என் மலர்tooltip icon

    கிசுகிசு

    வயதான ஹீரோக்களுடன் நடிக்க நடிகை ஒருவர் மறுப்பு தெரிவித்து வருகிறாராம். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்..
    கீர்த்திமயமான நடிகை அறிமுகமான படம் பெரிதளவில் ஹிட்டாகாவிட்டாலும், அதைத் தொடர்ந்து வெளிவந்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றிபெற்று நடிகையை முன்னணி நடிகைகளுள் ஒருவராக கொண்டு வந்து சேர்த்தது. தமிழில் மட்டுமில்லாது தெலுங்கிலும் நடிகைக்கு மவுசு கூடியிருக்கிறது.

    இதனால், மற்ற முன்னணி நடிகைகளின் கால்ஷீட்டை தேடி அலைந்த இயக்குனர்கள் எல்லாம் தற்போது கீர்த்திமயமான நடிகையின் கால்ஷீட்டுக்காக அவரது வீடு தேடி படையெடுக்கிறார்களாம். அதற்காக வருகிற கதைகளையெல்லாம் வளைத்துப் போட்டுக் கொள்ளாமல், சரியான கதைகளையே தேர்ந்தெடுத்து நடிப்பது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறாராம் நடிகை.

    அதேபோல், 50 வயதுக்கு மேல் உள்ள நடிகர்கள் என்றால் அந்த படங்களில் நடிப்பது கிடையாது என்பதிலும் கீர்த்திமயமான நடிகை உறுதியாக இருக்கிறாராம். வளரும் இளம் நடிகர்களிடம் மட்டுமே நடித்தால்தான் சினிமாவில் நிலையாக இருக்கமுடியும் என்று நண்பர்கள் இவருக்கு அட்வைஸ் செய்ததால் நடிகை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
    அழகி ஒருத்தியை நடிகர் ஒருவர் கிழவியாக்கியுள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    வம்பு நடிகர் தற்போது நடித்து வரும் நீளமான தலைப்பு கொண்ட படத்தில் ‘வீர’ நடிகையும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வம்பு நடிகர் 60 வயது தாத்தா கெட்டப்பில் நடிக்கிறாராம். இந்த கெட்டப்பில் அவருக்கு ஜோடியாக அழகான ‘வீர’ நடிகையை கிழவியாக நடிக்க வைத்துள்ளாராம்.

    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் ‘வீர’ நடிகை எப்படி இந்த கிழவி கெட்டப்பில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதுதான் தற்போது கோலிவுட்டில் பரவலாக பேச்சுக்கள் எழுந்து வருகிறது. இருப்பினும், அவரது கதாபாத்திரம் படத்தில் மிகவும் வலுவுள்ளதாக இருக்கும் என்றும் அதனால்தான் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்றும் பேசப்படுகிறது. 
    மாமியாரை சரிக்கட்டுவதற்காக நடிகை ஒருவர் விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.
    நயன நடிகையும், சிவமான இயக்குனரும் தற்போது காதலர்களாக கோலிவுட்டில் வலம்வருவதாக செய்திகள் அடிபடுகிறது. இந்த செய்தியை இரண்டு பேர் தரப்பிலிருந்தும் மறுக்காததால் இதுதான் உண்மையென்று பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருவரும் அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றி வருகிறார்களாம்.

    நயன நடிகையின் காதலருடைய அம்மா முன்னாள் போலீஸ் அதிகாரியாம். அவர் பதவியில் இருந்த காலத்தில் ஏரியாவில் சண்டித்தனம் செய்த பல ரவுடிகளை அடக்கியவராம். இதனால் ஆரம்பத்தில் தங்கள் காதல் விஷயம் அவருக்கு தெரிந்துவிட்டால் என்னாகுமோ? என்ற பயம் நயன நடிகைக்கு இருந்ததாம்.

    ஆனால், அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்தபோதுதான் சிவமான இயக்குனரின் அம்மா மிகவும் மென்மையானவர் என்பது நயன நடிகைக்கு தெரிய வந்ததாம். தனது அன்பை வெளிப்படுத்தும்விதமாக தனது வருங்கால மாமியாரை சென்னையில் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறாராம் நயன நடிகை. இதனால், நயன நடிகை மீது சிவமான இயக்குனரின் அம்மாவுக்கு நல்ல அபிப்பிராயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. 
    வாய்ப்புகள் சரியாக அமையாததால் பிரபல இயக்குனர் ஒருவர் வெளிநாடு பறந்து போயுள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்..
    வெளிநாட்டில் பல லட்சம் சம்பாத்தியத்தில் வேலை பார்த்து வந்த ‘பெண் கடவுள்’ இயக்குனர், சினிமா ஆசையில் அந்த வேலையை தூக்கிப்போட்டுவிட்டு கோலிவுட்டுக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனருக்கு இவர் இயக்கிய குறும்படத்தையே பெரிய படமாக இயக்கும் வாய்ப்பு அமைந்தது.

    மேலைநாட்டு உணவுப் பொருளை தலைப்பாக கொண்டு உருவான அந்த படம் இயக்குனருக்கு பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தென் தமிழகத்தில் விரும்பி ருசிக்கும் குளிர்பானத்தின் பெயரை தலைப்பாக வைத்து இவர் எடுத்த படமும் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

    தனது படங்கள் தொடர் வெற்றியைக் குவித்து வந்ததில் இயக்குனருக்கு தலைகால் புரியவில்லை. தான் வளர்ந்த குறும்படத்தை வளர்த்துவிட நினைத்த இயக்குனர், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி குறும்பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற பெயரில் கையை சுட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து இவர் எடுத்த மூன்றெழுத்து படமும் பெரியளவில் ஓடவில்லை.

    இந்த படத்தில் தயாரிப்பாளர்களை பற்றி தவறான விமர்சனம் வைத்ததால், இவரை வைத்து படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் தற்போது முன்வருவதில்லையாம். சொந்த தயாரிப்பில் களமிறங்கலாம் என்று நினைத்தால் அதற்கும் கையில் பணமில்லாமல் போய்விட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இயக்குனர் தனிமையில் இருப்பதற்காக வெளிநாட்டுக்கு பறந்து போயிருக்கிறாராம்.

    அங்கு தனிமையில் அமர்ந்து ஒரு வலுவான கதையை உருவாக்கப் போகிறாராம். இனிமேல், தாய்நாட்டுக்கு திரும்புவது என்றால் வலுவான ஒரு கதையுடன்தான் திரும்புவேன் என்ற லட்சியத்தோடு சென்றிருக்கிறாராம். இயக்குனர் திரும்புவாரா? இல்லையென்றால், அங்கேயே செட்டிலாகிவிடுவாரா? என்பது பிறகுதான் தெரியவரும். 
    கொலவெறி நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் அவரது முன்னாள் அண்ணி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    கொலவெறி நடிகரின் இயக்குனர் அண்ணனும், ஸ்வீட் கடையின் பெயரை வைத்திருக்கும் நடிகையும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால், பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். கணவரை பிரிந்தபிறகு நடிப்பில் முன்னேறிவிடலாம் என நினைத்த நடிகைக்கோ அடுத்து எந்த வாய்ப்புகளும் அமையாமல் போனது.

    தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போகவே, என்னசெய்வதென்று திகைத்துக் கொண்டிருந்த நடிகைக்கு அவரது மைத்துனான கொலவெறி நடிகர் கைகொடுத்துள்ளாராம். நடிகைக்கென்று தனியாக வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைத்துள்ளாராம். நடிகைக்கு ஆகும் செலவு அனைத்தையும் இவர்தான் பார்த்துக் கொள்கிறாராம்.

    இருந்தும் நடிகை தொடர்ந்து படவாய்ப்புகள் தேடவே, கொலவெறி நடிகரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவருக்கு பயந்துகொண்டு பல இயக்குனர்கள் நடிகையை ஒப்பந்தம் செய்ய பயப்படுகிறார்களாம். இதனால், கொலவெறி நடிகரால் தனது தற்போதைய வாழ்க்கை சுகமாக இருந்தாலும், எதிர்காலத்தில் தன்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற பயம் தற்போது நடிகைக்கு ஏற்பட்டுள்ளதாம். இதனால், கொலவெறி நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி, வாய்ப்புகள் தேட முடிவெடுத்திருக்கிறாராம். 
    நடிகை ஒருவர் தனது காதலரை கழட்டிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்...
    நயன நடிகை காதலித்து வருவதாக கூறப்படும் சிவமான இயக்குனர் தற்போது சூர்யாமானவரை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜோடியாக நடிக்க தனது காதலியான நயன நடிகையை நடிக்கவைக்கலாம் என முடிவு செய்திருந்தாராம்.

    தனது விருப்பத்தை காதலியிடமும் அவர் தெரிவித்தாராம். ஆனால், காதலியோ இவரது படத்தில் நடிக்க முடியாது என கைவிரித்துவிட்டாராம். இதனால், இயக்குனர் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டாராம். காதலி கழட்டிவிட்ட நிலையில், தற்போது வேறொரு நடிகையை தேடி அலைந்து வருகிறாராம் இயக்குனர்.  
    சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் தோல்விக்கு நடிகர்தான் காரணம் என இயக்குனர் காரணம் காட்டியுள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...
    கொலவெறி நடிகர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ரெயில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபகாலமாக தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வந்த யானை இயக்குனரும் இப்படம் தோல்வியடைந்ததில் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளாராம்.

    தரமான படங்களை கொடுத்து வந்த இயக்குனருக்கு இந்த படம் தோல்வியடைய காரணம் என்னவென்று விசாரிக்கையில், இப்படத்தில் கொலவெறி நடிகரின் தலையீடு ரொம்பவும் இருந்ததாம். இயக்குனரும் பெரிய நடிகர் என்பதால், அவர் சொன்னபடியே சில காட்சிகளை படமாக்கினாராம். அந்த காட்சிகளால்தான் ரசிகர்கள் ரொம்பவும் டென்ஷனாகி படத்தை தோல்வி படமாக ஆக்கியுள்ளதாக இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

    தற்போதுதான் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருந்த இயக்குனர், இந்த படத்தால் இன்னும் கொஞ்சம் மேலேறி விடலாம் என நினைத்திருந்தாராம். ஆனால், இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்துள்ளதால் தற்போது மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
    நயன நடிகை தற்போது முன்னாள் காதலரின் இடத்தை பிடித்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
    பாணா காத்தாடி விட்ட பரதேசி நடிகருடைய அடுத்த படத்தில் நயன நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் அவர் பரதேசி நடிகருக்கு ஜோடி கிடையாதாம். கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சுக்கு இவருடைய கதாபாத்திரமும் இருக்குமாம். இப்படத்தின் இயக்குனர் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன நடிகையின் முன்னாள் காதலரான டான்ஸ் நடிகரை மனதில் வைத்துத்தான் எழுதியிருந்தாராம்.

    ஆனால், கடைசி நேரத்தில் அந்த படத்தில் நயன நடிகை நடித்தால் படத்தின் மார்க்கெட் எகிறிவிடும் என்று எண்ணி நயன நடிகையை ஒப்பந்தம் செய்தார்களாம். நயன நடிகையும் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதாக கூறப்படுகிறது.

    தன்னுடைய முன்னாள் காதலருக்காக எழுதப்பட்ட கதை என்பது நயன நடிகைக்கு முன்பே தெரிந்திருந்தால் ஒருவேளை இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பாரா? என்பதே ஒரு கேள்விக்குறிதான். 
    நடிகர் ஒருவர் வெற்றிப்பட இயக்குனரின் படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...
    தல நடிகருக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவர்களுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் கொடுத்து அவரை ஆச்சர்யப்படுத்துவார். அப்படித்தான் சிவமான இயக்குனரின் இயக்கம் பிடித்துப்போன தல நடிகர் அவருக்கு தொடர்ந்து 3 படங்கள் கொடுத்து அவரை ஆச்சர்யப்படுத்தினார்.

    அப்படித்தான், சீட்டாட்டம் இயக்குனரின் படத்தில் நடிக்கும்போது, அந்த இயக்குனரை பெரிதும் தல நடிகருக்கு பிடித்துப் போய்விட்டதாம். அதனால், அவருடைய அடுத்த படத்தில் நடிப்பதாக வாக்குறுதி கொடுத்தாராம் தல நடிகர். ஆனால், சீட்டாட்ட இயக்குனரோ, தனது அடுத்த படத்தை அண்ணன், தம்பி நடிகர்களுக்காக ஒதுக்கிவிட, தல நடிகர் நைசாக ஒதுங்கிக் கொண்டாராம்.

    அண்ணன், தம்பிகளை வைத்து படம் இயக்கிய இயக்குனர் தொடர்ந்து தோல்விகளை சந்திக்க, தற்போது சொந்தமாக படம் எடுத்து வருகிறார். இந்நிலையில், தோல்வியை சரிக்கட்ட தற்போது தல நடிகரை வைத்து சீட்டாட்ட இயக்குனர் அடுத்த படத்தை எடுக்கலாம் என்று நினைத்தவருக்கு பலத்த அடி விழுந்துள்ளதாம்.

    சீட்டாட்ட இயக்குனரின் படத்தில் தல நடிகர் நடிப்பதாக கொடுத்த வாக்குறுதியை திரும்ப பெற்றுவிட்டாராம். ஆகையால், சீட்டாட்ட இயக்குனருடன் தல நடிகர் சேரும் படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியாமலேயே இருந்து வருகிறது. 
    வாரிசு நடிகை ஒருவர் பாலிவுட் நடிகரின் காதல் வலையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்..
    ஸ்ருதிமயமான வாரிசு நடிகைக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக இல்லாவிட்டாலும், அவரைப் பற்றிய வதந்திகள் மட்டும் கிசுகிசுக்களும் நிறையவே வருகின்றன. முதலில், ஜில் நடிகருடன் காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்ட இவர், சமீபத்தில் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் காட்டுத் தீயாய் பரவியது.

    இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என நடிகை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டவுடன், அந்த செய்தி புஸ் என்று ஆனது. தற்போது, மீண்டும் ஸ்ருதிமயமான நடிகையை பற்றி ஒரு புதிய செய்தி வெளிவந்தது. பாலிவுட்டில் முன்னணி நடிகர் ஒருவரின் காதல் வலையில் ஸ்ருதிமயமான நடிகை சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இருவரும் சமீபத்தில் விளம்பர படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த காதல் எதுவரை செல்லும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியாது.
    உச்ச நடிகர் மனக்கஷ்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அது எதற்காக? என்பதை கீழே பார்ப்போம்...
    கோலிவுட்டின் உச்ச நடிகராக திகழ்பவர் தற்போது மிகுந்த மனக்கஷ்டத்தில் இருக்கிறாராம். இதற்கு காரணம் அவரது இரண்டாது மகள் என்று கூறப்படுகிறது. தனது மூத்த மகள் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதால், இரண்டாவது மகளுக்கு பார்த்து பார்த்து திருமணம் செய்து வைத்தார்.

    ஆனால், தான் பார்த்து பார்த்து செய்த அந்த இரண்டாவது மகளின் திருமண வாழ்க்கை இவ்வளவு சீக்கிரத்தில் கலைந்து போகும் என அவர் கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாதாம். தற்போது உச்ச நடிகரின் இரண்டாவது மகள் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விரைவில், தனது கணவரை அவர் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், தனது மகளை சமாதானப்படுத்துவதற்காக தனது நண்பர்களையும், நெருக்கமானவர்களையும் மகளுக்கு தூது விட்டாராம். ஆனால், இவரது முயற்சி எதுவும் பயனளிக்கவில்லையாம். இதனால், உச்ச நடிகர் மிகுந்த மனக்கஷ்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    வம்பு நடிகர் மீண்டும் ஒரு பிரச்சினையை வம்புக்கு இழுத்துள்ளாராம். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்..
    வம்பு நடிகரின் படங்கள் சமீபகாலமாக பஞ்சாயத்து இல்லாமல் ரிலீஸ் ஆனதே கிடையாது. சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்சினை படம் வெளிவரும் சமயத்தில் பெரியதாகி அந்த படம் வெளிவருவதற்கே பெரிய தடையாய் வந்து நிற்கும். இப்போது பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும்போதே அவரது படம் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தப் போகிறதாம்.

    பெரிய டைட்டில் உள்ள படத்தில் நடித்து வரும் வம்பு நடிகர், அந்த படத்தில் தன்னை வம்புக்கு இழுத்த பெண்கள் அமைப்பை தாக்கி சில வசனங்களை பேசியுள்ளாராம். அந்த வசனங்களை பர்ஸ்ட் லுக் டீசரில் வைத்து வெளியிடப் போகிறாராம். இதனால், படத்திற்கு எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    படம் வெளியாகும்போதுதான் வம்பு நடிகருக்கு பிரச்சினை ஏற்படும் என்றால், இப்போது பர்ஸ்ட் லுக் டீசருக்கே பிரச்சினையை ஏற்படுத்த வம்பு நடிகர் தயாராகிவிட்டார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. 
    ×