என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தன்னை பற்றி வீண் வதந்தி கிளப்பி விட்டதால் நடிகை ஒருவர் கொதித்தெழுந்துள்ளார். அவர் யார்? அது என்ன வதந்தி? என்பதை கீழே பார்ப்போம்..
    ரூபி நடிகையின் தற்போதைய சினிமா வாழ்க்கை நல்லபடியாகத்தான் போய்க்கிட்டிருக்கு. அப்படியிருக்கையில், அவரை பற்றி சில பேர் வீண் வதந்திகளை கிளப்பி விட்டுள்ளார்கள். இவரைப் பற்றி ஏற்கெனவே நிறைய வதந்திகள் வெளிவந்திருக்கிறது. அப்போதெல்லாம் பொறுமையை கடைபிடித்தவர், தற்போது சீறி பாய்ந்துள்ளார்.

    சமீபத்தில் ரூபி நடிகை நடித்த பேய் படம் பெரிய ஹிட்டானதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், வீண் வதந்திகளால் தனது மார்க்கெட்டை அழித்துவிடுவார்களோ என்ற பயம்தான் அவருடைய கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த வதந்தி வேறொன்றுமில்லை. ரூபி நடிகை சமீபத்தில் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று சொன்னதுதானாம்.

    இதிலென்ன வதந்தி, இதற்கு எதற்கு கோபப்பட வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், ரூபி நடிகையிடம் கேட்டாலோ, எந்த படத்தில் நடிக்க வேண்டும், எந்த படத்தில் நடிக்கக்கூடாது, எந்த படத்தில் நடிக்கிறேன் என்ற எல்லா விவரங்களையும் அவர்தான் கூறவேண்டும். மற்றபடி யாரும் சொல்லக்கூடாது என்று கோபத்தில் கொந்தளிக்கிறாராம்.

    இவர் சொல்வதுபோல், இதுவரை அவர் எத்தனை படங்களுக்கு நான் இந்த படத்தில் நடிக்கிறேன், அந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை சொல்லியிருக்கிறார் என்பதுதான் கோலிவுட்டில் பெரிய கேள்வியாக இருக்கிறது. நிறைய வதந்திகள்தான் பின்னாளில் உண்மையாக மாறியிருக்கிறது என்பதை ரூபி நடிகை அறிந்திருக்கமாட்டார் போல.....
    கொலவெறி நடிகர் மேலும் ஒரு நடிகையின் பிரிவுக்கு காரணமாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    கொலவெறி நடிகர் பால் நடிகையை தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்தது பால் நடிகையின் கணவருக்கு பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்துவிட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியது. கொலவெறி நடிகரின் மச்சினி அவரது கணவரை பிரிந்து வாழ்வதற்கும் கொலவெறி நடிகர்தான் என்று ஒரு செய்தியும் கோலிவுட்டில் காட்டுத் தீயாய் பரவியது.

    இந்நிலையில், இன்னுமொறு நடிகையின் பிரிவுக்கும் கொலவெறி நடிகர்தான் காரணம் என்று ஒரு செய்தி தற்போது பரவி வருகிறது. அவர் வேறு யாருமல்ல, ருத்ரமான நடிகைதான். ருத்ரமானவர் தனது கணவரை பிரிந்து உலக நாயகருடன் நீண்ட காலம் வாழ்ந்து வந்தார். தற்போது உலக நாயகரையும் பிரிந்து தனது மகளுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

    உலக நாயகருடனான இருந்த உறவை ருத்ரமான நடிகை முறித்துக் கொண்டதற்கு காரணம் கொலவெறி நடிகர்தானாம். கொலவெறி நடிகர் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் இயக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறாராம். இவருடைய இயக்கத்தில் ருத்ரமான நடிகை தனது மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தாராம்.

    ஆனால், உலக நாயகரோ இதற்கு முட்டுக்கட்டையாக இருந்தாராம். எனவே, தனது மகளின் வாழ்க்கைக்காக ருத்ரமான நடிகை அவரை பிரிந்து வந்துவிட்டாராம். தற்போது உலக நாயகரை பிரிந்து தனியாக வந்துவிட்டதால் கூடிய விரைவில் ருத்ர நடிகையின் மகளை நடிகையாக பார்க்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது. 
    காமெடி நடிகர் ஒருவர் கண்டிசன் போட்டு நடிக்கிறாராம். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...
    ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் மட்டுமே தலைகாட்டி வந்த காமெடி நடிகருக்கு வரிசையாக படங்கள் ஹிட்டாவதால் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தவண்ணம் இருக்கிறது. தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் காமெடி நடிகர், அந்த மாதிரி படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.

    பிரபலமில்லாத நடிகர்களின் படங்கள் இவரை தேடி வந்தால் அந்த படங்களை அவர் உடனடியாக ஏற்பது கிடையாதாம். அந்த படங்களுக்கு எத்தனை நாட்கள் கால்ஷிட் தேவைப்படுமென்று கேட்டறிந்துவிட்டு, அவர்கள் கேட்கும் நாட்களில் இவருடைய கால்ஷீட் இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறாராம்.

    இதற்கும் மேலாக, இவர் அப்படி ஒப்புக் கொள்ளும் படங்களில் நடித்துக் கொண்டிருக்குமபோது பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் அங்கு போய்விடுவதாகவும், அந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுதான் இவர்கள் படத்துக்கு திரும்புவேன் என்பதுபோலவும் கண்டிசன் போடுகிறாராம். இதனால், இவரை புக் செய்யவரும் பல தயாரிப்பாளர்கள் தற்போது வேறொரு காமெடி நடிகரை தேடி ஓடுகிறார்களாம். 
    பிரபல நடிகை ஒருவர் தனது கணவரை வேவு பார்க்க ஆள் வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வந்த ரோமியோ நடிகை தொழிலதிபரை மணந்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். சினிமாவுக்கு முழுக்கு போட்டாலும் பாலிவுட் திரையுலகம் அவரை விடுவதாக இல்லை. தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்ட போதிலும், அவரது அழகு இன்னமும் மாறாததால் அவரை படங்களில் நடிக்க வைப்பதற்கு நிறைய பேர் ஆர்வப்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், நடிகையின் கணவரான தொழிலதிபருக்கும் அவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக நடிகைக்கு சந்தேகம் எழுந்துள்ளதாம். எனவே, தனது கணவரை வேவு பார்ப்பதற்காக நடிகை ஆள் வைத்துள்ளாராம். இது உண்மையென்றால், தனது காதல் கணவரை பிரிந்துவிட நடிகை முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
    நடன நடிகரின் இரண்டாவது காதலை அவரது முன்னாள் காதலியே முறித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நடன நடிகரின் சமீபத்திய காதல் விவகாரம் ஊரறிந்ததுதான். வீரமான நடிகையுடன் இவர் நெருக்கமாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வந்தது. அதன்பின், அந்த காதல் செய்தி பிசுபிசுத்து போய், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இவர்களின் பிரிவுக்கு ஒரு நடிகைதான் காரணம் என்று தற்போது கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

    அந்த நடிகை வேறு யாருமல்ல, நடன நடிகரின் முன்னாள் காதலிதானாம். நடன நடிகரை காதலித்து, அவரை கரம் பிடிக்கும் அளவுக்கு சென்று பின்னர் பிரிந்து வந்தவர் நயன நடிகை. இவர்தான் நடன நடிகரின் தற்போதைய காதலுக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    நயன நடிகையை காதலிக்கும்போது நடன நடிகர் இயக்கிய படங்கள் எல்லாம் தோல்வியை கண்டன. இதனால், என்ன பண்ணலாம் என்ற யோசனையில் இருந்தவருக்கு நயன நடிகையின் காதல் கைகொடுத்தது. நயன நடிகையின் பணத்தை வைத்து சொந்த படத்தை எடுக்கலாம் முடிவு செய்திருந்த நிலையில், நடிகை சுதாரித்துக் கொண்டு அவரைவிட்டு வெளியே வந்துவிட்டார்.

    நடிகையை பிரிந்த சோகத்தில் இருந்த நடன நடிகர் ரொம்ப நாளாக சினிமாவில் தலைகாட்டாமலேயே இருந்தார். ஒருவழியாக மீண்டும் நடிக்க வந்தவர், அந்த படத்தில் நடித்த வீரமான நடிகையுடன் நெருக்கம் காட்ட தொடங்கினார். நடிகையும் அவரிடம் நெருக்கம் காட்டவே, ரெண்டு பேருக்குள்ளும் காதல் நோய் தொற்றிக் கொண்டது.

    இந்நிலையில், வீரமான நடிகை, நடன நடிகருடன் காதல் வயப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்ததும், உடனே நயன நடிகை வீரமான நடிகைக்கு போன் போட்டு, அந்த நடிகரை காதலித்தால் நீ சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்துவிடுவாய் என்று எச்சரித்தாராம். இதன்பிறகே, வீரமான நடிகை சுதாரித்துக் கொண்டு தற்போது நடன நடிகரை விட்டு சற்று விலகி இருப்பதாக கூறப்படுகிறது. 
    ஹிட் லிஸ்டில் இருந்த மங்களகரமான நடிகை தற்போது பரிதாப நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    யானை படத்தின் மூலம் அறிமுகமான மங்களகரமான நாயகி நடித்த முக்கால் வாசி படங்கள் ஹிட் லிஸ்டில்தான் உள்ளன. ஆனால், சமீபகாலமாக இவருடைய மார்க்கெட் சற்று டல் அடிக்க ஆரம்பித்துள்ளதாம். இதனால், தனது மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கான வழியை நடிகை தேடி வருகிறாராம்.

    அப்போதுதான் அவரது காதுக்கு தன்னை அறிமுகப்படுத்திய யானை இயக்குனர் மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக செய்தி வந்துள்ளது. இதையறிந்ததும் ஓடிப் போய் யானை இயக்குனரிடம் சென்று அந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டாராம்.

    ஆனால், இயக்குனரோ அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நான் புதுமுக நடிகையை வைத்துதான் எடுக்கப் போகிறேன். அதனால், உனக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டாராம். நடிகையும் வேறு வழியின்றி தலையை தொங்கப்போட்டு அங்கிருந்து திரும்பினாராம். ஹிட் லிஸ்டில் இருந்த நடிகைக்கு இந்த நிலைமையா? என்ற கோலிவுட் வட்டாரத்தில் இவரைப் பற்றிய பேச்சுத்தான் இப்போது ரொம்பவும் சூடாக சென்று கொண்டிருக்கிறதாம். 
    நடிகை ஒருவர் கிளப்பிவிட்ட எய்ட்ஸ் புரளியால் நடிகர் ஒருவர் சினிமா வாழ்க்கையையே இழந்துள்ளார். அந்த நடிகை, அந்த நடிகர் யார் என்பதை கீழே பார்ப்போம்.
    90-களில் முன்னணி நடிகராக வலம்வந்த மைக் நடிகருக்கு திடீரென்று எய்ட்ஸ் நோய் உள்ளதாக எழுந்த புரளியால் அவருடைய திரை வாழ்க்கையே முடிந்து போனது. 90-களில் எய்ட்ஸ் நோய் என்பது பெரிய நோயாக கருதப்பட்டதால் அவரை நெருங்கவே பல இயக்குனர்கள் தயங்கினார்கள். ஹீரோயின்கள் கதறி ஓட ஆரம்பித்தனர்.

    அவருடைய திரைவாழ்க்கை முடிந்துவிட்டாலும் இன்னமும் அவர் அப்படியேத்தான் இருக்கிறார். இந்நிலையில், தனக்கு எய்ட்ஸ் என்று புரளியை கிளப்பிவிட்டவர் யார் என்பதை அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார். இவருடன் நிறைய படங்களில் பூ நடிகைதான் அந்த புரளியை கிளப்பிவிட்டவராம்.

    பூ நடிகைக்கு மைக் நடிகர் மீது அதீத காதலாம். அந்த காதலை அவரிடம் வெளிப்படுத்தி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நடிகரை பூ நடிகை ரொம்பவும் வற்புறுத்தினாராம். ஆனால், மைக் நடிகரோ அந்த நடிகையை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்தாராம். இதனால் கோபமடைந்த நடிகை, மைக் நடிகருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக ஒரு புரளியை கிளப்பிவிட்டு அவரின் திரை வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்துவிட்டாராம். 
    ருத்ரமான நடிகையானவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். அதற்கு ஒரு நடிகை காரணம் என்று கூறப்படுகிறது. அது என்ன முடிவு? அந்த நடிகை யார்? என்பதை கீழே பார்ப்போம்..
    உலக நாயகருடன் ஒரேவீட்டில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த ருத்ரமான நடிகை தற்போது அவரை பிரிந்துவிட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். எந்த விழாக்களுக்கும் ருத்ரமான நடிகை இல்லாமல் உலக நாயகர் கலந்துகொண்டதே கிடையாது என்கிற அளவுக்கு இவர்களது நெருக்கம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், இவர்கள் எப்படி பிரிந்தார்கள்? என்பது கோலிவுட்டில் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    இதைப்பற்றி ஆராயும்போது இவர்கள் பிரிவுக்கு காரணம் உலக நாயகரின் மூத்த மகளும், ஸ்ருதிமயமான நடிகையுமானவர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ஸ்ருதிமயமானவருக்கும், ருத்ரமான நடிகைக்கும் இடையே அடிக்கடி சிறு மோதல்கள் நடைபெற்று வந்துள்ளதாம். இதில், உலக நாயகர் அவ்வப்போது தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைத்து வந்தாராம்.

    ஆனால், தற்போது இந்த பிரச்சினை முற்றிப்போனதால் உலக நாயகரே, ருத்ரமான நடிகையை பிரிந்துபோகச் சொல்லி அறிவுறுத்தினாராம். அதனாலேயே, அந்த நடிகை தற்போது உலக நாயகரை பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 
    உச்ச நடிகருக்காக மெகா பட்ஜெட் இயக்குனரின் படத்தில் ஒரேயொரு பாடல் மட்டும்தான் இடம்பெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    மெகா பட்ஜெட் இயக்குனர் தற்போது உச்ச நடிகரை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். மெகா பட்ஜெட் இயக்குனரின் படத்தில் எப்போது பாடல் காட்சிகளுக்குத்தான் அதிக தொகை செலவழிக்கப்படும். ஆனால், உச்ச நடிகரை வைத்து இவர் இயக்கி வரும் புதிய படத்தில் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும்தான் இடம்பெறுவதாக வெளிவந்துள்ள செய்தி கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏன் இந்த படத்தில் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் இடம்பெறுகிறது என்பது பற்றி விசாரிக்கையில், படத்தை இயக்குனர் ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப் போகிறாராம். அதனால், ஹாலிவுட் படங்களைப் போன்று பாடல்களே இல்லாமல் உருவாக்கப் போவதாகத்தான் முதலில் முடிவு செய்திருந்தாராம். பின்னால், தமிழ் சினிமாவுக்கு அது எடுபடாமல் போய்விடும் என்பதாலேயே ஒரு பாடலையாவது படத்தில் வைப்போம் என்று முடிவு செய்து தற்போது ஒரேயொரு பாடலை மட்டும் இப்படத்தில் வைக்கப்போவதாக கூறப்படுகிறது. மற்றபடி, ஆல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

    இது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. உச்ச நடிகர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சண்டைக் காட்சியிலாவது டூப் போட்டு நடிக்க வைக்கலாம். ஆனால், பாடல் காட்சியில் அப்படி செய்யமுடியாது. இதனால், அவரை கஷ்டப்படுத்தாமல் இருப்பதற்காக ஒரேயொரு பாடலை மட்டுமே படத்தில் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    கயல் மீனுக்காக கடற்கரையில் சொசுகு பங்களா கட்டும் நடிகர் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமா? கீழே படியுங்கள்...
    பிரகாசமான நடிகர் ஒருவர் தனது அடுத்தடுத்த படங்களில் கயல் மீன் நடிகையை தனது ஹீரோயினாக ஆக்கிக் கொண்டே வருகிறார். இவருடன் இதுவரை இரண்டு படங்களில் நடித்துவிட்ட கயல் மீன் நடிகை, அடுத்து நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில், தனது காதல் மனைவிக்கு தெரியாமல் பிரகாஷமான நடிகர், சென்னையில் ஈசிஆரில் சொகுசு பங்களா ஒன்றை பிரம்மாண்டமாக கட்டி வருகிறாராம். மிகவும் விலையுயர்ந்த பொருட்களாலேயே அந்த வீட்டை அலங்கரித்து வருகிறாராம். காதல் மனைவிக்கு தெரியாமல் இந்த வீட்டை நடிகர் கட்டி வருவதன் ரகசியம் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

    அது என்னவென்றால், இந்த வீடு தனது காதல் மனைவிக்கு அன்பு பரிசாக கொடுக்கப்போவதில்லையாம். மாறாக தன்னுடன் மூன்று படங்களில் ஜோடி போட்ட கயல் மீனுக்காகத்தான் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது. காதல் மனைவிக்கு தெரியாமல் நடிகர், கயல் மீன் நடிகைக்கு சொகுசு பங்களா கட்டுவதன் மர்மம் என்ன? என்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
    பிரபல நடிகை ஒருவர் எடுத்த திடீர் முடிவு திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது என்ன முடிவு? என்பதை கீழே பார்ப்போம்...
    சமத்தான நடிகை பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், இனிமேல் படங்களில் அவர் நடிக்கமாட்டார் என்று எண்ணியிருந்த வேளையில், தற்போது வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.

    அடுத்த வருடம்தான் திருமணம் என்று தற்போது நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், கமிட்டான படங்களில் அதற்குள் நடித்து முடித்துவிடலாம் என்று எண்ணிதான் நடிகை இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அப்படியிருக்கையில், சமத்தான நடிகை தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம்.

    அதாவது, இனிமேல் அவர் நடித்த எந்த படத்தையும் முதல் நாள் தியேட்டருக்கு சென்று பார்க்கமாட்டாராம். ஏன் என்று கேட்டால், அவர் நடித்து வெளிவந்த சமீபத்திய படங்களை முதல்நாள் தியேட்டருக்கு சென்று நடிகை பார்த்தாராம். அப்போது அவருடன் படம் பார்த்தவர்கள் படம் சரியில்லை, ஓடாது என்று கூறினார்களாம். அதனால் அவருடைய மனம் மிகவும் புண்பட்டு விட்டதாம். இதனால், இனிமேல் முதல்நாள் தான் நடித்த எந்த படத்தையும் நடிகை பார்க்கமாட்டாராம்.
    அப்பாவின் ஆசையை நடிகை ஒருவர் நிறைவேற்ற முன்வந்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    சினிமாவில் 10 வருடங்களை தாண்டிய மூணுஷா நடிகைக்கு கைவசம் நிறைய படங்கள் உள்ளது. இருப்பினும், அவருக்குள் ஒருவித பயம் தொற்றிக் கொண்டுள்ளதாம். எந்நேரமும் தனக்கு வாய்ப்புகள் கைநழுவி போகலாம் என்ற பயம்தான் அவருக்கு. இந்த பயமே அவரை வேறொரு பிசினஸை செய்யத் தூண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல், தனது அப்பாவின் ஆசைக்காகவும் அந்த பிசினஸை அவர் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    மூணுஷா நடிகை தற்போது வெளிமாநிலத்தில் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றை கட்டி வருகிறாராம். அவரது அப்பா நிறைய பைவ் ஸ்டார் ஓட்டல்களில் வேலை பார்த்துள்ளாராம். அவருக்கு நீண்ட நாளாக ஒரு ஓட்டலை கட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால், அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்துபோய் விட்டாராம்.

    இதனால், தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நடிகை தற்போது ஓட்டல் ஒன்றை கட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த ஓட்டலுக்கு தனது பெயரையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், அந்த ஓட்டலுக்கு திறப்பு விழாவும் நடத்தப் போகிறாராம் நடிகை. 
    ×