கள் அந்த படத்தை மிகப்பெரிய பிளாப் ஆக்கினார்கள். இந்நிலையில், அடுத்ததாக உதயமானவர் மீண்டும் ஆக்ஷனில் களமிறங்க உள்ளாராம். முதல் படத்தில் எப்போதும்போல் நடித்த உதயமானவர், இந்த படத்தில் ஆக்ஷனுக்காக ஒரு புது முயற்சியை செய்யவிருக்கிறாராம்.

    அது என்னவென்றால், தனது பாடி லாங்குவேஜில் சில மாற்றங்களை செய்து நடிக்கவிருக்கிறாராம். இந்த புதுமுயற்சி நடிகருக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 
    இயக்குனரை காமெடி நடிகர் ஒருவர் தெறிக்கவிட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வைகை காமெடி நடிகர் தற்போது தளபதி நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மூன்றெழுத்து லி இயக்குனர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு முந்தைய படத்தில் நடிக்கவும் இயக்குனர் வைகை காமெடியனை அணுகினாராம்.

    அந்த சமயத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தனக்கு ரீ-என்ட்ரி படமாக பெரிய நடிகரின் படம் இருப்பதை எண்ணாமல் வைகை காமெடி நடிகர் இயக்குனரிடம் தனக்கு சம்பளமாக ரூ.4 கோடி வரை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். இதனால், அதிர்ச்சியடைந்த லி இயக்குனர் தயாரிப்பாளரிடம் கேட்டுவிட்டு வருவதாக நைசாக அங்கிருந்து கிளம்பி விட்டாராம்.

    அதன்பிறகே, மொட்டை நடிகரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து அழகு பார்த்தாராம் இயக்குனர். தனது தவறை உணர்ந்துவிட்ட வைகை காமெடி நடிகர் அதற்கு பரிகாரமாக தற்போது லி இயக்குனரின் அடுத்த படத்தில் நடிப்பதாக சொல்லி ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். 
    முன்னணி நடிகை ஒருவர் அழுது நடிப்பதை தவிர்த்து வருகிறாராம். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    இரண்டு நடிகர்களுடனான காதல் முறிவுக்கு பின்னரும் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன நடிகை, தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். தனக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லையென்றால், அது எந்த பெரிய இயக்குனராக இருந்தாலும் அவரை உடனடியாக ஒதுக்கி விடுகிறாராம்.

    அதேபோல், ஒரே மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் நோ சொல்கிறாராம். இப்படியாக நிறைய கண்டிஷன்களுடன் நடித்து வரும் நயன நடிகை தற்போது கூடுதலாக ஒரு கண்டிஷனையும் தன்னுடைய கதை தேர்வில் வைத்திருக்கிறாராம். அதன்படி, அழுது நடிக்கும்படியான காட்சிகளை தன்னுடைய படங்களில் வைக்க வேண்டாம் என்று வற்புறுத்துகிறாராம்.

    அப்படியிருக்கும் காட்சிகளில் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று சொன்னால், இவர் அந்த காட்சியில் ரொம்பவும் குலுங்கி குலுங்கி எல்லாம் அழமுடியாது என்று சொல்கிறாராம். இயக்குனர்களும் வேறு வழியில்லாமல் நடிகையின் வேண்டுகோளுக்கேற்ப காட்சிகளை மாற்றியமைத்து படமாக்குவது என்று முடிவு செய்கிறார்களாம்.

    இந்த வருடத்தில் தொடர்ந்து ஹிட் கொடுத்த நடிகை சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    சமத்தான நடிகைக்கு தெலுங்கு நடிகர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் இருவருக்கும் திருமணம் நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், திருமணத்திற்கு முன்பே அவரை சினிமாவில் இருந்து ஒதுக்கி வருவதாக நடிகை தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.

    இந்த வருடத்தில் இவர் நடித்த 6 படங்களும் மிகப்பெரிய ஹிட்டானது. இருப்பினும், தொடர்ந்து அவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் இல்லை. தற்போதைக்கு சங்கத் தலைவருடனான படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது. எந்த நேரத்தில் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டாரோ, அதுநாள் முதல் இவரை தேடி வரும் தயாரிப்பாளர்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    திருமணத்திற்கு பிறகு நடிகை நடிப்பதற்கு அவரின் வருங்கால கணவர் எந்த ஆட்சபனையும் தெரிவிக்கவில்லையாம். இருப்பினும், தனக்கு படவாய்ப்பு குறைந்து வருவது குறித்து நடிகை ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாராம். 
    இயக்குனர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு கதை கேட்டு வருகிறாராம். அந்த இயக்குனர், வருங்கால மனைவி யார் என்பதை கீழே பார்ப்போம்.
    நயன நடிகையும் சிவமான இயக்குனரும் காதலர்களாக வலம் வருவது ஊர் அறிந்ததே. இவர்கள் இருவரும் தனிமையில் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கோலிவுட்டில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதுநாள் வரையில் இதுகுறித்து இருவருமே மௌனம் காத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், முன்பெல்லாம் படங்களில் நடிக்க தனது அபிமானிகளிடம் கதைகளை பற்றி பேசி முடிவெடுத்து வந்த நயன நடிகை, இப்போது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் தன்னை தொடர்பு கொண்டாலே, முதலில் தனது காதல் இயக்குனரை போய் பாருங்கள் என்று அவர் பக்கம் திருப்பி விடுகிறாராம்.

    அதனால், நயன நடிகையின் கால்ஷீட் வாங்க வருவோர் இயக்குனரைத்தான் துரத்திக் கொண்டு வருகிறார்களாம். இப்படி துரத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருப்பதால், ஏற்கெனவே கேட்கப்பட்ட கதைகள் இன்னும் பல கிடப்பில் இருப்பதாகவும், கைவசம் நயன நடிகைக்கு அதிக படங்கள் இருப்பதாலும் இந்த படங்களையெல்லாம் முடித்த பிறகுதான் நடிகையின் கால்ஷீட் கிடைக்கும் என இயக்குனர் அனைவரையும் திருப்பி அனுப்புகிறாராம்.

    அப்படி அவர்களுக்கு கால்ஷீட் கொடுப்பதாக இருந்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் தேதியில் கொடுக்க மாட்டாராம். அவர் முடிவு பண்ணும் தேதியில்தான் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று இயக்குனர் கண்டிஷன் போடுகிறாராம். இருப்பினும் நடிகையின் மார்க்கெட் கருதி பல இயக்குனர்கள் கதைகளை சொல்லிவிட்டு அவரது கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்களாம். 
    சாமி நடிகர் ஒருவர் சினிமாவில் நடிப்பதற்கு சில நிபந்தனைகளை விதிக்கிறாராம். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து தற்போது வில்லனாக மாறியுள்ள சாமி நடிகர், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தனக்கு மீண்டும் வாய்ப்புகள் அதிகம் தேடிவர ஆரம்பித்துள்ளதால், சாமி நடிகர் தற்போது தன்னிடம் கதை சொல்ல வருபவர்களுக்கு சில நிபந்தனைகளை விதிக்கிறாராம்.

    அதுஎன்னவென்றால், தன்னிடம் கதை சொல்பவர்கள் அந்த கதையை ஒரே வரியில் சொல்லக்கூடாதாம். வசனம் எப்படியிருக்கிறது, திரைக்கதை எப்படி அமைக்கப் போகிறோம் மற்றும் முழு கதையும் அவரிடம் சொல்லவேண்டுமாம். அப்படி சொன்ன கதை அவருக்கு பிடித்தால்தான் அதில் நடிக்கவே சம்மதிப்பாராம்.

    இதில் ஏதாவது ஒன்று சரியில்லை என்றால் உடனே வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளிவிடுவாராம். இவருடைய இந்த நிபந்தனையால் இவருக்கு கதை சொல்லவே பெரும்பாலான இயக்குனர்கள் மிகவும் தயங்குகிறார்களாம். நடிகரும் கிடைத்த வரைக்கும் வந்தால் போதும் என்பதுபோல் தன்னுடைய நிபந்தனையில் எந்த மாற்றமும் செய்து கொள்ளவில்லையாம்.
    இயக்குனர் ஒருவரின் பாதுகாப்பு வளையத்தில் பிரபல நடிகை ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    நயன நடிகை சமீபத்தில் சென்னையில் உயர்தர அடுக்குமாடி குடியிருப்ப ஒன்றில் பல கோடி ரூபாய் செலவில் ஒரு வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டில் அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படும் இயக்குனரோடு குடியேறி இருக்கிறாராம்.

    அந்த வீட்டில் இருந்து நயன நடிகை ஷுட்டிங் கிளம்புவதில் தொடங்கி, படப்பிடிப்பு தளம் மற்றும் திரும்ப வீட்டுக்கு வரும் வரையிலும் சபாரி சூட் அணிந்த சில பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விடாமல் கண்காணித்து வருகிறார்களாம். இவர்களை மீறி யாரும் நயன நடிகையை நெருங்கிவிட முடியாத அளவுக்கு அவர்களின் பாதுகாப்பு வளையம் இருக்கிறதாம்.

    இந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியிருப்பது நயன நடிகையை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் இயக்குனர்தான். ஏனென்றால், ஏற்கெனவே நடிகை இரண்டு பேரை காதலித்து கழட்டிவிட்டவர். மறுபடியும் யாருடனும் நடிகை பழகப் போக அது தனக்கு பாதகமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    பிரபல நடிகை ஒருவர் பலபேருடன் தொடர்பில் உள்ளதாக அவருடைய முன்னாள் மாமியார் குற்றஞ்சாட்டியுள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    மலையாளத்தில் பிரபலமான காவியமான நடிகை சமீபத்தில் மூன்றெழுத்து நடிகரை திருமணம் செய்துகொண்டார். காவியமானர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். அதேபோல் மூன்றெழுத்து நடிகரும் ஏற்கெனவே தனது காதல் மனைவியை பிரிந்தவர். இருவரின் தனிமையும் தற்போது அவர்களை ஒன்று சேர்த்துள்ளது.

    இந்நிலையில், காவியமானவரின் முன்னாள் மாமியார் அவரைப் பற்றி கூறிய ஒரு குற்றச்சாட்டு தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால், காவியமானவர் மூன்றெழுத்து நடிகர் மட்டுமில்லாமல், சாமியார் மற்றும் பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்தாராம். இதுதான் அவரின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது.

    அதுமட்டுமில்லாமல், தன்னுடைய மகனை விருப்பமில்லாமலேயே காவியமானவர் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மகனை திருமணம் செய்துகொண்ட பிறகும், மூன்றெழுத்து நடிகருடன் மிகவும் நெருக்கமாக காவியமானவர் பழகி வந்ததாகவும் அவர் அந்த குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால், முன்னாள் மாமியாரின் குற்றச்சாட்டை காவியமானவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லையாம். தற்போது தனது காதல் கணவருடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறாராம். 
    வாரிசு நடிகை ஒருவர் திமிரு நடிகரை கழட்டிவிட்டு வம்பு நடிகருடன் ஒட்டிக்கொண்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்..
    வம்பு நடிகரைப் பற்றி கோலிவுட்டில் ஏதாவது ஒரு கிசுகிசு கசிந்துகொண்டுதான் இருக்கிறது. இவர் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் எனறு ஒரு பக்கம் கிசுகிசு கிளப்பிவிட்டாலும், உடன் நடிக்கும் நடிகைகளை வைத்தும் சிலர் கிசுகிசுக்களை கிளப்பி விடுவது வாடிக்கையாடி விட்டது.

    அதன்படிதான் தற்போது அவரைப் பற்றிய ஒரு கிசுகிசு தற்போது கோலிவுட்டில் தீயாக பரவி வருகிறது. அதாவது, இவருடைய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வாரிசு நடிகையும் வம்பு நடிகரும் தற்போது நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    வாரிசு நடிகையோ ஏற்கெனவே திமிரு நடிகருடன் நெருக்கம் காட்டி வந்தார். சமீபத்தில் அவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவரை பிரிந்து வம்பு நடிகருடன் சேர்ந்து சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. வம்பு நடிகரும், வாரிசு நடிகையும் எந்த விழாக்களுக்கும் சேர்ந்தே போகிறார்களாம். தினமும் ஒருமுறையாவது நேரில் சந்தித்துக் கொள்கிறார்களாம்.

    இவர்களுக்கு ஆதரவாக சில முன்னணி நடிகைகளும் களம் இறங்கியிருக்கிறார்களாம். இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணையலாம் என்றும் பேச்சு அடிபடுகிறதாம். இதையெல்லாம் கேள்விப்பட்ட திமிரு நடிகர் தற்போது மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். ஏற்கெனவே, வம்பு நடிகர் மீது கோபத்தில் இருக்கும் திமிரு நடிகருக்கு இந்த செய்தி மேலும் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளதாம். 
    விஐபி இசையமைப்பாளர் ஒருவரின் காதலை சமத்தான நடிகை போட்டு உடைத்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    விஐபி இசையமைப்பாளருக்கு சமீபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டது. இதற்கு விஐபி இசையமைப்பாளர் யாரையும் தான் காதலிக்கவும் இல்லை. இப்போதைக்கு திருமணமும் இல்லை என்பதுபோல் ஒரு பதிலை சொல்லியிருந்தார். ஆனால், இவருடைய இசையில் இரண்டு படங்களில் நடித்த சமத்தான அந்த நடிகை இவரிடம் ஒளிந்து கிடந்த உண்மையை இரண்டே வார்த்தையில் வெளிக் கொண்டு வந்துவிட்டார்.

    அந்த பொண்ணு நல்ல பொண்ணுதானே, அவளிடம் என்ன பிரச்சினை என்று கேட்டதுதான் தற்போது விஐபி இசையமைப்பாளருக்கு பெரிய பிரச்சினையாய் வந்து நிற்கிறது. சமத்தான நடிகை சொன்ன பொண்ணு யார்? விஐபி இசையமைப்பாளர் யாரையாவது காதலித்து வருகிறாரா? அல்லது அவருக்கு திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அது தோல்வியில் முடிந்ததா? என்ற கேள்விகள்தான் கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.

    ஆனால், சமத்தான நடிகையின் கேள்விக்கு விஐபி இசையமைப்பாளர் இதுவரை மௌனமே காத்து வருகிறார். இந்த மௌனம் எந்த உண்மையை வெளியே கொண்டு வரப் போகிறதோ? என்றுதான் தெரியவில்லை. 
    ×